ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

விக்கிமூலம் இலிருந்து

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

தாரியஸ் ஆட்சியில்

கி.மு. 606-ல் அஸ்ஸிரியப் பேரரசு கவிழ்க்கப்பட்டது. அது நிகழ்ந்ததும், பாபிலோன், ஆசிய வாணிகத் தலைமையிடமாக ஆகிவிட்டது. யவனர், யூதர் பொய்னீஷியர், இந்தியர், சீனர், என்ற உலக வணிக இனங்கள், தங்கள் வணிகப் பண்டங்களைப் , பாபிலோனிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றன. ‘அயெஸ் செய்லஸ் (Aeschylus) என்பார் ‘'எல்லா வகை மக்களும் வேறறக் கலந்துவிட்ட ஒரு பெருங்கூட்டம்” (Painminikton hoclon) என அழைக்குமளவு, பாபிலோன் நகரத்து மக்கள் கலந்துவிட்டனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வளம் பெற்றிருந்த தென்னிந்திய வணிகர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், நிப்பூரில் (Nippur) இருந்து முராஷ-வுக்கும், (Murushu), அவர் மகனுக்கும் உரிமையுடையதான பெரிய வர்த்தக நிறுவனத்தின் வணிகத் தொடர்புடைய பட்டயங்களில், வணிகர் தொடர்பான குறிப்புகளைக் காண்கிறோம். (J.R.A.S. 1917, P. 237 Kennedy) கி.மு.538ல் ஸைரஸ் (Cyrus), பாபிலோனியப் பேரரசை அழித்துவிட்டான். அவன் வழிவந்த மதிப்பார்ந்த தாரியஸ் (Dariwas) கி.மு. 20 ஆம் நூற்றாண்டு போலும் காரத்தில் ஸெஸோஸ் - டிரியெஸ் (Sesostrises) என்ற ஒருவனால் முதன் முதலாக வெட்டப்பட்டு, கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் 18வது அரச மரபினர் ஆட்சியின் கீழ், மீண்டும் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாயைக் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பக்தியைத் திறப்பதன் மூலம், கடல், வணிக வளர்ச்சிக்குத் துணை புரிந்தான். அவன், வடமேற்கு இந்தியாவைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டான். அது, இந்துகுஷ் மலையின் குறுக்காகப், பால்க் பகுதிக்கும், அங்கிருந்து எக்ஸைன் (Ewxine) பகுதிக்குச் சென்ற, பாலைவனத்தைக், கூட்டமாகக் கடக்கும் வணிகச் சாத்துமுறை புத்துயிர் பெற வழிவகுத்து விட்டது. அது, கார்மேனியன் (Karmanian) பாலையைத் தொட்டுச் செல்வதாகி, அங்கிருந்து மெஸபடோமியா வழியாக அன்டியோக் (Antioch) நகருக்கும் சென்றது. இதன் முக்கிய விளைவு, பட்டு, முதன்முதலாக, மேற்கு நாடுகளைச் சென்றடைந்தது. "கிரேக்கர்கள், பட்டை அலெக்ஸாண் டரின் படையெடுப்பு மூலம் அறிந்து கொண்டனர் எனக் கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு முன்பே, பர்ஷயா மூலம், அது அவர்களை அடைந்திருக்கக்கூடும்." (Schoff's Periplus. P. 264.) இந்நிலவழி வாணிகம், தாரியஸுக்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்துவிட்டது. எகிப்தை வெற்றி கொண்ட பின்னர், அலெக்ஸாண்டர், இந்தியாவுக்கும் ஐரோப்பியாவுக்கும் இடையில், பெரிய வாணிக நிலையமாக விரைவாக வளர்ந்து விட்ட அலெக்ஸாண்டிரியாப் பெருநகரை : உருவாக்கினான். பின்னர், அம்மாவீரன் டயர் நகரைச் சூறையாடி அழித்து அதன் பண்டை வாணிகத்தையும் பாழ்படுத்தி விட்டான். இது மேற்கு நோக்கிப் பெருகிக் கொண்டிருந்த இந்திய வணிகப் பெருக்கை ஓரளவு அணைபோட்டுத் தடுத்து விட்டது. அலெக்ஸாண்டர் இறப்பிற்குப் பிறகு, அஸரியாவைச் சட்ட திட்டங்கள் அற்றுப்போன குழப்பநிலை, ஆட்சிபுரியத் தொடங்கி விட்டது. பார்த்தியாவில், ஒரு புதிய பேரரசு எழுந்தது. சித்தியப் பழங்குடியினர், பாக்ட்ரியா (Bactria) மீதான, தம் திடீர்த் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். இந்நிகழ்ச்சிகள், நிலவழி வாணிகத்தில் அழிவுக்கு வழிவகுத்து விட்டன. இந்த விளைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, எகிப்தின் நலனுக்காகச் செங்கடல் வாணிக வளர்ச்சிக்கு, அருமுயற்சி எடுத்துக் கொள்ளுமாறு பிலடெல்பிஸுக்கு (Philadelphus) கி.பி. 285 - 246ல், அழைப்பு விடுத்தார். முதல் தாலமி, சூயஸ் கால்வாய், ஓரளவு திறக்கப்பட்டு, வாணிகப்போக்கு வரவிற்கு வழி செய்யப்பட்டது. வணிகச் சாத்து செல்லும், தங்கும் இடங்களுக்கும், குடிநீர்க் கிணறுகளுக்கும் வசதி செய்து தரப்பட்ட, பல்வேறு வழித்தடங்கள், கடலுக்கும், நைல் நதிக்கும் இடையே திறக்கப்பட்டன. அவ்வழித்தடங்கள் முடியும் இடங்களிலெல்லாம், துறைகளால் கண்காணிக்கப்பட்டன. தன் முந்தைய செல்வவளத்தையும் புகழையும் எகிப்து, ஓரளவு திரும்பப் பெற்று விட்டது. தாலமியின் நகர்வலத்தில் பிலெடெல்பஸ் நகரில் இந்திய மகளிர், இந்திய வேட்டை நாய்கள், இந்தியக் காக்கைகள், ஒட்டகங்கள் மீது ஏற்றப்பட்ட, இந்திய மணப்பொருள்கள் காணப்பட்டன.

