I O2 ஆதி அத்தி மருதி : ஆதிமந்தி... ஆதிமந்தி...இதோ உங்கள் கணவனை நா ன் கொடுக்கிறேன்...கடலிலே விழ வேண்டாம். (ஒடி ஆதிமந்தியைத் தடுக்கிருள்.1 ஆதிமந்தி : தாயே, இப்பொழுதாவது மனமிளகி ரீைர்களா? மருதி : அம்மணி, என்னுடனே வாருங்கள். நான் உங்கள் கணவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். ஆதிமந்தி : தாயே, நீ எனது குலதெய்வம்... உன்னை நான் என்றும் மறக்கமாட்டேன்... மருதி (வெம்பிக்கொண்டு) : அந்தப் பாக்கியம் ஒன்றே போதும். எனக்கு...அதுவே போதும்... (முன்னலே வீட்டை நோக்கி நடக்கிருள். தடுமாறிக்கொண்டு அவள் கரத்தைப் பிடித்து ஆதிமந்தி நடக்கிருள்.) திரை காட்சி ஏழு (மருதியின் இல்லம். ஆட்டனத்தி ஒரு ஆசனத்தில் சாய்ந்தவண்ணமாக ஆழ்ந்த சிந்தனையிலிருக் கிருன். மருதி முன்னல்ேயும் ஆதிமந்தி பின்னு ல்ேயுமாக வருகிருர்கள். அந்த அறையின் கதவுக்குப் பக்கத்திலேயே நின்று மருதி ஆட்ட னத்தியை ஆதிமந்திக்குக் காண்பிக்கிருள். ஆதிமந்தி ஒர்ே வேகமாக அவனிடம் செல்லு கிருள்.) ஆதிமந்தி ஆ. .யாரிது?...என் கணவரா? அத்தி ஆதி... (இருவரும் தழுவிக்கொள்ளுகிருர்கள். ஆதிமந்தி அவன் மார்பின்மேல் சாய்கிருள்.) ஆதிமந்தி : காவிரித்தாய் எனக்கு மீண்டும் உங் களைத் தந்துவிட்டாள்... அவளுடைய கருணையால் எனக்கு என் உயிர் கிடைத்தது.
பக்கம்:ஆதி அத்தி.pdf/100
Appearance