ஆசிரியர்:கடியலூர் உருத்திரங்கண்ணனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இருபாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் பத்து பாட்டுக்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார். ருத்ர + க்ருஷ்ண என்னும் வட சொற்கள் தமிழில் உருத்திரங் கண்ணன் என்று ஆகியுள்ளது.

படைப்புகள்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.