அறிவுக்கு உணவு/குழந்தை அறிவு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

குழந்தை அறிவு

குழந்தைகளை வளர்ப்பது பெரிதன்று; அவர்களது அறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது அல்லது தானே வளரும் அறிவையாவது தடைப்படுத்தாமலிருப்பது நல்லது.

“சோற்றை உருட்டாதே! உருட்டினால் தாய், தகப்பனை உருட்டிடுவாய்!” என்று சொல்லாதீர்கள்.

“சோற்றை உருட்டிக் கொண்டிராதே! விரைவில் சூட்டோடு சாப்பிடு! இன்றேல், செரிக்காது” எனச் சொல்லுங்கள்.

“சாப்பிடும் போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிடாதே. சாப்பிட்டால் குடும்பத்திற்கு ஆகாது.” எனச் சொல்லாதீர்கள்.

"சாப்பிடும்போது ஒரு விரலை நீட்டிக்கொண்டே சாப்பிட்டால், விரல் நகத்தால் கண்ணுக்கு ஆபத்து” என்று சொல்லுங்கள்.

“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே! போதல் சாஸ்திரத்துக்கு ஆகாது” எனச் சொல்லாதீர்கள்.

“இரண்டு கழுதைகளுக்கு இடையில் போகாதே! போனால் எந்தக் கழுதையாவது உதைக்கும்” எனச் சொல்லுங்கள்.