உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
CC-Zero-badge.svg Blank.jpg CC-logo.svg
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

உரைவேந்தர்
ஒளவை சு. துரைசாமிபிள்ளை

 


உள் அட்டையில் காணும் சிற்பக் காட்சியில் பகவான் புத்தரின் அன்னை மாயாதேவி கண்ட கனவின் பலனை மன்னர் சுத்தோதனருக்கு நிமித்திகர் மூவர் விளக்குகின்றனர். அவர்களுக்குக் கீழே அமர்ந்து அந்த விளக்கத்தை எழுதுகிறார் ஓர் எழுத்தர். எழுதும் கலையைச் சித்திரிக்கும் முதல் இந்தியச் சிற்பம் இதுவாகவே இருக்கலாம்.
நாகார்ஜுன மலைச்சிற்பம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. ( பட உதவி: நேஷனல் மியூசியம், புதுதில்லி)

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிபிள்ளை

இந்திய இலக்கியச் சிற்பிகள்

உரைவேந்தர்

ஒளவை சு.துரைசாமிபிள்ளைச. சாம்பசிவனார்

சாகித்த அகாதெமி

Uraivendar Avvai Su. Duraisami Pillai: Monograph in Tamil S.Sambasivanar. Sahitya Akademi, New Delhi, 2007, Rs. 25.


© சாகித்திய அகாதெமி

முதல் பதிப்பு: 2007

ISBN 81-260-2366-X


சாகித்திய அகாதெமி


இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை,

புது தில்லி 110001.


விற்பனை

'ஸ்வாதி' மந்திர் சாலை, புது தில்லி 110 001.


மத்தியக் கல்லூரி வளாகம், பல்கலைக்கழக நூலகக் கட்டடம், டாக்டர் அம்பேத்கர் வீதி, பெங்களுர் 560 001.


குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018.


ஜீவன் தாரா பில்டிங், நான்காவது மாடி, டைமண்ட் ஹார்பர் சாலை, கொல்கத்தா 700 053,


172, மும்பய் மராத்தி கிரந்த சங்கிரகாலய சாலை, தாதர், மும்பய் 400 014.

 

விலை: இருபத்தைந்து.


அச்சு : விக்னேஷ் பிரிண்ட்ஸ், சென்னை-83.


முகவுரை

“நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் (இந்நாட்டில்) வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும், பிறநாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால், வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப் பருவத்தே, தாய், தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ்நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையை மாற்றினர்; தமிழ்க் கல்வியைத் துற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத்தமிழ் மக்கட்குரிய சான்றாண்மையைக் கைதூவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல ‘நாமமது தமிழரெனக் கொண்டு’ உயிர் வாழ்ந்தனர். ‘தாய்நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றிவிட்டதே இந்த அந்நியமொழிக் கல்வி’ என அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை!”

என்று 50 ஆண்டுகட்கு முன்பு (1954) எழுதிய எழுத்து இன்றுங் கூடப் பொருந்துவதாகவே உள்ளது. இவ்வாறு கூறியவர் உரைவேந்தர் என உத்தமர்களால் போற்றப்படும் ஒளவை. சு.துரைசாமி பிள்ளையாவர்.

சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கல்லூரிப் படிப்பையும் தொடர முடியாமல், நகராட்சி அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிந்தவர்; உள்ளத்தே ஆழப் புதைந்து கிடந்த தமிழுணர்வால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போந்து, ஆசிரியப் பணியிலிருந்து கொண்டே ‘வித்துவான்’ தேர்வு எழுதிப் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தவர்; தமது கடும் உழைப்பினாலும், முயற்சியினாலும் ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர் ஏடு பார்த்து எழுதுதல்,
முகவுரை

