அய்யன் திருவள்ளுவர்/கவிஞர் கண்ணதாசனின்

விக்கிமூலம் இலிருந்து




கவியரசு "கண்ணதாச"னின்
"நான் நினைத்துப் பார்க்கிறேன்!"


விஞர் கண்ணதாசன் அவர்கள், "கண்ணதாசன்” என்ற, தனது திங்கள் இதழில், "நான் நினைத்துப் பார்க்கிறேன்” என்று தலைப்பிட்டு தனது நெஞ்சுக்குத் தானே நீதி வழங்கிக் கொண்டார்.

தி.மு.கழகத்திலிருந்து சொல்வின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்து அவர்களுடன் வெளியேரி, தமிழ் தேசிய கட்சியைத் துவங்கி, பிறகு, காங்கிரஸ் கட்சியிலே சேர்த்து, மீண்டும் தி.மு.கழகத்திற்கே திரும்பி வருவதர்காக தனது கடத்தகால அரசியல் பொது வாழ்க்கையை, "நான் நினைத்துப் பார்க்கிறேன்” என்று கண்ணதாசன், சேத ஏட்டில் எழுதியிருந்தார்.

இன்று நான்காவது முறையாகத் தமிழக முதல்வராக இருக்கும் கலைஞர் அவர்கள், 1969-ம் ஆண்டின்போது 'மாலை மணி’தானேட்டின் துணை ஆசிரியராக இருந்த என்னைத் தொலைபேசியின் அழைத்து, கவிஞர் கண்ணதாசன் மனக்கோட்டம் பெறும் நிலையின், தவறாக ஏதுக் எழுத வேண்டாம் என்து கேட்டுக் கொண்டாா்

அதற்கேற்ப, கலைஞர்கட்டளையை ஏத்து கந்தலான கவிஞருடைய இதயத்திற்குக் கொடுக்கப்படும் கனிவான ஒத்தடங்களாக - 'மாலைமணி' நாளேட்டில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை வரவேற்றிட அன்று எழுதிய எனது அனுதாப வரவேற்பு-இந்தக் கட்டுரை!

ரையேறிய பிறகு மீண்டும் கடலிலே விழக்கூடாது என்று அந்தக் கவிதை நெஞ்சு நினைக்கின்றது.

இறந்த காலத்தில், அது பறந்திருந்த வானத்தில் உதிர்ந்து போன சிறகுகள், இன்னும் இடந்தேடி அலைந்து கொண்டு இருந்தன.

அந்தப் பறவையின் சொந்தக்காரன் வங்கக் கடலோரக் கல்லறையிலே நீடு துயில் கொண்டிருக்கின்றான்.

"பறவை மிக உயர்ந்தது" இந்த விமரிசனம், அந்தப் பறவைக்கு இறந்துபோன அவரது அண்ணா அவர்கள் தந்த இலக்கியப் பாராட்டு!

கழகத்தை விட்டுக் கை நழுவி விட்ட அந்தப் பறவை - காணாமற் போன போது, வளர்த்தவனுடைய விழிகள் - வானை அண்ணாந்து பார்த்தன.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அந்தப் பறவை எங்கோ போவதாக அவர் கேள்விப் பட்டார்.

திராவிடர் கூட்டிலிருந்து தேசிய மரத்திற்கு, கேட்பார் பேச்சைக் கேட்டு, முன் கோபத்தோடு, தனது சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு - பறந்து போன கவிதைப் பறவை அது.

அதற்கு அரசியல் சுருதி உண்டு - ஆனால், தாளம் தான் ஒழுங்காக இல்லை! காரணம், குழந்தை மனம்!

அது குந்திப் பாடுவதற்காக விரிக்கப்பட்ட பாயில் - ஊதைக் காற்று உட்கார்ந்திருப்பதாகவே - வளர்த்தவர் நினைத்தார்!

அந்தப் பறவை - ஒரு கவிதை அதனுடைய வேர், பாதாளத்தில் இருந்தது. குருத்து மட்டும் கருகி - மொட்டாகி விட்டது!

