உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/U

விக்கிமூலம் இலிருந்து

U

udder-மடி: பசு முதலிய பாலூட்டிகளின் புறத்துறுப்பு. இது பால் சுரப்பிகளையும் காம்பையும் கொண்டது. (உயி)

udometer-மழைமானி மழையை அளக்கும் கருவி. (இய)

ulna - முன்கைஎலும்பு: முன்கையில் அமைந்துள்ள இரு எலும்புகளில் பெரியது. சிறியது ஆர எலும்பு (உயி) ultra centrifuge- மீ விரை மைய விலக்கி: மீ விரை மைய (விலகு விசை) விலக்கியால் மிகச் சிறிய துகள்கள் பிரிக்கப்படுதல். இது ஒரு நுணுக்கமாகும். (இய)

ultra microscope -மீ நுண்ணோக்கி: டிண்டால் விளைவைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இயல்பான ஒளி நுண்ணோக்கியால் பார்க்க இயலாத துகள்களைப் பார்க்க இயலும் (இய)

ultra short waves -மீ குற்றலைகள்: மிகக் குறுகிய மின்காந்த அலைகள். அலைநீளம் 10 மீட்டருக்குக் கீழ் இருத்தல், (இய)

ultrasonics -மீவொலி இயல்: அதிக அதிர்வெண்ணுள்ள ஒலி அலைகளைப் பற்றி ஆராயுந்துறை. இயற்பியலின் ஒரு பிரிவு. கேளா ஒலியியல் என்றும் கூறப் பெறுவது. (இய)

ultraviolet microscope -மீ ஊதாக்கதிர் நுண்ணோக்கி: ஒளியூட்டலுக்கு மீ ஊதாக்கதிர் வீச்சைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இதில் கல்ம (குவார்ட்ஸ்) வில்லைகளும் நுண்வில்லைகளும் பொருந்தி இருக்கும்.

ultraviolet rays, radiation - மீ(ப்புற) ஊதாக்கதிர்கள். புற ஊதாக்கதிர்வீச்சு: மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ் கதிர்களுக்கும் இடையிலுள்ளது. மருத்துவத்துறையிலும் உணவுத்துறையிலும் பயன்படுதல். (இய)

Ulysses spacemission-உலிசஸ் வானவெளி ஆய்பயணம்: இது ஈசா, நாசா ஆகிய இரண்டும் சேர்ந்து நடத்திய பயணம். இந்த வானவெளித் துருவி 1990 அக்டோபரில் ஏவப்பட்டது. இது தன் இலக்கை அடைந்து கதிரவனை ஆராய்ந்து பல நல்ல முடிவுகளைத் தெரிவித்துள்ளது.

umbel-குடைக்கொத்து: முடிவற்ற பூக்கொத்து, எ-டு வெங்காயம்.

umblical cord -தொப்பூழ்க் கொடி: கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும்.

ungulate - குளம்பு விலங்குகள்: குளம்பிகள். இவை தரையில் நடப்பன. அதற்கேற்றவாறு குளம்பு காலடியில் இருக்கும். எ-டு பசு, குதிரை, ஆடு (உயி)

unicellular -ஒற்றைக் கண்ணறையுள்ள: எ-டு அமீபா ஒ.acellular. (உயி)

uniform motion -ஒருசீர் இயக்கம்: ஒரு பொருள் சம அளவு காலங்களில் சம அளவு இடப் பெயர்ச்சி அடைவதற்குச் சீரான இயக்கம் என்று பெயர். இய)

unisexual - ஒருபால் தன்மையுள்ள: ஒரு பாலி, ஒரு சமயம் ஆண் அல்லது பெண் உறுப்புகளை மட்டும் கொண்டது. எ-டு தென்னை. (உயி)

பnit-அலகு: ஒப்பீட்டு அளவு மதிப்பு. அதே அளவின் மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் பயன்படுவது. இது அடிப்படை அலகு, வழி அலகு என இரு வகைப்படும். பா. (இய)

unit cell- அலகுத்தொகுதி: மூலக் கூறுகள், அயனிகள் அல்லது அணுக்கள் அடங்கிய மிகச்சிறிய தொகுதி. ஒழுங்கான இடை வேளைகளில் முப்பருமன்களில் மீண்டும் மீண்டும் நிகழுமாறு செய்ய இது படிகத் தொகுதியின் பின்னலை உண்டாக்கும். ஏழு அடிப்படை அலகுத் தொகுதிகள் உண்டு. இவை ஏழு படிகத் தொகுதிகளை உண்டாக்கும். (வேதி)

unit character -அலகுப் பண்பு: மரபுவழிப் பண்பு. இது கால் வழிக்குச் செல்லும்போது ஒரே அலகாகச் செயற்படுதல், (உயி)

unit processes -அலகுச் செயல்முறைகள்: இவை வேதி மாற்றங்களே. வேதி முறைகளில் நன்கு அறியப்பட்ட படிநிலை களாவன: காய்ச்சி வடித்தல், உப்பீனி ஏற்றம், ஆல்கைலாதல். நைட்ரோ ஏற்றம், வெந்தழல் சிதைவு, தொழிற்சாலை முறையாக்கல், வடிவமைப்புக் கருவிப் பயன்பாடு முதலியவை அலகு முறைகளின் அடிப்படையில் அமைந்தவை. (வேதி),

