உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/L

விக்கிமூலம் இலிருந்து

L

labelled compound - குறியிட்ட சேர்மம்: ஒர் அணுவின் கதிரியக்க ஒரிமத்தால், அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம் (வேதி)

labelling - குறியிடல்: ஒரிமங்களைக் கொண்டு உயரிய வேதி வினைகளை ஆராயும் நுணுக்கம். காட்டாக, ஒரு கதிரியக்க ஒரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து, ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின், உண்டாகும் கதிரியக்கத்தைக் கொண்டு, அச்சேர்மத்தில் நடைபெறும வினைப் போக்கைப் பின் தொடரவும் இயலும். (வேதி)

labium -கீழுதடு: பூச்சியின் வாய்ப்பகுதிகளில் ஒன்று. (உயி)

labour saving devices - வேலைக் குறைப்புக் கருவியமைப்புகள்: கத்தி, அரிவாள் மணை முதலிய வீட்டுக் கருவிகள் (இய)

labrum - மேலுதடு: பூச்சியின் வாய்பப்பகுதிகளில் ஒன்று. பா labium. (உயி)

labyrinth - கோடரம்: இது உட்செவியின் குறுமறுக்குப் படலப் பகுதி. எல்லா முதுகெலும்புகளிலும் காணப்படுவது. கோடரம் பொந்து (உயி)

lachrymal duct-கண்ணீர் நாளம்: கண்ணின் உள் மூலையிலிருந்து கண்ணீரை மூக்குக்குக் கொண்டு செல்லுங் குழாய். (உயி)

lachrymal glands - கண்ணீர்ச்சுரப்பிகள்: முதுகெலும்பிகளில் கண்வெளிக் கோணத்தருகிலுள்ள சுரப்பிகள். (உயி)

lachrynator - கண்ணுறுத்தி: கண்ணிர் பெருகச் செய்யும் புகை, எ-டு. கண்ணீர்ப்புகை, வெங்காயம். (உயி)

lacquer - அரக்கெண்ணெய்: ஒளிர் பூச்சு 1. ஆல்ககால், அரக்கு ஆகியவற்றின் மெழுகெண்ணெய். 2. ஆவியாகும் கரைப்பானிலுள்ள படலத்தோற்றுப் பொருள்களின் கரைசல். (வேதி)

lactase - லேக்டேஸ்: பால்நொதி சிறுகுடல் நீர் நொதி. லேக்டோசிலிருந்து குளுக்கோசும் கேலக்டோசும் உண்டாக உதவு வது. (உயி)

lactate - லேக்டேட்: லேக்டிகக் காடி உப்பு. பால்காடி உப்பு. (உயி)

lactation - பால் சுரத்தல்: பால்சுரப்பிகளின் சுரப்பு. பால் சுரக்குங் காலம் (உயி)

lacteal - பால்சூழல்: குடலிலிருந்து குடற்பாலை மார்புக் குழாய்களுக்குக் கொண்டு செல்லும் குழாய். (உயி)

lactic acid - பால்காடி:CH(OH)CO2H பாலிலிருந்து பெறப்படும் காடி இச்செயல் சில பாக்டிரி(குச்சி)யங்களால் நடை பெறுவது. (உயி)

lactometer - பால்மானி: பாலின் தூய்மையை அளக்குங் கருவி மிதத்தல் விதி அடிப்படையில் அமைந்தது. (இய)

lactose-பால் சர்க்கரை: C12H22O11. கரையக்கூடிய கடினப்படிகம். இரட்டைச் சர்க்கரை. பாலில் உள்ளது. (உயி)

lacuna - உள்ளூடு: எலும்பு அல்லது குருத்தெலும்பில் காணப்படும் இடைவெளி. இங்கு எலும்பணுக்கள் உள்ளன. (உயி)

Lamarckism - இலெமார்க்கியம்: இலெமார்க்கு (1744-1829) என்பார் முன்மொழிந்த கொள்கை (1809), பாலினப் பெருக்கத்தின்போது ஈட்டு பண்புகள் (அக்கொயர்டு கெரக்டர்ஸ்) மரபுரிமை பெறுகின்றன என்னும் ஆய்வுக்குரிய கருத்து. ஓர் உயிரி தன் வாழ்நாளில் ஈட்டும் வளரிட உயிர்மலர்ச்சி விளைவு பற்றியது. வேறுபட்ட துலங்கல் மரபுரிமைக் கொள்கைகள் தற்காலத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இவை சூழ்நிலைத் தாக்கம் பற்றியவை. இவை சேர்ந்து திருத்தப்பெற்ற கொள்கையே புது இலெமார்க்கியம் (New Lamarckism) எனப் பெயர் பெற்றுள்ளது. பா. Darwinism. (உயி)

lamella - நுண்படல்: பசுங்கணிகங்களில் காணப்படும் ஒளிச் சேர்க்கைப் படலங்களைக் கொண்ட அடுக்கு. இப்படலங்கள் நுண்பைகள் (தைலகாய்ட்ஸ்) ஆகும். எ-டு. மாநிறப்பாசியின் முப்பை நுண்படல். பா. choroplast, thylakoid. (உயி)

lamellar compound - நுண்படலச் சேர்மம்: மெலிந்த அடுக்குகளைக் கொண்ட படிக அமைப்புடைய கூட்டுப்பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப்பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலைட் (வேதி)

lamina - இலைப் பரப்பு: இலைத் தாள் (உயி).

laminarflow - படல ஓட்டம்: ஒரு மென்மையான பரப்பு நெடுகக் காற்று செல்லும் பொழுது, பரப்புக்கு அருகியிலுள்ள காற்று அடுக்குகள் ஒன்றுக்கு மற்றொன்று குறுக்காகத் தொடக் கத்தில் செல்கின்றன. இதற்குப் படல ஓட்டம் என்று பெயர். (இய)

lamination - படலத்தாள் போர்த்தல்: நூல்களின் அட்டையில் ஒளிபுகும் வெள்ளைப்படலத் தாளை ஒட்டுதல். (வேதி)

Lamis theorem - இலேமியின் தேற்றம்: ஒரு புள்ளியில் செயற்படும் மூன்று விசைகள் சமநிலையில் இருந்தால், ஒவ்வொரு விசையும் ஏனைய இருவிசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் சைன் மதிப்பிற்கு நேர் வீதத்திலிருக்கும். (இய)

lamps - விளக்குகள்: முதல் மின் விளக்கை 1879 இல் தாமஸ் ஆல்வா எடிசன் அமைத்தார். இஃது இழைகொண்ட விளக்கு. இதைத்தொடர்ந்து பல விளக்குகள் உருவாகின. அவற்றை எல்லாம் இருவகையினுள் அடக்கலாம். 1. இழையுள்ள விளக்குகள்: மின்குமிழ். 2. இழையிலா விளக்குகள்: ஆவிவிளக்கு .

