அறிவுக் கனிகள்/பாண்டித்தியம்
Jump to navigation
Jump to search
61. பாண்டித்தியம்
978. பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர்.
பெர்னார்ட் ஷா
979.அயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே.
ஸெயின்ட் பூவ்
980.பாண்டித்தியம் தலைக்குள் பல பொருள்களை நிரப்பும். ஆனால் அப்படிச் செய்வதற்காக அது மூளையை எடுத்து வெளியே எறிந்துவிடவும் செய்யும்.
கோல்ட்டன்
981.பாண்டியத்தியமின்றி பாவனாசக்தி மட்டும் உடையவருக்குச் சிறகுகள் உண்டு. கால்கள் கிடையா.
ஜூபெர்ட்