பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




இனி, உணவு எப்படி உடலுக்கு சக்தியாக மாறுகிறது என்ற முறையையும் நாம் அறிவது இங்கு அவசியமாகிறது.

நடக்க, பேச, நினைக்க, படிக்க என்பன போன்ற அன்றாட கடமைகளை ஆற்ற நமக்கு சக்தி தேவைப்படுகிறது. (Energy) இப்படிப்பட்ட செயல்களைச் செய்து முடிக்கின்ற சக்தி உணவாலும் உயிர்க் காற்றாலும் (Oxygen) தான் உருவாகிறது.

நாம் உண்ணும் உணவிலே உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரோட்டின் போன்ற சத்துக்கள், நாம் உள்ளே இழுத்துப் பெறுகின்ற பிராண வாயுவினால் தூளாக்கப்படுகிறது.

அதாவது உணவும் காற்றும் சேர்ந்து, நமது உடலுக்கு வேண்டிய சக்தியை உண்டாக்குகின்றன. உணவுடன் உடலில் சுரக்கின்ற சில அமிலங்களுடன், காற்றும் சேர்ந்து கொண்டு அங்கு ஒரு புதிய மாற்றத்தை (இரசாயன மாற்றம் என்பார்கள்) உடலுக்குள் ஏற்படுத்தி, சக்தியாக வெளிப்படுத்துகின்றன.

நாம் உண்ணுகிற உணவை உடல் சேர்த்து வைத்துக் கொள்ளும். ஆனால் நாம் சுவாசிக்கின்ற காற்றை மட்டும் உடலால் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாது.

நமது தேவைக்கு மேலே சக்தி தருகின்ற உணவை நாம் உட்கொண்டு விட்டால், சேகரித்த சக்தியினை செலவழித்தது போக, மீதியை சேர்த்து (Store) வைத்துக் கொள்-