உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/B

விக்கிமூலம் இலிருந்து

B

Babbit metal - பாபிட் உலோகம்: முதல் உலோகக் கலவை. 1839 இல் புனையப்பட்டது. புனைந்தவர் அமெரிக்கப் புனைவாளர் பாபிட் (1799-1862). (வேதி) Babo's law - பாபோவின் விதி: ஒரு கரைபொருளை ஒரு நீர்மத்தில் கரைக்க அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்த கரைபொருள் அளவுக்கு நேர் வீதத்தில் இருக்கும். (இய)

bacillus - கோலியம்: கோல் வடிவமுள்ள துண்ணுயிரி. இரு பிளவிகள் பேரினத்தைச் சார்ந்தது. பா bacteria (உயி)

backbone - முதுகெலும்பு: இதன் குழாய் போன்ற பகுதியில் தண்டுவடம் உள்ளது. முள்எலும்புகளாலானது. மனித முதுகெலும்பில் 33 முள் எலும்புகள் உள்ளன. (உயி)

back cross - பெற்றோர் கலப்பு, பிற்கலப்பு: ஒரு கலப்பினத்தின் பாலணு. அதன் பெற்றோர் பாலணுக்கள் ஒன்றினால் கருவுறுதல். (உயி)

bacteria - குச்சியங்கள்: குச்சி போன்ற வடிவமுள்ள உயிரிகள். கோல், சுருள், கோளம் ஆகிய முன்று வடிவங்களில் உள்ளவை. ஒற்றைக் கண்ணறைத் தாவரங்கள். பச்சையம் இல்லாததால், ஒட்டுண்ணியாகவும் சாறுண்னியாகவும் வாழ்பவை. (உயி)

bactericide - குச்சியக் கொல்லி. (உயி)

bacteriology - குச்சிய இயல்: நுண்ணியரிகளான குச்சியங்களை ஆராயுந்துறை. பா. microbiology. (உயி)

bacteriolysis . குச்சியக் கலைவு. பா bacteria (உயி)

bacteriophage - குச்சியவுண்ணிகள்: இவை நச்சியங்கள் (வைரஸ்). தம் வால் மூலம் குச்சியத்துடன் இணைந்து தொற்றுவதைத் தொடருகின்றன. இவை குச்சியங்களுக்கு ஒட்டுண்ணிகள் ஆகும். (உயி)

bacteriorhiza - குச்சிய வேரிணை வாழ்வு: வேருக்கும் குச்சியங்களுக்கும் இடையே அமைந்த பிணைப்பு வாழ்வு. வேர் முண்டுகளில் குச்சியங்கள் தங்கித் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தைப் பெறுகின்றன. மாறாக, அவை நைட்ரேட் உப்புகளை வேர் முண்டுகளில் உண்டாக்குகின்றன. இவ்வாறு இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று உதவி வாழ்கின்றன. (உயி)

Bakelite - பேக்லைட்: தொகுப்பு முறையில் செய்யப்பட்ட முதல் பிளாஸ்டிகப் பொருள்களில் ஒன்று. தொலைபேசி, மின் சொடுக்கிகள், மின்காப்புப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)

baking soda - சமையல் சோடா: சோடியம் அய்டிரஜன் கார்பனேட். (வேதி)

balance - தராசு, சீரை: ஆய்வகத்தில் பொருள்களை நிறுக்கப் பயன்படுங்கருவி. 0.0000001 கிராம் வரை துல்லியமாக நிறுக்கலாம். இது இயற்பியல் தராசு, வேதித் தராசு என இரு வகைப் படும். (இய)

balance, spring - வில் தராசு, வில் சீரை: ஹூக் என்பார் விதியின் அடிப்படையில் அமைந்த கருவி. பனிக்கட்டி முட்டைகள் முதலியவற்றை நிறுக்கப் பயன்படுவது. இதைக் கொண்டு ஒரு பொருளின் ஒப்படர்த்தியையும் காணலாம். (இய)

baianced diet - சமன் செய்த உணவு: சமச்சீர் உணவு. உணவின் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்து தோராயமாக 3000 கலோரி வெப்பத்தைத் தரும் உணவு. (உயி)

ball and socket joint - பந்து கிண்ண மூட்டு: பா. joint (உயி)

ball bearing - குண்டுத் தாங்கி: ஒர் அச்சைச் சுற்றிக் குண்டுகள் நிரம்பிய வளையம் அமைந்தது, சக்கரம் சுழல்வதை எளிதாக்குவது. (இய)

ballistics - எறிஇயல்: வீழியல். எறிபொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. (இய)

ballistospore - எறிசிதல்: தோன்றுமிடத்திலிருந்து சிதல் வலுவாகத் தூக்கி எறியப்படுதல். இதனால் இது பரந்து பரவ ஏதுவாகிறது. (உயி)

balsam - பால்சம்: ஒட்டக்கூடிய பிசின். எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய். இனிய மணம். ஆய்வகத்திலும் பயன்படுவது. (உயி)

band - 1) அலை வரிசை: வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி. (இய)

band spectrum - பட்டை நிறமாலை வரி நிறமாலை. (இய)

band theory - பட்டைக் கொள்கை: ஆற்றல் பற்றிய கொள்கை. (இய)

bandwidth - 1.அலைவரிசை. 2. அகலம்: குறிப்பிட்ட அதிர் வெண்ணுள்ள வானொலிக் குறிபாடு பரவும் அதிர்வெண் எல்லை. 3. பட்டை. (இய)

bar - பார்: அழுத்த (சி.ஜி.எஸ்) அலகு. 103 பாஸ்கள். மில்லி பார் (100 பா.) வானிலை இயலில் அழுத்தத்தை அளக்கப் பயன்படுவது. (இய)

barb - சுணை: இறகுப்பரப்பிலுள்ள இழை போன்ற பகுதி. பா. wing (உயி)

barbitone - பார்பிடோன்: C8H12N2O3 பார்பிடூரிகக் காடியிலிருந்து பெறப்படும் வெண்னிறப் படிகம். இதன் சோடியம் உப்பு மயக்க மருந்து. (வேதி)

barbituric acid - பார்பிடுரிகக் காடி: C4H4N2O3. மலோனிகக் காடி, யூரியா ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வெண்னிறப் படிகத்துள். தணிப்பு மருந்துகளின் ஊற்றுவாய். பிளாஸ்டிக் தொழிலிலும் பயன்படுவது. (வேதி)

barbiturates - பார்பிடுரேட்டுகள்: மருந்துத் தொகுதி பார்பிடுரிகக் காடி உப்புகள். எ-டு. அலோனால், வெரோனால், லூமினால். (வேதி)

barbule - சிறுசுணை. பா. contour feather (உயி)

Barfoed's reagent - பார்போர்டு வினையாக்கி: செம்பு (II) அசெட்டெட், எத்தனாயிகக் காடி ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. எத்தனாயிகக்காடி என்பது அசெட்டிகக் காடியே. ஒற்றைச் சர்க்கரைகளைக் கரைசல் நிலையில் பார்க்கப் பயன்படுவது. இக்கலவையை ஒற்றைச் சர்க்கரையுடன் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (I) ஆச்சைடின் செந்நிற வீழ்படிவு உண்டாகும். (வேதி)

barium - பேரியம்: Ba. மென்மையான வெண்ணிற உலோகம். காற்றில்பட நிறம் மங்கும். உலோகக் கலவை செய்யப் பயன்படுவது. (வேதி)

barium carbonate - பேரியம் கார்பனேட்: BaCO3, கரையாத வெண்ணிற உப்பு. எலி நஞ்சாகப் பயன்படுவது. (வேதி)

barium chloride - பேரியம் குளோரைடு: BaCl2, வெண்ணிறத் திண்மம். எலி நஞ்சு, தோல் தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

barium meal - பேரியம் உணவு: வாய்வழியாகப் பேரியம் சல்பேட் எடுத்துக் கொள்ளப்படுதல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி, ஆய்வுக்கு ஏற்றதாகிறது. வேறு பெயர் பேரியக்குடல் கழுவல் (பேரியம் எனிமா). (மரு)

barium sulphate - பேரியம் சல்பேட்: BaSO4. வெண்ணிறத் திண்மம். மேற்பரப்புப் பூச்சுகளில் நிறமி விரிவாக்கியாகப் பயன்படுதல். மற்றும் கண்ணாடித் தொழிலும் ரப்பர் தொழிலும் பயன்படுதல். (வேதி)

bark - பட்டை: நடுமரம், தண்டு, வேர் ஆகிய பகுதிகளைக் குழ்ந்துள்ள புறவுறை. பா. cork(உயி)

barley- பார்லி: அரிசி, கோதுமை போன்று ஸ்டார்ச் அதிகமுள்ள தானியம். புல் வகையைச் சார்ந்தது. (உயி)

barn - பார்ன்: அணுக்கருச் சிதறல்களில் குறுக்கு வெட்டுப் பகுதிகளை அளக்கப் பயன்படும் பரப்பலகு. 1020 சதுர மீட்டருக்குச் சமம். (வேதி)

