அறிவுக் கனிகள்/அதிர்ஷ்டம்
721. துர் அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட நல்ல அதிர்ஷ்டத்தைத் தாங்கவே அதிக ஆற்றல் தேவை.
ரோஷிவக்கல்டு
கதே
723.துர் அதிர்ஷ்டம் சிறியோரைப் புறங் கண்டுவிடும். ஆனால் பெரியோர் அதை வென்று விடுவர்.
வாஷிங்க்டன் இர்விங்
724.எப்பொழுது நாம் “அதிர்ஷ்டம்” எனும் தேவதையை அதிகமாக விரும்புகின்றோமோ, அப்பொழுது அவள் நம்மை அதிகமாக அதட்டிப் பார்க்கின்றாள்.
ஷேக்ஸ்பியர்
725.“வினைப்பயன்” என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும்.
மில்
726.அதிர்ஷ்டம் அடையும்வரை என்னை அறிவிலி என்று அழையற்க.
ஷேக்ஸ்பியர்
727. பலவீனர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பலமுடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர்.
எமர்ஸன்
728.அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்பவேலை.
பப்ளியஸ் ஸைரஸ்
பேக்கன்
730.அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவமாட்டார்கள்.
ட்ரைடன்
731.கெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர்.
கார்லைல்
732.அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு.
ஜார்ஜ் எலியட்
733. அதிர்ஷ்ட தேவியின் குன்றின்மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு? சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே.
நௌல்ஸ்
734.அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு.
பேக்கன்
735.அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.
கார்லைல்
736.அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு.
ஷேக்ஸ்பியர்