lamp black - புகைக்கரி: வேற்றுரு. மூடிய தொகுதியில் குறைவான காற்றில் கன எண்ணெய்களை எரித்து, இதனைப் பெறலாம். நிறமியாகப் பயன்படுவது. (வேதி)

lanceolate - ஈட்டிவடிவம்: அரளி இலை. (உயி)

landing - இறங்கல்: வானவூர்தி தரையில் இறங்குவது. செயற்கைக் கோள்கள் புவித் தரையிலும் திங்கள் செவ்வாய் முதலிய கோள்களின் தரையிலும் இறங்கல். சிக்கல் வாய்ந்த முயற்சி. வானவெளி இறங்கு நுணுக்கங்களால் இறக்கப்படுவது. அமெரிக்க வானவெளிவீரர் நெயில் ஆம்ஸ்ட்ராங் திங்களில் இறங்கியது ஒரு பெரிய அறிவியல் அருஞ்செயல். உலகைச் சுற்றியபின் முதலில் புவியில் தரையில் இறங்கியவர். உருசிய வானவெளிவீரர் ககாரின். (வா.அறி)

landing techniques - இறங்கு நுணுக்கங்கள்: 1. குதிகுடையால் இறங்கல். இதுவே அதிகம் பயன்படுவது. 2. வழுக்கிகளால் இறங்கல். கொள்கை அளவில் உள்ளது. 3. பலகாற்றுவழித்திட்டம். இதுவும் கொள்கை அளவிலேயே உள்ளது. பொதுவாக, இறங்குதலில் பின்னியங்கு ஏவுகணைகள் பயன்படுகின்றன. (இய)

LANDSAT - லேண்ட்சட்: செயற்கைக்கோள் வரிசைகளில் ஒன்று. எ-டு. லேண்ட்சட் 4. 1922இல் ஏவப்பட்டது. பயிர்நோய்களைக் கண்டறிவது. துப்புரவுக் கேட்டைக் கண்காணிப்பது. கனிம வளங்களை ஆராய்வது. பா. INTELSAT. (இய)

language - மொழி: கருவிமொழியாகிய இது கணிப்பொறி மொழியாகும். ஒரு நிகழ்நிரலை அமைக்கப் பயன்படும் விதிகள், சொற்கள், குறிபாடுகள் ஆகியவை அடங்கிய தொகுதி. 250க்கு மேற்பட்ட கணிப்பொறி மொழிகள் உள்ளன. அவற்றில் குறிப் பிடத்தக்கவை பின்வருமாறு 1. பேசிக் 2. போர்ட்ரான் 3 கோபல் 4. பாஸ்கல். (இய)

lanthanum - இலாந்தேனம்: La. வெண்ணிறத் தனிமம். எண்ணெய்ப் பிளப்பில் வினையூக்கி. வெப்ப உலோகக் கலவைகளிலும் பயன்படுவது. (வேதி)

Laplace correction - லேப்லாஸ் திருத்தம்: ஒலிபரவும் ஊடகத்தின் அழுத்தம் மற்றும் பரும மாற்றங்கள், மாறா வெப்ப நிலை மாற்றங்களாக அமைவதில்லை. இக்கருத்தின் அடிப்படையில் இவர் நியூட்டன் தொடர்பை மாற்றி யமைத்தார். (இய)

lard - பன்றிக் கொழுப்பு: தூய்மையாக்கிய பன்றி உட் கொழுப்பு. ஓலைன், பாமிட்டின், ஈரின் முதலிய வேதிப்பொருள்களைக் கொண்டது. (வேதி)

large intestine - பெருங்குடல்: பா.colon.

larva - வேற்றிளரி: முட்டையிலிருந்து வெளிவரும் இளமுயிர். முதிரியிலிருந்து (முதிர் உயிரிலிருந்து) வேறுபடுவது. எ-டு. கம்பளிப்புழு, பா. planula,

larvicide-இளரிக்கொல்லி: இளம் உயிரிகளைக் கொல்லும் நச்சு. (உயி)

larynx - குரல்வளை: மூச்சுக் குழலுக்கும் நாக்கின் அடிக்கும் இடையிலுள்ள உறுப்பு. குரல் நாண்களைக் கொண்டது. மீன் தவிர, எல்லா முதுகெலும்பி களிலும் உண்டு. (உயி)

laser - இலேசர்: இரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கங் கொண்ட சொல். கதிர் வீச்சு தூண்டுமிழ்வு ஒளிப் பெருக்கம் (LASER-Light Ampification by Stimulated Emission of Radiation). ஓர் உயரிய ஒளிக் கருவி ஆற்றல் வாய்ந்ததும் ஒருங்கிணைந்ததுமான ஒளிக்கற்றையை உருவாக்க வல்லது. இக் கற்றை ஒற்றை அலை நீளமுடையது. படிகப் பெருக்கிக்கு (டிரான்சிஸ்டர்) அடுத்து, அறிவியல் உலகில் ஆய்வு நிலையில் புரட்சி செய்துவருங் கருவி. மருத்துவம், தொழில் நுணுக்கவியல் முதலிய அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுவது. பா. maser. (இய)

lateral line - மருங்குகோடு: இரு வாழ்விகளிலும் மீன்களிலும் பக்கத்தில் காணப்படுங்கோடு, புலனுறுப்பின் நிலையைக் குறிப்பது. (உயி)

lateral ventricles - மருங்கறைகள்: பெருமூளை அரைத்திரள்களில் உள்ள ஓரிணைக்குழிகள். (உயி)

latex - மரப்பால்: சில பூக்குந் தாவரங்களில் காணப்படும் வெண்ணிற நீர்மம். மருந்துகளிலும் ரப்பர் செய்யவும் பயன்படுவது. (உயி)

latitude - குறுக்குக்கோடு: அட்சக் கோடு. இது கிழக்கு மேற்காகச் செல்வது. புவி, உருண்டை இது ஓரிடத்தைத் துல்லியமாகக் காணப்பயன்படுவது. ஒ. longitude (பு.அறி)

lattice - பின்னலமைவு: அணி அமைவு, புள்ளிகளின் முப்பரும ஒழுங்கமைவு. படிகத் திண்மத்திலுள்ள துகள்களின் (அணுக்கள், அயனிகள், மூலக்கூறுகள்) நிலைகளை விளக்க இது பயன்படுவது. எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு நுணுக்கங்களால் பின்னலமைவு அமைப்பை ஆராயலாம். (இய)

lattice energy - பின்னலாற்றல்: அணியாற்றல். குறிப்பிட்ட படிகத்தின் ஒரு மோல் அளவை உண்டாக்க முடிவற்ற தொலைவி லிருந்து எதிர் மின்னேற்றமுள்ள அயனிகளை ஒருசேரக் கொண்டு வரும் பொழுது விடுவிக்கப்படும் ஆற்றல். ஒரு வளியிலுள்ள அயனிகளுக்குச் சார்பான நிலையில், ஒரு திண்மப் பொரு ளின் நிலைப்புத்திறனின் அளவே இவ்வாற்றல். (இய)

launching - ஏவுதல்: இது ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செயற்கை நிலாவைப் புவிச் சுற்றுவழியில் விட ஏவுகணை மணிக்கு 18000 மைல் விரைவில் செல்லும் திங்கள் முதலிய கோள்களுக்குச் செயற்கை நிலா 25000 மைல் விரைவில் செல்லும். புவிச்சுற்று வழியிலிருந்து செயற்கை நிலா அதிலுள்ள ஏவுகணை யினால் முடுக்கி விடப்படும் முன்னரே, நிலா 1 மணிக்கு 18000 மைல் விரைவைப் பெற்றுவிட்டதால், 1 மணிக்கு 7000 மைல் விரைவில் சென்றால் போதும்.இவ்விரைவிலேயே ஏவுகணை அதனைக் கொண்டு செல்லும். இம்முறையிலேயே உலூனிக், பயனியர், அப்பல்லோ முதலிய கோள் நிலாக்கள் சென்றன. இலக்கு என்பது அடைய வேண்டிய இடத்தைக் குறிக்கும்.புவியில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தை அடைவது எறி படைகளுக்கு இலக்கு (ஸ்கட், பேட்ரியட் ஏவுகணைகள்), சுற்று வழியை அடைவது புவி நிலாக்களுக்கும். திங்கள், செவ்வாய் முதலிய கோள்களை அடைவது கோள் நிலாக்களுக்கும் இலக்கு. இவ்வாறு அடைய வேண்டிய இடத்தைப் பொறுத்து இலக்கு வேறுபடுகிறது. இலக்கை அடைந் தால் தான் கலம் வெற்றியுடன் ஏவப்பட்டதாகக் கொள்ளலாம். கலம் வெற்றியுடன் ஏவப்பட வேண்டுமானால் திசை, கோணம், விரைவு, நேரம், வழி, ஏற்பாட்டியக்கம் முதலியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். (வா.அறி)

