ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/சிற்ப வடிவில் ஒரு புதிர்
சிற்ப வடிவில் ஒரு புதிர்
பத்து வருஷங்களுக்கு முன் நான் தஞ்சையில் இருந்தேன். அப்போது என்னுடன் இணை பிரியாது இந்தவர்கள் இரண்டு நண்பர்கள் (ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது அல்லவா.). நான் தஞ்சைக் கலைக் கூடம் அமைக்கும் போது கூடவே இருந்து, நான் தேடி எடுத்து வரும் சிற்பங்களின் அழகை எல்லாம் அனுபவிப்பார்கள். நான் சொல்லும் விளக்கங்களை கேட்டு மெய் மறப்பார்கள். நானும் இவர்களை தஞ்சை மாவட்டத்தில் பல பாகங்களுக்கும் கூட்டிச் செல்வேன். பல கோயில்களுக்கும் செல்வோம். அங்கு இருக்கும் சிற்பங்களின் அழகை எல்லாம் கண்டுகளிப்போம்.
இப்படி கலை அனுபவத்தில் ஒரு நாள் நாங்கள் மூவரும் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ் வரர் கோயிலுக்குப் போனோம். அக்கோயில் இரண்டாம் ராஜ ராஜன் கட்டியது. அங்குள்ள ராஜகம்பீர மண்டபத் தில் எண்ணிறந்த சிற்பவடிவங்கள் இருக்கின்றன என்றெல் லாம் அவர்களுக்குச் சொல்லியிருந்தேன். சரியென்று கோயிலுள் நுழைந்து ராஜ கம்பீர மண்டபத்துக்கு இட்டுச் செல்லும் படிக் கட்டுகளை நோக்கி நடந்த போது கிழக்கே பார்த்த கோஷ்டத்தில் ஒரு சிலை, மூன்று முகம், எட்டுத் திருக்கரங்களோடு இருந்தது.
அத்துடன் அவ்வடிவின் பாதிப்பாகம் பெண் வடிவு என்று காட்டத் தக்க வகையில் விம்மிப் பெருத்த ஒரே மார்பகம். இடுப்பிற்கு கீழே மடி மடியாய்த் தொகுத்துக் கட்டியிருக்கும் சேலை காலிலே பாதசரம் எல்லாம் இருந்தது. சிலை எந்த மூர்த்தத்திற்காக எடுத்தது என்று எனக்கு விளங்கவில்லை. நண்பர்களை பார்த்து இச்சிற்பம் எந்த வடிவத்தை விளக்குகிறது என்று. உங்களுக்குத் தெரி கிறதா என்று கேட்டேன். அவர்கள் சிறிதும் தயங்காமல் இது அர்த்த நாரியின் வடிவம்தான் என்றனர். உடன் வந்திருந்த அர்ச்சகரும் ஆமா, ஆமா இது அர்த்த நாரீஸ்வர மூர்த்திதான் என்றார்.
நான் கேட்டேன். ஒற்றை மார்பகமும் உடுத்தியிருக் கும் ஆடையையும் வைத்து நீங்கள் இப்படிச் சொல் கிறீர்கள். அர்த்தநாரீஸ்வரருக்கு ஏது மூன்று முகம்; ஏது எட்டுக் கரங்கள் என்றேன். நண்பர்களும், அர்ச்சகரும் விழிக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ஆமா சார்! இவைகளை நாம் கவனிக்க வில்லையே. இது அர்த்த நாரீஸ்வர மூர்த்தம் போலவும் இருக்கிறது. அயனும் அரியும் அதனுள் அடங்கியவர்கள் தானே. அதனால் அர்த்த நாரீஸ்வரர் என்னும் அந்த மூர்த்தத்தில் பிரம்மாவையும், விஷ்ணுவையும் இணைத்து சிற்பி உருவாக்கி இருப்பாரோ என்று என்னிடம் கேட் டார்கள். எனக்கொன்றும் சொல்ல முடியவில்லை. ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியாமல் தஞ்சை திரும்பி னோம்.
வீடு திரும்பியதும், வீட்டில் இருந்த சிற்ப நூல்களை யெல்லாம் புரட்டினேன். இந்திய விக்கிரகங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கும். T.A. கோபிநாதராவ் அவர்களின் புத்தகங்கள் நான்கையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தால், இப்படி ஒரு வடிவத்தை அவர் வெளியிடவும் இல்லை. அதற்கு விளக்கமும் கூறவில்லை. கஸ்யப சில்பம் என்னும் புத்தகத்தில் புரட்டினால் அங்கும் ஒரு விளக்கமும் கிடைக்கவில்லை. H.கிருஷ்ண சாஸ்திரி எழுதியிருக்கும் 'தென்னிந்தியக் கடவுளரும் அவர்களது துணைவியரும் என்ற புத்தகத்தில் இந்த வடிவத்தின் படம் இருந்தது. சரி கிடைத்து விட்டது என்று துள்ளிக் குதித்து விளக்கத்தைப் படித்தால் என் நண்பர்கள் சொன்னபடி அது அர்த்தநாரீஸ்வர வடிவம் என்றே எழுதி இருந்தது. இதைப் பார்த்து நண்பர்கள் குதுகலிப்பார்கள் என்று நினைத்தேன். நான் நினைத்ததற்கு மாறாக அவர்களும் என்னுடன் சேர்ந்து, இந்த விளக்கமும் சரியானதில்லை, தப்புத்தான் எனறாாகள.
