அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அந்த டாக்டர் இல்லையே!
Appearance
(33) அந்த டாக்டர் இல்லையே!
இத்தாலியின் பிரபல நூலாசிரியர் பிராண்டல்லோ,
ஸிஸிலி என்னும் கிராமத்தில் ஒரு சமயம் நோயுற்றிருந்தார்.
உள்ளூர் டாக்டர் ஒருவர், ஆசிரியருக்கு மருந்து கொடுத்து, ஆறுதல் கூற முற்பட்டார்.
'ஐயா, ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்; சில ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கூட இந்த மாதிரிதான் ஆபத்தான நோய் உண்டாயிற்று. ஆனால், நான் முற்றிலும் குணம் பெற்று, பிழைத்துவிட்டேன்” என்றார் டாக்டர்.
“அது சரிதான் டாக்டர். ஆனால், உங்களுக்கு வாய்த்த அதே டாக்டர் இல்லையே எனக்கு வாய்த்திருப்பவர்? என்றார் ஆசிரியர்.