laudanum-கஞ்சாயம்: செம்மாநிற நீர்மம். கஞ்சாவிலிருந்து செய்யப் படுவது. வலிநீக்கி, கஞ்சாகுல்லை, குல்லையம். (உயி)

laughing - சிரித்தல்: இதில் ஆழ்ந்த உள்மூச்சுக்குப் பின், தொடர்ந்து காற்று எக்களித்து வெளிச் செல்லும். குரல் நாண்கள் அதிர்வதால் சிரிப்பொலி உண்டாகிறது. இயல்பான சிரிப்பு வேறு, நோய்ச்சிரிப்பு வேறு. (உயி)

laughing gas - சிரிப்பூட்டும் வளி: N2O. இரு நைட்ரஜன் ஆக்சைடு அல்லது நைட்ரஸ் ஆக்சைடு. நிறமற்ற வளி, பல்மயக்க மருந்து. (வேதி)

lawrencium - இலாரென்சியம்: Lr. மீ அணுவெண் கொண்ட கதிரி யக்கத் தனிமம். ஆக்டினைடு வரிசையைச் சார்ந்தது. கலிபோர் னியத்தைச் சிதைப்பதால் உண் டாவது. புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக்கூடிய பல ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன. (வேதி)

lava - எரிமலை குழம்பு: எரிமலையிலிருந்து உண்டாகும் உருகிய பாறைக் கக்கல். (பு.அறி)

laws of electromagnetic induction - மின்தூண்டல் விதிகள்: (1) பாரடே விதிகள்: 1. மூடிய சுற்றுடன் தொடர்புள்ள காந்தப் பாயம் மாறும்போது, அதில் மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. காந்தப் பாயம் மாறும் வரை மட்டுமே மின்னியக்கு விசை தூண்டப்பெறும். 2. தூண்டப்படும் மின்னியக்கு விசை, காந்த விசைக்கோடுகள் ஆகியவை மாறும் வீதத்திற்கு நேர் வீதத்தில் இருக்கும். (2) லென்ஸ் விதி: தூண்டப்பட்ட மின்னோட்டமும் மின்னியக்கு விசையும் அவற்றைத் துண்டிய காந்தப் பாயத்தை உண்டாக்கிய மின்னியக்கு விசைக்கு எதிர்த் திசையில் இருக்கும். (இய)

laws of reflection - ஒளிமறிப்பு விதிகள்: 1. படுகதிர், செங்குத்துக்கோடு, மறிப்புக் கதிர் ஆகிய மூன்றும் ஒரே மட்டத்தில் இருக்கும். செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் செங்குத்துக் கதிரும் இருக்கும். 2.படுகோணம் = மறிப்புக் கோணம். (இய)

laws of refraction- ஒளிவிலகலின் விதிகள்: 1. படுகதிர், செங்குத்துக் கோடு, விலகு கதிர் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் இருக்கும். 2. செங்குத்துக் கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படு கோணத்தின் சைனும் விலகு கோணத்தின் சைனும் எப்பொழு தும் மாறா வீதத்தில் இருக்கும். வீதம் ஒளியின் நிறத்தையும் ஊடகங்களையும் பொறுத்தது. (இய)

laws of sonometer - இசைமானி விதிகள்: 1. இழுத்துப் பொருத்தப் பட்ட கம்பியின் இழுவிசை (T) மாறாநிலையில், அதன் அதிர் வெண் (n) கம்பி நீளத்திற்கு (l) எதிர் வீதத்தில் இருக்கும். அதாவது, nl என்பது மாறா எண். 2. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் நீளம் (l), மாறா நிலையில் அதன் அதிர்வெண் (n) இழுவிசையின் இருமடி. மூலத்திற்கு √T நேர் விதத்தில் இருக்கும். அதாவது √T/N ,என்பது மாறா எண். 3. இழுத்துப் பொருத்தப் பட்ட கம்பியின் இழுவிசை (T) மாறாநிலையில் குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்குக் கம்பி நீளம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு (√m) எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது √m என்பது மாறா எண். (இய) laws of thermodynamics - வெப்ப இயக்கவியல் விதிகள்: 1. வெப்பமும் வேலையும் ஒன்றி விருந்து மற்றொன்றாக மாற்றப் படக் கூடியவை, உண்டாகும் வெப்பம் (H) செய்யப்பட்ட வேலைக்கு (W) நேர்வீதத்தில் இருக்கும். W α H, 2 i) சுற்றுப் புறத்தைவிடக் குறைவாக ஒரு பொருளைக் குளிர்விப்பதன் மூலம், அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெற இயலாது - கெல்வின். (ii) வெளி உதவி யின்றித் தானாக இயங்கும் எந்திரத்தினால், குறைந்த வெப்ப நிலையிலுள்ள பொருளி லிருந்து வெப்பத்தைப் பெற்று அதிக வெப்பநிலையிலுள்ள பொருளு க்கு அதனை அளிக்க இயலாது - கிளசியஸ். layering-பதியம் போடுதல்:- இனப் பெருக்க முறைகளில் ஒன்று ரோஜா (உயி) பா. vegetative propagation.

layout - திட்டவரை: 1. ஒரு சுற்று வழியை வடிவமைக்கப் பயன் படுந்திட்டம் 2. ஒரு திட்டத்திற்கு வரையப்படும் அமைப்புப் படம். leaching - ஊறித்தல்: நீர்மக்கசிவு. கரைபொருளைக் கரைப்பானைக் கொண்டு வெளுத்தல்.(உயி)

lead - காரீயம்: Pb. 1. மென்மை யான நீலச்சாயல் கொண் ட வெண்ணிற உலோகம். நிலக்கரி யைச் சேர்த்து, வறுத்த தாதுவை ஒடுக்க இப்பொருள் கிடைக்கும். எல்லா வீறுள்ள காடிகளோடுஞ்சேரும். மின்கல அடுக்குகள். கம்பிகள், நிறமிகள் முதலியவை செய்யப் பயன்படுவது. இது பல உப்புக்களையும் கொடுக்க வல்லது. 2. கம்பி. lead chamber process - காரீய அறைமுறை: பெருமளவில் காந்தகக் காடி தயாரிக்கும் முறை (வேதி)

leaf இலை: காம்புடன் கூடிய தண்டின் பக்கப் புற வளர்ச்சி. விரிந்த பரப்பு அல்லது தாளு டையது. இப்பரப்பில் பல நரம்பு கள் பின்னியுள்ளன. தாவரத்தின் தொழிற்சாலை (உயி)

leaf area index - இலை பரப் பெண்: (உயி)

leaf canopy - இலைவிரிகுடை: ஒரு தாவரத்தின் மொத்த இலைத் தொகுதிப்பரவல். மரத்தின் இலைத் தொகுதி விரிந்து குடை போன்று அமைந்திருத்தல். (உயி)

leaf curl - இலைச்சுருளல்: தாவர நோய், இலை சுருண்டும் சுருக் கங்களுடனும் இருத்தல். (உயி)

leaf fall - இலை உதிர்தல்: தாவர இலைக்காம்படியில் பிரி மண்ட லம் உண்டாவதால், இலைகள் விழுதல். (உயி)

leaf insect-இலைப்பூச்சி: தட்டை யான இலையொத்த தோற்ற முடைய பூச்சி. (உயி)

leaf margin - இலைவிளிம்பு: (உயி)

leaf miner - இலைவாழ் உயிரி: இலையின் இரு புறத்தோல் களுக்குமிடையே உள்ள கண்ண றைகளில் (செல்களில்) வாழ்ந்து அவற்றை உண்ணும் பூச்சி (உயி)

leaf shape - இலைவடிவம்: இது பலவகை (உயி)

leaf venation -இலை நரம்பமைவு: இலையில் நரம்புகள் அமைந் திருக்கும் முறை.

