உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 1

விக்கிமூலம் இலிருந்து

இல்லம்தோறும் இதயங்கள்…

1
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது அவர்களை வரவேற்பதற்காகவோ அல்லது வருவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதாலோ வந்தவர்களாய், தூத்துக்குடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமா என்று ஒரு பட்டி மண்டபமே நடத்தலாம். பட்டி தொட்டி பதினாறுக்கும் ‘டவுன் சக்கரவர்த்தியான’ தூத்துக்குடி நகருக்குள் பிரவேசித்த அந்த எக்ஸ்பிரஸ்—மணியாச்சியில் இருந்து ‘மீளவிட்டான்’ ஊர்வரைக்கும், கட்டை வண்டிபோல் வந்த அந்த நெட்டை ரயில், இடையே முந்நூறு கிலோமீட்டர் இருப்பதுபோலவும், அதை மூன்று நிமிடங்களில் கடக்க வேண்டும் என்பதுபோல ‘டகா டகா’ சத்தத்துடன், தலைவிரி கோலமாக வந்து நின்றது.

ரயில் நின்றாலும், அதன் ஊளை நிற்கவில்லை. ‘விருந்தாளிகளைக் கொண்டு வந்திருக்கேன். நீங்க என்ன பாடெல்லாம் படப்போறீகளோ’ என்று உள்ளூர் உறவுக்காரர்களைப் பார்த்து விசாரிப்பதுபோல் இருந்தது அந்த ஊளை.

பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர், கண்களைப் பேயாய் அலையவிட்டு,  ரயில் பெட்டிக்குள் இருப்பவர்களைப் பார்ப்பதைவிட, இடிபடாமல் தப்பிப்பதையே பெரிய காரியமாக நினைத்தவர்கள் போல், நகர்ந்து நகர்ந்து தேடினார்கள். ரயில் பெட்டிகளுக்குள் இருந்தவர்களில் சிலர், குளிக்காமலே 'டிரஸ்' செய்துகொண்டார்கள். சில இளம் பெண்கள், அப்போதுதான் நிதானமாகப் பவுடர் போட்டார்கள். சில நடுத்தர வயதுப் பெண்கள், தங்கள் கழுத்துக்களை தற்செயலாகத் தடவுவதுபோல் தடவி, யாருக்கும் தெரியாமல், 'அஞ்ஞான வாசம்' செய்த நகைகளை எடுத்து, மேலே போட்டுத் தெரியப்படுத்திக் கொண்டார்கள். சில குழந்தைகள், அப்போதுதான், "ஒண்ணுக்கு ஒண்ணுக்கு" என்று அழுதன. வாசல் என்று நினைத்து, பாத்ரூமிற்குள் போன பாட்டிகளில் சிலர், இடறித் தடுமாறி, எனக்கு வழி பண்ணுங்க... வழி பண்ணுங்க... எனக்கு வழி விடுங்க டாப்பா. பாவிப்பய மவனுகளே... வழி விடுங்கடாப்பா..." என்று நெருக்கடியின் அடர்த்திக்கு ஏற்றபடி, குரலில் கடுமையைச் சேர்த்துக்கொண்டே கத்தினர்.

சில ரயில் காதலர்கள்-பேசக்கூடிய அளவுக்குப் பழகாமலும், பிரியக்கூடிய அளவுக்குக் கண்பார்வைப் பரிவர்த்தனையை, தடுக்காமலும் இருந்த அந்த இளைய தலைமுறையின் எரிகொள்ளிகள், வண்டியில் இருந்து இறங்க மனமில்லாமலே இறங்கிக் கொண்டிருந்தனர். அது 'ரிசர்வ்’ செய்யப்பட்ட கம்பார்ட்மென்ட் என்றாலும், மணியாச்சியில் ரயில் படுத்துக் கிடந்தபோது, மளமள வென்று ஏறிய வாடிக்கைகாரர்கள், இப்போது மளமள வென்று இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த அமளிக்குப் பங்காளியாகாதவள்போல், மணிமேகலை மட்டும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு கையை ஜன்னல் விளிம்பில் ஊன்றி, அல்லிப் பூ மாதிரி குவிந்த கையில் மோவாயை ஊன்றிக்கொண்டு, தம்பி வருகிறானா என்று கண்களை சுழல விட்டும், படரவிட்டும், சிதறவிட்டும், உடம்பை நெளிக்காமலும், முகத்தைச் சுளிக்காமலும் தேடிக்கொண்டிருந்தாள். தம்பியைக் காணவில்லை. தெரிந்தவர் ஒருவர், அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார், உள்ளுர்க்காரர்.

