அறிவியல் அகராதி/I

விக்கிமூலம் இலிருந்து

I

ice- பனிக்கட்டி: நீரின் படிகவடிவ வேற்றுரு. கொதிநிலை 0° செ. மறைவெப்பம் 80 கலோரிகள். (இய)

ice age - பனிக்காலம்: புவி வரலாற்றில் ஒரு காலகட்டம், இப்பொழுது பனிக்கட்டி நில நடுக்கோடு நோக்கிச் சென்றதால், பொதுவான வெப்பநிலைத் தாழ்வு ஏற்பட்டது. கடைசிப் பனிக்காலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. (பு.அறி) -

ice cream - பனிக்குழைவு: விரைவாக கரையும் உணவு. (உண)

ice fruit - பனிச்சூப்பி: பனிக்குச்சி,கரை உணவு. (உணவு)

iconoscope - உருநோக்கி: தொலைக்காட்சி ஒளிப்படப் பெட்டிகளில் ஒரு வகை. இதில் ஒளிமின்கலம் பயன்படுகிறது. இதன் மாற்றுரு நேர் உருநோக்கி (இம்மேஜ் ஆர்த்திகான்). இஃது உருநோக்கியைவிட அதிக ஒளியைத் தரும். பார்வைநோக்கி (வீடிகான்) என்பது மற்றொரு வகை ஒளிப்பெட்டி. இது திரைப்படங்களைச் செலுத்தப் பயன்படுவது. (இய)

ideal crystal - குறிக்கோள் படிகம்: இது ஒரு பின்னல்கோவை. ஒழுங்காகவும் அயலணுவோ அயனியோ இல்லாமலிருக்கும் படிகம். (வேதி)

ideal gas- குறிக்கோள் வளி: முடிவற்ற சிறிய மூலக்கூறுகள் அடங்கிய வளி. இக்கூறுகள் ஒன்றின் மீது மற்றொன்று விசையைச் செலுத்தா (இய)

ideal solution -குறிக்கோள் கரைசல்: கலக்கும் பொழுது உள்ளாற்றல் மாற்றமில்லாமலும் அதன் பகுதிகளுக்கிடையே கவர்ச்சிவிசை இல்லாமலும் இருக்கும் கரைசல். (வேதி)

identical twins -ஒத்த இரட்டை(யர்): ஒரே கருவிலிருந்து தோன்றி ஒன்றை மற்றொன்று ஒத்திருக்கும் இருதனி உயிரிகள். (எ-டு) ஆர்காட் சகோதரர்கள். (உயி)

idioblast - மாறுபடு கண்ணறை (செல்): தன்னைச் சூழ்ந்துள்ள திசுக்களின் கண்ணறைகளைக் காட்டிலும் முனைப்பான வேறுபட்ட தனித்தன்மையுள்ள அமைப்பினைக் கொண்ட உயிரணு (உயி)

igneous rocks - தீப் பாறைகள்: பாறையில் ஒருவகை. மாக்மா படிகமாவதால் உண்டாகுபவை. (பு:அறி)

ignition - பற்றல்: வினைபடு பொருள்களின் வெப்பநிலையை உயர்த்திக் கனற்சியை (கம்பஷீடன், உண்டாக்கும் வெப்பநிலை பற்று வெப்பநிலையாகும். (உயி)

IGY, İnternational Geophysical Year - ஐஜிஒய், அனைத்துலகப் புவி இயற்பியலாண்டு: நில இயற்பியல் வளர்ச்சிக்காக அனைத்துலக அளவில் வகுக்கப் பட்ட திட்டம் 1957ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30ஆம் நாள் நள்ளிரவிலிருந்து தொடங்கி, 1958ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 31 ஆம் நாள் இரவோடு முடிவடைந்தது. பல அருஞ் செயல்களுக்கு நிலைக்களம்.

ileocolic ring -குடல் வளையம்: சிறிய வட்டமான தடிப்பு. முன்னோடித் தண்டுடையன வற்றின் நடுக்குடலின் பின் முனையில் உள்ளது. (உயி)

ileocolic valve -குடல் திறப்பி: பல முதுகெலும்பிகளின் உணவு வழியில் பின் சிறுகுடலுக்கும் நடுப் பெருங்குடலுக்கும் இடையிலுள்ள திறப்பு (உயி)

ileum - பின்சிறுகுடல்: சிறுகுடலின் நீண்ட பகுதி (உயி)

ileus - குடல்தடை: குடலில் ஏற்படும் அடைப்பு. தாளா வலியும் குமட்டலும் இருக்கும். (உயி)

ilium இடுப்புப்பின் எலும்பு: முதுகெலும்பிகளில் காணப் படுவது. இடுப்புப் பக்க எலும்பையும், இடுப்பு முன் எலும்பையும் சேர்த்து, இடுப்பெலும்பை உண்டாக்குதல் (உயி)

illumination - ஒளியூட்டல்: ஒரு பரப்பில் விளக்கிலிருந்து ஒளி விழும் பொழுது அதனை விளக்கமுறச் செய்கிறது. இந்

நிகழ்ச்சியே ஒளியூட்டல் ஆகும். (இய)

illusion - திரிபுத் தோற்றம்: புலன் உணர்வுகளுக்குத் தவறாகப் பொருளாவதனால் ஏற்படுங் காட்சி, பழுதைப் பாம்பென்று நினைத்தல். பா. hallucination (க.உ)

image - உரு: ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் குவியும் புள்ளி. இதுவே உரு. இது உண்மை உரு. மாய உரு என இருவகைப்படும். குவி ஆடியிலும் குழிவில்லையிலும் எப்பொழுதும் மாய உரு உண்டாகும். (இய)

image - சாயல்: பொருள்களி னின்று உண்டாகும் தூண்டல் களின்றியே அவற்றைப் பற்றி எழும் உளப்பட்டறிவு. இதனால் ஏற்படும் திறன் சாயல்காட்சி (இம்மேஜரி) ஆகும். பொருள்களை நேரில் காண்பது போன்று அவ்வளவு தெளிவாகத் தெரியும் உரு மீத்தெளிச்சாயல் (எய்டெட் டிக் இம்மேஜ்) என்று பெயர். (உயி)

image converter -உருமாற்றி: தெரியா உருவை தெரியும் உருவாக மாற்றும் மின்னணுக் கருவியமைப்பு. (இய)

