ஆசிரியர்:ச. சாம்பசிவனார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ச. சாம்பசிவனார்

ச. சாம்பசிவனார், உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை (1902-1981) நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்; மதுரைத் திருவள்ளுவர் கழகச் செயலராக இருந்தபெருமை சாம்பசிவனார்க்கு உண்டு. இவர் எழுதிய நூல்கள்-75, கட்டுரைகள், கவிதைகள் பல, “செந்தமிழ்ச் செல்வர், தமிழாகரர், அருந்தமிழ் மாமணி, திருக்குறள் செம்மல்” எனப் பல்வேறு பட்டங்களும், தமிழக அரசின் ‘நல்லாசிரியர்’ விருதும் பெற்றவர்; சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, இலங்கை முதலான நாடுகட்குச் சென்று உலகளாவிய மாநாடுகளில் தலைமை தாங்கியும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுமுள்ளவர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மிக உயர்ந்த ‘மாட்சிமைப் பரிசு’ம் பெற்றவர்; ‘தமிழ் மாருதம்’ என்ற உலகளாவிய இலக்கியத் திங்கள் இதழின் ஆசிரியர். மதுரை நகரில் சிறந்ததொரு நூலகத்தையும் உருவாக்கியவர்.

படைப்புகள்[தொகு]