உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/இலட்சியம்

விக்கிமூலம் இலிருந்து

13. இலட்சியம்

256.இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை யொப்பான்.

ஆவ்பரி

257.மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும்.

பீக்கன்ஸ்பீல்டு

258.தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம்.

ராபர்ட் பிரௌணிங்

259.எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி.

டாக்டர் ஜான்ஸன்

260.தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம்.

ரிக்டர்

261.உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

பழமொழி

262.மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.

வாவனார்கூஸ்

263. ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று.

ஹோம்ஸ்


264.எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்?' என்னும் கேள்வியே.

ரஸ்கின்


265.ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன்.

ஸெனீகா


266.வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும்.

யங்

267.இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும்.

கதே


268.மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும்.

ஹாட்டன் பிரபு


269.இன்பங்களைப்பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம்.

ஆவ்பரி

ஷில்லர்

270. லௌகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும்.

ஷில்லர்


271.முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும்.

ரஸ்கின்

272. ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும்.

இப்ஸன்

273.தன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்கவேண்டும்.

ஹம்போல்ட்

274.மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கௌரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே.

ஹாரியட் மார்ட்டினோ

நியூமன்
275. இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே.

நியூமன்


276.வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற் கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்?

ஜார்ஜ் எலியட்


276.நீண்ட காலம் வாழவேண்டு மென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும். ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே.

ஹீஜிஸ்

378. நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய்.

டெனிஸன்