கல்வெட்டுக்களைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் காண்டல் இன்னோரன்ன செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்றதோடன்றிச் சைவ சித்தாந்தத் திலும் நுண்மாண் நுழைபுல மிக்கவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் இலக்கியவரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை ஆக்கியவர்; பல்வேறு நூல்கட்கு உரைநயம் கண்ட உரவோர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியவர், நாநலம் மிக்கவர் எழுதுவது போலவே பேசுவதும், பேசுவது போலவே எழுதுவதும் செய்யவல்லவர்! உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து கொண்டே இரவெல்லாம் கண்விழித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்தவர்; ஆங்கிலத்திலும் போதிய புலமை பெற்றவர் வடமொழியும் அறிந்தவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ‘சித்தாந்த கலாநிதி’, ‘உரைவேந்தர்’, ‘தமிழ்ச்செம்மல்’ எனும் தகைசால் பட்டம் பெற்றவர்! ‘ஒளவை'யைக் கண்ணாற் கண்டோமில்லை; இந்த ஒளவையைக் காண முடிந்ததே என்று பலரும் மகிழ்ந்து போற்றும்படி வாழ்ந்தவர் ஆம்! அவரே, உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை.

‘தோன்றிற் புகழொடு தோன்றுக’

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்தவர்!

இத்தகு சான்றோரோடு 1951ஆம் ஆண்டு முதல் நட்புக் கொள்ளும் பேறு எனக்குக் கிட்டியது. அவரினும் வயதில் இளையவனே எனினும், என்னையும் ஒருபொருட்டாகக் கருதி என்பால் பேரன்பு காட்டிய பெருந்தகை! யான், மதுரைத் திருவள்ளுவர் கழகத்துச் செயலாளராக இருந்தபோது, சைவ சித்தாந்தக் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ததோடு, அவரது அறுபதாவதாண்டு மணிவிழாவைச் சிறப்புறக் கொண்டாடவும், அதில், 'உரைவேந்தர்' என்னும் உயரிய பட்டத்தை வழங்கவுமான நிகழ்ச்சி நடந்ததை இன்று நினைத்தாலும் எனதுள்ளம் பூரிப்புக் கொள்கிறது.

இத்தகு தொடர்பு என்பால் இருந்தமையால், இவரது இனிய வாழ்க்கை வரலாற்று நூலினை எழுதும் பொறுப்பைப் புதுதில்லி, ‘சாகித்திய அகாதெமி’ எனக்களித்ததைப் பெருமையாகக் கருதுகின்றேன். 

அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தவர் உரைவேந்தர்’ எனினும் இவரது வாழ்க்கைக் குறிப்பை ஒருவரும் முறையாக எழுதி வைக்கவில்லை. புலவர் தி.நா. அறிவொளி எழுதிய வாழ்க்கைக் குறிப்பும், உரைவேந்தரின் நூற்றாண்டு நிறைவை யொட்டி வெளிவந்த ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு’ எனும் சிறுவெளியீடும்; அதில் வெளிவந்த கோமான் ம.வி. இராகவன் எழுதிய வாழ்க்கைச் சிறு குறிப்பும், சென்னையிலுள்ள என் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் திரு. கு. சிவமணி வழங்கிய ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர் ஒளவை சு.து.” என்ற ‘கருத்தரங்கக் கட்டுரை’யும் இந்நூல் எழுதப் பெரிதும் துணைபுரிந்தன. உரைவேந்தரின் திருமகனார், மருத்துவர் திரு. ஒளவை து, மெய்கண்டான் அளித்த குடும்பச் செய்திகளும், உரைவேந்தரே, நூல்களின் முன்னுரைகளில் தந்த குறிப்புக்களும் கைகொடுத்து உதவின.

இந்த நூலை மேலும் விரித்து எழுதுவதற்கு இயலும்; நூலினைப் படிப்போர்க்கு அலுப்பு ஏற்படாதவாறு சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளது!

இந்நூலைப் படிப்பவர் எவருக்காவது, அன்னைத் தமிழ்மீது தனியா ஆர்வமும் சைவசித்தாந்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் உண்டாகுமானால் அதுவே எனக்குப் பெரும் பேறு!

வாழ்க தமிழ்!
ச. சாம்பசிவனார்