Leblanc process - லெப்லாங் முறை: சோடியம் கார்பனேட் தயாரிக்கும் பழைய முறை. (வேதி)

lecithality - மஞ்சள் கருச்செறிவு: முட்டையில் மஞ்சள் கருவின் அடர்த்தி (உயி)

lectotype - அடையாள மாதிரி: மூலப்பொருளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி. மூல வண்ணணை வெளியிட்டவுடன் வகை மாதிரியாக அமைவது. (உயி)

leeches - அட்டைகள்: வளையஉடலிகள். (உயி)

legume - பருப்புக்கனி: பா. pod.(உயி)

lemma - பூக்கும் உமி: புல்பூவில் ஓரிணைப் பூவடிச் செதில்களில் கீழுள்ளது. (உயி)

lens - வில்லை: ஒளி ஊடுருவும் துண்டு. இருவளை பரப்புக்களைக் கொண்டது. இப்பரப்பு குழிந்தும் குவிந்தும் இருக்கும். மூக்குக்கண்ணாடி, தொலை நோக்கி முதலியவற்றில் பயன்படுவது. (இய)

lenticel – பட்டைத்துளை: மரத்தண்டின் பட்டையில் உள்ளது. காற்று வெளிக்கும் உட்திசுக் களுக்குமிடையே வளி மாற்றம் நடைபெறக் காரணமாக இருப்பது. (உயி)

Lenz’s law - லென்ஸ் விதி: தூண்டிய மின்னோட்டம் எப்பொழுதும் அதை உண்டாக்கும் மாற்றத்தை எதிர்க்கும் திசையில் அமையுமாறு ஓடும். ஹெயின்ரிச் லென்ஸ் (1804 - 65) என்பார் 1835இல் இவ்விதியை முதன் முதலில் வகுத்தார். ஒருவகை ஆற்றல்மாறா விதியே. (இய)

leopard - வேங்கை: நிலவாழ் ஊனுண்ணி. புள்ளிகளுடைய சீற்றமிகு விலங்கு. புலியை ஒத்தது. கால்களில் நகமுண்டு. ஏனைய விலங்குகளை வேட்டை யாடுவது. (உயி)

leprosy - தொழுநோய்: முற்றிய தோல்நோய். நோய் நுண்ணத் தினால் ஏற்படுவது.

leptotene - இழைநிலை: குன்றல் பிரிவில் முதல்நிலை. (உயி)

lesion-நைவு: நோய், காயம், புண் ஆகியவற்றால் திசுவில் ஏற்படும் மாற்றம். (உயி)

lethal gene - கொல் மரபணு: மாற்றமடைந்த இணைமாற்று. தானுள்ள உயிரைக் கொல்வது. (உயி)

leucoma - வெளிர்புள்ளி: விழி வெண் படலத்தில் வெண்புள்ளி உண்டாதல். (உயி)

leucoplast - வெளிர்க்கணிகம்: கணிகங்களில் ஒருவகை பச்சையமோ ஏனைய நிறமியோ இல்லாதது. பா. plastid (உயி)

leucorrhoe - வெளிர்க்கசிவு: பெண்களிடம் பிறப்பு வழியிலிருந்து அளவுக்கு மீறிச் சளி வெளியேறுதல். (மரு)

leukaemia - வெளிர்ப்புற்று: அளவுக்கு மீறிக் குருதியில் வெளிரணு உண்டாதல். 7000- 700000 வரை இருக்கும். ஒரு வகைக் குருதிப் புற்றுநோய்.

level - மட்டமானி: நில அளவையில் உயரங்களைக் கணக்கிட உதவுங் கருவி. (இய)

lever - நெம்புகோல்: நிலைத்த ஒரு புள்ளியைத் தாங்கு புள்ளியாகக் கொண்டு சுழலும் உறுதியான கோல், இது பற்றாகக் கொண்டு சுழலும் புள்ளி பற்றுப்புள்ளி. திறன் செலுத்தப்படும் புள்ளி திறன் புள்ளி, பளு நகர்த்தப்படும் புள்ளி பளுப்புள்ளி. பற்றுப் புள்ளிக்கும் திறன் புள்ளிக்கும் இடையேயுள்ள தொலைவு திறன் கை பற்றுப்புள்ளிக்கும் பளுப்புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு பளுக்கை, நெம்புகோலின் நெறிமுறை பளு X பளுக்கை = திறன் X திறன்கை. வகை (1). முதல்வகை: ஏற்றம், கத்திரிக்கோல் எந்திர இலாபம் 1 (2) இரண்டாம் வகை: பாக்கு வெட்டி, கதவு எஇ 1க்கு மேல், (3). மூன்றாம் வகை: இடுக்கி, மீன்தூண்டில் எ.இ 1ஐவிடக் குறைவு.

எந்திர இலாபம் =பளு/திறன் = திறன்கை/பளுக்கை

(இய)

Lewis acid-லூயிஸ் (ஆசிட்) காடி: ஈதல் பிணைப்பை உருவாக்க ஒரு மின்னணு இணையை ஏற்கும் பொருள். (வேதி)

Lewis base - லூயிஸ் உப்புமூலி: இது ஒரு மின்னணு இணையை அளிப்பது. (வேதி)

Lewis concept - லூயிஸ் கருத்து: இதன்படி ஒரு மின்னணு இரட்டையை ஏற்றுக் கொள்ளும் பொருள் காடி. அம்மின்னணு இரட்டையைக் கொடுக்கும் பொருள் காரம். (வேதி)

Leyden jar - லெய்டன் உருளை: கண்ணாடி உருளையிலாலான மின்தேக்கமானி. 1745இல் லெய்டன் என்பவர் அமைத்தது. (இய)

lichens - பூப்பாசிகள்: பூஞ்சையும் பாசியும் சேர்ந்த கூட்டுத் தாவரங்கள். பூக்கா வகையைச் சார்ந்தவை. எ-டு. சாந்தோரியா. (உயி)

