அசோகனுடைய சாஸனங்கள்/உப சாஸனங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

I. உப சாஸனங்கள்

இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ள அசோக சாஸனங்களில் உபசாஸனங்களே ஆதியானவையென்று ஊகிக்கப்படுகின்றன. இவை அரசன் முடி சூடிய பதின்மூன்றாம் வருஷத்தில் பிரசுரமானவை. இந்தச் சாஸனங்கள் இரண்டு. முதல் லிகிதத்துக்கு மொத்தம் ஏழு பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இரண்டாவது லிகிதம் மைசூர் ஸம்ஸ்தானத்தினுள் மூன்று சமீபமான ஊர்களில் காணப்படுகிறது. முதல் உபசாஸனத்தில் பிரதிக்குப் பிரதி கொஞ்சம் வித்தியாசங்கள் காணப்படுகிறது. முதலாவது விகிதம் காணப்படும் இடங்களாவன,

1. ரூபநாத் இது மத்திய மாகாணத்தில் ஜபல்பூரின்

அருகிலுள்ள ஊர். லிகிதம் சுமாராக வாசிக்கக்
கூடிய நிலைமையில் இருக்கிறது.

2. ஸஹஸ்ராம். இது பிஹார் மாகாணத்தின் தெற்கேயுள்ள

குன்று லிகிதம் இதன் உச்சியிலுள்ள பாறையில் இருக்கிறது. :லிகிதம் சிதைவுபட்டுள்ளது.

3. பெய்ராத். இது ராஜபுதனத்தில் ஜெயப்பூர் ஸம்ஸ்தானத்தில்

உள்ள ஊர். பாப்ரூ என்ற ஊரும் இதற்குச்
சமீபமுள்ளது; லிகிதம் சிதைவுபட்டுள்ளது.

4. ஸித்தாபுரம். மைசூரின் வடக்கு சித்தல் துர்க்கம்

ஜில்லாவில் உள்ள ஊர்.

5. பிரம்மகிரி. ௸ ஊருக்கு ஸமீபமுள்ளது. இங்குள்ள

லிகிதமும் ரூபநாத்திலுள்ள லிகிதமுமே வாசிக்கக் கூடிய :நிலைமையிலுள்ளன.

6. ஜடிங்கராமேசுவரம். . இதுவும் ௸ ஊருக்குச் சமீபமுள்ளது.

7. மாஸ்கி. ஹைதரபாத் ராஜ்யத்தில் ரெய்ச்சூர் ஜில்லாவில்

உள்ளது. இங்குள்ள லிகிதம் ஏழு
வருஷங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. கடைசியாக அகப்பட்டிருக்கும் இந்த அசோக லிகிதத்தில் பியதஸி என்ற பெயருடன் அசோகன் என்ற பெயரும் காணப்பட்டிருக்கிறது. அவதாரிகை, 8-ம் பக்கம் பார்க்க.

இரண்டாவது உப-சாஸனம் 1, 2, 3, 7 ஊர்களில் காணப்படவில்லை. மைசூரிலுள்ள மூன்று இடங்களில் மட்டும் முதல் சாஸனத்துக்குப்பின் வரைந்து காணப்படுகிறது. ஆனால் இதற்கு ஓரிடத்தில் மட்டுமே சுத்தமான பிரதியுண்டு.

முதல் உப சாஸனம் பலவிதத்தில் அசோகனுடைய சரித்திரத்திற்கு முக்கியமான ஆதாரமாகின்றது. அவன் புத்தர் சமயத்தைச் சரணமடைந்தது திடீராகவல்லவென்றும் கொஞ்சங் கொஞ்சமாக அதில் ஈடுபட்டதாகவும் இச்சாஸனம் அறிவிக்கின்றது. புத்தர் மதத்தில் தான் முக்கியமாகக் கற்ற பாடங்கள் அறநெறியில் விசுவாசமும் உழைப்பும் ஊக்கமுமேயென்றும் இதிலிருந்து விளங்கும்.

“தேவர்களை அனுசரித்து ஒழுகாமனிதர் இப்போது தேவர்களை அனுசரித்து ஒழுகி வருகின்றனர்?” என்ற வாக்கியம் அரசனுடைய ஆஸ்திக மதத்தை விளக்கும். ஆனால் இவ்வாக்கியத்தின் கருத்து இதுவேயென்று சாதிக்க முடியாது. “இது வரையும் உண்மையென்று கருதப்பட்ட தெய்வங்கள் இப்போது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றும் இவ்வாக்கியம் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. மூலத்திலுள்ள வாக்கியத்தில் மீஸா, அமிஸா என்ற சொற்களின் கருத்து விளங்காததால் மொழிபெயர்ப்பில் இங்கனம் விபரீதங்கள் ஏற்பட்டன எனலாம். 'மிஸம்' என்ற சொல் மிச்ரம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாயின் முன்கூடறிய உரையும் ‘ம்ருஷா’, பொய்ம்மை, என்ற சொல்லின் திரிபாயின் இரண்டாவது கருத்தும் ஏற்படும்.