imagery - படம்: செயற்கைநிலாப்படம்

imaging -படமுறையாக்கம்: உருக்களைப் படமாக்குதல் வெப்பப் படமுறையாக்கம்,

கணிப்பொறிப் பட முறையாக்கம் எனப் பலவகை. இம்முறைக்குப் படமுறையாக்கத் தொழில் நுணுக்கம் என்று பெயர்.(தொ)

imago - நிறை உயிரி: உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான 4 ஆம் நிலை, எ-டு. தவளை, வண்ணத்தப்பூச்சி. (உயி)

imbibition -உப்பல்: ஒரு பொருள் நீர்மத்தை உறிஞ்சிப் பருத்தல்.(உயி)

lmbricate -இதழமைவு: பா.aestivation. (உயி)

immigration -குடியேறல்: ஒரு தொகுதியில் தனியாட்கள் சேர்தல்.(உயி)

immunisation -தடுப்பாற்றல் உருவாக்கம்: நோய்க்குத் தடை தெரிவிக்குமாறு ஓர் உயிரியைச் செய்தல். இது இயற்கைத் தடுப்பாற்றல், ஈட்டுதடுப்பாற்றல் என இருவகைப்படும். எதிர்ப்பாற்றல் என்றுங் கூறலாம்.

immunity -தடுப்பாற்றல்: நோய், நச்சு முதலிய தீய விளைவுகளைத் தாக்குப் பிடிக்கும் ஒர் உயிரியின் திறன். (உயி)

imparipinnate -ஒற்றை இறகுக் கூட்டிலை: பா. venation. (உயி)

impedance - மின்எதிர்ப்பு: ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின்

நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது, ஓம்களில் அளக்கப் படுவது. (இய)

implantation - பதியவைத்தல்: 1. கருப்பையுடன் வளர்கரு இணைந்திருக்கும். 2. உடலில் ஒரு திசுவை ஆழமாக நடுதல். பா. transplantation. (உயி)

implosion - உள்வாங்கல்: வெறுமையான கலம் உள்நோக்கிச் சிதைதல். (இய)

impluse - துள்ளல்: துடிப்பு. உடன் ஏற்படும் உந்துவிசையின் விளைவு. (பது)

impurity - மாசு: ஒரு தூய பொருளிலுள்ள வேண்டா அயல் பொருள். வேதிப் பொருள்களிலிருந்து நீக்கப்படுவது. கடத்தும் திறனை உயர்த்த அரைகுறைக் கடத்திகளில் சேர்க்கப்படுவது. எ-டு, சிலிகன், பாசுவரம். (இய)

inbreeding- உட்பெருக்கம்: 1. நெருங்கிய உறவுடைய இரு தனி உயிர்கள் உண்டாக்கும் இளம் உயிர்கள். 2. பாலணுக்கள் இணைவதன் வாயிலாகக் கால்வழி உண்டாதல், 3. தற்கருவுறுதல், பா. outbreeding. (உயி)

incandescence - வெண்ணோளிர்வு: உயர் வெப்பநிலையினால் உண்டாகும் ஒளி. (இய)

incisors - வெட்டுப்பற்கள்: மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள பற்கள். மனிதனிடத்து மேல் நான்கும் கீழ் நான்கும் ஆக எட்டு உள்ளன. (உயி)

inclined plane - சாய்தளம்: இது ஒரு தனி எந்திரம். சாய்வை அதிகமாக்கி எந்திர இலாபத்தைக் கூட்டலாம்.

எந்திர இலாபம் எடை/திறன் = நீளம்/உயரம்

பளுவை வண்டியில் ஏற்ற, இறக்கப்பயன்படுதல். படிக்கட்டுகள், திருகு, ஆப்பு, ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை. (இய)

inclination - சாய்வு: பா.dip (இய)

incomplete dominance, co-dominance - நிறைவுறா (துணை) ஓங்குதிறன்: ஒரகக் கருவணுக்களிலிருந்து (ஹோமோ சைகோட்ஸ் வேற்றுக் கருவணுக்களைத் (ஹெட்டிரோசை கோட்ஸ்) தெளிவாகப் பிரித்தறியக் கூடிய அரைகுறை ஓங்கு திறன், (உயி)

incubation - 1. அடையளித்தல்: திசுவளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல், பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைச் சூழ்நிலையில் வளர்த்தல். 2. அடைகாலம்: ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம், 3. அடைகாத்தல்: முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டை களுக்குப் போதிய வெப்பமளித்துப் பொரிய வைத்தல். (உயி)

Indian space efforts - இந்திய வானவெளி முயற்சிகள்: 1962இல் இந்தியத் தேசிய வானவெளி ஆராய்ச்சிக் குழு அமைக்கப் பட்டது. 1963இல் தும்பா ஏவுகணை நிலையம் நிறுவப் பட்டது. 1965இல் வானவெளி அறிவியல் மையமும் தொழில் துணுக்க மையமும் உருவாக்கப் பட்டன. 1967இல் செயற்கை நிலாக்களிலிருந்து செய்திகள் பெற அகமதாபாத்தில் புவி நிலையம் ஏற்படுத்தப்பட்டது. 1968இல் தும்பா ஏவுகணை நிலையம் பன்னாட்டுக் கழகத் திற்கு உரிமையாக்கப்பட்டது. 1972-76 வரை காற்று மேல்வெளி ஆராய்ச்சிக்காகப் பல ஏவு கனைகள் விடப்பட்டன. 1975 லிருந்து ஆரியபட்டா முதலிய செயற்கை திலாக்கள் ஏவும் முயற்சிகள் வெற்றி தரும் வகையில தொடங்கின. 1984ல் இந்திய உருசியக் கூட்டுத் திட்டத்தில் ரகேஷ் சர்மா இரு உருசிய வானவெளி வீரர்களுடன் வான வெளிக்குச் சென்று நலமுடன் திரும்பினார். இவர் முதல் இந்திய வானவெளி வீரர். இந்தியா மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நாடு. செய்தித் தொடர்பு, வானிலையறிதல், கனிவளம் அறிதல் முதலியவை வளர்ச்சி பெறவில்லை. இவற்றை வளர்க்கவே இன்சட் பயன்படுகிறது.