Barnet effect - பார்னட் விளைவு: காந்தமில்லாக் கோல் ஒன்று, தன் அச்சைச் சுற்றி உயர் விரைவில் சுழலும் பொழுது, அதில் சிறிதளவு காந்த ஆற்றலை உண்டாக்கும். (இய)

barograph - பாரவரைவி: ஒரு குறிப்பிட்ட காலத்தில் காற்று வெளி அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக் தாளில் பதிவு செய்யும் வானிலைக் கருவி. (இய)

barometer - பாரமானி: காற்றழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி. (இய)

baroscope - அடர்த்தி காட்டி: காற்றடர்த்தி மாற்றங்களைக் காட்டும் கருவி. (இய)

basal gangila - அடி நரம்பு முடிச்சுகள்: மூளை நரம்புத் திசுவின் சிறு திரள்கள். கட்டுப்பாட்டிற்கரிய இயக்கங்களை ஒழுங்குபடுத்துபவை. (உயி)

basal metabolism - அடிப்படை வளர்சிதை மாற்றம்: உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு வேண்டிய வளர்சிதை மாற்றம். (உயி)

base - 1. உப்பு மூலி: காரம். நீர்க்கரைசலில் அய்டிராக்சைல் அயனிகளைத் (OH) தரும் சேர்மம் உப்பு மூலிக்கரைசல் அதிகப் பிஎச். மதிப்பு (7க்கு மேல்) கொண்டது. 2. அடி-மட்டமான (வேதி) 3. அடிப் பகுதி. (இய)

base line - அடிக்கோடு: ஒரு படத்தை வரையக் கோணங்கள் எடுக்கப்படும் அளக்கப்பட்ட காடு (இய)

base metal - அடி உலோகம், மட்ட உலோகம்: பொன், வெள்ளி ஆகியவற்றிலிருந்து வேறுபடும். இரும்பு, காரீயம் முதலியவை. (வேதி)

base unit - அடியலகு: உண்டாகக் கூடிய இயல்பு நிகழ்ச்சிகள் அல்லது முன் மாதிரிகளைக் கொண்டு வரையறை செய்யப்படும் அலகு. எ-டு. எஸ்.ஐ. அலகில் மீட்டர் அடியலகு ஆகும். குறிப்பிட்ட ஒளி உமிழ்வின் அலைநீள அடிப்படையில் வரையறை செய்யப்படுவது. பா. fundamental unit. (இய)

basic - 1. காரத் தன்மையுள்ள: பி.எச் மதிப்பு 7க்கு மேலுள்ள ஒ. acidity. (வேதி) 2. அடிப்படை

basic dye - காரசாரயம்: சாயத்தில் ஒரு வகை. பா. dye.

basic forces - அடிப்படை விசைகள்: ஈர்ப்பு, காந்தம், மின்சாரம் முதலியவை. (இய)

basic salt - கார உப்பு: இயல்பான உப்புக்கும் அய்டிராக்சைடு அல்லது ஆக்சைடுக்கும் இடைப்பட்ட கூட்டுப் பொருள். அய்டிரோ ஆக்சியுப்பு.

basic science, fundamental science - அடிப்படை அறிவியல்: பயன்பாட்டை விட்டு நெறிமுறையை மட்டும் ஆராயும் துறை. எ-டு. இயற்பியல், வேதி இயல், கணக்கு உயிரியல், மெய்யறிவியல் ஒ. applied science.

basidium - அடிலகம்: பூஞ்சையின் அடிச்சிதல் உறுப்பு. சிதல்களை உண்டாக்குவது. (உயி)

basi fixed - அடி ஒட்டிய: எ-டு. கத்தரி

basipetal - அடி நோக்கிய: இயக்கம், வேறுபாடு அடைதல் முதலியவை நுனியிலிருந்து அடி நோக்கி அமைதல். காட்டாக, முன்தோன்று மரத்திசு, பின்தோன்று மரத்திசு ஆகியவற்றின் தோற்றத்திசை நுனியிலிருந்து கீழ்நோக்கி அமையும். தண்டில் வளர்ப்பிப் போக்குவரவு பொதுவாக அடி நோக்கியே அமையும். ஒ.acropetal.

bass - படுகுரல்: 250 ஹெர்ட்ஸ் களுக்குக் கீழுள்ள கேள் எல்லைத் தாழ் முனையில் உண்டாகும் அதிர்வெண்கள். இசையின் ஒரு பகுதி. இதனைப் படுத்தலோசை எனலாம். (இய)

bast - பட்டைத்திசு: பா. phloem. (உயி)

bats - வெளவால்கள்: பறக்கும் பாலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. (உயி)

battery - மின்கல அடுக்கு: மின்கலத் தொகுதி. இதில் முதல் மின்கலங்கள், சேமிப்பு மின்கலங்கள் அல்லது மின் இயக்கிகள் இருக்கும். நேர் மின்னோட்டத்தை அளிப்பது. ஆய்வகங்களிலும் உந்து வண்டிகளிலும் பயன்படுவது. இதனைப் பக்கவரிசையிலும் தொடர்வரிசையிலும் இணைத்து மின்சாரத்தை பெறலாம். (இய)

battery capacity - மின்கல அடுக்குத்திறன்: இந்த அடுக்கின் உழைக்கும் ஆற்றலும் மின்சாரம் தரும் ஆற்றலும் அதன் திறனைக் குறிக்கும். இஃது இத்தனை ஆம்பியர் என்று கூறப்பெறும். காட்டாகத் திறன் 10 ஆம்பியர் மணி என்றால் ஒர் ஆம்பியர் மின்னோட்டத்தை 10 மணி நேரத்திற்குப் பெறலாம் என்பது பொருள். (இய)

battery charge - மின்கலஅடுக்கு மின்னேற்றம் (இய)

battery discharge - மின்கலஅடுக்கு மின்னிறக்கம். (இய)

battery, storage - சேமக்கலன் அடுக்கு: இது துணைமின்கலமே. இதில் மின்னாற்றல் வேதியாற்றலாக மாற்றப்பட்டுச் சேமித்து வைக்கப் படுகிறது. இச்சேமிப்பால் இதற்கு அப்பெயர் வரலாயிற்று. (இய)

bauxite - பாக்சைட்: கூடுதல் நீர் மூலக்கூறுகள் உள்ள அலுமினியத் தாது. இக்கரைசலை மின்னாற் பகுக்க அலுமினியம் கிடைக்கும். (வேதி)

beam - 1. கற்றை: ஒழுங்காகச் செல்லும் கதிர்த் தொகுதி. துகள்களாலானது. எ-டு. மின்னணுக் கற்றை, ரேடார்க் கற்றை. 2. கோல்: தராசின் கோல். (இய)

beam compass - கோல் கவராயம்: ஒரு சட்டம் அல்லது கோலை மையமாகக் கொண்ட கருவி. இதில் சரி செய்யும் புள்ளிகள் இருக்கும். தொழில் நுட்ப நிறுவனங்களில் பெருவட்டம் வரையப் பயன்படுவது. (உயி)

bearing - திசைக் கோணம்: திசைக் காட்டியால் காட்டப் படும் கோணம். 90° திசைக் கோணம் என்பது கிழக்கு. 180° தெற்கு. 270° மேற்கு. (இய)

bearings - தாங்கிகள்: எந்திரப்பகுதிகள் (இய)

beats - விம்மல்கள்: ஒலியலைகள் அல்லது மற்ற அலைகளின் செறிவில் ஒழுங்காக ஏற்படும் ஏற்ற இறக்கம். (இய)

Beckmann thermometer - பெக்மன் வெப்பநிலை மானி: வெப்பநிலை வேறுபாடுகளை அளக்க உதவும் வெப்பநிலை மானி. (இய)

bees wax - தேன் மெழுகு: C30H61O. COC15H31. பல சேர்மங்கள் சேர்ந்தது, மஞ்சள் நிறம். தன் கூட்டைக் கட்டத் தேனியால் சுரக்கப்படுவது. மெழுகுப் பொருள்கள், மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. (உயி)

beetroot sugar - பீட்கிழங்குச் சர்க்கரை: பீட்கிழங்கிலிருந்து கிடைக்கும் சர்க்கரை. மேல்நாடுகளில் தயார் செய்யப்படுவது. (உயி)

behaviour - நடத்தை ஓர் உயிரியின் பல திறப்பட்ட செயல்களைக் குறிப்பது. இதில் உடற்செயல்களும் உளச்செயல்களும் அடங்கும். தூண்டலுக்கேற்ற துலங்கல் இதில் உண்டாகிறது. (உயி)

behavioural genetics - நடத்தை மரபணுவியல்: உயிரி நடத்தை பற்றி ஆராயும் மரபணுவியலின் ஒர் வகை. பா. genetics. (உயி)

bel - பெல்: ஆற்றல்மட்ட அடிப்படை அலகு. 10 டெசிபெல்கள். (இய)

bell metal - மணி வெண்கலம்: ஒரு வகை வெண்கலம் மணி வார்க்கப் பயன்படுவது. செம்பு, வெள்ளியம், துத்தநாகம், காரீயம் ஆகியவை கொண்டது. (வேதி)