கிரேக்க இடைத்தரகர்களும், நடுவர் இருவர் குழு ஆட்சிக்கு உட்பட்ட ரோமும்

கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய 500 ஆண்டுகளில், ஐரோப்பாவுடனான, இந்த இந்திய வணிகத்தில், கிரேக்கர்கள், பெரும் இடைத்தரகர்களாக இருந்தனர். உலகப் பெருநாடு களுக்கு இடையிலான, இந்த விரிவான வாணிகப் பண்டங் களின் தமிழ்ப்பெயர்கள், கிரேக்கப் பழங்குடியினரின் தூய கிரேக்க எல்லெனெஸ் மொழியால் (Helenes) கடன் வாங்கப் பட்டன. திருவாளர்கள் ஸோப்ஹோக்கில்ஸ், (Sophocles ) அரிஸ்டோபன்ஸ் (Aristophanes) ஆகியோர் எழுத்துக்களில், அவை இடம் பெறத் தொடங்கின. அவையாவன, தமிழ் அரிசியிலிருந்து “ஒரைஸ்” (Oryza) இலவங்கப்பட்டையாம் கருவாவிலிருந்து, ‘'கர்பியொன்'’ (Karpion) தமிழ் இஞ்சிவேர், சமஸ்கிருத ஸ்ரிங்கிடுவாரா விலிருந்து (Sringivera) “ஜிக்கி ‘பெரொஸ்” வால்மிளகைக் குறிக்கும் தமிழ் திப்பிலியிலிருந்து ‘'பெப்பெரி;” (Peperi), இது இப்போது, ஐரோப்பிய மொழிகளில், கருப்பு மிளகைக் குறிக்கவும் ஆகிவிட்டது. பண்டைக்காலத்தில் கோவை மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தமிழ் வைடூரியத்திலிருந்து ‘பெரில்லோஸ்’ (Beryllos) இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்து உரோமானியர். அவர்களுடைய, பண்டைய எளிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்தனர். பகட்டு வாழ்க்கையில் அவா கொண்டிலர். ஆகவே, நடுவர் இருவர் குழு (Consular) ஆட்சியின் தொடக்க காலத்தில், இந்தியப் பண்டங்கள், உரோமாபுரியை அடையவில்லை. அந்நாட்களில், இந்தியா இறக்குமதி செய்தனவற்றில் உரோம நாணயம் இடம் பெறவில்லையாகவே, அக்காலை நடைபெற்ற சிறு வாணிகத்திலும், வாங்கிய பண்டங்கள், உரோம நாட்டுப் பணம் கொடுத்து வாங்கப்படவில்ல.. பல நூறு ஆண்டு காலமாக இருந்துவந்த பழைய தடத்திலேயே வாணிகம் நடைபெற்றிருக்கக் கூடும். நடைபெற்றிருந்தது. ஆனால், நடுவர் இருவர் குழு ஆட்சியின் பிற்பகுதிவரை, உரோம அரசு, கிழக்கு நோக்கி விரிவடையவில்லை. துணிவுமிக்க உரோம வணிகர்களுக்குப் பல்மைரா (Palmyra) தன்னுடைய கதவு களைத் திறக்கவில்லை. ஜூலியஸ் சீசரால் , அலெக்ஸாண் டிரியா, கி.மு. 47 இல், கைக்கொள்ளப்பட்டது என்றாலும், கடல் வாணிகம் அராபியப்படகுகளில், கடற்கொள்ளைக் காரர்களின் பிடியில் சிக்குண்டிருந்த கடற்கரையை ஒட்டி நடைபெற்று வந்தமையால், அக்காலை வாணிகம், சிறிய அளவில், நிலையற்ற தன்மையிலேயே நடைபெற்று வந்தது. அக்காலத்தில், ஐரோப்பாவுக்கு, இந்தியாவிலிருந்து, என்னென்ன ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவை. பெரும்பாலும் உரோமுக்குச் செல்வதில்லை. கிரேக்கத்திற்கே சென்றன. [J. R. A. S. 1904: Page : 593 - 94. Sewell] திருவாளர் ஸ்வெல் அவர் ஆட்சிக்காலத்து நாணங்களில், இதுவரை ஒருசில நாணயங்களே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன என்ற உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவாம்.

இக்கால கட்டத்தின் இறுதியில், மத்திய தரைக்கடல் மக்கள் மீது, அடுத்தடுத்துக் கொண்ட வெற்றியும், நடத்திய கொள்ளையும், உரோமப் பேரரசின் கருவூலத்திற்கு ஒப்புக்காட்ட இயலாப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தன. கீழ் நாடுகளைச் சேர்ந்த, மதிப்புமிக்க வணிகப் பண்டங்கள் மீதான சுவை, ஒரே இரவில் வளர்ந்துவிட்டது. சிற்றாசியா, சிரியா நாடுகளை வென்று கொண்டாரைச் , சிறப்பித்து மக்கள் எடுத்த விழாக்கள், மக்கள் ஆர்ப்பரிப்புக் குக் காரணமாகிவிட்ட பெருஞ்செல்வத்தால் சுடரொளி வீசிச் சிறப்புற்ற" (Scoffs periplus.page: 5] பழைய சிக்கன், எளிய வாழ்க்கைமுறை, பகட்டு வாழ்வின் கவர்ச்சி முன் நிற்கமாட்டாது, நெடுங்காலத்திற்கு முன்பே விடைபெற்றுக் கொண்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், தூரக்கிழக்கு வணிகப் பண்டங்கள், கணிசமான அளவு, உரோமை வந்தடையலாயின்”, [Warminston J. R.A.S., 1940. page 4 sweli.]

