உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கன்பூசியஸின்

வேண்டும். இதற்கு திறமை மிகுந்தவர்கள் அரசில் இடம் பெறவேண்டும். அந்தத் திறமை, பிறப்பு, செல்வம், உயர்சாதி, ஆகியவற்றால் உருவாவதில்லை. மனப்பண்பு, அறிவு இவை போதும் அந்த திறமை உருவாக என்கிறார் கன்பூசியஸ்.

இந்த சீன நாட்டுச் சீர்குலைவைக் கண்டதால் தான், கன்பூசியசுக்கு பொதுநல ராஜ்ஜியம் என்ற ஒன்று உருவாக வேண்டும் என்று சிந்தித்தார் இந்த பொதுநல அரசாங்கம் பற்றி அவர் என்ன கூறுகிறார் என்று கேட்போமா?

'தாவோ' என்றால்-'அறவழி' என்று பொருள். இத்த அறநெறியைப் பயன்படுத்தும்போது, பொதுஜன, பொதுநல உணர்ச்சி-உலகம் எங்கும் பரவி இருந்தது. திறமை, பண்பு, விசுவாசம் உள்ளவர்கள்தான். இந்தப் பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சகோதரத்துவப் பாசமும் அதில் பண்படுத்தப்பட்டது.

மனிதர்கள் தங்கள் சொந்தப் பெற்றோர்களை மட்டும் நேசிக்கவில்லை; சொந்தக் குழந்தைகளை மட்டும் பிள்ளைகளாக நடத்தவில்லை; வயதான முதியோர்கள் எல்லாம் அவர்கள் சாகும்வரை கவனமாகவே பாதுகாக்கப் பட்டார்கள்.

உடல்சக்தி உள்ளவர்களுக்கு பணி, சிறுவர்கள் படிக்கக் கல்வி வசதி, உணவு ஏற்பாடு, விதவைகள், அனாதைகள், பிச்சைக்காரர்கள், பிள்ளை இல்லாத பெற்றோர்கள், நோயாளிகள், உழைக்க முடியாமல் உடல் நலிந்தவரிகள் போன்றவர்களுக்கு எல்லாம் அவரவர் தேவைகளை அதில் நிறைவு செய்யப்பட்டிருந்தன.

ஆண்களுக்கு உரிய தொழில்களும், பெண்களுக்குக் குடும்பப் பணிகளும் இருந்தன. சாமான்கள் வீணாகக் கிடப்பதை அவர்கள் வெறுப்பார்கள்; ஆனால், சொந்த உபயோகத்திற்காக அவற்றைப் பதுக்கி வைக்கமாட்டார்