Liebig condenser - லிபிக் குளிர்விப்பி: ஜெர்மன் கரிம வேதி இயலார் லிபிக் பெயரால் அமைந்தது. ஆய்வகத்தில் தயாரிப்புப் பொருள் ஆவியாக இருக்குமானால் அதைக் குளிர் வித்து நீர்மமாக்கப் பயன்படுவது. வேதி life belt - காப்புக்கச்சை: நீரில் நிலைத்து நிற்க உதவுங் கருவி. (இய)

life buoy - காப்பு மிதப்பு: உயிர் காப்பாற்றப்படும் வரை நீரில் நிலைத்திருக்க உதவும் மிதப்பு. (உயி)

life cycle - வாழ்க்கைச்சுற்று: உயிரி களின் வாழ்க்கையில் காணப் படும் வளர்ச்சி நிலைகள், பூச்சி முதலியவற்றில் நான்கு நிலை களும் (முட்டை கம்பளிப்புழு, கூட்டுப்புழு, முதிரி) கீழினத் தாவரங்களில் இருநிலைகளும் (முதல் தலைமுறை சிதல் பயிர், இரண்டாம் தலைமுறை கருப் பயிர் காணப்படுவது. பொதுவாகக் கருவணு தோன்றி முதிரும் வரை உள்ள நிலைகளை வாழ்க்கைச் சுற்று உள்ளடக்கி யது. (உயி)

life science - உயிர் அறிவியல்: உயிர்களைப் பற்றி ஆராயுந்துறை. இதில் உயிரியல், மருத்துவம், விலங்கியல், தாவரஇயல் முதலி யவை அடங்கும். ஒ. earth science.

litespan-வாழ்நாள்: பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலம் உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடுவது. பல்லாண்டு வாழும் தாவரமும் உண்டு. மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதுமுண்டு. (உயி)

ligament - கட்டகம்: பந்தகம். மூட்டில் எலும்புகளை இணைக்குங் கயிறுகள். (உயி)

ligand - ஈந்தி: ஈதல்மூலக்கூறு. ஓரிணை மின்னணுக்களை வழங்கி ஈதல் உண்டாக்கும் மூலக்கூறு அல்லது அயனி. (வேதி). பா.complex, chelate

ligases - லிகேசுகள்: பல உயிரியல் பொருள்களில் வினையூக்கம் செலுத்தும் நொதிகள். (உயி)

light-ஒளி: மின்காந்தக் கதிர்வீச்சு. அணுவாகவும் அலையாகவும் உள்ளது. இருட்டை நீக்கிப் பொருள்களைப் பார்க்க உதவுவது. விப்ஜியார் என்னும் ஏழு வண்ணங்களை உள்ளடக்கியது. 2. விளக்கு: மின்விளக்கு (இய)

lighting - ஒளியேற்றல்: வீடுகளுக்குப் பொதுவாக மின் விளக்குகளால் ஒளியூட்டல். மின்சாரம் இல்லாத இடத்தில் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுகின்றன. (இய)

lightning - மின்னல்: ஒரு முகிலிலிருந்து மற்றொரு முகிலுக்குக் காற்று வெளி மின்சாரம் இறக்கம் பெறும்பொழுது உண்டாகும் கூசும் ஒளி. அல்லது முகிலிலிருந்து நிலத்திற்குப் பாய்வது. மின்னல் தடுப்பான்கள் கட்டிடங்களில் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும். இவை மின்னலிலுள்ள மின்சாரத்தை நிலத்திற்குக் கடத்திக் கேட்டைத் தவிர்க்கும். (இய)

light year - ஒளியாண்டு: அலகுச் சொல். ஓராண்டு ஒளி வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு. வானியலில் தொலைவின் அலகு. 9.4650 x 1015 மீட்டருக்கும் 5.8785 x 1012 கல் தொலைவுக்குச் சமம். (இய)

lignite - பழுப்பு நிலக்கரி: மா நிறமும் கருநிறமும் சேர்ந்த இயற்கைப் படிவு. அதிக அளவு அய்டிரோ கார்பன்களை (நீரகக் கரிகளை)க் கொண்டது. நிலக்கரியில் ஒரு வகை. தமிழ்நாட்டில் நெய்வேலியில் அதிகம் கிடைப்பது. பா. coal (வேதி)

ligule - செதில்போலி: செதில் போன்ற புறவளர்ச்சி. வடிவத்திலும் அளவிலும் மாறுபடுவது. சில விதைத் தாவரங்களிலும் புற்களிலும், பெரணிகளிலும் காணப்படுவது. (உயி)

lime-சுட்ட சுண்ணாம்பு: கால்சியம் ஆக்சைடு (வேதி)

lime, air, slaked - காற்றூட்டச் சுண்ணாம்பு: காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் சுண்ணாம்பு, இது கால்சியம் கார்பனேட்டையும் கால்சியம் அய்டிராக்சைடையும் கொண்டது. (வேதி)

lime, chlorinated - சலவைத்தூள்: Ca0Cl2 வெண்ணிறத்தூள். கால்சியம் அய்டிராக்சைடின் மீது குளோரினைச் செலுத்த இத்தூள் கிடைக்கும். தொற்று நீக்கி (வேதி)

lime, hydrated - நீற்றின சுண்ணாம்பு: Ca(OH)2 கால்சியம் அய்டிராக்சைடு. சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்த்து இதனைப் பெறலாம். (வேதி)

lime, hydraulic - நீரழுத்தச் சுண்ணாம்பு: சூடாக்கிய சுண்ணாம்புக் கல்லைப் பொடியாக்கப் பருக்காமல் நீரை உறிஞ்சிச் சிமெண்டைக் கொடுக்கும். (வேதி)

limestone - சுண்ணாம்புக்கல்: CaCO3, கால்சியம் கார்பனேட்டு (வேதி)

limewash - பூச்சுச் சுண்ணாம்பு: சுட்ட சுண்ணாம்பை நீரில் கரைத்துப் பெறுவது. வெள்ளையடிக்கப் பயன்படுவது. (வேதி)

lime water- சுண்ணாம்பு நீர்: நீரில் கால்சியம் அய்டிராக்சைடு சேர்ந்த கரைசல். (வேதி)

liming - சுண்ணாம்பு சேர்த்தல்: காடித்தன்மையை நீக்க மண்ணிற்குச் சுண்ணாம்பு அதிகம். (கால்சியம் அய்டிராக்சைடு) சேர்த்தல். (வேதி)

limnology - நன்னீரியல்: நன்னீர் அதன் திணைத் தாவரம், விலங்கு ஆகியவை பற்றி ஆராயுந்துறை. சூழியல் சார்ந்தது. (உயி)

linen - லினன்: பஞ்சுத்துணியிலிருந்து உருவாக்கப்படுவது. பருத்தி, ரேயான் முதலியவை இதிலிருந்து செய்யப்படுபவை. (வேதி)

lindane - லிண்டேன்: வெண்ணிற நிறமற்ற படிகம். BHCஇன் காமா ஓரகச் சீர் உருக்களை 99% கொண்டது. பூச்சிக் கொல்லி. (வேதி) Linde process - லிண்டு முறை: இறுக்கத்தால் வளிகளை நீர்மமாக்கும் முறை. (வேதி)

linear - நீள்வடிவம்: புல், (உயி)

linear behaviour -நீள் சார்பு நடத்தை: ஒளிவிலகல், மறிப்பு முதலியவை. ஆடி, ஊடகம் முதலியவை நீள்சார் பொருள்கள். நீள்தூண்டலை உண்டாக்குபவை. ஓ. non-linear materials.

linear expansion - நீள்பெருக்கம்: ஒரு திசையில் ஒரு பொருளின் பெருக்கம். அதாவது, திண்மப்பொருள் கம்பி நீளத்தில் பின்ன அளவு உயர்வு, குறிப்பிட்ட வெப்பநிலையில் பெறுதல். (இய)

linear material - நீள்சார்புப்பொருள்: நீள் சார்பு நிகழ்ச்சியுள்ள பொருள். எ-டு முப்பட்டகம், வில்லை.

line printer - வரி அச்சியற்றி: எழுத்து வரியை அச்சிடும் கணிப்பொறியின் வெளிப்பாட்டுக்கருவி. ஒரு நிமிடத்துக்கு 200 - 300 வரிகள் வரை அச்சிட வல்லது. (இய)

linetester-மின்னாய்வி: மின்சுற்று மூடிய நிலயில் அதில் மின்சாரம் உள்ளதா என்பதைக் கண்டறியும் திருப்புளி போன்ற கருவி. மின் பழுது நிலையில் இது பயன்படுவது. (இய)

linkage - மரபிணைவு: இரண்டிற்கு மேற்பட்ட இணைமாற்று. உருவமில்லாத மரபணுக்களின் சேர்க்கை. இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பிரிக்க இயலாத அலகாகச் செல்வது. ஒரே நிறப்புரியில் இருப்பதால், எவ்வகைத் தனி ஒதுக்கலும் (இண்டிபெண்டண்ட்) இல்லாதது.