உரோமப் பேரரசின் தொடக்கத்தில்

அகஸ்டஸ் (Augustus) எகிப்தை, கி.மு., 30இல் வெற்றி கொண்டு, இந்தியாவுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில், ஒரு நேரிடைக் கடல் வாணிக வளர்ச்சிக்கு முயன்றான். கி.மு. 25இல், ஏறத்தாழ 120 கப்பல்கள், ஹோர்மஸ்ஸிலிருந்து (Hormus), இந்தியாவுக்குப் பயணம் செய்ததைத் தாம் பார்த்ததாகத், திரு. ஸ்டிராபோ (Stabo) கூறுகிறார். [Morindle Ancient India, page 6] “இந்தியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து அரசியல் தூதுவர்கள் அகஸ்டஸ்பால் சென்றனர். இந்தியத் தூதுவர்கள், அடிக்கடி வந்ததாக அவனே கூறுகிறான்” [Warmington Commerce between the Roman Empire and India. page : 35] அக்காலச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தனித்தனித் தூதுவர்களை அனுப்பியதாக, திருவாளர் வார்மிங்டன் கூறுகிறார். (Warmington Commerce between the Roman Empire and India. p. 37] இது. அகஸ்ட ஸ் காலத்தில் இந்தியா, உரோமுடன் நடத்திய வாணிக அளவு மிகப்பெரிய அளவினதாய்ப் பெருக வழி செய்தது. இவ்வாணிகம் குறித்துத் திருவாளர் வார்மிங்டன் அவர்கள், “உரோமுக்கும் இந்தியாவுக்கு மிடையிலான வாணிக அளவை மதிப்பிட்டுப் பார்த்தால், அகஸ்டஸின் உண்மையான தொடக்கநிலை ஆட்சிக் காலத்தின் போதே, அது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வாணிகம் எப்போதும் இயல்பாக இருக்கும், அந்த அளவு அடைந்துவிட்ட, குறிப்பிடத்தக்க அப்பெருநிலையை நாம் கண்ணெதிராகக் காணக்கூடும். தொடக்க நாளிலிருந்தே, இந்தியப் பண்டங்களின் வருகைப் பெருக்கத்திற்குப் பேரரசின் பண்டங்களைக் கொடுத்துச் சரிஈடு செய்ய முடியாது போயிற்று. அதன் - விளைவு பண்டங்களுக்குப் பதிலாக, உரோமானியர், சென்றால் திரும்பிவராத, அடித்த நாணயப் பணங்களை வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 179 வெளி யேற்றினர். [Warmington. Page : 381 நாணயப் பணங்களை ஏற்றுமதி செய்வதில், தொடக்கத்தில் ஒரு மோசடி வெளிப்படையாகவே செய்ய முயலப்பட்டது. அகஸ்டஸ் நாணயத்திற்குப் பதிலாக, அவனுடைய தத்துப் பிள்ளைகளாம், கையஸ் (Gaius) லூசியஸ் (Lucius) என்பார் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொன்னுக்குப் பதில் முற்றிலும் பொன் முலாம் பூசப்பட்ட நாணயங்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவில் கைம்மாறின. உள்நாட்டு மக்கள், போலி நாணயங்களிலிருந்து, உண்மையான உரோம நாணயங்களை, இன்னமும் வேறுபிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத்திற்காகவே அத்தகைய நாணயங்களை , இன்னமும் வேறுபிரித்து உணரமாட்டா, தென் இந்தியாவோடு நடத்தும் வாணிகத் திற்காகவே அத்தகைய நாணயங்கள் தனியாக அடிக்கப்பட்ட னவாக எர்னஸ்ட் (Ernst) எண்ணுகிறார்" எனக் கூறுகிறார் திருவாளர் வார்மிங்டன் [Warmington p. 139]. ஆனால், தமிழர்கள் கூர்மதிவாய்ந்தவர் என்பதை உறுதி செய்து விட்டனர். காரணம், அற்பத்தனமான அச்சோதனை மீண்டும் முயலப்படவில்லை. இந்நூற்றாண்டு கால அளவில், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப் பொருள்கள் யாவை?

உயிர்விலங்குகளின் ஏற்றுமதி

பண்டைக்காலத்து இந்தியர்கள், உயிர் விலங்குகளைக் கடல்வழியாகப், பர்ஷிய வளைகுடாவிற்கும், ஆப்பிரிக்கா விற்கும், சீனாவுக்கும் அனுப்பி வைத்தனர். இரண்டாம் தாலமியின் மயில்களையும், கிளிகளையும், அனுப்பி வைத்தமைக்கும் அவர்களே, பெரும்பாலும் பொறுப்பாவர். ஏதன்ஸ்க்குச் செல்யூகஸ் (Seleucus) நன்கொடையாக வழங்கிய புலி, சுல்லாவும் (Sulla) பாம்பெயும் (Pampey) காட்சிப் பொருளாகக் காட்டிய சிங்கங்கள், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம், மெர்ஸலஸ் (Mercllows) நகரின் ஆடரங்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, கூண்டிலோ குகையிலோ அடைத்துக் காட்டப்பட்ட புலி, ஆகிய விலங்குகள், சில வட இந்தியாவையும் சில தென்னிந்தியா வையும், சேர்ந்தவை, நிலவழியாக அனுப்பப்பட்டனவாம். ஆனால், கிரேக்க எழுத்தாளர்கள் பலரும், தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கும் குரங்குகள், கடல்வழியாகவே சென்றிருக்க வேண்டும். (Warmington 147, 148, 151) அலெக்ஸாண்ட ர் வெற்றிக்குப் பின்னர், சண்டைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட இந்திய யானை, பயரஸ் (Pyrrhus) என்பான், சில யானைகளைக் கி.மு. 28ல், ஐரோப்பாவிலிருந்து இத்தாலிக்கு இடமாற்றி அனுப்பப்பட்டபோது உரோமானியர்களுக்கு முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டது. கார்த்த கினியர்கள் (Carthaginiars) அவற்றை , ஆப்பிரிக்க யானைகளோடு பயன் கொண்டு அவ்விரு இனங்களையும் பழக்க, இந்திய யானைப் பாகர்களை நியமித்தனரா என்பதை, என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், கி.மு. 25ல் பனோர்மோஸ் (Panormos) எனும் இடத்தில் ஹாஸ்ட்ருபால் (Hastrubai) இந்தியர்களால் செலுத்தப்பட்ட யானைகளைப் பயன்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. உரோமப் பேரரசோடு நடத்திய இரண்டாம் புனிக் (Punic) போரில், ஹனிபால், ஹாஸ்ட்ருபால் (Hannibal, Hasdrubal) இருவரும் அதுவே செய்தனர். ரபியா (Rapia) எனுமிடத்தில் நடைபெற்ற போரில் தாலமியின் லிபியா நாட்டு விலங்குகள், ஆண்டியோ சொஸ் என்பானின் இந்தியப் படைகள் முன் நிற்க முடியவில்லை." (Warmington, Page 151)

