உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

31


Histories என்ற ‘வரலாறுகள்’ நூலை உலகத்தைச் சுற்றி வந்து எழுதினார். அந்த வரலாறு அந்தந்த நாட்டு மக்கள் வாழ்ந்த நாகரிகம், பண்பாடுகள், பழக்க வழக்க ஒழுக்கங்களைக் கூறியதால், அக்கால மக்களுக்கு அவை அங்கங்கே உள்ள செய்திகளை அறிவிக்கும் வரலாற்று முரசாக அமைந்தது.

அறிவியல் வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் துசிடிைடஸ் (Thucydides) கி.மு. 471 முதல் 420-வது ஆண்டு வரை வாழ்ந்தார். இவர்தான் பிலப்பனேசியப் போர்கள் என்ற போர் முறை வரலாற்று நூலை முதன் முதலாக எழுதி உலகுக்கு வழங்கினார். இந்த நூல் அக்காலப்போர் முறைச் சம்பவங்களைச் செய்திகளாக அறிவித்ததால், மன்னர்களுக்குப் பெரும் உதவி புரியும் நூலாகவும், மக்கள் போர்க் காலத்தில் எவ்வாறு எச்சரிக்கையோடு இயங்க வேண்டும் என்ற அறிவுரைகளைக் கூறும் செய்திகளாகவும் இருந்தன.

நச்சுக் கோப்பை
சாக்ரட்டீஸ்

சாக்ரட்டீஸ் என்ற அறிவுலக மேதை எந்த ஒரு நூலையும் எழுதவில்லை. என்றாலும், அவருடைய ஒவ்வொரு பேச்சுக்களும், காரணம் காட்டி அவர் வாதிக்கும் முறைகளும் மக்கள் இடையே அறிவுரை ஆற்றும் செய்திகளாக விளங்கின. அவரது கேள்வி-பதில் பேச்சு முறை பாணிக்கு ‘சாக்ரட்டீஸ் முறை’ Socratic என்ற பெயரும் - புகழும் ஏற்பட்டு, அவருக்கென மாணவர்கள் அந்தந்த சிறுசிறு நகர நாடுகளிலே தோன்றினார்கள். சாக்ரட்டீஸ் கருத்துக்களை மக்களிடம் வாத, விவாதங்களாக்கிய அச்செய்திகள் அக்காலத்து மக்களைச் சீர்திருத்தின எனலாம்.

டெமஸ்தனிஸ் என்ற சொற்பொழிவு மேதையின் சொல்லாற்றல் உணர்ச்சிகள், சாக்ரட்டீசுக்குப் பிறகு ஒரு பேச்சு அணியையே உருவாக்கி மக்களை அறிவுக் கடலிலே மிதக்க வைக்கும் பல்சுவைச் செய்திகளைக் கூறுவதாக விளங்கின.

தேலிஸ் Thales என்ற கிரேக்க வானியல் அறிஞர், தனது சூரிய கிரகணக் கண்டுபிடிப்புச் செய்திகளை எகிப்து, பாபிலோன் நாடுகளிலுள்ள நகரங்களுக்கு அவரே நேரில் சென்று, வானியல்