அதன் பின் விளக்கங்கள் வேண்டி சரஸ்வதி மகால் அர்ச்சகரைக் கேட்டேன். சுவாமி மலையில் உள்ள சிற்பக் கலைஞர்களைக் கேட்டேன். நான் எடுத்த புகைப் படத்தையும் காட்டிக் கேட்டேன். எல்லோருமே பரக்கப் பரக்க விழித்தார்களே ஒழிய, சரியான விளக்கம் சொல்பவர்களைக் காணோம்.
இப்படியே நானும் பல நாளாய் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்து விட்டு, கடைசியில் 'இது ஒரு புரியாத புதிர்' என்றே விட்டு விட்டேன். தேவர் மூவர் என்பது போல தேவியர் மூவர். அவர்களே கலைமகள், அலைமகள், மலைமகள் எனப்படுவர் என்பதை அறிவோம். இம்மூவரும் சேர்ந்து இணைந்த வடிவமே பராசக்தியின் வடிவம் என்று அறிஞர் கூறக் கேட்டிருக்கிறேன். இப்பராசக்தியே, தேவர் மூவருக்கும் தேவியர் மூவருக்கும் மேலான ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் என்றும் விளக்கங்களாக படித்திருக்கிறோம். இப்படி எண்ணங்களைச் சுழல விட்டுக் கொண்டிருக்கும் போது நான் முன்னர் எப்போதோ படித்த பாட்டு ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது.மூவர்கற்கும் முதற் பொருளாய்
முத்தொழிலுக்கும் வித்தாகி,
நாவிற்கும் மனத்திற்கும்
நாடறிய பேரறிவாய்
தேவர்களும் முனிவர்களும்
சித்தர்களும் நாகர்களும்
யாவர்க்கும் தாயாகும்
எழிற் பரையை வணங்குவாம்
என்ற பாடலைப் படித்த உடனே விஷயம் விளங்க ஆரம்பித்தது.
கற்பனைத்திறன் மிகுந்த சிற்பி ஒருவன், திரி மூர்த்தி வடிவம் ஒன்றை வடிக்க திட்டமிட்டு வேலையை ஆரம்பித்திருக்கிறான், வடிவத்தைச் செதுக்கும் போது முன்னோக்கியிருந்த ஒரு முகத்தில் பெண்மையின் சாயல் எப்படியோ அமைத்துவிட்டதை உணர்ந்திருக்கிறான். சரி அவ்வடிவத்தைப் பராசக்தியின் வடிவமாகவே அமைத்து விடுவோமே என்று எண்ணியிருக்கிறான். இன்னும் அவனது சிந்தனை விரிவடைந்திருக்கிறது. திரிமூர்த்திகளும் திரிமூர்த்தியர் துணைவியர் பராசக்தி எல்லோரும் இணைந்து நிற்கும் ஒரு விசுவரூபக் காட்சியாகவே ஆக்கினால் என்ன என்று எண்ணிருக்கிறான். அதற்கு என்ன செய்வது. இறைவனும் இறைவியும் இணைந்து நிற்கும் அர்த்தநாரீஸ்வர மூர்த்தத்தையும் இந்த வடிவில் இணைத்து விட்டால் தன் எண்ணம் பூர்த்தியாகும் என்று சிந்தித்திருக்கிறான்.
இப்படித்தான் இந்த விசுவரூபம் உருப் பெற்றிருக்க வேணும். கடைசியில் கலைஞன் எண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்த விஸ்வரூபக் காட்சியே இது என்று தீர்மானத்திற்கு வந்தேன். இது தான் முடிந்த முடிவு என்று கூற நான் முனையவில்லை. இதை விடப் பொருத்தமாகப் பலரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விளக்கத்தை யார் தந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
நான் சொல்லும் விளக்கத்தை பல கலா ரசிகர்களிட மும், சிற்பக் கலைஞர்களிடமும் சொல்லிப் பார்த்திருக் கின்றேன். ஒருவரும் இதை மறுக்கக் காணோம். ஆகவே இந்த புரியாத புதிரை விடுவித்து விட்டதாக நினைத் துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணம் சரிதானா என்ற கேள்வி இன்னும் என் மனதில் இருக்கத்தான் செய்கிறது.