இந்திய வேட்டை நாய்கள், வெளிநாட்டவரால், மிகுவிலைக்குரியவாக மதிக்கப்பட்டன. “ஹொரோ டோடஸ் கூற்றுப்படி, தம் காலத்தைச் சேர்ந்த பர்ஷியர், பாபிலோனியாவைச் சுற்றியிருந்த நான்கு பெரிய சிற்றூர்களின் வருவாய்களை, இந்திய வேட்டை நாய்களின் உணவிற்கு என்றே நிதிஒதுக்கம் செய்துவைத்தனர். பர்ஷியாவைச் சேர்ந்த இந்திய வேட்டை நாய்களும், அவைபோலும் வேறுநாய்களும், தாலமி, பிலடெல்பாஸ் வெற்றி ஊர்வலத்தில் காணப்பட்டதாக, திரு. ஸ்டெசியாஸ் (Ctesias) குறிப்பிடுகிறார். கொடிய கரடியோடு நடத்திய போராட்டத்தில், தன் தலைவனைக் காப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த 'டவ்ரான்' (Tawron) என்ற வேட்டைநாய் குறித்துப் பாடிய இரண்டு கையறு நிலைச் செய்யுள்கள் எழுதப்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நாணற்புல் தாளினாலான கையெழுத்துப்படி ஒன்றும் கிடைத்துள்ளது". (Warmington. Page : 149) தென் இந்திய வேட்டை நாய்கள், அவற்றின் முரட்டுத்தனத்திற்காகவே நன்கு தெரிந்திருந்தன. பொதுவாக அவை, "கதநாய்" (கடுஞ்சின நாய், விரைந்தோடும் நாய்) என்றே அழைக்கப்படும். அவை, சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும். அவ்வாறு நாய் கட்டப்பட்டிருக்கும் வீட்டினுள் எவரும் எளிதில் புக இயலாது. காவலில் அத்துணைக் கடுமையானது நாய், (தொடர் படு ஞமலி" புறம் : 743) தொடர் நாயாத்த துன்னரும் கடிநகர் (பெரும்பாணாற் றுப்படை -125) தாம் குறித்துச் சென்ற பகைவர்களைத் தப்பாது வெற்றி கொள்ளவல்ல வீரர்களுக்குத் தான் குறித்த விலங்குகளைத் தப்பாது கொள்ளும் வேட்டை நாயை உவமை கூறுமளவு தென்னாட்டு வேட்டை நாய்கள் : சிறந்தனவாக மதிக்கப்பட்டன. செல் நா அன்ன கடுவிறல் சுற்றமொடு கேளாமன்னா கடவுலம் புக்கு. (பெரும்பாண் - 139-140) கரடி வேட்டையில் வேட்டை நாய்கள் பயன்படுத்தப் படுதலை, "உயர்ந்த நாகமரங்கள் அடர்ந்து, கடந்து செல்வதற்கு அரிதாகி விட்ட கவர்த்த காட்டு வழியில், சிறிய கண்ணும் பெரிய சின்னமும் உடைய ஆண் பன்றி, சேற்றில் வீழ்ந்து புரண்டதனால் சேறு பூசப் பெற்ற முதுகில் புழுதியும் படிந்திருக்க அக்கோலத்தோடு விரைந்து ஓடி, சுருக்கவலை விரித்த பிளப்பில் வீழ்ந்து பட்டதாக, அது கண்ட அளவே, வேட்டை நாய்கள், கூட்டமாக விரைந்து, வலையை அழித்து, பன்றி மீது பாய்ந்து கொன்று கொண்ட இறைச்சி போக, எஞ்சிய இறைச்சியைக் கானவர் கொண்டு செல்வர்" என்ற நற்றிணை, விளக்கமாகக் கூறியுளது:

"போகிய நாகப் போக்கரும் கவலைச்
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒறுத்தல்
சேறாடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்பசிப் படீஇயர், மொய்த்த வன்பு அழீஇக்
கோணாய் கொண்ட கொள்ளைக்

கானவர் பெயர்க்கும் சிறுகுடி.
             - நற்றிணை : 82 : 6-11)

வேட்டுவர், காட்டில் வாழ்பவராகவும், விரைந்தோடும் மான் கூட்டத்தையும், துரத்தித் தொலைக்க - வல்ல விரைவினையுடைய கடுஞ்சின நாய்களை உடையவராகவும் கூறப்பட்டு உள்ளனர். "கானுறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன்'’ (புறநானூறு : 33 :1) "மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கத நாய். வேட்டுவன்". (புறம் : 205 : 8-9) வேட்டைக்குச் சென்ற தலைவன், வேட்டை முடிவுற்றதும், வேட்டை மேற்கொண்டு மூங்கிற்காட்டினுள் நுழைந்து பரவிக் கிடக்கும் தன் வேட்டுவத் துணைவர்களையும் - வேட்டை நாய்களையும், வேட்டை முடிவுற்றது, வாருங்கள் என அழைக்கும் குறிப்போடு கொம்பு எனும் ஊது கருவியை ஊதி ஒலி எழுப்புவன்:

முந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டுவிட்ட கிளிகள், மயில்களின் ஏற்றுமதி இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது. அதில் ஐயமில்லை, கிரேக்கர்களால் ‘அஸ்பிஸ்’ (Aspis) என அழைக்கப்படும் நாகப்பாம்புகள், மலைப்பாம்பு கள், உள்ளிட்ட பாம்புகள், ஏற்றுமதி செய்யப்பட்ட பிற உயிரினங்களாம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது அடி நீளம் பாம்பு ஒன்றை ஸ்ட்ராபோ எகிப்தில் பார்த்துள்ளார். (Warmington. Page : 157)