Benedicts's solution - பெனிடிக்ட் கரைசல்: சோடியம் சிட்ரேட் சோடியம் கார்பனேட் செம்பு (II) சல்பேட்டு ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை. ஒடுங்கு சர்க்கரைக் கரைசலை ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. (வேதி)

benthos -ஆழிட வாழ்விகள்: ஏரி அல்லது கடலடியில் வாழும் தாவரத் தொகுதிகளும் விலங்குத் தொகுதிகளுமாகும். எ-டு. இயக்கமற்ற விலங்குகள் தவழ்ந்தும் வளை தோண்டியும் வாழ்பவை. (உயி)

benzaldehyde - பென்சால்டிகைடு: C4H5CHO. வாதுமை மணங்கொண்ட மஞ்சள் நிற கரிம எண்ணெய். உணவுக்குச் சுவை சேர்க்கவும் சாயங்கள், உயிர் எதிர்ப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவது. (வேதி)

benzene - பென்சீன் C6H4: மணமுள்ள அய்டிரோகார்பன். 1825 இல் பாரடேயினால் கண்டு பிடிக்கப்பட்டது. இதை, நிலக்கரித் தாரைச் சிதைத்து வடித்துப் பெறலாம். கொழுப்பைக் கரைக்கவும், உலர்சலவை செய்யவும் பயன்படுவது. (வேதி) benzoin - பென்சாயின்: ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். பிரயர் பால்சம். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது. 2. பென்சால்டிகைடைப் பொட்டாசியம் சயனைடுக் கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சாயின் உண்டாகும். (வேதி)

beri-ber - பெரி பெரி: வைட்டமின் பி1 குறைவினால் ஏற்படும் நோய். (உயி)

berkelium - பெர்க்கிலியம்: Bk. கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இதிலிருந்து பல ஒரிமங்கள் தொகுக்கப்படுகின்றன. (வேதி)

Bernoulli exclusion principle - பர்னவுலி தவிர்ப்பு நெறிமுறை: நிலையாகவும் சுழற்சி இல்லாமலும் ஒரு நீர்மம் பாயும் பொழுது, அதன் வழியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் அதன் மொத்த ஆற்றல் மாறாதது. (இய)

Bernoulli theorem - பர்னவுலி தேற்றம்: இயக்கத்திலுள்ள ஒரு நீர்மம் இயக்க ஆற்றல், நிலை ஆற்றல், அழுத்த ஆற்றல் ஆகிய முன்றையும் பெற்றுள்ளது. (இய)

berry - சாற்றுக்கனி: சிறிய வட்ட வடிவக்கனி, புறவுறையில் சாறு நிரம்பியிருக்கும். பல வகைகளைக் கொண்டது. தக்காளிப் பழம். பா. bacca. (உயி)

berryllium - பெரிலியம்: Be. இலேசான உலோகம். ஆனால் சற்றுக் கடினமானது. அதிக நச்சுத் தன்மை கொண்டது. உலோகக் கலவைகளில் பயன்படுவது. (வேதி)

Berzelius hypothesis - பெர்சிலியஸ் கருதுகோள்: ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் பருமனளவுள்ள எல்லா வளிகளும் சம எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டிருக்கும். வளிகளின் பருமனளவுகளுக்கும் உள்ள உரிய தொடர்பை இக்கருதுகோள் கூறுகிறது. (இய)

Bessemer process - பெசிமர் முறை: எஃகு தயாரிக்கும் முறை (வேதி)

beta decay - பீட்டா சிதைவு: பீட்டாதுகள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சிதைவு. (இய)

beta factor - பீட்டா காரணி: கணிம இயற்பியலில் (பிளாஸ்மா பிசிக்சிஸ்) காந்த அழுத்தத்திற்கும் கணிம இயக்க அழுத்தத்திற்கும் உள்ள வீதமாகும். கணிமம் (பிளாஸ்மா) என்பது பொருளின் நான்காம் நிலை, அதிக வெப்ப நிலையுள்ளது. (இய)

beta iron - பீட்டா இரும்பு: தூய இரும்பின் புற வேற்றுரு. ஆல்பா இரும்பு போன்றது. ஆனால் காந்தம் இல்லாதது. (வேதி)

beta rays - பீட்டா கதிர்கள்: அதிக ஊடுருவு ஆற்றலுள்ள பீட்டா துகள்களின் சுழற்சியாகும். (இய)

betatron - பீட்டா விரைவாக்கி: நிலையான சுற்று வழியில் இயங்கும் விரைவாக்கி. மின் னணுக் கற்றையைக் கொண்டு, உயராற்றல் துகள்களைப் பெறுங் கருவி. (இய)

bevel edge - சரிவு விளிம்பு. (இய)

beverages - குடி நீர்மங்கள்: பானங்கள். பருகுவதற்குத் தகுதியுள்ளவை. தேநீர், பால் முதலியவை இயற்கைப் பானங்கள். கோக்கோகோலா முதலியவை செயற்கைப் பானங்கள். (உயி)

Bhaskara - பாஸ்கரா: இந்தியப் புவி உற்று நோக்கு நிலா. ஒ. Aryabhatta. (இய)

BHC - பி.எச்.சி, பென்சின் அறு குளோரைடு: C6H4Cl4 உருவ மற்ற சாம்பல் நிறக் கெட்டிப் பொருள், பூஞ்சையின் மணம், ஆற்றல் மிக்க பூச்சிக் கொல்லி. (வேதி)

Bial's reagent - பாயல் வினையாக்கி: 10% இரும்பு (lll) குளோரைடும், அடர் அய்டிரோகுளோரிகக் காடியும், ஆர்சினாலும் சேர்ந்த கலவை. பெண்டோஸ் சர்க்கரையை ஆய்ந்தறியப் பயன்படுவது. இச்சர்க்கரைகளை இவ்வினையாக்கியுடன் சேர்த்துக் கொதிக்க பச்சை நிறம் உண்டாகும். (இய)

biceps - இரு தலைத்தசை: இது ஒர் இயக்குத் தசை. இரு நாண் இருப்பதால் இருதலைத்தசை, இது சுருங்கும் பொழுது முன்கை மடங்குகிறது. ஆகவே, இது மடக்கு தசை. பா. triceps. (உயி)

biconcave - இருபுறமும் குழிந்து: இரு புறக் குழிவில்லை.

bicuspid valve - ஈரிதழ் திறப்பி: பா. mitral valve. (உயி)

biennials - இருபருவப் பயிர்கள்: தம் வாழ்க்கைச் சுற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும் தாவரங்கள், முதலாண்டு பூத்தலும் இரண்டாமாண்டு கனியளித்தலும் நடைபெறும். எ-டு. வெங்காயம், முள்ளங்கி. (உயி)

big bang theory - பெரு வெடிப்புக் கொள்கை: மீ அடர்த்திக் கொள்கை. விண்னகத் தோற்றக் கொள்கைகளில் ஒன்று. விண்ணகத்திலுள்ள எல்லாப் பொருட்களும் ஆற்றலும் மீயடர்த்தியுமுள்ள ஒரு திரட்சி வெடித்ததிலிருந்து தோன்றின என்று கூறுவது. அவ்வாறு வெடித்தது மிகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட நேரத்திலாகும். இக் கொள்கை முதன் முதலில் 1927இல் ஏ.ஜி.ஈ. லெமாய்டர் (1894-1966) என்பவரால் உருவாக்கப்பட்டது. 1946இல் ஜார்ஜ் கேமோ (1904-1968) என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது. பா. steady state theory. (வானி)

bilateral symmetry - இருபக்கச் சமச்சீர்: ஒர் உயிரியின் உடற் பகுதிகளின் சீரமைப்பு. இதில் இடப்பாதிகளும் வலப்பாதிகளும் ஒன்று மற்றொன்றின் ஆடித் தோற்றங்களாக இருக்கும். அதாவது, ஒரு செங்குத்துக் கோட்டில் மட்டுமே உடற்பகுதிகளை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. மீன், புலி நகக்கொன்றை. பா. symmetry. (உயி) bile - பித்த நீர்: கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு. (உயி)

bile duct - பித்த நீர்நாளம்: பித்த நீர் செல்லும் குழாய். (உயி)

bimetallic strip - இரு உலோகப் பட்டை: இரு உலோகங்கள் பக்கவாட்டில் சேர்ந்த சட்டம் தீ எச்சரிக்கை செய்யும் கருவிகளில் பயன்படுதல். (இய)

binary code - இரு நிலைக் குறித்தொகுதி: இருமக் குறித் தொகுதி இருநிலை இலக்கங்களின் தொகுதிகளாக எண்கள் தெரிவிக்கப்படும். இவை கணிப்பொறியில் பயன்படுத்தப்படுபவை. (இய)