1962-1992 வரை 31 ஆண்டுகளில் இந்தியா தன் பொருள் வசதி, தொழில் நுணுக்க வசதி ஆகிய வற்றிற்கேற்ப நடத்தி வந்த வான வெளி ஆராய்ச்சி பெரும் பயனைத் தந்துள்ளது என்று கூறலாம். அமெரிக்கா, உருசியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளுக்கு அடுத்ததாக ஐந்தாவது நாடாக இந்தியா தன்னை வானவெளி ஆராய்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. (வா.அறி) பா. future Indian satellites.

indicator diagram - நிலை காட்டும் படம்: சுட்டுப்படம். கானோ கற்றை வரைபடமாகக் காட்டும் படம். எக்ஸ் அச்சிலும் ஒய் அச்சிலும் குறிக்கப்படும் வரை கோடுகளை எல்லை களாகக் கொண்டது. இக்கோடுகள் வினைப்படு பொருளின் வெவ்வேறு நிலைகள் அல்லது நிகழ்வுகளைக் குறிப்பவை. (இய)

indicator species-நிலை காட்டும் சிறப்பினம்: சுட்டும் சிறப்பினம். ஓரிடத்திலுள்ள சூழ்நிலைமைகளை அளக்கப் பயன்படும் உயிரி, பூப்பாசிகள் மாசுபடு அளவையும டியூபிபெக்ஸ் புழுக்கள் குறைந்த அளவு உயிர் வளியையும காட்டுபவை. (உயி)

indicators - நிலைகாட்டிகள்: நிறங்காட்டிகள். காடியாகவோ உப்பு மூலமாகவோ இருக்கும். வேதிப்பொருள்கள். தம் நிற மாற்றத்தால் வேதிவினையைக் காட்டவல்லவை. எ.டு. மீத்தைல் கிச்சிலி, மீத்தைல் ஊதா (வேதி)

indigenous-இயலிட: வேற்றிடத்திலிருந்து கொண்டு வரப்படாதது. ஓரிடத்திற்கே அல்லது இயல்பாக வாழும் இடத்திற்கே உரியது. புலி நம் நாட்டுக்குரியது. (உயி)

indigenous technologies - இயலிடத் தொழில்நுட்பங்கள்: இவை உள்நாட்டிற்கே உரியவை.

indigenization - இயலிடமாக்கல்: ஒன்றை ஓரிடத்திற்குரியதாய் இருக்குமாறு செய்தல். தன் அரிய முயற்சியால் இந்தியா தற்பொழுது பல ஏவுகனைப் பகுதிகளை இயல்பிடமாக்கல் அடிப்படையில் தானே செய்து வருகிறது. (இய)

indigestion - செரித்தலின்மை: உண்ட உணவு நொதிகளின் செயலுக்கு உட்படாததால் ஏற்படும் செரிக்காத நிலை. உண்ணாநோன்பு சிறந்த மருந்து, (உயி)

indigo - அவுரி. C16H10O2N2. கரு நீலத்தூள், குளோரோ அசெடிகக் காடியை அனிவினுடன் சேர்த்துக்குறுக்க, N-பினைல் கிளைசின் கிடைக்கும். எரிசோடாமைனுடன் சேர்த்து உருக்க, இண்டாக்சைல் கிடைக்கும். இதை உயிர்வளி ஏற்றம் செய்ய அவுரி கிடைக்கும். முதன்மையாகச் சாயமாகப் பயன்படுவது.(வேதி)

indigo red - அவுரிச்சிவப்பு: இண்டிகோட்டின் என்னும் வேதிப் பொருளின் மாற்றியம். இயற்கை அவுரியிலிருந்து கிடைப்பது (வேதி)

indium - நீலிநிரலியம்: In. மென்மையான வெண்ணிற மாழைத்தாது. பல்லில் பயன்படும் மாழைத்தாதுக் கலவையிலும் மின்முலாம் பூசு தட்டுகளிலும் பயன்படுதல். (வேதி)

indole - இண்டோல்: C6H7N. கரையக்கூடிய மஞ்சள் நிறப்பொருள். மல்லிகை எண்ணெய்யில் உண்டாவது. நறுமணப் பொருள்களில் பயன்படுதல். (வேதி)

inductance - மின்நிலையம்: ஒரு சுற்றிலுள்ள முழுத் தூண்டலுக்கும் அதை உண்டாக்கும் மின்னோட்டத்திற்குமுள்ள வீதம். ஒரு மின் சுற்றின் வழியாகச் செல்லும் மின்னோட்டத்தில் உண்டாகும் மாற்றத்தை எதிர்க்கவல்ல திறன். (இய)

induction - மின்தூண்டல்: காந்த விசைகளைக் கடத்தி ஒன்று முறிக்கின்றபோது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகின்றது. இவ்வாறு மின்சாரத்தை உண்டாக்கும் முறைக்கு மின் தூண்டல் என்று பெயர். இந்நெறிமுறை அடங்கிய கருவிகள் தூண்டுசுருள், மின்மணி, மின்னியக்கி, (இய)

induction coil - தூண்டு சுருள்: மின்தூண்டல் அடிப்படையில் வேலை செய்யுங்கருவி. அதிக மின்னழுத்தத்தை குறைந்த மின் னழுத்தமுள்ள நேர் மின்னோட் டத்திலிருந்து உண்டாக்குவது.

பயன்கள்: 1. மின்னேற்றக் குழாய்களில் வளி நிறமாலைகளை உண்டாக்கவும். 2. அரிய வளிகளின் வழியாக மின்னேற்றத்தை ஆராயவும். 3. எக்ஸ் கதிர்களை உண்டாக்கவும். 4. அகக்கணற்சி எந்திரத்தில் மின்பொறியை உண்டாக்கவும் பயன்படுவது. (இய)

Indusium-காப்புறை: 1.சில பெரணிகளில் ஒவ்வொரு சிதல் கொத்தையும் பாதியாகவோ முழுதுமாகவோ மூடும் மடிப்புத்திசு. இது சூலொட்டின் புற வளர்ச்சி. 2. பூச்சி வளர் புழுவின் உறை. (உயி)

Industrial chemistry-தொழிற்சாலை வேதியியல்: தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை ஆராயுந்துறை. ஒரு பயனுறு அறிவியல். (வேதி)

Industrial melanism-தொழிற்சாலை மெலானியம்: கரிமாகப்படிவதால் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் தோலில் கறுப்பு நிறம் உண்டாதல். பா. (உயி)

Inert-வினைகுறை: மந்தமான செயல்குறை வளிகள். எ-டு. ஈலியம். (வேதி)

Inertia-நிலைமம்: நியூட்டன் இயக்க விதியால் பெறப்படும் பொருளின் உள்ளார்ந்த பண்பு. புறவிசை ஒன்று தாக்காத வரையில் ஒரு பொருள் அசைவற்ற நிலையிலோ நிலைத்த நேர்விரைவிலோ தொடர்ந்து இருக்கும். தன் நிலைமப்பண்பால் தானாகவே ஒரு பொருள் இயக்கமாற்றத்தைத் தடை செய்யும் (இய)