விலங்குதரு பொருள்கள்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிகமிக முக்கியமான பொருள்களுள் ஒன்று தந்தம். கிரேக்கர்கள், தங்கள் நாகரீகத்தின் முதிர்ந்த நிலையில், உருவச்சிலைகளில், ஆடையால் மறைக்கப்படாத புறத்தோற்றப் பகுதிகளுக்கு, அதைப் பயன்படுத்தினர். முத்துக்கள், முதன்முதலில், ஜூகுர்தன் (Jugurthine) போரின்போது, உரோமுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, பாம்பே (Pompey) என்பவரால், இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருங்குவியலால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளாக ஆக்கப்பட்டது. "தாலமிகளின் கருவூலங்கள், அகஸ்டஸால், திரும்பக் கொண்டுவரப்பட்டபோது, அப்பேரரசின் வீழ்ச்சியில், அவை, எல்லோர்க்கும் கிடைக்கும் எளிய பொருளாயின. முத்துக்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட சிசிரோவின் (Cicero) - காலத்தில், இன்றைய நாணயம் எட்டாயிரம் பவுன் மதிப்புள்ள ஒரு முத்து ஹெஸோப்னன் (AesopwS) மகனால், மெதெல்லா (Metelia) காதிலிருந்து கழற்றப்பட்டு, வறட்சிக் காலத்தில் ஒரு பெரும் பணத்தொகையை விழுங்கினோம் என்ற மனநிறைவு கொள்வான் வேண்டி, வேண்டுமென்றே திட்டமிட்டு விழுங்கப்பட்டது. (Warmington - Page : 163 168169) கிளியோபாட்ரா, தன் மதுவில், பருகுவதற்கு முன்னர், முத்துக்களைக் கரைப்பாள் என்பது நன்கு தெரிந்த ஒன்று. அரக்கு வண்ணம் ஊட்டப்பெற்ற பருத்திகள் பர்ஷியாவுக்கு அனுப்பப்பட்டன. தன்னுடைய காலத்தில் பாரசீக அரசனுக்கு, இந்தியர்களால் செவ்வண்டிலிருந்து பெற்ற ஒரு வண்ணக் கலவையால் வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல் அனுப்பப்பட்டதாக, ஸ்தேசியாஸ் (Ctesias) குறித்து வைத்துள்ளார் (Warmington Page : 178).

எகிப்திய ஆவணங்கள், பட்டைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பட்டு, தாரியஸ் (Dariws), ஜெர்ஸெஸ் (Xeroxes)களின் பேரரசின் மூலமாகவே, மத்திய தரைக்கடல் பகுதியை அடைந்தது. அதன் உற்பத்தி பற்றிய சரியான விளக்கத்தை அரிஸ்டாட்டில் கொடுத்துள்ளார். பட்டு தார்களில் சுற்றப்பட்டு, அரிஸ்டாட்டில் காலத்திற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்டது. டயரிலும் (Tyre) மற்ற இடங்களிலும், உடைகளாகத் தைக்கப்பட்ட நிலையில் பிளைனியின் கூற்றுப்படி, "ஒரு பெண்ணின் உடலை மூடும் அதே நிலையில், அவளுடைய இயற்கை அழகை வெளிப்படுத்தவல்லதான , உள்ளிருப்பதை வெளிக்காட்டும் மெல்லிய வலை நிகர் ஆடைகள் நெய்யப்பட்டன. (Schoff Perplus, Page: 264-265) கிரேக்க உரோமானிய எழுத்தாளர்களிடையே, பருத்திக்கும் பட்டுக்குமிடையே சிறிது கருத்துக்குழப்பம் இருந்தது. அவர்கள், அவ்விரண்டையுமே, "மரம் தரு விலங்குமயிர்", Treewool) என அழைத்துள்ளனர். மரவினம் தரும் பொருள்கள்

இந்திய ஆடைகள், பாலஸ்தீனியரால், பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதற்கிடையில், இந்தியப் பஞ்சு, அரசு நூற்பு ஆலைகளையும், சாயத் தொழிற்சாலைகளையும், பேரரசுகள், நிறுவியிருந்த ஒரு சில மதகுருக்களாலும் செயல்பட்டுவந்த, எகிப்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எகிப்தியர், பருத்தியையும், நார் இழைகளையும் ஒன்று கலந்து பருத்தி ஊடிழையாகவும், நார், பாவு இழையாகவும், கொண்ட ஆடைகளை நெய்தனர். இந்தியப் பஞ்சு, எகிப்தில், பல்வேறு புனிதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. பல்வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல்கள் பனோபிலிஸில் உள்ள (Panoplis) மெம்பிஸ் (Memphis) அருகே காணப்பட்டன. அந்நூல்களில் ஒருசில, அவற்றின் வடிவமைப்பில், இந்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன."(Warmington Page 212)