binary compound - இருமத்தனிமச் சேர்மம்: இரண்டு தனிமங்களிலிருந்து உண்டாகும் சேர்மம். சோடியம் குளோரைடு. (வேதி)

binary digit - இரு நிலை இலக்கம்: இரும இலக்கம். கணிப் பொறியின் அடிப்படை 0 அல்லது 1. இருநிலை எண் முறையில் ஒர் எண்ணைத் தெரிவிக்கப் பயன்படுவது. எ-டு. 0110 பா. bit (இய)

binaryfission - இரட்டைப் பிளவு: ஒர் உயிரியின் பாலில்லா இனப்பெருக்கம். இதில் ஒத்த ஆனால் சிறிய சேய் உயிரிகள் உண்டாதல், குச்சியங்கள். (உயி)

binary number - இரும நிலை எண்: எண் முறையில் இரண்டின் அடிமானத்தைக் கொண்ட எண். எ-டு. 1011 (இய)

binary stars - இரட்டை விண் மீன்கள்: ஒரு திரட்சியின் பொதுமையத்தை வலம் வரும் இரு விண் மீன்கள். (வானி)

binocular - இரு கண் நோக்கி: ஒரே சமயத்தில் இரு கண்களாலும் பார்க்கக் கூடிய கருவி. இது இரு தொலை நோக்கிகளைக் கொண்டது. (இய)

binomial nomenclature - இரு பெயரிடல்: உயிரிகளுக்கு இரு பெயரிட்டு அழைக்கும் முறை. இது 1735இல் ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலார் காரோலஸ் லின்னேயஸ் என்பவரால் உருவாக் கப்பட்டு நீக்கமற நிலைத்திருப்பது. ஒவ்வொரு உயிருக்கும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பேரினப்பெயர். மற்றொன்று சிறப்பினைப் பெயர். எ-டு. அய்பிஸ்கஸ் ரோசாசினன்சிஸ் (செம்பருத்தி). இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது, சிறப்பினப் பெயர். (உயி)

bioassay - உயிரிக் கணிப்பு: அளவு முறையில் உயிரிய ஊக்கிகளை மதிப்பிடுவது. எ-டு. ஆஸ்ட்ரஜன் மதிப்பீடு. (உயி)

biochemistry - உயிரி வேதி இயல்: உயிரிகளின் வேதிச் செயல்களையும் வேதிப்பொருள்களையும் ஆராயுந்துறை. (உயி)

biochemical taxonomy - உயிரி வேதி வகைப்பாட்டியல்: உயிரி வேதிப் பண்புகள் அடிப்படையில் பாகுபாடு செய்தல். மரப்பால் அடிப்படையில் தாவரக் குடும்பத்தின் இரு பெரும் பிரிவுகளாகிய ஆஸ்டிராய்டி சிக்கோரியய்டி ஆகிய இரண்டும் பிரிக்கப்பட்டிருத்தல். பா. taxonomy ஒ. numerical taxonomy. (உயி)

biocide - உயிர்க் கொல்லி: தீங்குதருந் தாவரம். விலங்கு முதலியவற்றைக் கொல்லும் வேதிப் பொருள். இதில் பூஞ்சைக் கொல்லி, பூச்சிக் கொல்லி முதலியவை அடங்கும். (உயி)

biocoenosis - தாவர விலங்குக் கூட்டம்: தாவரங்களும், விலங்குகளும் அடங்கிய தொகுதி. (உயி)

biocontrol agents - உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணிகள்: இவை வெட்டுக்கிளி, பறவை, தவளை முதலியவை. குழ்நிலைத்தகவும் சிக்கனமுடையதுமான நெல்பண்ணையை உருவாக்க உதவுபவை. (இய)

biodiversity- உயிரி வேற்றுமை: பல வேறுபாடுகளைக் கொண்ட உயிரிகள் இயற்கைச் சமநிலை குலையாது வாழ்தல். (உயி)

bioelectronics - உயிரிமின்னணுவியல்: மின்னணுக் கருவியமைப்புகளை உடலில் பதியவைத்து மக்கள் நல்வாழ்விற்கு உதவுவதை ஆராயுந்துறை. பா. bionics. (உயி)

bioengineering - உயரிப் பொறியியல்: குறையுள்ள அல்லது நீக்கப்பட்ட உடல் உறுப்புகளை ஈடு செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்கப்படும் கருவிகளை ஆராயுத்துறை. எ-டு. செயற்கை உறுப்புகள். கேட்க உதவுங் கருவிகள். (உயி)

biogas - உயிரியவளி: சாண எரிவளி. சாணத்தை நொதிக்கச் செய்யும் பொழுது தோன்றும் வளி, அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது சிறந்த எரிபொருள். (வேதி)

biogenesis - உயிர்த்தோற்றம்: இது ஒரு திண்ணிய கொள்கை. உயிர்ப் பொருள்களிலிருந்தே உயிரிகள் உண்டாக இயலும் என்பது இதில் வற்புறுத்தப்படுகிறது. ஒ. abiogenesis. (உயி)

biogeograpny - புவி உயிர்ப்பரவியல்: இவ்வுலகில் தாவரங்களும் விலங்குகளும் பரவி இருப்பதை ஆராயுந்துறை (உயி)

biological clock - உயிரிக் கடிகாரம்: பல பருவச் சுழற்சிகளையும் பகற்செயல் ஒழுங்குகளையும் ஒரே சீராக்கும் உயிரியல் உள்விசை நுட்பம். (உயி)

biological control - உயிரியல் கட்டுப்பாடு: வேதிப் பொருள்களைத் தவிர்த்து இரையாக்கிகளைக் கொண்டு தொற்றுயிர்களைக் கட்டுப்படுத்தல். எ-டு. மீன்களால் கொசுக்களை அழித்தல். பம்புகளால் எலிகளைக் கொல்லுதல். (உயி)

biological harbingers - உயிரியல் முன்னறிவிப்பிகள்: நிலநடுக்கம் முதலிய இயற்கைக் கேடுகளை முன்கூட்டி அறிவித்து அவ்விடத்தை விட்டு அகலும் விலங்குகள். எ-டு. எலி, பாம்பு. biological resources - உயிர் வளங்கள்: தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய இயற்கை வளங்கள். (உயி)

biological warfare - உயிர்ப் போர்: பயிர்களையும் விலங்குகளையும் அழிக்க நோய் உண்டாக்கும் உயிரிகளைப் பயன்படுத்துதல். (உயி)

biology - உயிரியல்: உயிர் நூல். உயரிகளை ஆராயும் ஒர் அடிப்படை அறிவியல். தாவரவியல், விலங்கியல், உடலியல் ஆகிய மூன்றும் இதில் அடங்கும். மருத்துவம் இதிலிருந்து கிடைத்த பயனுறு அறிவியல். (உயி)

bioluminiscence - உயிர் ஒளிர்வு: உயிர்ப் பொருள்களால் உண்டாக்கப்படும் ஒளி உயிர்வளி ஏற்றப் பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருள்களால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லூசிபெரோஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சிகள் கடல் விலங்குகள், குச்சியங்கள், பூஞ்சைகள். (உயி)

biomass - உயிரியத் தொகுதி: குறிப்பிட்ட பகுதியில் வாழும் குறிப்பிட்ட உயிர்களின் தொகுதி. (உயி)

biome - உயிர்வாழ்பகுதி: பெரு வட்டாரச் சமுதாயங்களில் ஒன்று. எ-டு, துந்திரா, இலையுதிர்காடு, பாலை. (உயி)

biomechanics - உயிர் விசை இயல்: உயிரை எந்திரமாகக் கருதி அதன் வேலைகளை ஆராயுந்துறை. (தொ.நூ)

biomedical engineering - உயிர் மருத்துவப் பொறியியல்: உயிர்சார் மருத்துவத்தை பொறி இயல் தொடர்பாக ஆராயுந்துறை. (தொ.நூ)

biometry - உயிர் அளவை: உயிரியலைப்புள்ளி இயல்முறையில் ஆராய்தல். (உயி)

biomimatics - புதுப்பொருள் ஆய்வியல், புதுவியல் : புதுப் பொருள்களை ஆராயுந்துறை, புதியது. (தொ.நூ)

biomolecules - உயிர்மூலக் கூறுகள்: உயிர்களில் காணப்படுபவை. (உயி)

bionics - உயிர்ப்பயனியல்: உயிரிகளின் செயல்களை ஆராய்ந்து, அவ்வாராய்ச்சியின் அடிப்படையில் உருவாகும் நெறிமுறைகளைக் கணிப்பொறி முதலியவற்றை வடிவமைக்கப் பயன்படுந்துறை. ஒ bioelectronics, cybernetics.(உயி)

biophysics - உயிர் இயற்பியல்: உயிரியலின் இயற்பியல் நிலை களை ஆராயுத்துறை. (உயி)