Inertia, moment of-நிலைமத்திருப்புத்திறன்: ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலைவிலுள்ள m என்னும் நிறையுடைய துகள், அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின், அத்துகளின் நிறை. நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகிய வற்றின் பெருக்கற் பலன் (mr2) நிலைமத் திருப்புத்திறனாகும். இது ஒரு மாறிலி, அலகு மெட்ரிக் முறையில் கிராம்/செமீ2(இய)

Infection-தொற்றல்: ஒரு நோய். ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்குப் பரவுதல். எ-டு. சொறி சிரங்கு, நீர்க் கொள்ளல். (உயி)

Infectious diseases-தொற்றுநோய்கள்: காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோய். தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறு அளவில் தீங்கு விளைவிப்பவை. காலரா முதலியவை விரைவில் பரவிப் பெருந்தீங்கை உண்டாக்குபவை. ஆகவே, இவை கொள்ளை நோய்கள். (உயி)

Inferior ovary - கீழ்ச்சூல்பை: இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower. (உயி)

Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. மற்றொன்று மேற் பெருஞ் சிரை (சுப்பீரியர் இனகாவா) (உயி)

Inflammation-அழற்சி:காயம்,நோய், தொற்றல், உறுத்துதல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். அறிகுறிகள்: விக்கம், சிவத்தல், அரிப்பு, வலி. (மரு).

Inflorescence-பூக்கொத்து:தனியாகவோ கொத்தாகவோ தண்டில் பூ அமைந்திருக்கும் முறை. இது மூவகைப்படும். 1. நெடுங்கொத்து:(ரெசிமோஸ்)இது முடிவில்லாத பூங்கொத்து: கடுகு, அவரை. 2. குறுங்கொத்து:(சைமோஸ்)இது முடிவுள்ள பூக்கொத்து: மல்லிகை. 3. மீங் கொத்து: (ஸ்பெஷலைசிடு) தனியமைப்பு பெற்றது:அத்தி இம்மூன்றும் மேலும் பலவகைப்படும். (உயி)

Influenza-சளிக்காய்ச்சல்:ஃபுளு நச்சியத்தால் உண்டாவது.மூச்சுவழியின் மென்படலத்தைப்பாதிப்பது.கடுமையாகதாக்குவது. மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இருக்கும்.(உயி)

Information theory-செய்திக்கொள்கை:பா communication theory.(தொ.நு)

Infrared radiation-சிவப்புக்கதிர்வீச்சு: மின்காந்தக் கதிர்வீச்சு கண்ணிற்குப் புலப்படாதது. நிறமாலையில் சிவப்பு நிறத்திற்கப்பால் இருப்பது. பார்க்கக் கூடிய ஒளிக்கும் வானொலி அலைக்கும் இடைப்பட்ட அலை நீளம். மூடுபனியில் ஊடுருவ வல்லது. இதனை 1800இல் சர் வில்லியம் ஹெர்ஷல் (1738-1822) என்பவர் கண்டறிந்தார். வானிலை ஆராய்ச்சியிலும் வானவெளி ஆராய்சியிலும் பயன்படுவது.(இய)

Infundibulum-கூம்பகம்: 1.கூம்பு வடிவத்திலுள்ள வழி. 2.மூளைத்தளப்புற வளர்ச்சி. பிட்யூட்டரி சுரப்பியின் பகுதியாக அமைவது. (உயி) Ingestion-உட்கொள்ளல்: இஃது உணவு கொள்ளும் இயற்பியல் செயல். இதைத் தொடர்வது உணவு செரித்தல் என்னும் வேதிச் செயல். (உயி)

Inguinal region-அரைப்பூட்டுப்பகுதி: 1. வயிற்றுக்கும் தொடைக்கும் இடையிலுள்ள பகுதி: மனிதன். 2.மலப்புழைக்கும் வயிற்றுக்குமிடையே உள்ள பகுதி:பாலூட்டிகள். (உயி)

Inhalation, inspiration-உள்மூச்சு: உயிர்வளியை உள்ளிழுத்தல். உயிர்த்தலின் ஒருவகை. (உயி) Inhibitor-தணிப்பி: வினையூக்கியின் வினைவீதத்தைக் குறைக்கும் வேதிப்பொருள். இது வினைவழியை மாற்றுவதில்லை. எ.டு. அய்டிரஜன் சல்பைடு. அய்டிரஜன் சயனைடு.

Initial-தோற்றி: ஆக்கு திசுவிலுள்ள உயிரணு. நிலையாகத் தன்னைப் பெருக்கிப் புதிய அணுக்களைத் தாவரத்திற்கு அளிப்பது.வேறுபாடு அடைவதில்லை.(உயி)

Injection-ஊசிபோடல்: ஊசி மூலம் மருந்தை உடலில் செலுத்துதல். குருதியில் நேரடியாகக் கலப்பதால் விரைந்த பயனுண்டு. திசு, குருதிக்குழாய் முதலிய பகுதிகளில் ஊசி போடலாம்.(உயி)

Injuries-காயங்கள்: பா. Wounds. (உயி)

INMARSAT-இன்மார்சட்: அனைத்துலகக் கப்பல்சார் செயற்கைக் கோள் அமைப்பு. செயற்கை நிலாக்கள் செய்திகளைக் கப்பலுக்கு அளித்து உதவுவது. பா.Intelsat (இய)

Inner ear-உட்செவி: பா.Ear. (உயி)

Innominate artery-கிளைத்தமனி: பெருந்தமனி வளைவிவிருந்து கிளைக்கும் முதல் தமனி (உயி)

Innominate bone-இடுப்பெலும்பு: முதுகெலும்பிகளில் காணப்படும் இடுப்பெலும்பு. இடுப்பு மேல் எலும்பு, இடுப்பு முன் எலும்பு, இடுப்புப்பின் எலும்பு ஆகிய மூன்றினாலானது. (உயி)

Inoculation-தடுப்பூசி போடுதல்: 1. தடுப்பு மருந்தை உடலினுள் செலுத்துதல் கழிநோய் ஊசி. 2.புகுத்தல்; உட்செல்லவிடல். பெருக்கத்திற்காக வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிரிகளைச் செலுத்துதல். பா. (உயி)

Inorganic chemistry-கனிம வேதியல்: உலோக அலோகத்தனி மங்களையும் அவற்றின் சேர்மங் களையும் ஆராயுந்துறை.(வேதி)

Input-உட்பாடு: இடுவரல்.ஒரு கருவியமைப்பினுள் செய்திகளைச் செலுத்துதல். ஒ.output.

