அட்லாண்டிக் பெருங்கடல்/அட்லாண்டிக் வழிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. அட்லாண்டிக் வழிகள்

கடல் வழிகள்

கடல் வழிகளில் மிகப் பெரியது வட அட்லாண்டிக் வழியாகும். இது வட மேற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையிலுள்ளது. மேற்கூறிய இரு பகுதிகளிலும் தொழிற்சாலைகளும்; மக்களும் அதிகமாக உள்ளனர்.

அட்லாண்டிக் வழியின் அமெரிக்க முனை பல கிளைகளை உடையது. ஏற்றப்படும் சரக்குகளில் பெரும்பகுதி நியூயார்க், பிலடெல்பியா, பால்டிமோர் முதலிய இடங்களுக்குச் செல்கின்றன. வாணிபப் பொருள்கள் மரம், மரக்கூழ், கோதுமை, இறைச்சி, இரும்புத்தாது முதலியவை ஆகும். இவை கிழக்கு, நோக்கிச் செல்பவை.

கிழக்கு வட அமெரிக்கா, வடமேற்கு ஐரோப்பா உற்பத்திப் பொருள்களை உண்டாக்குபவை. ஆகவே, உற்பத்திப் பொருள்களின் வாணிபம் குறைவு. உணவு, மற்றக் கச்சாப் பொருள்களின் வாணிபம் அதிகம். அன்றியும், கிழக்கு நோக்கிச் செல்லும் சரக்குகளை விட மேற்கு நோக்கிச் செல்லும் சரக்குகள் குறைவு. வட அட்லாண்டிக் வழியில் பயணிகளின் போக்கு வரத்து அதிகம். மற்றக் கடல் வழியைக் காட்டிலும், இவ்வழியாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கப்பல்கள் செல்கின்றன. அட்லாண்டிக்கின் சரக்குக் கப்பல் செல்லும் வழிகள் விரிந்து அமைந்துள்ளன. அவை ஐரோப்பாவிலிருந்து கிழக்கு இந்தியத் தீவுகள், பனாமா, கானரித் தீவுகள் ஆகியவற்றிற்குச் செல்கின்றன. மற்றொரு வகை வழிகள் நியூயார்க்கிலிருந்து மையத் தரைப் பகுதி, தென் ஆப்பிரிக்கா கிழக்குத் தென் அமெரிக்கா, பனாமா ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றன.

விமான வழிகள்

வட அட்லாண்டிக் - வட அமெரிக்கா : நேர் வழிகள் இலண்டனிலிருந்து நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, மாண்ட்ரியல், சிகாகோ ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றன. நேர்வழியில் வானிலை சரியில்லாமல் இருந்தால் விமானம் ஐஸ்லாந்தின் வழியாகச் செல்லும். இலண்டனிலிருந்து காரகாசுக்கு இரு நேர்வழிகள் உள்ளன.

கனடியப் பசிபிக் விமான வழி வேன்கோவரி விருந்து ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்று, பின் எட்மண்டனுக்கு வருகிறது. ஸ்காண்டிநேவிய விமான வழி கோபன்கேகனிலிருந்து லாஸ் ஏஞ்சலுக்குச் சென்று பின் சாண்ட்ரி ஸ்டாம்பியர்டுக்கு வருகிறது. புதியதொரு ஸ்காண்டிநேவிய விமான வழி கோபன் கேகனிலிருந்து லாஸ் ஏஞ்சல், டோக்கியோ சென்று (வழி அலாஸ்காவிலுள்ள ஆன்கரேஜ்), பின் நேராக வட முனை வழியாகச் செல்கிறது.  தென் அட்லாண்டிக் - தென் அமெரிக்கா : பி.ஒ.ஏ.சியின் கிழக்கு இந்தியத் தீவுகள் வழியாக காரகாஸ் செல்கிறது. இதன் முக்கிய வழி மேட்ரிட், லிஸ்பன், டாகர் ரெசீப் வாயிலாக ரியோடி ஜான்ய்ரோ, சா பாலோ, மாண்டிவிடியோ, புயோனஸ், ஏரிஸ் சென்று, பின் ஆண்டிஸ் வழியாக சாண்டியாகோ செல்கிறது. வட, தென் அமெரிக்காவிற்கு இடையே வானப் போக்குவரத்தும் உள்ளது.

.