அறிவியல் அகராதி/J

விக்கிமூலம் இலிருந்து

J

jack - பளுதூக்கி, உயர்த்தி: கருவி. (இய)

jack ass - ஆண்கழுதை: பாலூட்டியில் ஒருவகை. பா. jennet. (உயி)

jade - பச்சைமணிக்கல்: கடினமான உயர்ந்த வகைக் கல். (வேதி)

jaundice - மஞ்சட்காமாலை: இது ஒரு நோய்க்குறிப்போக்கு. குருதியிலும் திசு நீர்மங்களிலும் பித்த நீர் நிறமிகள் அதிகமாகும். இதனால் மஞ்சள் நிறம், கண், தோல் முதலிய பகுதிகளில் தென்படும். செவ்வணுக்கள் மிகுதியாக அழிக்கப்படுவதாலோ பித்தநீர்க் கற்களால் அடைப்பு ஏற்படுவதாலோ இந்நோய் உண்டா கிறது. ஆங்கில மருத்துவத்தை விட நாட்டு மருத்துவமே மேல். (மரு)

jejunum - நடுச்சிறு குடல்: முன்சிறு குடலுக்கும் பின்சிறுகுடலுக்கும் இடையிலுள்ள பகுதி. பா. alimentary canal.

jelly fish - இழுதுமீன்: கடல்வாழ் குழிக்குடலி, பனை நுங்கு போன்ற உடல்திண்மை. நீண்ட உணர்விரல்களில் கொட்டனுக்கள் உண்டு. குடைவடிவ உடல். பா. hydrozoa. (உயி)

jennet - பெண்கழுதை: இதுவும் பாலூட்டியில் ஒருவகை பா. jack ass.

jet engine - பீறிடு அல்லது பீச்சு எந்திரம்: வளிக்குழாய் வெப்ப வளியை பீறிட்டுச் செலுத்துவதால், வானவூர்தி அல்லது படகு காற்றில் அல்லது நீரில் செல்லுகிறது. (இய)

jet propulsion - பீச்சு முன்னியக்கம்: எதிர்வினை முன்னியக்கம். ஏவுகணை இயங்கக் காரணமாக இருப்பது. (இய)

joey - இளரி: ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காருவின் குட்டி. (உயி)

John Cade - ஜான்கேட்: ஆஸ்திரேலிய உளநோய் மருத்துவர். இலித்தியத்தின் குணப்படுத்தும் பண்புகளைக் கண்டறிந்தவர். (வேதி)

joint - மூட்டு: இரண்டிற்கு மேற்பட்ட எலும்புகள் சேருமிடம் மூட்டு. இது அசையா மூட்டுகள் (தலை எலும்புக்கூடு), சிறிது அசையும் மூட்டுகள் (முள் எலும்புகள்), அசையும் முட்டுகள் (கைகால் மூட்டுகள்) என மூன்று வகைப்படும். அசையும் மூட்டுகள் மேலும் நான்கு வகைப்படும். 1. பந்து கிண்ணமுட்டு (தோள். இடுப்பு முட்டுகள்), 2 முளை முட்டு (முழங்கை எலும்பில் ஆர எலும்பு சுழலுதல்), 3. வழுக்கு முட்டு (மணிக்கட்டு, கணைக் கால்), 4. கீல்முட்டு (முழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்). (உயி)

Joule - ஜூல்: அலகுச்சொல். வேலை அல்லது ஆற்றலின் எஸ்ஐ அலகு. ஒரு ஜூல் = ஒரு நியூட்டன் மீட்டர் அல்லது ஒரு வாட்டு வினாடி அல்லது 10 எர்க்குகள் அல்லது 0.238846 கலோரி. (இய)

