உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இளைஞர் வானொலி


 அமைதியுடையதன்று. அஃது எப்பொழுதும் சலிப்பு உடையது; சஞ்சலம் நிறைந்தது. இத்தகைய வான வெளியில் வானி {ether) என்ற ஒரு பொருள் நிறைந்திருக்கின்றது என்று அறிவியலறிஞர்கள் (scientists) கூறுகின்றனர்.

படம் 1. வீட்டில் வானொலி செவி விருந்தளிக்கின்றது.

பக்தர்கள் பரம்பொருளாகிய ஆண்டவனை வருணிப்பது போலவே அறிவியலறிஞர்கள் வானியை வருணிக்கின்றனர். “வானி எங்கும் இருப்பது; எல்லாப் பொருள்களிலும் புகுந்து பரவி இருப்பது; இந்த அகிலம் முழுவதிலும் பரவி விரிந்து நிற்பது; மிகமிக நுண்ணிய அணுவின் அமைப்பிலுள்ள இடைவெளிகளையும் ஊடுருவி நிறைந்திருப்பது” என்று வானியின் தன்மையை அவர்கள் கூறுகின்றனர். ஆயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/10&oldid=1394173" இலிருந்து மீள்விக்கப்பட்டது