Linnaean system - லின்னே முறை: ஓர் உயிருக்கு இரு பெயர் இடும் முறை. எ.டு. ஓமோ சேப்பியன்ஸ் (மனிதன்) (உயி)

lipase - லிப்பேஸ்: இரைப்பை நீரிலும் சிறுகுடல் நீரிலும் காணப்படும் நொதி கொழுப்பைக் கொழுப்புக்காடியாகவும் கிளசரிலாகவும் மாற்றுவது.

lipids - கொழுப்பிகள்: கரிமச் சேர்மங்கள். நீரில் கரையா. கொழுப்புக் கரைப்பானில் கரையும். தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும். இவை கொழுப்புகள், எண்ணெய்கள் முதலியவை ஆகும். (உயி)

lipocyte - கொழுப்பணு: மிகுதியாகக் கொழுப்பைக் கொண்டுள்ள கண்ணறை (செல்) (உயி)

lipoproteins - கொழுப்புப் புரதங்கள்: நரம்புத்திசுவில் நீரில் கரையும் சில புரதங்களோடு சேர்ந்து காணப்படும் கொலாஸ்டிராலும் ஏனைய கொழுப்புகளும். (உயி)

liquation - உருக்கிப்பகுத்தல்: தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிப்பதற்குமுன் அவற்றைத் தூய்மைப்படுத்தும் முறை. இதில் உருகாத அழுக்குகள் சூடாக்கும் பொழுது நீங்கும். சரிவுலையில் துய்மையற்ற உலோகம் போடப்பட்டுச் சீராகச் சூடாக்கப்படும். உலோகம் உருகிக் கொள்கலத்தில் விழும் உருகாத மாசுகள் உலையில் தங்கும். (வேதி)

liquefication - நீர்மமாக்கல்: ஒரு பொருளை நீர்ம நிலைக்கு மாற்றுதல். இதில் கெட்டிப் பொருள் நீர்மநிலைக்கு மாற வெப்பம் தேவை. வளிப்பொருள் நீர்மநிலைக்கு மாறக் குளிர்ச்சி தேவை. லிண்டே முறையில் வளி நீர்மமாகும். (வேதி)

liquefied gas - நீர்மமாகிய வளி: குளிர்ச்சியினால் வளி நீர்மமாதல், எ-டு. நீர்மமாகிய பெட்ரோலிய வளி (வேதி)

liquefied natural gas - லிக்யூபைடு நேச்சரல் கேஸ்: பா. LNG.

liquefied petroleum gas - லிக்யூபைடு பெட்ரோலியம் கேஸ்: பா. LPG (வேதி)

liquor-சாராயம், வெறியம்: இனிப்பும் மணமும் ஊட்டப் பெற்ற ஆல்ககால் செய்பொருள் பிராந்தி, ஒயின். (வேதி)

liquid-நீர்மம்: நீருக்கும் வளிக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள பொருள். இதில் மூலக்கூறுகள் தடையின்றி இயங்கும். பருப்பொருளின் நான்கு நிலைகளில் ஒன்று. (வேதி)

liquid air-நீர்மக்காற்று: வெளிறிய நீலநிறமுள்ள காற்று. முதன்மையாக நீர்ம உயிர்வளியையும் நீர்ம நைட்ரஜனையும் கொண்டது (வேதி)

Lissajous figures - லிசாஜஸ் உருவங்கள்: ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1.வீச்சு 2. அதிர்வெண் 3. வீதம் ஆகிய வற்றைப் பொறுத்தது. (இய)

lithium - லித்தியம்: Li, பளுக்குறைந்த வெண்ணிறக் கார உலோகம். பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு சேர்ந்த கரைசலை மின்னாற் பகுக்க, இவ்வுலோகம் கிடைக்கும். அதிக வினைத்திறம் உடையது. பல உலோகக் கலவைகள் செய்யவும் அணு வெப்பாற்றலை உண்டாக்கவும் பயன்படுதல் (வேதி)

lithium fluoride - லித்தியம் புளோரைடு: LiF. அரிதாகக் கரையும் உப்பு. லித்தியம் கார்பனேட்டுடன் அய்டிரோ குளோரிக் காடியைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். மட் பாண்டப் பொருள்களுக்கு மெருகேற்றவும் காடித்தடைப் பூச்சாகவும் பயன்படுதல். (வேதி)

lithium hydrogen carbonate - லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டு: LiHCO3, கரைசலாகவே அறியப்படும் சேர்மம். லித்தியம் கார்பனேட்டுத் தொங்கலில் கார்பன் டை ஆக்சைடைச் செலுத்தி இதைப் பெறலாம். முடக்குவாதத்தை நீக்கும் மருந்துகளில் பயன்படல், (வேதி)

lithophone - கற்கலவை: துத்தநாகச் சல்பைடும் பேரியம் சல்பேட்டும் சேர்ந்த கலவை. வண்ணக் குழைவுகளில் முத்து வெள்ளைக்குப் பதில் பயன் படுவது. (வேதி)

lithotroph-கல்வாழ்வி: பாறையில் வாழ்வது. கரிமப் பொருள்கள் உயிர்வளி ஏற்றம் (ஆக்சிடேஷன்) அடைவதால் உண்டாகும் ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழும் உயிரி (உயி),

litmus - பூஞ்சு: தாவரத் தோற்ற முள்ள கருஞ்சிவப்புப் பொருள். காடியில் சிவப்பாகும். காரத்தில் நீலமாகும். இதனால் செய்யப்பட்ட தாள் பூஞ்சுத்தாள் (லிட்மஸ் பேப்பர்) ஆகும். (வேதி)

litre - லிட்டர்: மெட்ரிக்கு முறையில் பருமவலகு 1 = 1000 க.செமீ அல்லது மி.மீ.நீர் (இய)

litoral - கரையோரப்பகுதி: 1. கடற்கரையோரப் பகுதி. 2, ஏரி அல்லது குட்டை ஓரப்பகுதி 3. கரை ஓரப்பகுதி உயிரிகள். (லிட்டோரல் ஆர்கனிசம்) (உயி),

liver - கல்லீரல்: உடலிலுள்ள குழாய்ச்சுரப்பிகளில் மிகப் பெரியது. இரைப்பைக்கு அருகிலுள்ளது. கருஞ்சிவப்பு நிறம். பித்த நீரைச் சுரப்பது. இந்நீர் பித்த நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது உடலின் வேதித் தொழிற்சாலை.

