அறிவியல் அகராதி/X

விக்கிமூலம் இலிருந்து

X

xanthene - சாந்தீன் கரி, நீர்வளி, உயிர்வளி ஆகியவற்றின் படிகம். சாயப்பொருளாகப் பயன்படுதல். (வேதி)

xanthin - சாந்தின்: பூக்கள் பலவற்றின் மஞ்சள் நிறப்பொருள் கரையாதது (உயி)

xanthine - சாந்தைன்: C6H9O2.

வெண்ணிறப் பொருள். படிக மற்றது. கல்லீரலில் யூரியா யூரிகக் காடியாகும்போது உண்டாவது, இறைச்சிப் பொருளிலும் தேயிலைகளிலும் காணப்படுவது. (உயி)

xanthophyll - சாந்தோபில் மஞ்சயம்: C40H56O2 பசுந்தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் மஞ்சள்வகை கிச்சிலிவகை நிறமிகளுள் ஒன்று. கரோட்டினிலிருந்து உண்டாவது மிகப் பொதுவாக உள்ளது லூட்டின்,பா. carotenoids.(உயி)

xanthophyta -மஞ்சள் பாசிகள்: நன்னீரிலும் நிலத்திலும் வாழ்பவை. உடல் ஓரணுவால் ஆனது. நார்வடிவமும் குழல் வடிவமும் உண்டு. கூட்டமாகவும் காணப்படும். இவற்றின் உடலில் தட்டு வடிவ மஞ்சள் கணிகங்கள் இருப்பதால் இப்பெயர். பாலினப் பெருக்கம் உண்டு. (உயி)

x-band - எக்ஸ் அலைவரிசை: வானொலி அதிர்வெண் வரிசை, 5200-10900 மெகாகெர்ட்ஸ் வரையுள்ளது. (இய)

x-chromosome-எக்ஸ் நிறப்புரி: பாலின நிறப்புரிகளில் ஒன்று. பால் தன்மையை உறுதி செய்வது. (உயி)

xenograft -அயலொட்டு: பா. graft (உயி)

xenon- செனான்: சுழித்தொகுதியைச் சார்ந்தது. நிறமற்ற ஒற்றையணு வளி, காற்றில் 0.00001% உள்ளது. வெப்பத் திறப்பிகள் 'தர்மியானிக் வால்வ்ஸ்) குமிழ்கள், ஒளிர்விளக்குகள் ஆகியவற்றில் பயன்படும் செயலற்ற வளி. பா.thermionic valve.(இய)

xerarch succession -வறட்சித் தொடர்வு: வறட்சிச் சூழ்நிலையில் தாக்குப் பிடித்து வளர்தல். இதனால் வறட்சிப்படி (செரோமியர் உண்டாகி வறட்சியைத் தாக்குப்பிடித்தல். (உயி)

xeric condition -வறட்சி நிலை: நீரில்லா வளரிடம். மற்ற வறண்ட நிலைகளாவன: உயர்வெப்ப நிலை, மணற்பாங்கு கடுமையான கதிரவன் ஒளி. இவை பாலைச் சூழ்நிலைகள் (உயி)

xerography - உலர்படவரைவியல்: இஃது ஓர் உலர் படப்பிடிப்பு அல்லது ஒளிநகல்முறை. பொருளின் உரு தாளில் மின்னேற்ற மடையுமாறு செய்யப்படுகிறது. பின், மின்னேற்றமுள்ள நேர்த்தியான உலர் மைத்துளைத் தூவிப் பெருக்கப்படுகிறது. (இய)

xerophytes-வறண்ட நில வாழ்விகள்: வறண்ட சூழ்நிலையில் வாழும் தாவரங்கள். நீர்ப்பற்றாக் குறை, அதிக வெப்பநிலை, ஊட்டப்பொருள் குறைவு. அதிக ஆழம் முதலியவை வறண்ட நிலைகள். இலைகள் நீராவிப் போக்கைக் குறைக்க உருமாற்றம் பெறும். அவை இலைத் தொழில் தண்டாகவோ இலைத் தண்டாகவோ மாறும். வேர்கள் நீண்டிருக்கும். எ-டு சப்பாத்தி, கத்தாழை, அரளி, சுரபுன்னை.

xerotransplantation -அயல் பதியஞ் செய்தல்: நல்ல நிலையிலுள்ள ஒருவரது உறுப்பை பழுதுபட்ட உறுப்பு உள்ள ஒருவருக்கு மாற்றீடு செய்வது. இது வழக்கத்திலுள்ளது. (மரு).

