இருண்ட வீடு/அத்தியாயம்-2

விக்கிமூலம் இலிருந்து


2

குழந்தையின் அழுகை, பையனின் பொய், தந்தையின் போக்கு


தாயோ துயில்வதால் தனிமை பொறாமல்
நோயுடன் குழந்தை நூறு தடவை
அம்மா என்றும் அப்பா என்றும்
கம்மிய தொண்டையால் கத்திக் கிடந்தது!



பெரிய பையன் பிட்டையும் வடையையும்
கருதி, முதலில் கையால் சாம்பலைத்
தொட்டுப் பல்லையும் தொட்டே, உரலின்
அருகில் இருந்த பால் செம்பை விரைவில்
தூக்கி, முகத்தைச் சுருக்காய்க் சழுவினான்;
பாக்கி இருப்பது பால்என் றறிந்து
கடிது சென்றே "இடையன் இப்படிச்
செம்பின் பாலைச் சிந்தினான்" என்று
நம்பும் படியே நவின்றான் தந்தைபால்!
தந்தையார் "நாளைக் கந்த இடையன்
வந்தால் உதைப்பதாய்" வாய்மலர்ந் தருளினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-2&oldid=1534743" இலிருந்து மீள்விக்கப்பட்டது