ஆனால், அது பாடிய பாட்டுக்கள் - இன்றும் பசுமைப் புரட்சிகளை இலக்கிய வயலிலே முப்போகமாக விளைவிக்கின்றன.

அது, சூடிய “பா” மாலைகள், இலக்கிய மலர்கள் அத்தனையும் இன்று வரைச் செத்துப் போனதில்லை. நாற்றத்தை நாட்டிலே பரப்புகின்றன!

வீணையாய் இருந்த பறவை - எடுப்பார் கைகட்கு மாறி மாறி - வீணாகி விட்டது: "முகநக நட்பு” என்போர் அடுப்புக்கு அந்த கவித்துவ வீணை விறகாகிவிட்டது!

காரணம், முன்பின் என்று கட்சித் தொண்டுகளின் பருவ காழ்ப்புத் தேள்கள். அக்கட்சிக்குள்ளேயே ஒன்றுக்கு ஒன்று கொட்டிக் கொண்டிருந்த அழுக்காற்றுக் குடைச்சல்கள் தான்.

உனக்கு முன்னால் விரிந்திருக்கின்ற வானம் - உனக்குச் சொந்தமில்லையா?

அந்த வானத்தில், சாகாத அன்பை உன்னை வளர்த்தவன் எழுதி வைக்கவில்லையா?

நீர் கைவிடப்பட்ட குமாரன் இல்லையே! உன்னை மேய்த்தவனுடைய இதயம் உனக்குப் புல்வெளியாகத் தோன்றவில்லையா?

நீர் பெற்ற புதிய கட்சியின் அரசியல் அனுபவங்களை, அவனுக்கு முத்தமிழ் விருந்தாகப் படையலிடும்!

அவனுடைய புல்லாங்குழல் ஓசைக்கு முன்னால் - உனது காதுகளை நிமிர்த்திக் கேள் ஔ!

எதையும். அவன் காலடியிலே வைத்துவிட்டு, உனது இதயத்தை மறுபடியும் உனக்கே சொந்தமாக்கிக் கொள்!

இலையுதிர்ந்த மரமல்ல நீர்! இன்னும் சுருண்டு கிடக்கின்ற இளந்தளிர்கள் அவிழாத கிளைகளை - நீர் வைத்திருக்கின்றீர்!

போகக் கூடாத இடத்திற்கு நீர் போகவில்லை - ஆனால், வரக்கூடாத நேரத்தில்தான் வர நினைக்கின்றீர்.

இதற்கிடையில், நீர் பாடிய சத்தங்கெட்டப் பாக்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை !

திராவிடரியக்கத் தோட்டத்திலே மலர்ந்து மணம் பரப்பிய மல்லிகை அல்லவா நீர்?

நீர் பிறந்த அரசியல் கருப்பை - அசோகா ஓட்டலுக்குள்ளே இருக்காது! ஏனென்றால், கழகத்தை விட்டுப் பிரிந்துபோக அங்கேதானே உமது நெஞ்சமென்ற நிலத்திலே வித்திடப்பட்டது.

அது, அண்ணா என்ற அன்னையின் குடல்! அது, நீரும் - சகதியுமாகத்தானே இருக்கும்!

அதில் இன்னும் வடியாத அன்பு மட்டும் - எந்த இடத்திலும் இருக்காத அளவு உன் மீது குடி கொண்டிருக்கிறது.

தாயின் முகத்தில் காலத்தின் கீறல்தான் இருக்கும் - இளம் வெட்டு அதில் இருக்காது.

ஆனால் முழுமை பெற்ற இதயம் மட்டும் அங்கே எப்போதும் உண்டு.

அதோ, உன்னை வளர்த்தவன் ஆகாயத்தைப் பார்த்து - உனக்காக வேண்டிக் கொண்டிருக்கின்றான்.

செத்த பிறகும் - உனக்காக அவன் பல தடவை அழுதிருக்கிறான் - நான் அதைக் கேட்டிருக்கிறேன்.

ஏன் தெரியுமா? மரணக் கூற்றத்துடன் அந்தத் தமிழ் நாட்டு மாமன்னர் பலநாள் போராடிக் கொண்டிருந்தார் அல்லவா?

