அம்புலிப் பயணம்/வானத்தின் மும்மூர்த்திகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
2. வானத்தின் மும்மூர்த்திகள்

வானத்தில் கோடானுகோடி அண்டங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளன. இவற்றுள் பூமியில் வாழும் தமக்குப் பெரியவையாகத் தோன்றுபவை சூரியனும் சந்திரனும் ஆகும். நாம் வதியும் பூமியையும் அவை இரண்டுடன் சேர்த்து 'வானத்தின் மும்மூர்த்திகள்' என வழங்கலாம். வானத்தில் உலவும் ஏனைய அண்டங்களுள் ஒரு சில இவற்றைவிட மிகப் பெரியவை என்றலும் நமது ஊனக்கண்ணுக்குப் பெரியவையாகத் தோன்றுபவை இவை மூன்றேயாகும். சில அண்டங்கள் சூரியனைச்சுற்றி வருகின்றன. நமது பூமியையும் சேர்த்து ஒன்பது அண்டங்கள் இங்ஙனம் வட்டமிட்டுச் சுற்றி ஓடுகின்றன. இவற்றை வான நூலார் கோள்கள் (Planets) என்று வழங்குகின்றனர். இவையெல்லாம் ஒன்று சேர்ந்த கூட்டமே சூரிய குடும்பம் {Solar System) என்று வழங்கப்பெறுவது. இந்த அண்டங்களுள் மிகப் பெரியதாகத் தோன்றுவது சூரியன். ஆகவே, சூரியன் குடும்பத் தலைவனாகின்றான்.

சூரியனைச் சுற்றிக் கோள்கள், வட்டமிட்டு ஓடுவது போலவே ஒவ்வொரு கோளையும் சிறிய கோள்கள் (Satellites) சுற்றி யோடுகின்றன.

அவற்றின் விவரம் வருமாறு :

கோள்கள் சுற்றியோடும் சிறிய கோள்கள்
சூரியன் 0
புதன் 0
வெள்ளி 0
பூமி 1
செவ்வாய் 2
வியாழன் 12
சனி 9
யுரேனஸ்  5
நெப்டியூன்  2
புளூட்டோ  0

மொத்தம் 31

இவற்றைத் 'துணைக்கோள்கள்' என்று வழங்குவர். நமது பூமியைச் சுற்றிச் சந்திரன் இவ்வாறு ஓடிக் கொண்டுள்ளான். எனவே, பூமி சூரியனைச் சுற்றியும், சந்திரன் பூமியைச் சுற்றியும், ஆகவே, பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றியும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக் கொண்டுள்ளன. இவற்றின் நிலைகளைப் படம் (படம் - 1) விளக்குகின்றது.

அம்புலிப் பயணம்.pdf

படம். 1 சூரியன், சந்திரன், பூமி இவற்றின் நிலைகளை விளக்குவது

இங்குச் சூரியன் நிலையாக நின்று தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ளான். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றது. இங்ஙனம் சுற்றிவரும் பூமியின் ஒரு நிலையையும், பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் பல நிலைகளையும் படத்தில் கண்டு தெளிக.

திங்கள் மண்டலச் செலவினை அறிந்து தெளிவதற்கு முன்னர் ஒருசில கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. சந்திரன் பூமியை வினாடிக்குக் கிட்டத்தட்ட 1-6 கி.மீ. வீதம், அதாவது மணிக்கு 5,760 கி.மீ. வீதம் சுற்றியோடுகின்றது. அங்ஙனமே, பூமியும் சூரியனை வினாடிக்குக் கிட்டத்தட்ட 30-4 கி.மீ. வீதம், அதாவது. மணிக்கு 10,55,00 கி.மீ. வீதம் சுற்றியோடுகின்றது.

கிட்டத்தட்ட உருண்டை வடிவமான சந்திரனின் குறுக்களவு 3,456 கி.மீ; பூமியின் குறுக்களவில் கால் பங்கு, இது நீள் வட்டமான பாதையில் சந்திரன் பூமியைச் சுற்றி வரும்போது பூமிக்கு மிக அருகில் வருகையில் அதன் தொலை 3,54,335 கி.மீ. மிகச் சேய்மையில் செல்லும் போது அதன் தொலைவு 4,04,335 கி.மீ. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள சராசரித் தொலைவு 3,84,000 கி.மீ., இதை ஓர் எரிய உவமையால் விளக்குவோம், ஓர் அரை ரூபாய் நாணயம் ஒன்று ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு கோடியை நோக்கி மணிக்கு ஐந்து கி.மீ. வித வேகத்தில் - உருண்டு செல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்ஙனமே, நீங்கள் பிரிக்கு 95 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மோட்டார் வண்டியில் அமர்ந்து கொண்டு அடுத்த கோடியிலிருந்து அந்த அரை ரூபாய் நாணயத்தைத் தாக்க முயல்வதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். மனிதன் இராக்கெட்டு மோட்டார் மூலம் சந்திரனை அடைய முயல்வது மேற்கூறப்பெற்ற கற்பனை உவமையை ஒத்துள்ளது. முதன் முதலாக பூமியின்றும் கிளம்பிய இரஷ்ய! லeனா {Luna) என்ற இராக்கெட்டு சந்திரனை ஒரு நாள் அதிகாலையில் தாக்கியது.[1] அந்த நாள் தொட்டு இன்று வரை அமெரிக்க இராக்கெட்டுகளும் இரஷ்ய இராக்கெட்டுகளும் மாறிமாறி இந்தச் செயலைப் புரிந்து வருகின்றன.


  1. 1959-ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் நாள்.