Input device-உட்பாட்டுக் கருவியமைப்பு: கணிப்பொறிப் புற ஒருங்கில் உள்ளது. எ.டு. கை நெம்புகோல்:இக்கருவி கணிப்பொறிக்குள் செய்திகளை அனுப்புவது.(இய)

lNP crystal-ஐஎன்பி படிகம்: இண்டியம் பாஸ்பேட் படிகம். கணிப்பொறி முதலிய மின்னணு கருவியமைப்புகளில் சிலிகனுக்கு மாற்றாக அமைந்து புரட்சியை உண்டு பண்ண இருப்பது. செயல்திறத்தில் சிலிகனைவிடப் பன்மடங்கு சிறந்தது. இந்தியா இதனை உருவாக்கிய எட்டாவது நாடு. சென்னை அண்ணா பல்கலைக்கழக படிக வளர்ச்சி தேசிய மையம் இதனை உருவாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.(வேதி)

INSAT-இன்சட்: இந்தியச் செய்தித் தொடர்பு நிலா. பா. Indian Space efforts. (இய)

Insat series-இன்சட் வரிசை: இவை இந்தியச் செய்திநிலா வரிசை இன்சாட் 2சி. 2டி 2ஈ, இன்சாட் 3 ஆகியவை இதுவரை ஏவப்பட்டுள்ளன. பா.future Indian satellites.

Insect-பூச்சி: கணுக்காலி,தலை, மார்பு,வயிறு என உடல் பிரிந்துள்ளது. முதிர்ச்சியடைந்த உயிரிக்கு மார்புடன் மூவினைக் கால்கள் இணைந்திருக்கும். பூச்சிகளைக் கொல்லும் மருந்து பூச்சிக் கொல்லி (உயி)

Insectivore-பூச்சியுண்ணி: பூச்சியுண்ணும் விலங்கு: பல்லி (உயி)

Insemination-விந்தேற்றம்: அல்குல் வாயில்விந்தைச்செலுத்துதல்.(உயி) insemination,artificial.

Insertion-இணைவாய்: பொருந்து வாய். தான் அசையும் எலும்போடு தசையின் ஒரு முனை இணைந்திருத்தல்.(உயி)ஒ origin

Instar-இடைஉயிரி: பூச்சியின் இளம் உயிரி. அடுத்தடுத்துத் தோலுரியும் இரு நிலைகளுக்கிடையிலுள்ளது. ஒ larva

Instrument-நுண்கருவி: நுண்கருவிப்பெட்டி ஆய்வகத்தில் பயன்படுவது. (இய)

Instrumentation-கருவிவயமாக்கல்: ஒரு வேதி நிலையத்தினுள் செய்முறைகளைக் கட்டுப்படுத்தலும் நிலைமைகளை அளத்தலுமாகும். இங்குள்ள கருவிகள் மூவகைப்படும். 1.நடப்புச்செய்திக்குரிய கருவிகள்: பாதரச வெப்பநிலைமாணி, எடை மானி, அழுத்த அளவிகள். 2.பாகியல் பதிவுக்கருவிகள்: பாய்ம ஓட்டம், அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றை அளப்பவை. 3.நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் கருவிகள்: பருப்பொருள் ஓட்டம், பிஎச் முதலிய நிலைமைகளைக் கட்டுப்படுத்துங் கருவிகள்.(வேதி)

Insulation,insulator-மின்காப்பு: கடத்தல் மூலம் வெப்பம் அல்லது மின்சாரம் செல்வதைத் தடுத்தல். (இய)

Insulin-இன்சுலின்: கணையத்திலுள்ள லாங்கர்கான் திசுக்களின் சுரப்பு. சர்க்கரை வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது.(உயி)

Intake valve-உள்விடு திறப்பி: அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது.உறிஞ்சு வீச்சில் இது திறந்து, வெடிகலவையை உள்ளே விடுவது. இறுக்க வீச்சு, ஆற்றல் வீச்சு வெளியேற்று வீச்சு ஆகிய மூன்றிலும் மூடி இருக்கும். பா.exhaust valve (இய)

Integrated circuit, IC-ஒருங்கிணைச் சுற்று: ஒரு தொகுதியில் பல இயைபுறுப்புகளை உள்ளடக்கிய சுற்று. இது ஒற்றைமுறை ஒருங்கிணைந்த சுற்று, கலப்பு முறை ஒருங்கிணைந்த சுற்று என இரு வகைப்படும்.ஒ printed circuit (இய)

Integument-சூலுறை: சூல் திசுவைச் சுற்றியுள்ள உறை. இது இரண்டு சூல்வெளியுறை. உள்ளுறை.

INTELSAT-இண்டல்சட்: அனைத்துலகத் தொலைச் செய்தித்தொடர்பு அமைப்பு செயற்கைக் கோள்கள் மூலம் அனைத்துலகச் செய்தித்தொடர்பைக் கண்காணிப்பது. 17க்கு மேற்பட்ட இயங்கக்கூடிய செயற்கைக் கோள்கள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.பா Inmarsat (இய)

Intensity of illumination-ஒளி ஏற்றச்செறிவு: ஓரலகு பரப்பின் மீது ஒரு வினாடியில் ஏற்படும் செங்குத்துச் சுடரொளிப் பாய்வு அப்பரப்பின் ஒளி ஏற்றச் செறிவு ஆகும்.