அப்போது, "சொர்க்கத்தில் அண்ணா” என்று நீர் யெழுதியெழுதி விக்கி விக்கித் தேம்பித் தேம்பி வசன நடைப் பாடலில் பாடிக் கொண்டிருந்தீரே !

மரணப் போராட்டத்தில் இருந்த அந்த மன்னர் - உனது புலம்பலோசையைச் செவியாரக் கேட்டுக் கேட்டுக் கண்ணீர் உகுத்தவர் - அதனால்தான்!

“எப்போது போகும், ஏன் இன்னும் போகவில்லை”என்று கூறிக் கொண்டே - பதவிக்காகக் கிளிசரின் கண்ணிர் உட்குத்துக் கொண்டிருந்தவர்கள் இடையே, நீர் தானே உமது இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு சில நாட்கள் தினந்தோறும் "கடிதத்தில் ” எழுதி எழுதிக் கண்ணிர் விட்டீர்!

தேசிய மரத்தடியிலிருந்த படியே, தன்னந்தனிப் பறவையாக - பாசத்தோடு பரிந்து அழுத - முதல் பறவையே - நீர் தானே!

"அறிவு" உம்மைக் குறை கூறும் போதெல்லாம்-நீர் அதனை மீறிச் சென்றிருக்கிறீர்!

அதனால்தான், மனித நேயப் பண்புக்கு - நாட்டு நேய அன்புக்கு முதலிடம் தந்து, “மரத்தறிவைப்" புறக்கணித்து - அண்ணாவுக்காக அழுதபடியே இருந்தீர்!

இதனை எல்லாம் மறந்த நீர் - இப்போது கூறுகிறீர் - "கழுவப்படாத பாத்திரத்தில் - வேகப்படாத சோற்றை உண்டதாக!"

யாருக்காக நீர், கதறிக் கண்ணீர் விட்டீரோ - அந்தத் தாய் மனத்தவர் உமக்கு இலைபோட்டு இப்படியா பறிமாறினார்?

வீட்டுச்சோறு வேண்டாமென்று, நீர் மாற்றார் விருந்துக்குச் சென்றவர்தானே?

அங்கே உமது மரியாதை பறிபோனது பற்றி - உம்மை வளர்த்தவர் மரணமான பிறகுதானா சொல்ல வேண்டும்?

ஜீவனற்ற கண்ணீரைச் சிந்துகின்ற பாட்டுப் பறவையே! காலமும் ஓலயிடுகின்றதே - உமது எழுத்தைப் படித்து!

உம்முடைய வரவு எப்போதும் அதிகம்தான்! ஆனால், செலவை அதிகமாக்கிக் கொள்ள நீர்தானே துள்ளித் துடித்தீர்?

உமது சொந்தப் புத்திகள் தவறு செய்யலாம்! ஆனால், உமது தந்தையின் புத்தி இனியாவது காப்பாற்றட்டும்!

நீர் ஒரு “கோப்பை!" அதை, நீரே பல தடவை கூறியிருக்கிறீர்! 'கோப்பையிலே என் குடியிருப்பு' என்று!

குழந்தை உள்ளத்தோடு பலர் அறிய அதைத் திரைப்படத்திலே பாடியும் தொலைத்து விட்டீர்!

உள்ளதை உள்ளபடியே உரைப்பவனால்தான் - உண்மையான உரிமை வரலாற்றை உலகுக்கு எழுதமுடியும் என்பதை, காந்தியடிகளுக்குப் பிறகு உணர்த்திய பறவை நீர்.

அந்தக் கோப்பையிலே உமது தந்தைதான் குடியிருக்கிறார் - திராட்சை ரசமாக !

அவரும் இப்போது வற்றிவிட்டார், சாறு இருந்த இடத்தை - நீர் முகர்ந்து பாரும்.

உமது பாசத் தலைவர், விலை மதிக்கமுடியாத வாசத்தை வீசிக் கொண்டிருப்பார்!

