உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:மணவாள மாமுனிகள்

விக்கிமூலம் இலிருந்து
மணவாள மாமுனிகள்
மணவாள மாமுனிகள்

மணவாள மாமுனிகள்

[தொகு]

திருவாய்மொழிப்பிள்ளையின் சீடர்களில் தலைவர். ஆழ்வார் திருநகரியில் ஐப்பசிமாதம் திருமூல நட்சத்திரத்தில் எம்பெருமானாருடைய அபராவதாரமாகத் தோன்றியவர். சகல சாத்திரங்களிலும் வல்லவர்; மிகத்தெளிவான ஞானம் பெற்றவர். இவருடைய திவ்யசூக்திகளின் பெருமை ஒப்புயர்வற்றது. அரங்கநாதப்பெருமானுக்கும் ஆசார்யராக (குருவாக) அமைந்த பெருமைகொண்டவர்.

உடையவர் சீடபரம்பரை இரண்டு பிரிவுகள்
எம்பார் திருக்குருகைப்பிரான் பிள்ளான்
பட்டர் கிடாம்பியாச்சான்
நஞ்சீயர் எங்களாழ்வான்
நம்பிள்ளை நடாதூரம்மாள்
வடக்குத் திருவீதிப்பிள்ளை கிடாம்பியப்புளளார்
பிள்ளை லோகாசாரியர் வேதாந்த தேசிகர்
திருவாய்மொழிப் பிள்ளை நயனாராசாரியர்
மணவாளமாமுனிகள்
உடையவர்
எம்பெருமானார், சிறீராமானுசர், சிறீபாசியகாரர், யதீந்திரர், எதிராசர் முதலிய திருநாமங்களினால் வழங்கப்பெறுபவர். விசிட்டாத்வைதம் எனும் சிறப்பு அத்வைதக் கோட்பாட்டினைத் தோற்றுவித்தவர். ஆதிசேடனுடைய அவதாரமாகக் கருதப்படுபவர். சிறீபெரும்புதூரில் சித்திரைத் திருவாதிரையில் அவதரித்தவர். ஆளவந்தாருடைய சீடர்களான பெரியநம்பி, திருமலைநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருவரங்கப்பெருமாளரையர் ஆகிய ஐந்து குரவர்களைத் தம் ஆசாரியர்களாகக் கொண்டவர். திருக்கச்சி நம்பிகளிடத்தில் பெரும் அன்புடையவர். முதலியாண்டான், எம்பார், கூரத்தாழ்வான், அருளாளப்பெருமாள்எம்பெருமானார், அனந்தாழ்வான் முதலான பலபல மகான்களுக்கு ஆசார்யராக விளங்கியவர். இவருடைய முக்கியமான சீடர்கள் 'எழுபத்திநான்கு சிம்மாசனாதிபதிகள் என்று சிறப்புப்பெற்று விளங்கிவருகின்றனர். சிறீபாசியம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், கீதாபாசியம், வேதார்த்த சங்கிரகம், நித்யம்,கத்தியத்திரயம் என்னும் திவ்ய நூல்களை அருளிச்செய்தவர். வைணவத்தைப் பரப்பிய பெருமானார், மிகச்சிறந்த சமூகச்சீர்திருத்தவாதியாக விளங்கிய அருளாளர், தீண்டாதவர்களைத் திருக்குலத்தார் எனஅழைத்துப் பெருமைப்படுத்தியதோடு, தீண்டாமையை விலக்கி, அவர்களைத் தம்மோடு சமமாக வைத்து வாழ்ந்துகாட்டிய பெருமகனார்.

படைப்புகள்

[தொகு]