ஆதி அத்தி 57 செய்வேன்? ஒருவேளை ஆதிமந்தி நினைத்துக்கொண்டிருக் கிறதைப் போல அவர் இன்னும் உயிரோடிருந்தால்...... கரிகாலன் : வேண்மாள், உயிரோடிருக்க வேண்டு மென்பதுதான் எல்லோருடைய ஆசையும்..... ஆனல். தண்ணிரில் முழுகியவர்களைப் பதினறு நாழிகைவரை கண்டுபிடிக்க முடியாமல் போன பிறகு ...... (அமைச்சர் உள்ளே வந்து வணங்கி நிற்கிரு.ர்.1 வேண்மாள் (ஆவலோடு) : அமைச்சரே, ஏதாவது சேதியுண்டா? அமைச்சர் (முகவாட்டத்தோடு) : அம்மணி. அப்படி நல்ல சேதி கொண்டு வருகிற பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டோம்... கரிகாலன் : ஆதிமந்தி இப்பொழுது எங்கே இருக் கிருள்? அமைச்சர் : கழார்ப் பட்டினத்திலிருந்து காவிரிக் கரையோரமாகப் புறப்பட்ட இளவரசி இப்பொழுது எட்டு நாழிகை தூரம் நடந்து சென்றுவிட்டார்கள். காவிரித் தாயே என் கணவனைக்கொடு’ என்று புலம்பிக் கொண்டே போகிருர்கள். வேண்மாள் : கல்லிலும் முள்ளிலுமாக அவள் எப்படித்தான் நடந்து செல்லுகிருளோ? அமைச்சரே, அவளுடைய மனநிலை எப்படியிருக்கிறது? அமைச்சர் : ஆதிமந்தியார் நினைவெல்லாம் அவரு டைய கணவனைப் பற்றியே இருக்கிறது. அவர் எங்கு செல்லுகிருர்கள் என்ன செய்கிருர்கள் என்ற நினைவே இல்லை. மனம் பேதலித்துத்தான் தத்தளிக்கிறது. வேண்மாள் : அவளை எப்படியாவது இங்கே அழைத்து வந்துவிட முடியாதா?
பக்கம்:ஆதி அத்தி.pdf/59
Appearance