இலவங்கம், எகிப்திற்காக என்றே, சிறப்பாக ஒதுக்கப்பட்டது போலவே, மிளகு, பாபிலோனியா, பாரசீக வளைகுடா , வாணிகங்களில், வழக்கத்திற்கு மேலான தேவைப்படுபொருளாக இருந்தது. அதனுடைய விறுவிறுப்பான பெருந்தேவை, ‘தாரியஸ்'’ (Darius) ஆட்சியின் கீழ், பாரசீகப் பேரரசு விரிவடைந்தபோது ஏற்பட்டது எனக் கருதுவதற்குக் காரணம் உளது. இந்த வாணிகம், தென் இந்தியக் கப்பல்களில், கடல் வழியாக நடைபெற்றது. நில வழியாக அன்று, எதோப்பியரின் (Aethiopians) மேனி நிறத்தைப் பெரிதும் ஒத்த நிறம் வாய்ந்தவர். தெற்கில், பாரசீகத்திலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் குடிவாழ்பவர், தாரியஸாக்கு என்றும் பணியாதவர் என்ற அளவிலேயே ஹெரோடட்டஸ், (Herodotas) திராவிடர்களைப் பற்றி அறிந்துள்ளார், (Scoff’s Periplus . Page 213) பார்த்தியா (Parthia) வின் குறுக்காக நடைபெற்ற நில வாணிகமும், தாலமிகளால் ஊக்கம் ஊட்டப்பட்ட கடல் வாணிகமும், அறுதியிட்டுக் கூறமாட்டா. ஆண்டாண்டு காலமாக ஏற்கனவே, நடைபெற்றுவந்த இலவங்கம், மற்றும் மணப்பொருள்களின் வாணிகத்தின், பெருமளவிலான | பெருக்கிற்கு வழி செய்து விட்டன. உரோமுக்குத் தேவைப்படும் மிளகை, இக்கால கட்டத்தில், பொயினீஷியர்களும், கார்த்திகினியர்களும் வழங்கிவந்தனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், இந்திய மருத்தியல் - முறைகளைக் கையாண்டவருமான 'இப்போ கிராட்ஸ்' என்பார், மிளகை, "இந்திய நிவாரணி" என அழைக்கிறார். (Warmington. Page 182) அது, குளிர் காய்ச்ச லுக்கும், வெப்பக்காய்ச்சலுக்கும், பயன்படுத்தப்பட்டது. மக்கள், மரபுவழிப் பழக்க வழக்கம் குறித்த ஆராய்ச்சியில், 'ஹெரோடோடஸ்' (Herodotus) அவர் களுக்கு, இது பற்றிக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்றாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டில், 'தியோப் ரஸ்டஸ்' (Theophrastus) அதை ஒரு மருந்தாக அறிந்துள்ளார். டியோஸ் கோரிடஸ் (Dioscorides) கருப்பு, வெள்ளை, வால்மிளகுகளுக்கிடையிலான வேறுபாட்டை உணர்ந்துள்ளார். (Scoff's Periplus. Page 213) இஞ்சியும் மேலை நாடுகளை அடைந்து மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அது ஓர் இந்திய உற்பத்திப் பொருள் என்பதை, மேலைநாட்டவர் உணர்ந்து கொள்ளா வகையில், வெற்றிகரமாக மறைத்துவிட்ட அராபிய இடைத்தரகர்களால் கொண்டு செல்லப்பட்டது. (Warmington Page: 184) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், ஏன், அதற்கு முன்பேயும் எள்ளெண்ணெய், கிரேக்கர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. தாலமிகள் காலத்தில், அது மதிக்கத்தக்க முக்கியத்துவம் உடையதாகிவிட்டது. (Warmington Page : 206) கிரேக்கக் கோயில்களில் தேங்காய்கள், அதிசயக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன வாதலின், கிரேக்கத்திற்குத் தேங்காய்களும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. (Warmington Page : 217) ஸேபோக்கெல்ஸ் (Sophocells). அரிசி அடைகள் பற்றிப் பேசுகிறார். ஆகவே, கிரேக்கர், அரிசியையும், அதன் பெயரையும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றனர். பல்வேறு பயன் கருதி மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மித்ரிடேட்ஸ் மீது (Mithridates) கொண்ட வெற்றி குறித்து எடுத்த விழாவில் இந்தியக் கருங்காலி மரத்தைக் காட்சிப் பொருளாகக் காட்டினான் பாம்பே (Pompey). இந்தியக் கருங்காலி மரம் வாணிகம் நெடிது நிலை பெற்றிருந்த ஒன்று. இதுவும், மற்ற மரங்களும் பாரசீக வளைகுடாப் பகுதிக்கு, இந்திய வணிகர்களால், கொண்டு செல்லப்பட்டன. கருங்காலி, நாற்காலி, மேசை போலும் தட்டுமுட்டுப் பொருள் களுக்காகவும் உருவச்சிலைகளுக்காகவும் பயன்படுத்தப் பட்டது. இந்தியாவிலிருந்து, குறிப்பாக மலபார், கர்னாடகம், திருவாங்கூர் மற்றும் வேறு சில இடங்களிலிருந்து வந்த தேக்கு மரங்களைக் கொண்டு, பாரசீக வளைகுடாவில் ஆட்கள் கப்பல்கள் கட்டுவதை தியோப்ரஸ்டஸ் காட்டு கிறார். (Warmington Page 213-214) “மடரடா'’ (Madarata) என. அறியப்பட்ட, தைத்த படகுகள் என அழைக்கப்பட்ட, அராபியரின் படகுகள், தென்னை நாரினால், அதாவது தேங்காய் மட்டைகளிலிருந்து எடுத்த நாரினால் கட்டப்பட்டன. (Scor’s Periplus Page : 154) இக்கால கட்டத்தில் பல்வேறு வகையனவான இந்தியக் கற்கள், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்றாலும் இந்த வாணிகம்; அடுத்த கால கட்டத்திலேயே பெரிய அளவைப் பெற்றது.