living fossil - வாழும் தொல் படிவம்: புதைபடிவம் அழிந்தொழிந்த உயிரிகளின் சில பண்பியல்புகளைப் பெற்றுள்ள தற்காலச் சிறப்பின உயிரி, எ-டு. கன்னி மயிர் மரம்

lixiviation - கழிவுறச் செய்தல்: 1. கரைவதும் கரையாததுமான கனிமக் கலவையைக் கரைப்பான் களோடு சேர்த்து வினைப் படுத்தும் முறை. 2. பொன் முதலிய விலை உயர்ந்த உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிக்கும் முறை (வேதி),

LNG, liquid natural gas - எல்என்ஜி, நீர்ம இயற்கை வளி: காற்றுவெளி அழுத்தத்தில் 160° செக்குக் குளிரச் செய்து இயற்கை வளியை நீர்மமாக்கல். போக்கு வரத்துக்குப் பயன்படுதல். பா. LPG (வேதி)

load-சுமை: 1. மின்திறம்: ஒரு சுற்றிலிருந்து பெறப்படும் மின்திறன். 2. ஒரு செல்வழியில் உண்டாகும் செய்தித் தொடர்பின் அளவு 3. சுமை பெறுவி: மின்கல அடுக்கு அல்லது மின் சுற்றிலிருந்து மின்திறனைப் பெறுங் கருவியமைப்பு, எ-டு. மின் உந்தி (மோட்டார்), (இய),

loader-சுமைஏற்பி: எந்திரக் குறித்தொகுதியில் மற்றொரு நிகழ் நிரலை ஏற்கும் ஒரு நிகழ்நிரல் அவ்வாறு ஏற்பின், அது செயற் படும் முன், நினைவகத்தில் அதனை வைப்பது (இய)

loam - செம்மண்: தோட்ட மண். செழிப்புள்ளது. மண் வகைகளுள் ஒன்று. (உயி)

lockjaw - தாடைக்கட்டு: பா. tetanus, (உயி)

locomotion - இடம்பெயர் இயக்கம்: விலங்குகள் ஓரிடத் திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல். இச்சிறப்பியல்பு தாவரங்களுக்கில்லை. (உயி)

locus - நிலைகொள்ளிடம்: நிறப் புரியில் குறிப்பிட்ட மரபணு வகிக்கும் நிலை (உயி)

locust - வெட்டுக்கிளி: பயிருக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சி (உயி)

logarithm - மடக்கை: ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். முழுஎண், தசம எண் என இரு பகுதிகளைக் கொண்டது. பொது மடக்கை, இயல் மடக்கை என இருவகைப்படும். மின்னணுக் கணக்கிடும் கருவிகள் வருதற்கு முன் பயன்பட்டது. அடிமானம் 10 உள்ள 210இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்புவரை, 0.3222 பின்னவரை. (இய)

logic - அளவை இயல்: தர்க்க இயல். பகுத்தறிவு பற்றி ஆராயும் துறை.மெய்யறிவியலின் ஒரு பிரிவு. அறிவியலோடு இரண்டறக் கலந்தது. 2. முறையமைவு. பூலியன் கணிதம், உண்மை, அட்டவணைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி, எண்ணிலக்க மின் சுற்றுகள், இருநிலை எண் குறிபாடுகளுக்கேற்பச் செயற்படுவதைக் கண்டறிதல், (இய)

lomentum - குறுக்கு முறிகனி: கனியில் ஒரு வகை (உயி),

long day plants - நெடும்பொழுதுத் தாவரங்கள்: இவை பூப்பதற்குப் பகல் ஒளியின் கால அளவு அதிகமிருக்க வேண்டும். எ-டு முள்ளங்கி, மக்காச்சோளம், (உயி) ஒ.short day plants.

longtitude - நெடுக்குக்கோடு: தீர்க்கக்கோடு. இக்கோடுகள் வட தென் முனைகளை இணைத்து வட்டமாகச் செல்பவை. 1. ஓரிடத்தை துல்லியமாகக் காண உதவுதல், 2. புவியில் வெவ்வேறு இடங்களில் நேரத்தையும் கணக்கிட உதவுதல். ஒவ்வொரு நெடுக்குக் கோட்டுக்கும் 4 நிமிட வேறுபாடு உள்ளதால், ஒவ்வொரு நெடுக்குக் கோட்டிலும் நேரம் வேறுபடும். இதனால் நாம் கிழக்கே சென்றால் நேரங் குறையும். மேற்கே சென்றால் கூடும். பா. latitude.

longitudinal waves - நெட்டலைகள்: அலைவு இயக்கம். இதில் ஆற்றல் மாறுகை திசை போலவே ஒரே திசையில் ஊடக அதிர்வுகள் இருக்கும்: ஒலி அலைகள். (இய)

loop - சுருள்: கம்பி வளையம், கண்ணி, கணிப்பொறி 1. கட்டளை வரிசைமுறை. 2. மின் இணைப்பு. உயிரியல் 1. கருத் தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள்.

Loop of Henle-என்லி சுருள்: சிறுநீர்ப் பிரித்தியின் ஒரு பகுதி. பெரும்பான்மை நீர் மீண்டும் உட்கவரப்படுதல் நடைபெறும் பகுதி. (உயி)

loopline -சுருள்வழி:கிளை இருப்புவழி. மீண்டும் முதல் வழிக்கு வருவது.

lophodont teeth -பிளவுறு கடைவாய்ப்பற்கள்: யானை, குதிரை ஆகிய விலங்குகளில் கடைவாய்ப்பற்களில் குறுக்கு வரிப்பிளவுகள் இருத்தல் (உயி)

lophotrichous -முடி நீளிழையுள்ள: ஒரு முனையில் முடி போன்று கசை இழைகள் தொகுதியாக இருக்கும். எ-டு. குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்) (உயி)

loran, Long- Range Aid to Navigation -லோரன், கப்பல் போக்குவரத்திற்கு நீண்ட எல்லை உதவி: வானவூர்திகள் அல்லது கப்பல்களுக்குரிய வானொலி வழிப் போக்குவரத்துமுறை. நிலையாகவுள்ள வேறுபட்ட இடங்களிலிருந்து குறிபாடுகள் பெறப்பட்டுக் கால இடைவெளிகள் ஒப்பிடப்படுதல். ஓ. radar, sonar (இய)

lorica - காப்புறை: குற்றிழையுள்ள முதல் தோன்றிகள் (சிலியேட்

டட் புரோட்டோ சோவா) முதலிய கீழின உயிரிகள் சுரக்கும் பாதுகாப்புறை. (உயி)

lotic ஓடுநீர்த் தொகுதி: நன்னீர்ச் சூழ்நிலைத் தொகுதி. இதில் நீர் தொடர்ச்சியாகச் செல்லும்: ஆறு. (உயி)

loud speaker -ஒலிப்பெருக்கி: மின்னோட்டங்களை ஒலியாக மாற்றுங் கருவி. (இய)

louse-பேன்:ஒரு நோய்த்தொற்று.(உயி)

Lowry-Bronsted concept - லோரி-பிரான்ஸ்டெட்டு கருத்து: இதன்படி ஒரு முன்னணுவைக் கொடுக்கும் பொருள் காடி. அம்முதலணுவை ஏற்கும் பொருள் காரம், அதாவது, காடி என்பது முதலணு கொடுப்பி, காரம் என்பது முதலணு ஏற்பி. (வேதி)