biopoiesis - உயிரியாக்கம்: மூலக் கூறுகளின் பகர்ப்பாக உயிரிகள் தோன்றுதல். உயிரிலித் தோற்றத்தில் இது ஒர் எல்லைக்கல். டி.என்.ஏ, ஆர். என். ஏ. ஆகிய இரண்டு விந்தை வேதிப் பொருள்களும் தாமே பெருகக் கூடியவை. (உயி)

biopsy - துணித்தாய்தல்: உயிரி லிருந்து ஒரு பகுதித் திசுவைப் பிரித்தெடுத்து, நுண்ணோக்கியில் வைத்து அதன் நோய்த் தன்மையினை ஆராய்தல். (உயி)

biorhythm - உயிர் ஒழுங்கு: உயிரியல் தாள முறை. உயிரியின் நடத்தையில் ஏற்படும் பருவநிகழ் மாற்றம். உயிர்க் கடிகாரத்தால் நிலை நிறுத்தப்படுவது. எ.டு. பகற்பொழுது ஒழுங்கு. (உயி)

bioscience - உயிர் அறிவியல்: உயிரியல்களில் ஒன்று விலங்கியல். (உயி)

bioscientist - உயிர் அறிவியலாளர்: உயிர்ப்பொருள்களை ஆராய்பவர். (உயி)

bioscope - படநோக்கி: திரைப்படங்களை வீழ்த்துங்கருவி. (உயி)

biosensor - உயிர் உணர்வி: உயிர் உணர்வுகளை அறிவது. (உயி)

biosphere - உயிர்க் கோளம்: உயிரிகள் அடங்கிய உலகம். கல் வெளி, நீர் வெளி, காற்று வெளி ஆகியவை இதில் அடங்கும். (உயி)

biosynthesis - உயிர்ச் சேர்க்கை: உயிர்கள் வேதிப் பொருள்களைத் தொகுத்தல். (உயி)

biosystematics - உயிர் வகைப்பாட்டியல்: சிறப்பினங்களுக்கிடையே உள்ள உறவுகளை ஆராய, ஆய்வு வகைப்பாட்டு துணுக்கங்களைப் பயன்படுத்தும் துறை. ஒ. numerical taxonomy (உயி)

biota - உயிர்த் துணைத்தொகுதி: குறிப்பிட்ட பகுதி அல்லது ஊழிக்குரிய திணைத் தாவரங்களும் திணை விலங்குகளும் அடங்கிய தொகுதி. (உயி)

biotechnology - உயிர்த்தொழில் நுட்பவியல்: நுண்ணுயிர்கள் அல்லது அவை உண்டாக்கும் நொதிகளைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நுணுக்கம். விரைந்து வளரும் துறை. மருத்துவம், உணவு உற்பத்தி முதலிய துறைகளில் இத்துறை நிறைந்த பயன்களைக் கொண்டது. ஒ. bionics, cybernetics. (உயி)

biotelemetry - உயிர் தொலை அளவை : ஒரிடத்தில் பதிவு செய்யப் பெறும் இதயத் துடிப்பு, மூச்சு விடுதல் முதலிய செயல்களை வானொலி மூலம் மற்றொரு இடத்திலிருந்து அளத்தல். எ-டு. புவியிலிருந்து செயற்கை நிலாவிலுள்ள உயிரின் மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு முதலியவற்றை வானொலிக் குறிபாடு மூலம் அறிதல். பா. telemetry. (உயி)

biotic factors - உயிர்க்காரணிகள்: இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்களை உண்டாக்குபவை. இவை பின்வருமாறு: 1. மேய்ச்சல் 2. ஒட்டி வாழ்விகள் 3. ஒட்டுண்ணிகள் 4. கூட்டுயிரிகள் 5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு (மைக்கோட்ரோபி). (உயி)

biotin - பயாட்டின். C10H16O3N2S. வார்ப்புரு:S C10H16N2O3S. வெப்பநிலைப்புடைய துணை நொதி, வைட்டமின் பி தொகுதியில் ஒன்று. இதன் பெயர் வைட்டமின் எச். (உயி)

biotype - உயிர் வகை: ஒரே மரபணு இயைபுடைய தனி உயிர்கள் இயற்கையான தொகுதியாக அமைந்திருத்தல். எ-டு. பால் தொகுதி (குளோன்) ஒ. ecotype. (உயி)

bipinnaria - இரட்டை இறகிளிரி: நட்சத்திர மீனுக்குரிய இரு மருங்கிளரி. ஒ. pluteus. பா. dipleurula. (உயி)

biramous appendage - இரு கிளை உறுப்பு: நண்டு முதலிய ஒட்டுடலிகளில் காணப்படும் உறுப்பு. பா. phyllopodium, stenopodium. (உயி)

birth control - பிறப்புக் கட்டுப்பாடு: தடைக் கருவிகள் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல். இதனால் பிறப்பு வீதம் குறையும். பா. family planning. (உயி)

bisexual - இருபால்: ஆண், பெண் ஆகிய இருபால் இனக் கண்ணறைகளையும் தோற்றுவிக்கும் தன்மை. எ-டு. மண்புழு, பூவரசு. (உயி)

bismuth - பிஸ்மத்: Bi வெள்ளி நிற உலோகம். செந்நிறம். நொறுங்கக்கூடியது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்துவது. உலோகக் கலவைகளில் பயன்படுவது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒப்பனைப் பொருள்களிலும் மருந்துகளிலும் பயன்படுபவை. (வேதி)

bit - பிட்: அலகுச் சொல், பைனரி டிஜிட் என்பதன் சுருக்கம். இரு நிலை இலக்கம் (0,1), கணிப்பொறியிலும் ஏனைய எண் முறைகளிலும் செய்திகளின் அடிப்படை அலகு. ஒர் எழுத்தை, 1 பைட் இடத்தில்தான் பதிவு செய்ய இயலும். எட்டுப் பிட்டுகள் கொண்டது ஒரு பைட் 1024 பைட் ஒரு கிலோ பைட். பா. byte. (உயி)

bitumen - நீலக்கீல்: எரியக்கூடிய பல கனிமப் பொருள்களைக் கொண்டது. அவையாவன. அஸ்பால்ட், நாப்தா, பெட்ரோலியம். (வேதி)

biuret test - பையூரட் ஆய்வு: புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட் துளித்துளியாகக் கலக்கப்படுகிறது. தோன்றும் ஊதாநிறம் புரதமிருப்பதைக் காட்டுகிறது. (வேதி)

black body - கரும்பொருள்: எல்லாப் படுகதிர் வீச்சுகளையும் உறிஞ்சும் பொருள். கரும் பொருளிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வெளியேறும் கதிர்வீச்சாற்றலுக்கு கரும் பொருள் கதிர்வீச்சு என்று பெயர். (இய)

black hole - கருந்துளை: இடக் காலப்பகுதி, இதிலிருந்து பொருளோ ஆற்றலோ தப்பமுடியாது. இது ஒரு விண்மீனாக இருக்கலாம். இங்கு விடுபடு விரைவு ஒளியின் விரைவை விட மிகுதி. கருந்துளைகள் தோற்ற மீன்களின் ஆற்றல் ஊற்றுகளாகக் கருதப்படுபவை. (வான)

black light - கருவொளி: ஒளிர் பொருள்களில் விழும் புற ஊதாக்கதிர்கள் தென்படா ஒளியாகும். இப்பொருள்கள் மீண்டும் ஒளியை உண்டாக்கும். (இய)

Blackman reaction - பிளாக்மன் வினை: ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் இருட்செயல். ஒளிச்செயலைத் தொடர்ந்து வருவது. நீரின் அய்டிரஜனால் கரி ஈராக்சைடு ஒடுங்குகிறது, சர்கரையாகிறது. Hill reaction.(உயி )

bladder - பை: உட்குழிவான தசையுறுப்பு. இது காற்றுப்பை, பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை எனப் பலவகைப்படும். (உயி)

blast furnace - ஊதுலை: இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் உலை. (வேதி)

blastocyst - கருங்கோனியம்: பதிவதற்கு முன் பிளவிப் பெருகலின் பிந்திய நிலைகளில் உள்ள பாலூட்டி முட்டை. நீர் நிரம்பிய உட்குழிவான அணுக்கோளத் தாலானது. இதிலிருந்து கருவளர்கிறது. பா. blastula, trophoblast. (உயி)

blasto-genesis - கருக்கோளத் தோற்றம்: கருக்கோளவாக்கம். மரபு வழிப் பண்புகள் இனக்கணியத்தின் வழியாகச் செல்வதற்குக் கருக்கோளத் தோற்றம் என்று பெயர். 2. அரும்புதல். அரும்புகள் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம். (உயி)

blastotomy - கருக்கோளப்பிரிவு: கருக்கோளக் கண்ணறைகள் பிரிதல். பா. gastrula (உயி)