அர்மினியாவில் ஓர் இந்திய வழிபாட்டு முறை

மேற்கு ஆசியாவுடனான இந்த வாணிகத்தின் ஒரு வியத்தகு விளைவு இங்கே விளக்கப்படும். அது, அர்மீனியாவில், ஓர் இந்திய வழிபாட்டு முறையின் நுழைவாகும். அர்மீனியாவைச் சேர்ந்த ‘அரஸ்சிடே” (Arsacide) மரபின் முதல் மன்னனாகிய, முதலாம் வளர்ஷக் (Valarshak) (கி.மு149. 127) காலத்தில், இரு இந்தியத் தலைவர்கள், இயூப்ரட்ஸ் ஆற்றின் மேற்குக் கரையில், வான் (Van) என்ற ஏரிக்குத் தெற்கில், ஒரு புதிய குடியிருப்பை நிறுவி, கிருஷ்ணன் பலதேவன் (அர்மீனிய மொழியில் முறையே கிசனி (Gisani), தெமெதெர் (Demeter) வழிபாட்டிற்காகக் கோயில்களைக் கட்டினர். இது வட இந்தியாவிலிருந்து வந்த, ஆரிய வழிபாட்டு முறையின் பெருக்காகுமா? மிக உறுதியாக இல்லை . கிருஷ்ண பலதேவர்கள், திருமாலின் அவதாரங் களாம் எனப் புராணங்கள் கூறினாலும், இவ்விரு கடவுள்களையும் ஒருசேர வழிபடும் தனிவழிபாட்டுமுறை, வட இந்தியாவில் எக்காலத்திலும் இருந்ததில்லை. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள், இதற்கான எண்ணற்ற அகச்சான்றுகளை அளிக்கின்றன. இவர்களில், முன்னவன் மாயோன் என்ற பெயரால், முல்லை நிலக்கடவுளாவன் கலப்பையைப் படைக்கலனாகவும், பனையைக் கொடியாகவும், கொண்ட, வெண்ணிறக் கடவுள் எனும் பொருளில் வாலியோன் அல்லது வெள்ளையோன் எனப்படும் பின்னவன் தொடக்கத்தில் உழவுத்தொழில் முதலில் தொடங்கப்பட்ட முல்லைக்கும், மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தின் கடவுளாவன். முன்னவன் கருப்பு வண்ணமும், பின்னவன், வெள்ளை வண்ணமும், தமிழ்ப் புவலர்களின் விருப்பத்திற்குரிய அணி நலங்களாம். கடலில் வளரும் வலம்புரிச் சங்கை ஒக்கும் நிறம் வாய்ந்த, கொலை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையும் உடையவன்" என்றும். "மாசு போகக் கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் நிறம் வாய்ந்த, வானுற உயர்ந்த கருடக்கொடி உடைய, என்றும் வெற்றியே விரும்புவோன்" என்றும், அவர்கள் முறையே பாராட்டப் பெற்றுள்ளனர்.

"கடல்வளர் புரிவனை புரையும் மேனி,
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி,
விண்உயர் புட்கொடி விறல் வெய் யோனும்."
                       புறநானூறு : 56:3-6

"பால் போலும் வெண்ணிறம் வாய்ந்தவன். பனைக் கொடியுடையான்" என்றும், "நீலமணியின் நிறம் வாய்ந்த திருமேனியுடையான்; ஆரியப் படையுடையான்" என்றும் அவர்கள் மேலும் பாராட்டப் பெற்றுள்ளனர்.

"பால் நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின் நேமி யோனம்"
                புறநானூறு : 58 : 14 - 15

இவ்விருவர்களின் மேனி நிறங்களுக்கிடையிலான மாறுபாடு, உவமை அணிகளாகப் பரவலாக ஆளப் பட்டுளது. எடுத்துக்காட்டுக்கு : ‘'மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் : வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி, (நற்றிணை : 32:7-2) இராமாவதாரம் தவிர்த்து , திருமாலின் அவதாரங்களில், வேறு எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களால் குறிப்பிடப்படவில்லையாதலின், இவ்விருவரும், தென் இந்தியாவில், திருமாலின் அவதாரங்களாக அறிமுகம் ஆனவரல்லர்). பலதேவன், எப்போதும் பனஞ்சாறு பருகி வெறிகொண்டு கிடப்பன். பனைமலிந்த பகுதியில், அவன் வளர்ச்சிக்கு அது பொருந்தும். பனை, கங்கை வெளியில் வளர்வதில்லையாகவே, பலதேவ வழிபாடு கங்கைக் கரையில் உருவாகியிருத்தல் இயலாது. கடலுக்கு வெகு தொலைவில் அல்லாத, தென்னாட்டு ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலேயே அவ்வழிபாட்டுமுறை தோன்றியிருக்க வேண்டும்.

பலதேவனுக்கு எனக் கட்டப்பட்ட கோயில்கள் வடநாட்டில் இருப்பதாக நாம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் அவனுக்கான கோயில்கள், கிருஷ்ணன் கோயிலை அடுத்தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

"வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்”
                 - சிலப்பதிகாரம் : 5 : 71 - 72

புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம்”
                 சிலப்பதிகாரம் : 9:10.

“பல தேவன் திருமாலின் படுக்கையாம் அரவின், மறு அவதாரம் என்ப. அவ்வரவு நாகர்களைத் தம்மோடு இரண்டறக் கொண்டு நாகராகிவிடவே, அதுவும் திருமால் வழிபாட்டு நெறியில் இடம் பெற்றுவிட்டது. இவை புகார் நகரத்துக் கோயில்கள், மதுரையில் "மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்” (சிலப்பதிகாரம் : 14 : 9) இவ்வெடுத்துக் காட்டுக்கள் எல்லாம், பிற்கால இலக்கியங்களிலிருந்தது என்றாலும், அக்கால கட்டத்திலும், வடநாட்டில் பலதேவனுக்குக் கோயில் இல்லை. இவ்வெள்ளைக் கடவுள், தெற்கில்தான் முதன்முதலில் எழுந்தான் என்ற முடிவிற்கு வலிவூட்டுகிறது. தமிழ்நாட்டின் சில சாதியரிடையே 'வெள்ளையன்", வெள்ளான்" என்ற பெயர்கள், இன்றும் பரவலாக இடம் பெற்றுள்ளன. வெள்ளைக் கடவுள் வழிபடப்பெற்று, அவன் பெயர், அவனை வழிபடுவார் மக்களுக்கு இடப்பட்ட காலம் தொட்டு வழக்கில் வந்திருக்க வேண்டும்.) இக்கோயில்களே அல்லாமல் கிருஷ்ணன், பலதேவன் ஆகிய இருவரின் தெய்வத் திருமேனிகள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும் கோயில்களும் உள. அத்தகைய கோயில்களுள் ஒன்றாகிய, மதுரைக்கு வெகு தொலைவில் இல்லாத திருமாலிருஞ் சோலைக்கோயில், பரிபாடலில், பதினைந்தாவது பாட்டில் மிக விரிவாக விளக்கப்பட்டுளது. அது, எடுத்துக்காட்டுவதற்கு இயலா, நெடும் பாட்டு, மேலும் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அப்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் பலதேவன் தெய்வத்திருமேனி, இப்போது காணாமல் போய்விட்டது. திருமால் வழிபாட்டாளரின் மதிப்பீட்டில், பலதேவன், குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட காலத்தில், அக்கோயில் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்டிருக்கக் கூடும். இன்றும் அழியாமல் இருக்கும் ஒருசில கோயில்களில், பலதேவன் திருமேனி, இன்றும் நிற்கிறது. அவை, பிற்காலச் சமய வெறியர்களின் அழிவிலிருந்து தப்பிவிட்டன போலும்.