Joule's constant - ஜூல்மாறிலி: நாம் வேலை செய்யும்பொழுது உண்டாகும் வெப்ப அளவிற்கும் அவ்வாறு வெப்பமாக்கப்பட்ட வேலைக்குமுள்ள தொடர்பை ஜூல் என்னும் அறிவியலார் கண்டறிந்தார். அவர் கூற்றுப்படி W என்பது செய்த வேலை. H என்பது செய்த வேலைத் தொடர்பாகத் தோன்றிய வெப்பம் என்று கொண்டால், J = W/H. இங்கு J என்பது ஜூல் மாறிலி. இதை வெப்ப எந்திர ஆற்றல் இணைமாற்று (மெக் கானிகல் ஈக்குவலண்ட் ஆஃப் ஹீட்) என்றும் கூறலாம். இதன் மதிப்பு ஒரு கலோரிக்கு 4.2 x 107 எர்க்குகள் அல்லது கலோரிக்கு 4.2 ஜூல் (42 x 107 எர்க்கு/கலோரி). (இய)

Joule effect - ஜூல் விளைவு: ஒரு தடையின் வழியாக மின் னோட்டம் செல்லும்போது, அது உண்டாக்கும் வெப்ப விளைவு. (இய)

Joule - Kelvin effect - ஜூல் கெல்வின் விளைவு: உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைவழுத்தப் பகுதிக்குத் துளையுள்ள அடைப்பு வழியாக வளி விரிந்து செல்லும் போது வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம். (இய)

Joule's law - ஜூல்ஸ் விதி: நிலையான வெப்பநிலையில் இருக்கும் ஒரு வளியின் உள் ளாற்றல். அதன் பருமனைப் பொறுத்ததன்று. உயர் அழுத்தத்தில் மூலக்கூறு வினைகளால், அது செயலற்ற தாக்கப்படும். (இய)

Joule's laws of heating effect of current - மின்னோட்ட வெப்ப விளைவின் ஜூல் விதிகள்: R மின்தடையுள்ள கடத்தி ஒன்றின் வழியே I ஆம்பியர் மின்னோட்டம் t வினாடிகள் செல்லும்போது உண்டாகும் வெப்பம் H ஜூல்கள் இது 1. மின்னோட்ட இருமடிக்கு நேர்வீதத்திலும் 2. கடத்தியின் மின்தடைக்கு நேர்வீதத்திலும் 3. மின்னோட்டம் பாயும் நேரத்திற்கு நேர்வீதத்திலும் இருக்கும்.

H ∝ I2

H ∝ R

H ∝ t

H = I2Rt ஜூல்கள். (இய)

jugular artery - கழுத்துத்தமனி: கழுத்துப் பகுதியிலுள்ளது. (உயி)

jugular vein - கழுத்துச்சிரை: கழுத்தப் பகுதியிலுள்ளது. (உயி)

jump - தாவல்: எந்திரக் குறித் தொகுதிக் கட்டளை. செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ் நிரலைக் (புரோகிராம்) கணிப்பொறி வாயிலாக உடன்நிறுத்துமாறு செய்வது. நிகழ்நிரலின் அடுத்த பகுதிக்குச் செல்வது. (இய)

Jupiter - வியாழன்: கதிரவன் குடும்பத்தில் மிகப் பெரிய கோள். கதிரவனிடமிருந்து ஐந்தாவதாக உள்ளது. இதற்கு 16 நிலாக்கள் உண்டு. அவற்றில் பெரியது ஐஒ. (வாணி)

Jurassic - இயல்பு வாழ்காலம்: இடை உயிர்காலத்தின் இடைப் பகுதி 190 - 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. பா. geological eras. (பு.அறி)

juvenile - இளநிலை: ஒர் உயிரியின் முதிர்ச்சியடையாத நிலை. வழக்கமாக இது முதிய உயிரியிலிருந்து வேறுபட்ட வடிவத்தில் இருப்பது மட்டுமின்றி, இனப் பெருக்கம் செய்யவும் இயலாது. (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/J&oldid=1040346" இலிருந்து மீள்விக்கப்பட்டது