முதல் உபசாஸனம்: உழைப்பின் பயன்

A. ஸுவர்ணகிரியிலுள்ள1 இளவரசரும் மகாமாத்திரரும் சேர்ந்து இஸிலத்திலுள்ள2 மகாமாத்திரருக்கு க்ஷேமம் வினவியபின் இக்கட்டளை யிடப்படுகின்றது. தேவர்களுக்குப் பிரியனானவன் இங்ஙனம் ஆக்ஞாபிக்கிறான். நற்காரியங்களில் விசேஷ ஊக்கம் செலுத்தாமல் இரண்டரை வருஷங்களுக்கு மேலளவும் நான் உபாஸகனாயிருந்தேன்3. இப்போது ஒருவருஷமாக ஸங்கத்திற் சேர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு உழைத்துவர எனக்கு நேரிட்டிருக்கிறது. இதுவரையும் தேவர்களை அனுசரித்து ஒழுகா மனிதர் இப்பொழுது ஜம்பூத்வீப முழுவதும் தேவர்களை அனுசரித்து ஒழுகிவருகின்றனர்4. இது எனது உழைப்பின் பயனாகும். இந்நன்மை பெருமுயற்சியின்றிக் கிடைக்கக்கூடியதன்று. ஆனால் சிறியோரும் தமது உழைப்பால் மறுமையின் க்ஷேமத்தை யடையலாம். இதனாலன்றோ “சிறியோரும் பெரியோரும் முயன்றுவரட்டும்” என்ற முதுமொழி ஏற்பட்டுள்ளது5. என் அயலாரும் இப்போதனையை உணர்ந்து இத்தகைய நன்முயற்சியை அழியாதபடி நிலைநாட்ட வேண்டும். இவ்வுத்தேசம் கட்டாயமாய் வளரும். இன்னுமின்னும் பல மடங்கு பயனளிக்கும். இப்போதனை 256 வ்யூதர்களால் பிரசுரஞ் செய்யப்பட்டது.

B. இக்கட்டளை கூடுமளவும் எங்கு சௌகரியப்படுமோ அங்கே கற்களிலும் ஸ்தம்பங்களிலும் எழுதி விளம்பரஞ்செய்யப்பட வேண்டும். நீரும் இயன்ற அளவு உமது பிராந்தியத்தில்6 இக்கட்டளையை விளம்பரஞ் செய்ய வேண்டும். இருநூற்றைம்பத்தாறு, (256) வ்யூதர்களால்7 இப்புண்ணிய ஆக்ஞை கொண்டு வரப்பட்டது.

மொத்தம் ஸித்தாபுர லிகிதத்தில் 13 வாக்கியங்கள், கடைசிப்பாராவிலுள்ள மூன்று அதிகப்படியான வாக்கியங்கள் ரூபநாத் பிரதியில் காணப்படுகின்றன, ஸஹஸ்ராம் பிரதியில் 256 என்ற எண் எழுத்திலும் இலக்கத்திலும் இருக்கிறது. முதலாவது வாக்கியம் வட இந்தியப்பிரதிகளிலில்லை,

I. ஸுவர்ணகிரி. இதுவே அசோகனுடைய தென்மாகாணத்தின் ராஜதானிபோலும். இளவரசர் இங்குத் தங்கியதாக இந்த லிகிதம் நமக்குத் தெரிவிக்கிறது.

2. இஸிலம். இது ஸுவர்ணகிரிக்குச் சமீபமுள்ள ஊராயிருக்க லேண்டும். மகாமாத்திரர் என்ற பெயர் பொதுப் பெயரானதால் இஸிலத்து மகாமாத்திரர் ஒரு ரஜூகனாகவாவது பிராதேசிகனாகவாவாது இருக்கலாம்.

3. உபாஸகன். இல்லறத்தில் ஒழுகும் பௌத்தமதத்தினன்.

4. ஸித்தா புரத்திலுள்ள மூலவாக்கியம்,இமீனாவ காலேன அமிஸா ஸமானா ஜம்வதீபஸி மீஸா தேவேஹி.

5. ஸாவனே. போதனை ; முதுமொழி ; “சிறியோரும் பெரியோரும் முயன்று வரட்டும்” என்பது அரசனுடைய ஆப்த வாக்கியமோவென்று தோன்றுகிறது, எழாம் ஸ்தம்பசாஸனத்திலும் அரசன் இம்முது மொழியைக் குறிப்பிடுகிறான்.

6. ஆஹாலே. தாலூக்கா அல்லது நாடு.

7. வ்யூதர். தர்மபோதகர் (?). முன் 55-ம் பக்கம் காண்க.

இரண்டாம் உபசாஸனம் : தர்மத்தின் சாரம்

தேவர்களுக்குப் பிரியனானவன் இப்படிச் சொல்லுகிறான். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யவேண்டும். எல்லா ஜீவப் பிராணிகளுக்கும் அனுதாபம் ஸ்திரமாக ஏற்படவேண்டும். சத்தியமே பேசவேண்டும். தர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ள போதனைகள் இவையே மேலும் சீஷன் ஆசாரியனைக் கண்ணியஞ்செய்யவேண்டும். உற்றார் உறவினருக்குத் தகுந்த மரியாதை செய்யவேண்டும். இது தீர்க்காயுளைத் தரும். இது பிராசீன சம்பிரதாயம். இதன்படி மனிதன் நடக்கவேண்டும்.1

பதன் என்ற லிபிகரனால் 2 (எழுதப்பட்டது.)

மொத்தம் 8 வாக்கியங்கள் :-

1. இந்தச் சாஸனம் ஓர் உபநிஷத்தில் வரும் வாசகங்களுடைய தமிழ் மொழிபெயர்ப்போ என்று நம்மை பிரமிக்கச் செய்கிறது. தைத்தரீய உபநிஷத்து சிக்ஷாவல்லியின் முடிவு ஏறக்குறைய இப்படி இருக்கின்றது.

2. பதன் என்ற விபிகரன் அல்லது குமாஸ்தா தான் வட நாட்டினன் என்று காட்டுவதற்குப்போலும் லிபிகரன் என்ற சொல்லை மட்டும் கரோஷ்டி லிபியில் எழுதிவைத்திருக்கிறான்.