Intensity of magnetisation-காந்தச் செறிவாக்கம்: காந்தம் ஒன்றின் திருப்புத்திறனுக்கும் அதன் பருமனுக்கும் இடையேயுள்ள வீதம், அதன் காந்தச் செறிவாக்கம். (இய)

Interaction-உள்வினை: இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் அல்லது தொகுதிகளுக் கிடையே உள்ள பரிமாற்ற விளைவு. இதனால் தொகுமுடிவு தனி விளைவுகளின் தொகை ஆகாது. நான்கு வகை உள் வினைகள் உள்ளன. 1. ஈர்ப்பு உள்வினை 2 மின்காந்த உள்வினை 3. வலுவார்ந்த உள் வினை 4. நலி உள்வினை. இதனை இடைவினை என்றுங் கூறலாம்.(இய)

Intercostal muscles-விலா எலும்பு இடைத்தசைகள்: அடுத்தடுத்துள்ள விலா எலும்புகளை இணைக்குத் தசைத்தொகுதி.(உயி)

Interface-பிரிபரப்பு, இடைமுகம்: இரு வேதிதிலைகளைப் பிரிக்கும் பரப்பு. (வேதி)

Interfascicular cambium-திரளிடை அடுக்கியம்: குழாய்த் திரள்களுக்கிடையே அமையும் குழாய் அடுக்குத் திசுவின் பகுதி. இதனைக் கீழமையும் அடுக்குத் திசு என்றுங் கூறலாம். ஒ. intrafascicular cambium. (உயி)

Interference-குறுக்கீடு: ஒரே பகுதியில் ஒரே அலைகள் செல்லும்பொழுது ஏற்படும் விளைவு. ஒவ்வொரு புள்ளியிலும் வீச்சு என்பது ஒவ்வொரு அலைவீச்சின் கூட்டுத்தொகை ஆகும். (இய)

Interferometer-பிரிப்புமானி: பல கற்றைகளாக ஒளியைப் பிரிக்குங் கருவி, வில்லைகளையும் முப்பட்டகங்களையும் ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. ஒளிக்கற்றைகளை மீண்டும் இணைத்துக் குறுக்கீட்டை உண்டாக்குவது. (இய)

Internal combustion engine - அகக்கனற்சி எந்திரம்: பெட்ரோல் அல்லது டீசல் எந்திரம். இதில் வெடிகலவை உருளைக்குள் எரிந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நான்கு வீச்சுச்சுற்றினால் வேலை செய்வது. அவ்வீச்சுகள் முறையே இறுக்க வீச்சு, ஆற்றல் வீச்சு, வெளியேற்று வீச்சு, உறிஞ்சு வீச்சு ஆகும். இவற்றில் ஆற்றல்

ஒரே வீச்சில் எந்திரம் இயங்குவதற்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கிறது. இதில் வெப்ப ஆற்றல் எந்திர ஆற்றலாகிறது.ஒ extemal combusion engine (இய)

Internal energy -உள்ளாற்றல்: அகவாற்றல். பா. intrinsic energy (இய)

Internet-இணையம்: கணிப்பொறி ஒருங்கமைப்புகளை இணைத்து உலகம் முழுதும் செய்தி பெறும் அமைப்பு விரைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறை.

Inter node - கணுவிடை: தாவரத் தண்டில் இரண்டு கணுக்களுக்கிடையே உள்ள பகுதி (உயி)

Interoceptor -உட்தூண்டல் வாய்: உடலிலுள்ள காரணியினால் துண்டப்படும் புலன் உறுப்பு. (உயி)

Interphase -இடைநிலை: கண்ணறைப் பிரிவு நிறைவுற்றதும் தொடரும் நிலை. இப்பொழுது உட்கரு பிரியாது. உட்கருவிலும் கண்ணறைக் கணியத்திலும் ஏற்படும் மாற்றங்களால் சேயனுக்கள் முழு வளர்ச்சி பெறும். (உயி)

Intersex-அலிப்பண்பு: ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட பண்பு (உயி)

Intestine - குடல்: உணவு வழியின் நீண்ட பகுதி. இரைப்பைக்குப் பின்னுள்ளது. சிறுகுடல் பெருங்குடல் என்னும் பிரிவுகளைக் கொண்டது. குதத்தில் முடிவது.பா alimentary canal., (உயி)

Intine - உள்ளுறை: மகரந்த மணியினைச் சூழ்ந்த உள்ளடுக்கு. பா. extine. (உயி)

Intrafascicular cambium - உள்ளமை அடுக்கியம்: வேறு பெயர் குழாய் அடுக்குத்திசு. ஆக்கத்திசுப்பகுதி. ஒரு குழாய்த் திரளில் அமைந்துள்ள மரத்திசு, பட்டைத்திசு ஆகிய இரண்டிற் குமிடையே காணப்படுவது. ஒ. interfascicular cambium.(உயி)

Intrafusal fibres- இடைப்படு நாரிழைகள்: இழு கண்ணறைகள்களைக் கொண்ட (ரெசப்டார்ஸ்) தசைகளிலுள்ள வரி இழைகள்.(உயி)

Intrinsic energy -உள்ளார்ந்த ஆற்றல்: நிலையாற்றலும் இயங் காற்றலும் சேர்ந்தது. எ.டு. கரி உயிர்வளியோடு சேர்தல். பா. internal energy (இய) .

Introrse-அகநோக்கு மகரந்தப்பை: சில பூக்களில் மகரந்தப்பைகளின் முகங்கள் பூவின் மையம் நோக்கி அமையும். எ-டு நீரல்லி, ஒ.

Introversion - அகநோக்கு: வெளி யுலக நிகழ்ச்சிகளில் அக்கறை இல்லாமல் தன் எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றில் மட்டுமே ஆழ்ந்துள்ளவரின் இயல்பைக் குறிப்பது (உயி)

Intrusive growth-உள்ளிட வளர்ச்சி: ஒரு வகைத் தாவர வளர்ச்சிமுறை. இதில் கண்ணறைகள் பெருகி ஏனைய கண்ண றைகளின் இடையே சென்று அவற்றைச் சிதைப்பவை. ஒ. sliding growth,symplastic growth.(உயி)

Intussusception-அகவாக்கம்: புதிய பொருள்கள் முன் கணியத்தில் சேர்வதால் உயிரிகள் வளர்தல். (உயி)

Invagination-உட்குழிவாதல்: படலம் விரிந்து குழியை உண்டாக்குதல், (உயி)

Invar- இன்வார்: நிக்கல் எஃகு வகையைச் சார்ந்தது. 3.5% நிக்கலும் சிறிது மாங்கனீசும் கரியுங்கொண்டது. வெப்பப் பெருக்க எண் மிகக்குறைவு. அரிமானத் தடுப்பு அதிகம். ஆகவே, ஊசல்களில் பயன்படுவது.(வேதி)

Inverse square law-இருமடி எதிர்வீத விதி: ஒரு புள்ளியில் ஒளியூட்டச் செறிவு, அப்புள்ளிக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும், அம்மூலத்தின் ஒளி வீசு திறனுக்கு நேர்வீதத்திலும் இருக்கும்.