blastula - கருக்கோளம்: கருவுற்ற முட்டை பிளவிப் பெருகுதலால் உண்டாகும் கோளவடிவ வளர்நிலை. (உயி)

bleaching agents - வெளுப்பிகள்: நிறம் நீக்க அல்லது வெளுக்கப் பயன்படும் வேதிப் பொருள்கள். குளோரின், கந்தக ஈராக்சைடு. (வேதி)

bleaching powder - வெளுக்குத்தூள், சலவைத்தூள்: CaOCl2, கால்சியம் அய்டிராக்சைடுடன் குளோரினைச் சேர்க்க இத்துள் கிடைக்கும். நீரிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லப் பயன்படுதல். (வேதி)

bleeder - 1. குருதிக் கசிவோர்:குருதி உறையாமை நோயினால் (ஈமோபிலியா) வருந்துபவர். அடிக்கடி குருதிக் கசிவுக்குட்படுபவர். (உயி) 2. மின் தடை: குறிப்பிட்ட வீதத்தில் மின்சாரத்தை எடுக்கப் பயன்படுவது. (இய)

blende - பிளண்ட்: இயற்கையில் கிடைக்கும். உலோகச் சல்பைடு தாது. எ-டு. துத்த நாகப்பிளண்ட். (வேதி) blind spot - குருட்டுப் புள்ளி: விழித்திரையில் பார்வை நரம்பு துழையும் புள்ளி. இப்புள்ளிக்கு ஒளியுணர்வு இல்லை. பா. eye. (உயி)

blister - கொப்புளம்: பா. boils.(உயி)

blood - குருதி: மனித உடலில் ஒடும் நீர்மம். உணவுப்பொருட்கள், மூச்சு வளிகள், வளர் ஊக்கிகள் ஆகியவற்றை ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வது. (உயி)

blood clotting - குருதி உறைதல்: குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்புகள் ஆகியவை இக்கட்டை உண்டாக்கும் காரணிகள். (வேதி)

blood film - குருதிப் படலம்: குருதியின் இயைபை ஆராய, அதைக் கண்ணாடி வில்லையில் படலமாக எடுத்துச் சாயமேற்றி துண்ணோக்கியில் பார்த்தல். (உயி)

blood groups - குருதி வகைகள்: குருதிகளில் காணப்படும் எதிர்ப்பிகள் (ஆண்டிஜன்ஸ்) அடிப்படையிலும், தெளியத்திலுள்ள எதிர்ப்புப் பொருள்கள் அடிப்படையிலும் குருதி வகைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் நான்கு பிரிவுகள் உள்ளன. ஏ, பி, ஏபி, ஒ. 1990இல் இக்கருத்தை கூறியவர் லேண்ட் ஸ்டெயினர். (உயி)

blood pressure - குருதியழுத்தம்: முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை. இஃது இயல்பானவரிடத்து 120க்கும் 80க்கும் இடையே இருக்கும். குருதியழுத்தமானியால் இது மருத்துவரால் அளக்கப்படுவது. (உயி)

bloom - மலர்ச்சியுறுதல்: ஒரு சிறப்பின எண்ணிக்கையில் பார்க்கக்கூடிய அளவுக்கு உயர்வு ஏற்படுதல். எ-டு. பாசிச் சிறப்பினம். (உயி)

blow pipe - ஊதுகுழாய்: வளியும் காற்றும் சேர்ந்த கலவை. அழுத்தத்தில் இக்குழாயிலிருந்து வெளியேற்றப்படுவதால் தீச்சுடர் உண்டாக்கப்படுதல். ஊது விளக்கு என்றும் கூறலாம். (வேதி)

blue print - நீல அச்சுப்படம்: நீல வரைபடம். இரும்பு பிரஷியேட் தாளில் ஒளிப்பட முறையில் நீலப் பின்னணியில் வெள்ளைக் கோடுகள் வரையப்படும் படம். கட்டிடம் முதலியவற்றின் அமைப்பைக் காட்டும் திட்டப்படம். (தொ.நு)

blue vitriol - மயில் துத்தம்; CuSO45H2O. படிக வடிவ செம்பகச் சல்பேட், பூஞ்சைக் கொல்லிகளில் நச்சுப்பகுதி. செம்பு முலாம் பூசப் பயன்படுவது. (வேதி) bob - குண்டு: ஊசல் குண்டு. (இய)

bobbin - நூலடக்கி: தைக்க அல்லது நெய்வதற்குரிய நூல் சுற்றப்படும் கருவி. (தொழி)

body - உடல்: இது விலங்குடல், தாவர உடல், மனித உடல் என மூன்று வகைப்படும். மனித உடலில் மட்டுமே திட்டமான உறுப்பு வேறுபாடு உண்டு. தலை, கழுத்து, உடம்பு, புறத்துறப்புகள் என அது உறுப்பு வேறுபாடு கொண்டதாகும். உடம்புக்கு வேறு பெயர் நடுவுடல். பா.trunk. (உயி)

body cavity - உடற்குழி விலங்குடலின் உட்குழி. பா. coelom. (உயி)

Bohr atom - போர் அணு: தம் கொள்கையில் போர் முன்மொழிந்தற்கேற்ற அமைப்புள்ள அணு மாதிரி. இது போர் சுற்று வழியையும் ஆரத்தையுங் கொண்டது. (இய)

Bohr effect - போர் விளைவு: கரி ஈராக்சைடு அளவு அதிகமாவதால், குருதி முச்சு நிறமியின் உயிர்வளி நாட்டம் குறையும் இயற்கை நிகழ்ச்சி. இதனால் வணி மாற்றம் நடைபெற ஏதுவாகிறது. (உயி)

Bohr theory - போர் கொள்கை: அணு நீர் வளியின் நிறமாலையை விளக்க நீல்ஸ் போர் (1855-1962) 1911இல் அறிமுகப் படுத்தி, 1913இல் வெளியிட்ட கொள்கை. (இய)

boiling - கொதித்தல்: வெப்பநிலை மாறாமல் ஒரு நீர்மம் ஆவி அல்லது வளிநிலைக்கு மாறுதல். (இய)

boils - கொப்புளங்கள்: மயிர்களைச் சுற்றி கடுமையாக ஏற்படும் அழற்சி. ஸ்டேப்பிலோ காக்கஸ் அரியஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. சீழ் உண்டாகும் வடிவத்திற்குத் திறப்பு இருக்கும். பா. blister. ஒ. carbuncle (உயி)

bond - பிணைப்பு: அணுக்களையும் அணுத்தொகுதிகளையும் இறுக்கிப் பிடிக்கும் விசை. (வேதி)

bond energy - பிணைப்பாற்றல்: குறிப்பிட்ட பொருளில் குறிப்பிட்ட கட்டைப் பிரிக்கப் பயன்படும் ஆற்றல். (வேதி)

bond length - பிணைப்பு நீளம்: வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு. (வேதி)

bond polarity - பிணைப்பு முனைத் திறன்: மின்னணுக்களை ஈர்க்க, வேதிப்பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு. (வேதி)

bone - எலும்பு: எல்லா உயர் விலங்குகளின் எலும்புக் கூட்டைத் தோற்றுவிக்கும் கடினத் திசு, கொல்லேஜேன் இழைகள், எலும்பு உப்புகள் (கால்சியம் மற்றும் பாஸ்பேட்) ஆகியவற் றினாலானது. எலும்பிழைப்படலத்தால் (பெரியாஸ்டியம்) போர்த்தப்பட்டிருக்கும். உடலுக்கு உரத்தையும் வடிவத்தையும் அளிப்பது. (உயி)

bone ash - எலும்பு சாம்பல்:எலும்பை எரிக்க உண்டாவது. (வேதி)

bonsai trees - குருளை மரங்கள்: தொட்டியில் வளர்க்கப்படும் சிறிய தாவரங்கள். இக்கலையில் ஜப்பானியர்கள் வல்லவர்கள். (உயி)