அந்த இணைந்த வழிபாட்டு முறை, அர்மீனியாவுக்கு வடநாட்டிலிருந்து சென்றதா, தென்னாட்டிலிருந்து சென்றதா என்பது விடையிறுக்க முடியாத நிலை இருக்கும்போது, அது கொடிய வன்முறைச் செயல் ஒன்று மூலம் அழிவுற்றுப் போய்விட்டது. கிறித்துவச் சமயப் பிரசாரகர், முனிவர் கிரிகோரி என்பவர் (St. Gregory) கி. பி. நான்காவது நூற்றாண்டில், புறச்சமயத்திற்கு எதிரான தம்முடைய கொடிய வெறுப்பு காரணமாக, விஷப் (Vishap) எனும் இடத்திலிருந்த இந்தியர் குடியிருப்பிற்கு எதிராகக் கிறித்துவப் பெருங்கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் சென்றார். அதன் விளைவாக நிகழ்ந்த சண்டையில், தலைமை அர்ச்சகர்கள் வெட்டித் தள்ளப்பட்டனர். தெய்வத் திருமேனிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. கோயில்கள் - இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவை நின்ற இடங்களில் மாதா கோயில்கள், கட்டப்பட்டு, சிலுவைகள் நிறுவப்பட்டன. ஆங்குக் குடிவாழ்ந்தவர்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டனர். தம் சமயக் கோட்பாட்டைக் கைவிடாமல் விடாப்பிடியாக இருந்த அர்ச்சகர்களின் மக்கள் நானூற்று முப்பத்தெட்டுப் பேரும், கோயில் பணியாளர்களும், மொட்டை அடிக்கப் பட்டு, தொலைநாடுகளுக்குத் துரத்தப்பட்டு விட்டனர். (J. R. A. S. 1904; Page : 309 - 314. Kennedy)

தூரக்கிழக்கு நாடுகள் உடனான தென்னிந்தியக் கடல் வாணிகம், இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவரும் மக்கள் குடி பெயர்ச்சியின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. படைத்துணைத்தலைவர், திருவாளர் கெரினி (Gerine) அவர்கள், கிறித்துவ ஆண்டு தொடக்கத்திற்குப் பல், நூற்றாண்டுகளுக்கு முன்பே, வட இந்தியாவிலிருந்தும், தென் இந்தியாவிலிருந்தும், வணிகர்களும் புதிது காணும் உள்ளஆர்வம் மிக்கவர்களுமான இப்பெரும் வெள்ளம், இந்தோ சீனாவுள் பாயத் தொடங்கி, நிலவழியாக, வர்மா மூலம், அத்தீவகற்பத்தின் வடபகுதியையும், கடல்வழியாக, அதன் தென் கடற்பகுதியையும் அடைந்து, ஆங்கே, தங்கள் குடியிருப்புகளையும், வணிகநிலையங்களையும் நிறுவின” என்று கூறியுள்ளார். [J. R. A. S. 1904. p. 234 - 37) பழைய இந்தியர்களின் இந்நடமாட்டம் குறித்த விரிவான விளக்கத்திற்கு, மேலே கூறியதைக் காண்க.) பிராமணர்களும் பௌத்தர்களுமாகிய ஆரியர், பண்டைய இந்திய நாகரீகத்தையும், தமிழர், வாணிகத்தையும் இங்குக் கொண்டு சென்றனர். சுவர்ண பூமியின் எல்லைக்கு அப்பால், பண்டைக்காலத்தில் பெரிய வணிக மையமாக விளங்கிய மார்தான் (Martaban) எனும் இடத்திற்கு அணித்தாகத், "தக்கோலம்' என்ற இடத்தை , மிலிந்தா பன்ஹ (Milindapanha) குறிப்பிடுகிறது. அவ்விடத்தின் பெயர், சென்னைக்கு அணித்தாக, கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஒரு பெரிய போர் , நடைபெற்ற தக்கோலம் என்ற ஊரின் பெயரை நினைவூட்டுவதாக உளது.

சீனாவின் ஆன் மரபுப் பேரரசர் (Han Emperor) ஹுதி (Woti) என்பான், இன்றைய துருக்கர்களின் முன்னோர்களாகிய ஹியுங்-நு (Hiung - Nu) என்பாரைக் கோபி (Gobi) பாலைவனத்திற்கு அப்பால் துரத்திவிட்டான். அதன்பின்னர், ஐரோப்பாவுடனான சீனப் பட்டுவாணிகம், பெரிய அளவினை எட்டிவிட்டது. இவ்வாணிகம் மேற்கொண்ட வழிகளில் ஒன்று, சூயஸ் வளைகுடாவிலிருந்து வந்த யவனவணிகர்கள், சீனப்பட்டைத் தமிழ் இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும், தமிழ்நாட்டுக் கடற்கரையை ஒட்டிய வழியாம். பர்மா, மலேயா, சீனக் கடற்கரை நாடுகளுடனான கடல் வாணிகம், இக்கால கட்டத்தில் வளர்ந்து பெருகிற்று. "கிழக்கிற்கு அனுப்பப்பட்ட மிக முக்கியமான பண்டம், மிளகு. மிளகு குறித்த தொடர்ந்த தேவை, உரோமில் எழுவதற்கு முன்பே, சீனாவில் இடங்கொண்டிருந்தது என்பது ஊகிக்கக் கூடியதே. மலபார் கடற்கரைக்குக், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஏன், அதற்கும் முன்பாக, 'ஜங்' (Jwnk) எனப்படும் தட்டையான அடிப்பாகம் உடைய சீனக் கப்பல்கள் சென்றுவந்ததற்கு இதுவும் ஒரு காரணம். (Scoff's Periplus. Page 213-14) தூரக்கிழக்கிற்கு, மிளகு மட்டுமல்லாமல் நறுமணப் புகைதரு பொருள்களும் அனுப்பப்பட்டு, பட்டிற்கும், சர்க்கரைக்குமாக, கைமாறப்பட்டன.