அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விஞ்ஞானிகளை நம்பலாமா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(88) விஞ்ஞானிகளை ம்பலாமா?"பெண்கள் முகத்தில் பூசிக் கொள்ளும் கிரீம், தசையைத் தின்று முகத்தில் குழி விழச் செய்கிறது” இப்படி ஒரு வதந்தி அமெரிக்காவில் ஒரு சமயம் பரவியது.

அதை அறிந்த விஞ்ஞானிகள் சிலர் உட்னே பரிசோதனை செய்யலானார்கள்.

சோதனைக்காக ஏழு முயல்களைக் கொண்டு.அவற்றின் முகத்தில் சோப்பைத் தடவி, தாடியைச் சிரைத்து, பிறகு, உயர்ந்த ரக கிரீமை முகத்தில் நன்றாகப் பூசினர்.

சில மணி நேரத்துக்குப் பிறகு, முயல்களின் முகத்தை நன்றாகக் கழுவிச் சோதித்தனர். கிரீமால் முயல்களுக்கு ஒரு கெடுதியும் உண்டாகவில்லை என்பது தெரியவந்தது.

ஆனால், சோதனை நடத்தி விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறினார்கள்? -

"நாங்கள் நடத்திய சோதனையில் கிரீமால் ஒரு தீங்கும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. ஆனால், நாங்கள் பயன்படுத்திய கிரீம் உயர்ந்த ரகமாக இருக்கலாம். மற்றவை ஒரு வேளை கெடுதல் செய்யக் கூடியதாகவும் இருக்கலாம்” என்று கூறி மழுப்பி விட்டனர்.