universal blood substitute - அனைத்துக் குருதிமாற்று: 1992இல் பம்பாய் மருத்துவ அறிவியலாரால் உருவாக்கப் பட்டது. 27-72 மணி நேரத்திற் குள் ஏற்படும் நெருக்கடி நிலை நோயாளிகளுக்கு இது சிறந்த மாற்று. எக்குருதிப் பிரிவின ருக்கும் அளிக்கலாம். குருதிச் சேமிப்பில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட அடர் பொருள் நீங்கிய ஈமோகுளோபினிலிருந்து (எஸ்பிஎச்) உருவாக்கப்பட்டது. இதற்கு ஐஐஎச் வினைப்பொருள் என்று பெயர். (மரு)

universal donor -அனைத்து தருநர்: ஒ வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், இது ஏனைய மூன்று வகைக்குருதி யோடும் சேரும். ஆகவே, இக் குருதி உள்ளவர் அனைவருக்கும் குருதிக்கொடையளிக்கும் இயல்புடையவர். (மரு),

universe - விண்ணகம்: பொருள், ஆற்றல், இடம் ஆகிய அனைத்தையும் கொண்டது. பொருள் என்பது கதிரவன், கோள் முதலியவை. பரந்தும் விரிந்தும் எல்லையற்றும் உள்ளது. (வானி)

uranium - யுரேனியம்: வெண்ணிறக் கதிரியக்கப் பொருள். தகடாக்கலாம். கம்பியாக்கலாம். உயிர்வளி, வெடிவளி, கரி ஆகியவற்றோடு எளிதாகச் சேரும். இதன் தாது பிட்சு பிளண்டு. இதனை 1789இல் கிளாப்ராத்து என்பவர் கண்டறிந்தவர். இதன் கதிரியக்கப் பண்பினை முதன்முதலில் 1895இல் பெக்கரல் கண்டறிந்தார். இது யுரேனியம் ஆக்சைடாகக் கிடைக்கிறது. உட்கருப்பிளவில் அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்துவது. ஏனைய தனிமங்களைப்போல், இது உலகில் அதிக அளவு இல்லாதது. (இய)

Uranus - யுரேனஸ்: சனி, நெப்டியூன் ஆகிய இரு கோள்களுக்கிடையே தன் சுற்று வழியைக் கொண்ட கோள். (வானி)

Urea - நீரிய உப்பு: 1. கார்பமைடு (NH2CONH2).வெண்ணிற படிகச் சேர்மம். அம்மோனியா, கரி ஈராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யூரியா, பார்மல்டிகைடு பிசியங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுதல். நீரில் கரையக்கூடிய நைட்ரஜன் கூட்டுப் பொருள். H2NCONH2 கார்பானிகக் காடியின் ஈரமைடு, சிறுநீர், குருதி, கொழுப்பு நீர் ஆகியவற்றில் காணப்படுவது. புரத வளர்சிதை மாற்றத்தின் முதன்மையான நைட்ரஜன் சார் முடிவுப் பொருள். அமினோ காடி, அமோனியா கூட்டுப் பொருள் ஆகியவற்றிலிருந்து கல்லீரலில் உண்டாவது. (உயி)

Urea cycle-நீரிய உப்புச்சுழற்சி: இதற்கு வேறுபெயர் ஆர்னிதைன் சுழற்சி.இதில் நொதிக்கட்டுப்பாட்டு வினைகள் தொடர்ச்சியாக நடைபெறுதல். இதில் அமினோகாடிகளின் முறிவுப் பொருளாக, யூரியா உண்டாதல். இது கல்லீரலில் நடைபெறுகிறது.(உயி)

ureter - சிறுநீர்க்குழாய்: சிறுநீரிலிருந்து சிறுநீர்ப்பைக்குச் செல்லும் குழாய், அப்பைக்குச் சிறுநீரைக் கொண்டு செல்லுவது. (உயி)

urethra - சிறுநீரகற்றி: சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய். (உயி)

urine - சிறுநீர்: சிறுநீரகம் சுரக்கும் கழிவு, சிறுநீர் வழிமூலம் வெளியேறுவது. யூரியா அல்லது யூரிகக் காடியைக் கொண்டது. ஏனைய பொருள்களும் சிறிய அளவில் இருக்கும். (உயி)

uriniferous tuble -சிறுநீரகக்குழலி: நீண்டதும் குறுகியதுமான குழாய். சிறுநீர்ப்பிரித்தியின் பகுதி. (உயி)

urochordata-வால்முதுகுத்தண்டு உடையன: அகலுறை விலங்குகள்: சியானா, தண்டுடைய விலங்குகளின் ஒரு பிரிவு. (உயி)

uroscopy - சிறுநீர்நோக்கல்: சிறுநீரை ஆய்ந்து நோய்கூறைக் கண்டறிதல். (உயி)

user - பயனாளி: கணிப்பொறியினால் பயன்பெறுபவர். (இய)

user programme -பயனாளி நிகழ்நிரல்: பயன்பெறுபவருக்குரிய கணிப்பொறி நிகழ்ச்சி. பா, programme. (இய)

uterus-கருப்பை: பெண்ணிடத்துக் கருக்குழலின் விரிந்த பகுதி. இதில் முட்டைகள் வளரும்.(உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/U&oldid=1040369" இலிருந்து மீள்விக்கப்பட்டது