இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
'பத்துக்கு அதிகமாகவே இருந்ததனால்தான் இப்படி' என்றும் சொன்னான். 'ஆமா. பத்துக்கு அதிகமாக என்கிறாயே. கூடை சிறைய அல்லவா இருந்தது!' 'ஆப்பிள்கள் அல்ல, அம்மா! பையன்கள்.' 'அப்போ ஆப்பிள்கள் என்ன ஆச்சு?' 'முதலில் பையன்கள்தான், . மிக்கேல், கியாவணி ...” அவளுக்குக் கோபம் வந்து விட்டது. அவள் பெப்பியைத் தோள்களைப் பற்றி உலுக்கினாள். உள்ளதைச் செல்லு, நீ ஆப்பிள் பழங்களைக் கொண்டு போய்க் கொடுத்தாயா இல்லையா?’ என்று கத்தினாள். 'சதுக்கம் வரை உள்ள தூரம் பூராவும் கூடையைச் சுமத்து கொண்டே போய்ச் சேர்ந்தேன். கேள் வலின்யாரா. நான் எவ்வளவு நல்ல பையனாக நடந்திருக்கிறேன் தெரியுமா. ஆரம்பத்தில் நான் அந்தப் பயல்களின் கிண்டல்களுக்கு செவிசாய்க்கவேயில்லை. போகட்டும், என்னே ஒரு கழுதையுடன் ஒப்பிட்டு அவர்கள் பேசட்டும். வலின்யாராவிடம் எனக்குள்ள மதிப்பைக் காப்பாற்ற நான் எதையும் சகித்துக் கொள்வேன். இப்படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எல்லாம் உனக்காகத்தான், வலின்யாரா! ஆனால் அந்தப் பயல்கள் எங்க அம்மாவைப் பற்றி பேச்செடுத்ததும், பொறுத்தது போதும் என்று தீர்மானித்தேன். கூடையைக் கீழே இறக்கி வைத்தேன். அப்புறம் ஆப்பிள் பழங்களினாலே அந்தச் சைத்தான் குஞ்சுகளை என்னமா ஓடஓட அடித்தேன்கிறதை நீ கண்ணாலே பார்த்திருக்கணும் அம்மா, அந்த தமாஷை நீ ரசித்திருப்பாய்!' 'என் பழங்களைத் திருடி விட்டார்களே!' என்று அலறினாள் அவள். சோகப் பெருமூச்சு உயிர்த்தான் பெப்பி. 'இல்லவே இல்லை. பயல்கள் மீது படாமல் தவறிய ஆப்பிள் எல்லாம்