Boolean algebra - பூலின் இயற்கை கணிதம்: 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் பூல் என்னும் கணித மேதையால் உருவாக்கப்பட்டது. மெய் அல்லது பொய்யான முறைமை ஆணைகளைச் சுருக்கெழுத்தில் கணிப்பொறியில் அமைக்கும் முறை. (இய)

borate - பொரேட்: போரிகக்காடி உப்பு.(வேதி)

borax - வெண்காரம்: Na2B4O710H2O. வார்ப்புரு:S Na2[B4O5(OH)4.8H2O. பொரானின் முதன்மையான தாது. மஞ்சளும் நீலமும் சாம்பல் நிறமும் சேர்ந்த கனிமம். வெண்ணிறப் படிகம். நச்சுத் தடையாகவும் துப்புரவுப் பொருளாகவும் பயன்படுவது. (வேதி)

bordeaux mixture - போர்டோ கலவை: செம்புச் சல்பேட்டும் கால்சியம் ஆக்சைடும் நீரில் சேர்ந்த கலவை. பூச்சிக் கொல்லி. (வேதி)

boredom - சலிப்பு: அலுப்பு தட்டும் நிலை. இதன் விளைவுகள் சோர்வில் தோன்றும் விளைவுகளை ஒத்தவை. (உயி)

boricacid - போரிகக் காடி: H3BO3 தொடுவதற்குச் சவர்க்காரம் போன்று மென்மையாக இருக்கும் வெண்ணிறப்படிகம். மித நச்சுத் தடையாகும். மெருகுப் பொருள் செய்வதில் பயன்படுவது. (வேதி)

boron - பொரான்: B. அலோக மஞ்சள் நிறப் படிகம். போரிகக் காடியாகவும் வெண்காரமாகவும் உள்ளது. இரும்பை வார்ப்பதிலும் எஃகைக் கடினப்படுத்துவதிலும் பயன்படுவது. (வேதி)

boron carbide - பொரான் கார்பைடு: B4C மிகக் கடியதும் கரியதுமான படிகச் சேர்மம். அணு உலையில் சீராக்கியாகவும் தேய்ப்புப் பொருளாகவும் பயன்படுவது. (வேதி)

boron nitride-பொரான் நைட்ரைடு: BN. வழுக்கும் வெண்ணிற பொருள். உயவிடு பொருளாகவும் மின்தடைப் பொருளாகவும் பயன்படுவது. (வேதி)

botany - தாவரவியல்:தாவரங்களை ஆராயுந்துறை. பூப்பன, பூவாதன என இரு பெரும் பிரிவுகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியது. தாவரங்களை ஆராய்பவர் தாவரவியலார். (பாட்டனிஸ்ட்). (உயி) Bourdon gauge - போர்டன் அளவி: நீராவி அழுத்தத்தை அளக்கும் கருவி. நீராவி எந்திரத்தில் பயன்படுவது. (இய)

Boyle's law - பாயில் விதி: மாறாவெப்ப நிலையில், குறிப்பிட்ட அளவு பொருண்மையுள்ள வளியின் பருமனும் அதைத்தாக்கும் அழுத்தமும் ஒன்றுக்கொன்று எதிர்வீதத்தில் இருக்கும். PV என்பது மாறா எண். P- அழுத்தம் V- பருமன். (இய)

bract - பூவடிச்சிதல்: மாறிய இலை. தன் கோணத்தில் பூவைத் தாங்குவது. பூ அல்லது பூக்கொத்திற்குக் கீழ் வளர்வது. (உயி)

bracteole - பூக்காம்புச் செதில்: பூக்காம்பிலுள்ள சிறிய இலை. (உயி)

brain - மூளை: கரு நிலைப் புறப்படையிலிருந்து உண்டாகும் மைய நரம்பு மண்டலத்தின் முன் பகுதி. இருபக்கச் சமச்சீருள்ள எல்லா விலங்குகளிலும் உண்டு. பெருமூளை, இடைப்படுமூளை, சிறுமூளை, முகுளம் முதலிய பகுதிகளைக் கொண்டது. உடற் செயல்களைக் கட்டுப்படுத்துவது. ஒருமுகப் படுத்துவது. மண்டை ஒட்டில் பாதுகாப்பாக அமைத்திருப்பது. (உயி)

brain death - மூளைச்சாக்காடு: மூளையின் உயிர்ப்பான செயல்கள் நிலையாக ஒடுங்குதல், இந்நிலையிலேயே உறுப்பு மாற்றத்திற்குரிய உறுப்புகள் நீக்கப்படும். (உயி)

brake - தடுப்பி: தடுப்புக்கட்டை. பேருந்து முதலிய தானியங்கிகளின் இயக்கத்தை நிறுத்தும் கருவி அமைப்பு. காற்றுத்தடுப்பி, நீரியல் தடுப்பி, வெற்றிடத்தடுப்பி என இது மூவகைப்படும். மிதிவண்டியில் எந்திரத் தடுப்பி உள்ளது. (இய)

branching - தாவரக்கிளைப்பு: இது இரு வகைப்படும். 1. ஒருகால் கிளைப்பு (மனோபோடியல் பிரான்ச்சிங்) - சவுக்கு. 2 கோண மொட்டுக்கிளைப்பு (சிம்போடியல் பிரான்ச்சிங்) - ஆல். (உயி)

brass - பித்தளை: 3 பங்கு செம்பும் 1 பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை. சமையல் பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள் செய்யப் பயன்படுவது. (வேதி)

breakdown - 1. முறிவு: ஒரு காப்புப்பொருள் வழியாக மின்னோட்டம் சட்டென்று செல்லுதல். இம்முறிவு ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தமாகும். 2. பழுது: ஒரு கருவியமைப்பு செயல்படுவது நிற்றல். எ-டு. பேருந்து எண்ணெய்க் கோளாறு காரணமாக வழியில் ஓடாது நிற்றல். (இய)

breathing - மூச்சு: பா. respiration. (உயி)

breeder reactor - உற்பத்தி அணு உலை: அணுக்கரு உலை. இது பிளவுப் பொருட்கைளப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பிளவுபடாப் பொருள்களையும் பிளவுப் பொருள்களாக மாற்றவல்லது. இதன் சிறப்பு இதுவே. (இய)

brewery - குடிம ஆலை: குடிமம் (சாராயம்) உற்பத்தி செய்யப்படும் இடம். (வேதி)

brewing - குடிமம் வடித்தல்: பீர், சாராயம் முதலியவை உற்பத்தி செய்யப்படுதல். (வேதி)

Bright's disease - பிரைட் நோய் சிறுநீரக அழற்சி. (உயி)

bristle - கூர்முள்: முள்ளம்பன்றி. (உயி)

Britannia metal - பிரிட்டானிய உலோகம்: வெள்ளி நிற உலோகக் கலவை. வெள்ளீயம், ஆண்டிமணி, செம்பு, காரீயம், துத்தநாகம் ஆகியவை சேர்ந்தது. மனையகப் பொருள்களிலும் குண்டுத்தாங்கிகளிலும் பயன்படுவது. (உயி)

bromide paper - புரோமைடு தாள்: ஒளிப்படத்தாள். ஒரு பக்கம் வெள்ளீயப் புரோமைடு பூசப்பட்டு உணர்பகுதிகளாக இருக்கும். மூலங்களில் இருந்து படங்களின் படி எடுக்கப் பயன்படுவது. (வேதி)

bromine - புரோமின்: Br. நீர்ம நிலையிலுள்ள ஒரே அலோகம். கருஞ் சிவப்பு நிறம், ஆவியாகக் கூடியது. குளோரினை ஒத்த மணம். நச்சுள்ள மாநிற ஆவி கொண்டது. நீரில் சீராகக் கரையும். சாராயத்தில் நன்கு கரையும். தொற்று நீக்கி, மற்றும் சாயங்கள் புரோமைடுகள் செய்யப் பயன்படுவது. (வேதி)

bronchile - மூச்சு நுண்குழாய்: நுரையீரலிலுள்ள சிறிய குழல், முச்சுக்குழலின் கிளை. பா. lung. (உயி)

bronchus - மூச்சுக்கிளைக் குழாய்: மூச்சுக்குழாயின் இரு கிளைகளில் ஒன்று. பா. lung. (உயி)

bronze - வெண்கலம்: செம்பும் துத்தநாகமும் வெள்ளீயமும் சேர்ந்த உலோகக் கலவை, சிலைகள், நாணயங்கள், சமையற் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

brood - அடையம்: 1. கால்வழி 2. அடைக்குஞ்சு. தோழியின் 8 வாரக் குஞ்சு வளர்ப்புக் கூண்டுகளில் கதகதப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவது. (உயி)

broth - கூழ்: தாவர அல்லது விலங்குப் பொருள்களிலிருந்து தயார் செய்யப்படும் சாறுணவு. (உயி)

brown earth - பழுப்பு மண்: மண்டலக்காடி. கரிமச்சத்து நிரம்பியது. இலையுதிர் காட்டிற்குரியது. (உயி)

brown sugar - பழுப்புச் சக்கரை: செம்பழுப் நிறமுள்ள தூய்மை செய்யப்படாத சர்க்கரை. போதைப் பொருள். (வேதி)

