அறிவுக் கனிகள்/கேள்வி
Jump to navigation
Jump to search
53. கேள்வி
874. பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய்.
ப்ளூட்டார்க்
875.பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம்.
மாண்டேய்ன்
876.ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும்.
சீனப் பழமொழி
877.காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம்.
ஏராஸ்மஸ்