கூடு கட்டத் தெரியாத குயில் நீர்! காக்கையை நம்பி யாக்கையை வளர்த்தீர்!

நீர், செல்லாக் காசல்ல! உம்முடைய சந்தை காஞ்சி புரத்திலேஇருக்கின்றது!

தன்னம்பிக்கை வையும் பொன்னான எதிர்காலம் உமக்குப் பூரித்து நிற்கிறது.

உமது அண்ணன்தான் - உமக்கு இரு கண்களாக இருந்தார்! அவருடைய ஈரலை உமது எழுத்தால் எண்ணற்ற முறை நீர் வதைத்தீர்!

அந்தத் தலைவன், வைதாரையும் வாழ வைப்பவர்!பதமான சொற்களால், இதமாகப், பகையைக் கூட நெருங்கிப் பார்த்துப் பாசம் ஊட்டியவர்!

அவர் விடுத்த சாபம்தான், உம்மைப் பாதாளத்தில் பயிராக்கிக் கொண்டிருந்தது!

விமானத்தில் இருந்து விழுந்தவரல்ல நீர் - பொது வாழ்விலிருந்து விலகி - பிரிந்து, எடுப்பார் பொருளாய் வீதியிலே போய் விழுந்தவர்!

கடலில் நீர் மிதக்கவில்லை - கண்ணீரில் சிதக்கின்றீர்! யாரையும் பிடித்துக் கொண்டு நீந்த வேண்டிய அவசியமில்லை உமக்கு!

அதோ பார்! ஒரு கரும் படகு வருகின்றது. அதிலே, உமக்கு அறிமுகமானவர் அமர்ந்திருக்கின்றார்.

அவருக்கு சீவாத தலை! - சரி பொருத்தமில்லாத சொக்காய்! - காவிப் படர்ந்த பற்கள் - கருத்து ஒளியூட்டும் கண்களும் உண்டு.

நீர், அதிலே ஏறிக் கொள்ளும்! அவர் உம்மைக் கரை சேர்ப்பார்! அதே நேரத்தில் - உமது கறையையும் கழுவுார்!

உமது நெஞ்ச நெருப்பு குளிருகின்ற இமயம் அது. அறுந்துபோன உமது வீணையை வாசிக்கும் பல்கலை வித்தக வித்வான் அவர்!

நீர் ஓர் அறிவிலியல்ல - காரணம், உன்னை வளர்த்தவர் அறிஞர் திரு நாவுக்கரசர் - செஞ்சொல் வித்தகர்!

நீர், குழந்தை - குழி விழுந்த உம் கன்னத்தில் முத்தமிட - அவர் அதோ. உதடுகளை அருகில் கொண்டு வருகிறார்.

உமது கன்னம் முத்தத்தால் நிரம்பி வழியட்டும்! அவர் கன்னத்துக்கு நீ தாசனாக இரு! - கண்ணுக்கும் தாசனாக மாறு!

வீணையே பாடு கவிதையே எழுது!

நெஞ்சே நினை! வஞ்சனையற்ற உள்ளமடா

உனது உள்ளம்!

காயும்போது பிறரை நீர் நன்றாகவே காய்கிறீர்!

உம்மையே குத்திக் கொள்ளும்போது, அதைவிட வேகமாகவே நீர் குத்திக் கொள்கிறீர்! இதுதான் தன் நிலை !

வாழத் தெரியாதவன் பட்டியலிலே வந்து விட்ட வரிகளாகி விட்டீரே!

சமாதிக்கு வா! சாந்தமடை! உமது சரித்திரம் முடிந்து விடவில்லை!

சந்தனப் பெட்டியிலே நமது சந்ததி உறங்குகின்றது - எதையும் தாங்கும் இதயத்தோடு!

சிந்தனைப் பெட்டியிலே உமது உறுதி இன்னும் சிதையாமல் இருக்குமென்று நம்புகிறேன்.

சிந்தனைக் குயிலே!

சீர்குலையாப் பொதிகைக் காற்றே !

சிந்தி! சிந்தி!! பிறகு சில்லென்று வீசுக, தாய்க் கழகம் நோக்கி!