Xerox உலர்நகலி: எழுத்துவடிவச் செய்தியை நகல் எடுக்கும் கருவி. நகலாக்கி (இய)

x-radiation - கதிர்வீச்சு: ஊடுருவும் மின்காந்தக் கதிர்வீச்சு, புற ஊதாக் கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் காமா கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் இடைப்பட்டது. (இய)

x-ray - எக்ஸ் (ரே) கதிர்: வேறு பெயர் இராண்டஜன் கதிர்கள். 1895இல் இராண்டஜன் (1845-1923), என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக் குறுகிய அலைநீளமுடையது. ஒளிக்கதிர் புகாப் பொருள்களிலும் ஊடுருவுவது. உடலில் தசையில் ஊடுருவி எலும்புகளைக் கருமையாகப் படத்தில் காட்டவல்லது. அதாவது, எலும்பில் ஊடுருவாது. (இய)

x-ray astronomy- எக்ஸ் கதிர் வானியல்: புவிக்காற்று வெளியிலுள்ள எக்ஸ் கதிர்மூலங்களை ஏவுகணைகள் விண்குமிழிகள் வாயிலாகவும் அதற்கு அப்பாலுள்ளவற்றைச் செயற்கை நிலாக்கள் மூலமும் ஆராய்தல், 1962இல் நடைபெற்ற ஏவுகணைப் பறப்பில் முதல் கதிரவன் சாரா எக்ஸ் கதிர்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து இப்புதுத்துறை உருவாகி வளர்ந்த வண்ணம் உள்ளது. (வானி),

x-ray crystallography -எக்ஸ் கதிர் படிக வரைவியல்: படிகங்கள் மூலம் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவைப் பயன்படுத்துதல். படிக மூலக்கூறுகளின் அணுக்களின் முப்பரும அமைப்பை அறிய இது பயன்படுகிறது. படிகத்தின் வழியே எக்ஸ் கதிர்கள் செல்லும்பொழுது, விளிம்பு விளைவுக் கோலம் எக்ஸ் கதிர்களாகக் கிடைக்கும். இவை அணுக்களால் விளிம்பு விளைவை அடைகின்றன. விளிம்பு விளைவுக் கீற்றணியினால் ஒளி விளிம்பு விளைவு அடைவது போல இந்நுணுக்கம் பெரிய முலக்கூறுகளான டிஎன்ஏ, ஆர்என்ஏ முதலிய மூலக்கூறுகளின் அமைப்பை உறுதி செய்யப் பெரிதும் உதவுதல் (இய)

x-ray diffraction -எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு: பா. x-ray crystallography (இய).

x-ray sources -எக்ஸ் கதிர் மூலங்கள்: எக்ஸ் கதிர் தலை வாய்கள். கதிரவன் குடும்பத்திற்குப் புறத்தே உள்ள எக்ஸ் கதிர்வீச்சு மூலங்கள். விண்மீன் கூட்டத்தில் 100க்கு மேற்பட்ட மூலங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றன. (வானி)

xylem - சைலம், மரவியம்: மரத்திசு. குழாய்த்திசு ஊட்டத்தைக் கடத்துவதும் தாவர உடலுக்குத் தாங்குதல் அளிப்பதும் முதன் மையான வேலைகள். முன் வளரியத்திலிருந்து வேறுபாடடைதல் மூலம் முதல் மரவியம் உண்டாகிற்து. இதில் முன் மரவியம், பின் மரவியம் ஆகிய இருபகுதிகள் உண்டு. வளரியத்தினால் உண்டாவது இரண்டாம் மரவியம். இது கூடுதல் மரவியமாகும். பொதுவாக, மரவியத்தில் குழாய்கள், நாரிழைகள், பஞ்சுத்திசு அணுக்கள் ஆகியவை இருக்கும். (உயி)

xyster-எலும்புச்சுரண்டி: எலும்புகளைச் சுரண்டும் கருவி (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/X&oldid=1040378" இலிருந்து மீள்விக்கப்பட்டது