அந்தமான் கைதி/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

காட்சி 11.

இடம் : ரோடு
பாத்திரங்கள்: ஜம்பு, முனியாண்டி

[ஜம்புவும் முனியாண்டியும் பேசிக்கொண்டு வருகிறார்கள்]

முனி : அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம்.

ஜம்பு : அப்போ நாளைக்குப் பிரயாணம் நிச்சயம் தான்?

முனி : அதுதான் முடிஞ்சு போன விஷயமாச்சே!

ஜம்பு : எப்படி என் யோசனை?

 முனி: யோசனை என்னமோ ஒங்க யோசனைதான்; ஆனா அதை உருப்படியா முடிச்சிவச்சுது நான்; பாருங்க!

ஜம்பு : ஆமாமா! அது மறந்துடுவேனா என்ன?

முனி : அதானே கேட்டேன், அப்புறம் இந்த சாக்கே வச்சிக்கிட்டே கையெ விரிச்சிட்டா......

ஜம்பு : என்னையா! பெரிய சந்தேகப் பிராணியா இருக்கிறியே. பெண் கழுத்திலே தாலி ஏறிய உடனே ரூபாய் ஐநூறு கைமேலே வந்திடும்.

முனி : விஷயம் பெரிசு ஏதாவது கொஞ்சம் அட்வான்ஸு.

ஜம்பு : நீ தான் அப்பப்போ வாய்க்கரிசி வாங்கிக்கிட்டே இருக்கியேய்யா. சரி டயமாச்சு நாளைக்குப் பாரும்.

முனி : ஏதாவது சில்லரை இருந்தா......

ஜம்பு : சில்லரையா? இந்தாரும்.

(சில்லரை கொடுக்கிறான்)

முனி: (வாங்கிக்கொண்டு) மகமாயி....

(போகிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/11&oldid=1073497" இருந்து மீள்விக்கப்பட்டது