L1/L2=d1²/d2²

(L1,L2-ஒளிவீசுதிறன் d1,d2-தொலைவு) இவ்வாய்ப்பாட்டைப் பயன் படுத்தி, இரு விளக்குகளின் ஒளிவீசுதிறனை ஒப்பிடுவதற்கான ஒளிமானிகள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று புன்சன் கிரீஸ் புள்ளி ஒளிமானி. இய)

Inversion-மாறியமைதல்: ஈஸ்ட்டிலுள்ள நொதி கரும்புச்சர்க்கரையைக் குளுகோசாகவும் பிரக்டோசாகவும் மாற்றுதல் (உயி) .

Inverter-மாற்றி: நேர் மின்னோட்டத்தை எதிர் மின்னோட்டமாக மாற்றுங்கருவி. (இய)

Invert sugar -மாற்றுச்சர்க்கரை: பிரக்டோஸ், குளுகோஸ் ஆகிய இரு சர்க்கரைகள் சமவீதங்களில் சேர்ந்த கலவை. கரும்புச் சர்க்கரை மூலங் கிடைத்தல். (உயி)

Invitro -ஆய்கருவி ஆய்வு: ஆய்வகத்தில் செய்யப்படும் ஆய்வு. எ.டு. திசுவளர்ப்புகள். ஒ. invivo. (உயி)

In vivo - உயிரி ஆய்வு: உயிரியில் நடைபெறும் செயல்களை ஆய்தல். ஒ. invitro (உயி)

Involucre-அடிவட்டம்: 1. பாதுகாப்புறுப்பு. பூக்கொத்துக்குக் கீழுள்ள செதில்களாலான வளையம். எ-டு. தலைப் பூக்கொத்து, குடைக் கொத்து. 2. தண்டகத் தாவரங்களில் (பிரையோபைட்டா) ஆணியத்தைப் பாதுகாக்கும் திசுப்புற வளர்ச்சி. (உயி)

Involuntary muscle -இயங்கு தசை: தானே இயங்கும் உள்ளுறுப்புத் தசை இதயத்தசை. ஒ. voluntary muscle. (உயி)

Involution - உட்போதல்: 1. ஓர் உறுப்பு அளவில் குறைதல். மூப்படைதல் ஒரு காரணம். விரிதல் மற்றொரு காரணம். கருப்பேற்றுக்குப் பின் கருப்பை சுருங்கல், 2. கருக்கோளத் துளையின் முதுகுப்புற (மேல்) உதடு உள்திரும்பல். 3. பாதகச் சூழ்நிலைகளில் நுண்ணுயிரிகளின் பிறழ்வடிவங்கள் உண்டாதல், ஓ. implosion, invagination. (உயி)

iodate - அயோடேட்டு: அயோடியக் காடியின் உப்பு (வேதி)

iodic acid-அயோடிகக்காடி: நீரில் கரையக்கூடிய நிறமற்ற பொருள். ஆல்ககாலில் கரையாது. நைட்ரிகக் காடியுடன் அயோடினைச் சேர்த்து உயிர்வளி ஏற்றம் செய்து இதனைப் பெறலாம். ஆற்றல் வாய்ந்த உயிர்வளி ஏற்றி. (வேதி)

iodide - அயோடைடு: அயோடினின் இருதனிமச் சேர்மம். (வேதி)

iodine - அயோடின்: I பளபளப்பான கருநிற ஊதாப் படிகம். சூடாக்க ஊதா நிற ஆவியைக் கொடுக்கும். நீரில் அரிதாகக் கரையும். ஆல்ககாலில் நன்கு கரையும். இக்கரைசல் அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) ஆகும். வேதிப்பகுப்பிலும் மருத்துவத்திலும் புகைப் படக் கலையிலும் பயன்படல். உணவில் அயோடின் ஊட்டங் குறையுமானால் தொண்டைக் கழலை உண்டாகும். (வேதி)

iodoform - அயோடபார்ம்: அயோடின் சேர்மம் எலுமிச்சை மஞ்சள் நிறப்படிகம். குங்கும மணம் புரைத்தடுப்பான். (வேதி)

ion - அயனி: மின்னணு இழப்பு அல்லது ஏற்பினால் உண்டாகும் மின்னேற்றத் துகள் (அணு) (இய)

ionisation -அயனியாக்கள்; ஓர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல். இதனைப் பலமுறைகளில் செய்யலாம். (இய)

ionosphere - அயனிவெளி: காற்று மேல் வெளி மின்காந்த அலைகளை மறித்து, வானொலிச் செலுத்துகை நடைபெற உதவுவது (இய)

iridium - இரிடியம்: Ir அரிய உலோகம். பிளாட்டினத்தை ஒத்தது. அதனோடு சேர்ந்து கிடைப்பது. மிகக் கடினமானது. வேதிவினைக்குத் தடை அளிப் பது. மூசைகள் செய்யவும் மையூறி முட்கள் செய்யவும் பயன்படுதல். (வேதி)

iris-கருவிழிப்படலம்: விழியடிக் கருப்படலத்தின் முன்பகுதி ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது. (உயி)

iron-இரும்பு: Fe. மூன்று படிக வடிவங்களில் கிடைக்கும் வெண்ணிறக் காந்த உலோகம், ஆல்பா இரும்பு, காமா இரும்பு, டெல்டா இரும்பு ஆகியவை அவ்வடிவங்கள். ஊதுலையில் அதன் தாதுவிலிருந்து பிரித்து எடுக்கப்படுதல். (வேதி) iron (ferric) chloride - பெரிக் குளோரைடு: FeCl3 மாநிற மஞ்சள் நிறம். நீர் ஈர்க்கும் படிகம். சூடாக்கிய இரும்புத் துருவல்களில் உலர் குளோரினைச் செலுத்திப் பெறலாம். ஈத்தர், நீர், ஆல்ககால் ஆகிய வற்றில் கரைவது. மருந்துகளில் பயன்படுவது. ஆய்வக வினையாக்கி (வேதி)

iron (ferric)-பெரிக் ஆக்சைடு Fe2O3 சிவந்த மாநிறம். இயற்கையில் ஹேமடைட்டுத் தாதுவாகக் கிடைத்தல். கந்தகக்காடி உண்டாக்குவதில் விளைபொருளாகக் கிடைப்பது. நிறமியாகவும் நிறம்நிறுத்தி யாகவும் பயன்படல். (வேதி)

iron (ferric) sulphate - பெரிகச் சல்பேட்டு: Fe2(SO4)3, நீருள்ள மஞ்சள் நிறச்சேர்மம். காடி சேர்ந்த பெரகச் சல்பேட்டுடன் அய்டிரஜன் பெராக்சைடைச் சேர்த்து வெப்பப்படுத்திப் பெற லாம். பருமனறி பகுப்பில் பயன்படல். (வேதி)

