இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மின்னோட்டம்
19
அதே கணத்தில் கம்பியின் மறுகோடியிலும் மின்னோட்டம் தோன்றுகின்றது. இதனால் மின் கலத்தினின்று புறப்பட்ட மின்னணுக்கள் கம்பியிலிருந்து வெளி வருவதில்லை என்பது தெளிவாகின்றது. வரிசையாக மின்னணுக்கள் தள்ளப் பெறுவதால் கம்பியின் மறுகோடியில் வேறு மின்னணுக்கள் வெளிவருகின்றன. ஒருகம்பியில் ஒரு குறிப்பிட்ட புள்ளியைத் தாண்டிச் செல்லும் மின்னணுக்களின் தொகை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அக் கம்பியின் வழியாகப் பாய்ந்து செல்லும் மின்னணுக்களின் ஓட்டமும் அதிகமாக இருக்கும்; அஃதாவது, அக்கம்பியின் மின்னோட்டம் அதிகமாக இருக்கும்.