Brownian movement - பிரெளனியன் இயக்கம்: ஒரு பாய்மத்தில் சிறிய துகள்கள் விட்டு விட்டு இயங்குவதால் ஏற்படும் இயக்கம். அவ்வூடக மூலக்கூறுத் துகள் களின் தொடரும் தாக்குதலினால்தான் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதிகளைப் பொறுத்தவரை இஃது அடிப்படைச்சிறப்பு வாய்ந்தது. (உயி)

brown ring test - பழுப்பு வளையச் சிற்றாய்வு: நைட்ரிக் காடியைக் கண்டறியும் ஆய்வு. பெரஸ் சல்பேட்டுக் கரைசலில் சிறிது அடர் கந்தகக் காடியைச் சேர்க்க. பின் இக் கலவையில் சிறிது அடர் நைட்ரிக் காடியையும் சேர்க்க. நீர்மட்டத்தில் பழுப்பு வளையம் ஏற்படும். (வேதி)

bruises - கன்றிப்புகள்: ஊமைக் காயங்கள். தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள திசுக்களில் குருதி வெளிப்படுவதால் தோலின் நிறம் மாறுதல். (உயி)

brush - தூரிகை: 1. வண்ணக் குழைவு அடிக்கப் பயன்படும் கருவி. 2. நகரும் பகுதியோடுள்ள மின் தொடர்பு. மின் உந்தி (மோட்டார்) அல்லது பிறப்பியில் (ஜெனரேட்டர்) இருப்பது. (இய)

brush discharge - தூரிகை மின்னிறக்கம்: அதிக மின்னழுத்தமுள்ள கூரிய முனைகளுக்கருகில் தோன்றும் ஒளிர்வான வளிமின்னிறக்கம். (இய)

bryophyta - மாசித் தாவரங்கள்: பூவாத்தாவரங்கள். இவற்றுக்கு இலை, தண்டு, என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் தலைமுறை மாற்றம் உண்டு. எ-டு. மாசிகள், கல்லீரல் தட்டுகள். (உயி)

buccal cavity - வாய்க்குழி: வாய்க்கடுத்துள்ளது. உணவு இதன் மூலம் உணவு வழிக்குச் செல்வது. (உயி)

Buchner funnel - புக்கனர் புனல்: புக்கனர் வைத்தூற்றி, உறிஞ்சுதல் மூலம் வடிக்கட்டப் பயன்படும் பீங்கானாலான புனல். (வேதி)

buckminster fullerine - பக்மினிஸ்டர் புல்லரின்: கரியின் மூன்றாம் வேற்றுரு. அமெரிக்கப் புனைவாளர் பக்மிளிஸ்டர் புல்லர் அமைத்தது. இம்முலக்கூறு 60 கரியணுக்களாலானது. புகைபோக்கிக் கரியின் ஒரு பகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அமைப்பு நிலைப்புத் திறன் கொண்டது. (வேதி)

bud - அரும்பு: மொட்டு. பாலில்லா முறையில் ஒரு புதிய உயிராக வளரும் தாவர நீட்சி. இதில் கணுவிடைகள் நீளாதிருக்கும். இது உறுப்பரும்பாக இருந்தால் இலையாகவும், பூவரும்பாக இருந்தால் பூவாகவும் மாறும். (உயி)

budding - அரும்புதல்: மொட்டு விடுதல். பாலில்லா இனப்பெருக்க முறைகளில் ஒன்று. பா. vegetative reproduction. (உயி)

bud graft - அரும்பொட்டு: உறுப்பு இனப்பெருக்கம். கலவி இல்லை. இதில் திட்டமிட்டபடி ஓர் அரும்பு விலக்கப்பட்டு மற்றொரு தாவரத்தின் மீது ஒட்டப்படுகிறது. எ-டு ஆப்பிள், கிச்சலி. (உயி)

buffer solution - தாங்கு கரைசல்: வீறுள்ள காடியையோ படிக மூலியையோ சேர்த்தாலும் பி.எச். மாறாக்கரைசல் அல்லது தனித்த காடித்தன்மையும் காரத்தன்மையும் கொண்ட கரைசல். (வேதி)

bug - பிழை: ஒரு நிகழ்நிரல் (புரோகிராம்), மின் சுற்று அல்லது மின் கருவியமைப்பு ஒழுங்காக வேலை செய்வதைத் தடுக்கும் பகுதி. இயல்பாகவே கருதப்படுவது. (இய) 2. மூட்டைப் பூச்சி. (உயி) ஒ. debug.

bulb - குமிழம்: தரைக் கீழ் தண்டின் மாற்றுருக்களில் ஒன்று. எ-டு. வெங்காயம். (உயி)

bulbii - நுண்குமிழம்: தரைமேல் மொட்டிலிருந்து உண்டாகும் சிறிய பகுதி. எளிதில் பிரிந்து தனித் தாவரமாக வளர்வது. எ-டு: வெங்காய வகை. (உய)

bulk constant - பரும மீட்சி மாறிலி: பருமத் தகைவுக்கும் பருமத் திரிபுக்கும் இடையே உள்ள வீதம். (இய)

bulldozer - மண்சமன்பொறி: மண்ணைச் சமனாக்கப் பயன்படும் எந்திரம். (உயி)

bumping - மீக்கொதித்தல்: ஒரு நீர்மத்தில் காற்றழுத்தத்திற்கு மேல் அழுத்தம் இருக்கும் பொழுது, குமிழ்கள் தோன்றுவதால் அதில் ஏற்படும் வலுவந்த கொதித்தல். (இய)

bundle - திரள்: தாவரத் தண்டின் மையத்திலுள்ள குழாய் உருளை. திறந்த திரள், மூடிய திரள் எனப் பலவகை. பா. xylem. (உயி)

bunsen burner - புன்சன் எரிப்பான்: எளிய வளி எரிப்பான். (வேதி)

buoyancy - மதப்பாற்றல்: 1. நீர்மத்தில் அழுத்தப்பட்ட பொருள் நுகரும் அழுத்தம் பாய்மத்தில் அமிழ்வதால் ஏற்படும் தோற்ற எடை இழப்பு பொருளினால் விலக்கப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இது ஆர்க்கிமெடிஸ் விதி. புகழ்வாய்ந்த கிரேக்க கணக்கறிஞர் (கி.மு.287-212), ஆர்க்கிமெடிஸ். 2. காற்றில் அல்லது நீரில் இலேசாக மிதக்கும் திறன். (இய)

bur - முட்கருக்கு: சில தாவரங்களில் காணப்படும் பகுதி. துணி அல்லது விலங்கு மீது ஒட்டிப் பரவுவது. எ-டு. நாயுருவி. (உயி)

burette - விட்டளவி: அளவுகள் குறித்த நீண்ட குறுகிய குழல். பருமனறி பகுப்பிற்குப் பயன்படுதல். ஒ. pipette. (வேதி)

burning - எரிதல்: இது ஓர் உயிர்வளி ஏற்றம். விரைவாக நடைபெறுவதால் வெப்பமும் ஒளியும் உண்டாகும். ஆகவே, இது ஒரு வேதிமாற்றமாகும். பொசுங்கும் பொருள்கள் எரியும் பண்புடையவை. (வேதி) burns - புண்கள்: தீ, வெப்பம், வேதிப் பொருள்கள் முதலியவற்றால் தோல் திசுக்கள் நைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால் ஒட்டுப் போட வேண்டும். வகைகள்: 1. செம்புண். 2. கொப்புளப் புண். 3. தோல் நீங்கு புண் 4. தீப்புண்: தசையும் எலும்பும் அழிதல். (உயி)

bus - 1. பேருந்து: பெரிய உந்து வண்டி. பயணிகள் செல்வது. 2. போக்குவாய்: மின்தடம். இதன் வழியே செய்திக்கூறுகள் இரண்டிற்கு மேற்பட்ட கருவியமைப்புகளுக்கிடையே செல்லும். கணிப்பொறி தொடர்பாகப் பயன்படுஞ் சொல். பா. data bus. (இய)

bush - துளையுள்ளி: ஒரு கருவியமைப்புப் பகுதியில் அழிவுத்தேய்வு ஏற்படும்போது தாங்கியாக அமைந்து உரிய புழக்கத்தைக் கொடுக்கக் கடைந்து போடப்படும் தாங்கி. (தொ.நு)

butterfly - வண்ணத்துப்பூச்சி: இறக்கைகளும் செதில்களும் உள்ள பூச்சி. இறக்கைகளாலும், செதில்களாலும் உடல் மூடப்பட்டிருப்பது. தொகுப்புணரிகள் இருப்பதால் அந்துப் பூச்சியிலிருந்து வேறுபடுவது. குழல்வாய் (புரோபோசிஸ்), தேன் பருகும் சிறப்புறுப்பு. (உயி)

butterfly valve - வட்டு வடிகத் திறப்பி: பெட்ரோல் எந்திரத்தின் கலவையாக்கியிலுள்ள திறப்பி. பெட்ரோல் ஆவி செல்வதைக் கட்டுப்படுத்துவது. (இய)

buttress root - வேற்றிடவேர்: சமச்சீர் இல்லாத தூண் வேர். எ-டு ஆலம் விழுது. (உயி)

butyl rubber - பூட்டைல் ரப்பர்: செயற்கை ரப்பர், டயர்கள், குழாய்கள் கொள்கலன் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)

BVO, Brominated vegetable oil - பிவிஓ, புரோமின் கலந்த தாவர எண்ணெய்: மென்புற்று நோயை உண்டாக்குவது. (உயி)

bye-pass surgery - மாற்றுவழி அறுவை: புறவழி அறுவை. (மரு)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/B&oldid=1037360" இலிருந்து மீள்விக்கப்பட்டது