அந்தமான் கைதி/என்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

என்னுரை

'அந்தமான் கைதி’ ஒரு நாடக நூல். இந் நாடகம் அநேகமாக நகரப் பகுதிகளெங்கும் பல்லாண்டுகளுக்கு முன்பே நடிக்கப்பெற்று பத்திரிகைகளாலும் பேரறிஞர்களாலும் பாராட்டப் பட்டிருக்கிறது. திரைப்படமாகவும் வெளிவந்தது.

இத்தனைக்கும் பிறகும்கூட இந்நூல் ஐந்தாம் பதிப்பாக வெளியிட வாய்ப்புப் பெறுவது தமிழக நாடக வரலாற்றில் ஒரு புதுமை!

நாட்டின் தலைமைப் பொறுப்பேற்று ஒய்வு ஒழிவின்றிக் கடமையாற்றும் தற்போதைய சூழ் நிலையிலும், எனது வேண்டுகோளை அன்புடன் ஏற்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுதவிய தமிழகத்தின் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பு என்றும் மறத்தற்பாலதன்று.

அந்தமான் கைதியை அரங்கேற்றி அதன் வெற்றியிற் பெரும் பங்கேற்ற முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன. ஒளவை. தி. க. ஷண்முகம் அவர்கள் அணிந்துரை அளித்துப் பெருமையளித்துள்ளார். மற்றும் இந்நூலை பிழைதிருத்தி அழகுடன் பதிப்பித்தளித்த நாவல் ஆர்ட் பதிப்பக நிர்வாகி திரு. நாரா நாச்சியப்பன் அவர்களுக்கும், இந்த வெளியீட்டிற்கு ஆதரவளித்துதவிய தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்திற்கும், இதன் விற்பனை உரிமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பாரி நிலையத்தாருக்கும் எனது நன்றி.


5一6一67

சென்னை

வணக்கம்

கு. சா. கிருஷ்ணமூர்த்தி