அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/டாக்டரின் எச்சரிக்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(87) டாக்டரின் ச்சரிக்கைடாக்டர் ஒருவர், மளிகைக் கடைக்கு வெகு நாட்களாக பாக்கி வைத்திருந்தார்.

"அந்த டாக்டரிடம் போய், அவரை நான் வரச் சொன்னதாகத் தெரிவி” என தன்னுடைய வேலையாளை அனுப்பினார் மளிகைக் கடைக்காரர்.

வேலையாள் டாக்டரிடம் போய்விட்டு முகவாட்டத்தோடு திரும்பி வந்தான்.

“டாக்டர் என்ன சொன்னார்?' என்று கேட்டார் மளிகைக் கடைக்காரர்.

வேலையாள் சலிப்போடு, "அவர் என்னத்தைச் சொன்னார்? எனக்கு உடல்நலம் இல்லையாம்; என் நாக்கை நீட்டச் சொன்னார். நாலைந்து வாரம் ஒடியாடி வேலை செய்யாதே; ஒய்வாக வீட்டிலே படுத்திரு, அப்போதுதான் உன் உடல் நலம் அடையும் என்று எச்சரித்தார்” என்று கூறி முடித்தான் வேலையாள்.