iron (ferrous) sulphate -பெரசச் சல்பேட்டு: FesO47H2O. பசுந்துத்தம். சாய்வரிசைப் படிகம். நீர்த்த கந்தகக் காடியில் இரும்புத் துருவலைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். தோல் பதனிடுதலிலும் சாயத் தொழிலிலும் பயன்படுதல். பருமனறி வகுப்பில் வினையாக்கி. (வேதி)

irradiation - கதிர்வீச்சு: மின்காந்த அலைகளுக்கு உட்படுதல். (இய)

irreversible reaction -மீளா வினை: மீண்டும் நடைபெறா வினை.(வேதி)

irritability -உறுத்துணர்ச்சி: தூண்டலுக்கேற்ற துலங்கல். உயிரியின் இயல்புகளில் ஒன்று. (உயி)

IRS - ஐஆர்எஸ்: இந்திய தொலையறி நிலா. (இய)

IRS series - ஐஆர்எஸ் வரிசை: இவை இந்தியத் தொலையுணர் நிலாக்கள். ஐஆர்எஸ் பி2, ஐஆர்எஸ் 1.சி., ஐஆர்எஸ் 3 ஆகியவை இவ்வரிசையில் ஏவப்பட்டவை. (வா.அ)

ischium - இடுப்புப் பக்க எலும்பு: முதுகெலும்பிகளின் இடுப்பு வளையத்தின் பின் எலும்பு. (உயி)

islets of Langerhans இலாங்கர்கன் திட்டுச் சுரப்பிகள்: இவற்றை 1869இல் இலாங்கர்கன் விளக்கினார். இன்சுலினைச் சுரப்பவை. இவை கணையத்தி லுள்ளன. இச்சுரப்பு குருதியில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது. (உயி)

isobars-சமச்சீரிகள்: ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணு வெண்ணுங் கொண்ட வெவ்வேறு தனிம அணுக்களுக்கு ஓரகச் சீரிகள் என்று பெயர். எ-டு:1. Pa91234U92234. 2. நிலையான காற்றழுத்தமுடைய பரப்பின் எல்லைகளைப் படத்தில் காட்டும் கோடுகள் (பு:அறி)

isochronism -ஒரேகால அளவு நேரம்: வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப்பண்பே ஊசலின் சமகால அலைவு நேரமாகும். இவ்வடிப்படை ஊசல் கடிகாரங்களில் உள்ளது. ஊசல் மெதுவாக ஆடினாலும் விரைவாக ஆடினாலும் அது காட்டும் நேரம் மாறாது. பா. simple pendulum (இய)

isogamy - ஓரகக் கலப்பு: பாலிணைவு. இதில் சேரும் பாலணுக்கள் ஆண் பெண் என்னும் வேறுபாடற்றவை.(உயி)

isokonates - ஓரக உயிரிகள்: பாசிகள். இவற்றின் கருச்சிதல் வழக்கமாகச் சமமான குற்றிழைகளைக் கொண்டிருக்கும். அதாவது, உயிரணுவிலுள்ள எல்லாத் தசை இழைகளும் ஒரே நீளமும் உருத்தோற்றமும் கொண்டிருக்கும். (உயி)

isomerism - ஓரகச் சீரியம்: மாற்றியம், கரிமச் சேர்மங்களின் சிறப்பியல்பு. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வெவ்வேறு பண்புகளைக் கொண்டது. இரண்டிற்கு மேற்பட்ட - குறிப்பது. இவ்வியல்பிற்கு ஓரகச் சீரியம் என்று பெயர். எ-டு C2H6O என்னும் மூலக்கூறு வாய்ப்பாடு எத்தில் ஆல்ககால் என்னும் சேர்மத்தையும் இருமெத்தில் ஈத்தர் என்னும் சேர்மத்தையுங் குறிக்கும். இத்தகைய சேர்மங்கள் ஓரகச் சேர்மங்கள் (ஐசோமர்ஸ்) எனப்பெயர் பெறும். கரியின் சேர்மங்கள் மிகுதியாக இருப்பதற்கு இவ்வியல்பே காரணமாகும். (வேதி)

isomorphic-ஓரகச்சீர்வடிவி: ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் இருக்கும் உறுப்பு அல்லது உயிரி. ஒத்த வடிவத்தில் இருத்தலுக்கு ஓரகச் சீர்வடிவியம் (ஐசோமார்பிசம்) என்று பெயர்.(உயி)

isotrophy -ஓரகப்பண்புடைமை: ஓர் ஊடகத்தின் அளக்கப் பெற்ற இயல் பண்பு. திசையைச் சாராதிருக்கும் பண்பு, இத்தகைய பொருள்கள் ஓரகப் பண்பிகள் ஆகும்.(இய)

isotope-ஓரிமம்: ஓரிம மூலகம். ஓரிடத்தனிமம். வேறுபட்ட பொருண்மையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள்.(வேதி)

isotopic tracer -ஓரிடச் சுவடறிவி: கதிரியக்க ஓரிமம். வளர்சிதை மாற்றப் பொருளை அடையாள மறியப் பயன்படல்.(வேதி)

isotropic - ஓரகப் பண்பிகள்: எல்லாத்திசைகளிலும் ஒரே பண்புகளை வெளிப்படுத்துபவை. இத்தன்மைக்கு ஓரகப்பண்பு (ஐசோட்ரோபி) என்று பெயர் (இய)

isthmus -ஓரக இணைப்பு: பாசித் தட்டைத் தோலின் (பிளாகோடர்ம்டெஸ்மிட்) இரு பாதிகளையும் இணைக்கும் குறுகிய மையப்பகுதி. (உயி) IUBMB, International Union of Biochemistry and Molecular Biology - ஐயூபிஎம்பி: உயிர் வேதிஇயல் மற்றும் மூலக்கூறு உயிரியல் அனைத்துலக ஒன்றியம். இவ்விரு துறைகளின் வளர்ச்சிக்காக உள்ள அமைப்பு. இதன் 16வது கூட்டம் 1994 செப்டம்பரில் தில்லியில் நடைபெற்றது.

IUPAC, International Union of Pure and Applied Chemistry - உபக்: அனைத்துலக அடிப்படை பயனுறு வேதிஇயல் ஒன்றியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/I&oldid=1040345" இலிருந்து மீள்விக்கப்பட்டது