இருண்ட வீடு/அத்தியாயம்-1

விக்கிமூலம் இலிருந்து


இருண்ட வீடு

1

தலைவியின் தூக்கம், பால் கறப்பவன் தவறு, தலைவனின் சோம்பல்.

கடலின் மீது கதிரவன் தோன்றிப்,
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்.
விழிதிறந்து மங்கை மீண்டும் துயின்றாள்.



அப்பொழுது மணியும் ஆறரை ஆனதால்
எப்பொழு தும்போல் இரிசன் என்ற
மாடு கறப்பவன் வந்து கறந்து
பாலொடு செம்பை, மூலையில் கட்டிய
உறியில் வைக்காது - உரலின் அண்டையில்
வைத்துப் போனான். மங்கையின் கணவனோ
சொத்தைப் பல்லைச் சுரண்டிய படியே
சாய்வுநாற் காலியில் சாய்ந் திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-1&oldid=1534742" இலிருந்து மீள்விக்கப்பட்டது