LPG, liquid petroleum gas - எல்பிஜி, நீர்மபெட்ரோலிய வளி: அய்டிரோ கார்பன்கள் சேர்ந்தவை. பெட்ரோலியத்தை நேர்த் தியாக்கும் தொழிற் சாலைகளில் பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுவது. வீட்டிலும் தொழிற் சாலையிலும் எரிபொருள் வாணிப அளவில் இரு கலவைகள் உள்ளன. 1. பூட்டேன் (85% சிறிது புரோபேன், பெண்டேனுடன் சேர்ந்திருக்கும். 2. புரோபேன் (92%) இதில் பூட்டேன் ஈத்தேன் சேர்ந்திருக்கும். இண்டேன் என்பது வாணிபப் பெயர். பா.LNG (வேதி) LSD lysergic acid diethylamide- எல்எஸ்டி, லைசர்சிக்காடி இரு எத்திலமைடு உளக்கோளாறு உண்டாக்கும் மருந்து. மன மயக்கத்தையும் தடுமாற்றத்தையும் தருவது. இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமைகள்.(வேதி)

lubricants - உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள் ஒன்றின்மீது மற்றொன்று இயங்கும் இருபுறப் பரப்புகளுக்கிடையே உண்டாகும் உராய்வையும் தேய்மானத்தையும் குறைக்கும் பொருள். எ-டு. மசகு, கிராபைட்டு வகை. 1. திண்ம உயவுப் பொருள்கள்: மசகு, சவர்க்காரக் கல் 2. நீர்ம உயவுப் பொருள்கள்: கனிம, கரிம எண்ணெய் பயன்கள் . உராய்வினால் ஏற்படும் ஆற்றலிழப்பு தடுக்கப்படுதல். 2. எந்திர வேலைத்திறன் உயர்தல். 3. துருப்பிடித்தல், அரிமானம் ஆகியவை தவிர்க்கப்படுதல். உயவுப் பொருளைச் சேர்த்தலுக்கு உயவிடல் என்று பெயர்.

lubrication -உயவிடல்: பா. lubricants (வேதி)

luciferase - லூசிபெரேஸ்: உயிர் வளி ஏற்றி நொதி மின்மினிகளின் ஒளியை உண்டாக்குவது. புரதம் போன்ற பொருள் லூசிபெரின். இஃது இப்பூச்சிகளின் ஒளி உறுப்புகளில் இருப்பது. (உயி)

lumbar vertebrae -இடுப்பு முள் எலும்புகள்: மார்புப்பகுதிக்குப் பின்னுள்ள முள் எலும்புகள். பா.(உயி)

luminiscene -ஒளிர்வு, இருட்டில் உண்டாகும் ஒளி உயிரணுக்களில் ஏற்படும் வேதி மாற்றங்களால் உண்டாவது, எ-டு. கடல்வாழ் முதல் தோன்றிகள் (புரோட்டோ சோவா (உயி)

luminious paint -ஒளிர்வண்ணக் குழைவு: ஒளிர்வுள்ள கரிமச் சேர்மங்களிலிருந்து கால்சியம் சல்பைடு) செய்யப்படும் பூச்சு. ஒளிபட ஒளிரும். (வேதி)

lungs- நுரையீரல்கள்: காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்குள்ள மூச்சுறுப்புகள். பொதுவாக இரண்டு. மூச்சுக்குழல், கிளைக் குழல் ஆகியவற்றைக் கொண்டது. மூச்சுச் சிற்றறைகள் இவற்றின் இறுதிப்பகுதிகள். இவற்றில் வளிமாற்றம் நடைபெறுதல்.(உயி)

lute-கொழுமண்: காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் உள்ளே காற்று அல்லது நீர் செல்ல இயலாது. (வேதி)

Lux - லக்ஸ்: அலகுச்சொல். ஒளித்திறன் (எஸ்.ஐ) வழியலகு (=1 லூமன் / ச.மீ) (இய)

luxation - 1.கழிவகலல்: உணவு வழியிலிருந்து கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுதல், 2.மூட்டு நழுவல். (உயி)

lye - காரக்கரைசல்: சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசல், கழுவப் பயன்படுவது. (வேதி)

lymph - கொழுநீர்: நிணநீர் சிவப் பணுக்கள் இல்லாக் குருதி, வெளிர்ப்பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது உடல்பாதுகாப்பிற்கும் பயன்படுவது. (உயி)

lymphagogues -கொழுப்புருக்கள்: கொழுநீர் ஊட்டத்தைத் தூண்டும் காரணிகள். (உயி)

lymphangitis -கொழுவழற்சி: கொழுநீர்க் குழாய்கள் வீங்குதல். (உயி)

lymphatic system -கொழுநீர் மண்டலம்: குருதி மண்டலத்தின் ஒரு பகுதி தனித்து இயங்காதது. கொழுநீர் நுண்ணுகிகள், குழாய்கள், முண்டுகள் ஆகியவற்றிலானது. இறுதியாகக் குழாய்கள் வழியாக இதயத்தின் சிரைப் பகுதியை அடைவது.

lymph heart-கொழுநீர் இதயம், கொழுநீர் நெஞ்சம்: இது விரிந்த கொழுநீர்க் குழாயே. இதில் திறப்பிகள் உள்ளன. இதன் சுவர்கள் சுருங்கவல்லவை : தவளை. (உயி)

lymph node -கொழுநீர்முண்டு: கொழுநீர் மண்டலத்தின் எதிர்ப்புப் பொருள்கள் உண்டாகும் பகுதி. (உயி)

lymphocytes - கொழுநீர் அணுக்கள்: ஒருவகை வெள்ளணுக்கள். வட்டமாகவோ அவரைவிதை வடிவத்திலோ உட்கரு இருத்தல். இருக்கும் அளவு 25% எதிர்ப் பொருள்களை உண்டாக்குவது.

இவை குருதியில் சேரும் அயல் பொருள்களை அழிப்பவை. (உயி)

lysergic acid -லைசர்க்காடி: நோய்க்கம்பிலிருந்து பெறப்படுவது, எல்எஸ்டி உண்டாக்கப் பயன்படுவது. பா. LSD. (வேதி)

lysin - லைசின்: உயிரணுவைப் பிளக்கும் எதிர்ப்பொருள். ஆகவே, இதனைப் பிளப்பி எனலாம். (உயி)

lysis - பிளவாற்பகுப்பு: குருதியணுக்கள் எதிர்ப் பொருள்களால் (பிளப்பிகளால்) கரைதல் அல்லது அழிக்கப்படுதல் (உயி)

lysogeny - பிளவால்தோற்றம்: பிளவாக்கம். உயிரணுக்கள் சிதைவதால், தாவரங்களில், அவற்றால் இடைவெளி ஏற்படுதல். (உயி)

lysol - லைசால்: சவர்க்காரக் கரைசலும் (50%) ஓரகச் சீருருக் கிரிசோல்களும் சேர்ந்த கலவை. தொற்றுநீக்கி. (வேதி)

lysozyme-பகுப்புநொதி: குச்சியத்திற்கு எதிர்ப்பான நொதி உடல் நீர்மங்கள், சுரப்புகள் (கண்ணிர், உமிழ்நீர் உட்பட) ஆகியவற்றில் உள்ளன. குச்சியங்களை அழிப்பவை. (உயி)

lysosome - லைசோசோம், பகுப்புப்புரி: தாவர, விலங்குக் கண்ணறைகளின் (செல்களின்) ஒர் உறுப்பி (ஆர்கனேல்). சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது. இதன் வேலைகள். 1. உணவுக் குமிழிகளுக்கு நொதி களை வழங்கல். 2. உருவளர்ச்சியின் பொழுது கண்ணறை களையும் திசுக்களையும் அழிப் பதில் ஈடுபடுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/L&oldid=1040352" இலிருந்து மீள்விக்கப்பட்டது