“மாமா. ஒங்களத்தான் மாமா...”

“அடடே... மணிமேகலையா? எப்பம்மா வந்த?”

“அப்பாவுக்கு எப்படி மாமா இருக்கு?”

“அதை ஏன் கேக்குற? சாப்பாடு இறங்க மாட்டக்கு. மூணு மாசமா படுத்த படுக்கை... பெரிய வாதை. பிராணனும் போக மாட்டக்கு.”

“மாமா, நீங்க என்ன சொல்றீங்க?”

“பெத்த மகள்மாதிரி உன்கிட்ட சொல்லுதேன். அப்பா செத்தாக்கூட தேவலன்னு எனக்கு நெனப்பு வருது. என் வீட்டுக்காரியா... அவர படாதபாடு படுத்துறாள். அவருக்கும் ஒத்துப் போகத் தெரியல.”

மணிமேகலை புரிந்துகொண்டாள். அவர், அவரது அப்பாவைப் பற்றி பேசுகிறார். அவரவர் அப்பா, அவரவருக்கு உசத்திதானே! நயமான நாகரிகத்தைக் கருதியும், இயல்பான தாய்மையாலும், மணிமேகலை, அவரிடம் மேற்கொண்டு பேசினாள்.

“தாத்தாவை நல்லா கவனியுங்க மாமா. நாம குழந்தையா இருக்கையில, எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்திருப்பாங்க? குழந்தைங்க, பெரியவங்களா ஆகும்போது, பெரியவங்க குழந்தையா மாறிடறதும், குழந்தைமாதிரி பிடிவாதம் பிடிக்கதும் இயற்கை. அவங்க நம்மகிட்ட எப்படி ஒத்துப் போனாங்களோ, அதுமாதிரி நாம இப்போ அவங்ககிட்ட ஒத்துப் போகணும்.”

“நீ மவராசியா இருக்கணும். நீ இந்த ஊர்ல இருந்து எப்போ போனீயோ, அதுல இருந்தே ஊருல களை இல்ல. இப்ப இருக்கது எல்லாம் துப்புக்கெட்ட முண்டங்க!”

“எங்க அப்பாவுக்கு எப்படி இருக்கு மாமா?”

“அவருக்கென்ன? நல்லாத்தான் இருக்காரு. இப்ப காலையிலகூட வாழத் தோப்புல பாத்தேனே! நாங்கெல்லாம் பழய காலத்து உடம்புமா. அடிச்சி கொன்னாக் கூட ஆறுமாசம் ஆவும்.”

“தம்பி சீரியஸ்ஸுன்னு லட்டர் போட்டுருந்தான்.”

“மாமாவுக்குத் தெரியாம சீரியஸா ஆயிடுமா? கல்லு மாதிரி இருக்காரு. காலையிலகூட என்னப் பாத்து ‘ஒட்டப் பந்தயத்துக்கு வாரீயாடா மாப்பிள்ளன்னு’ கேட்டாரு. ஒன் வீட்டுக்காரன் செளக்கியமா? ஒன் மவனயும் கூட்டிக்கிட்டு வந்திருக்கியா? டேய், பேரா... தாத்தாகிட்ட வாடா! சரிம்மா, மெட்ராஸ்ல இருந்து என் மயினி மவன் வாரதா எழுதியிருந்தான்... அவனப் பாத்துட்டு ஒரு நொடியில வந்துடுறேன். இங்கேயே இரு. மாமா வந்து பெட்டி படுக்கைய இறக்கி வைக்கேன்.”

பேசியவர் போய்விட்டார். மணிமேகலை மீண்டும் கை ஊன்றி, ஊன்றிய கையில் மோவாயை புதைத்து, பிளாட்பாரத்தைப் பார்த்தாள். அவள் மூன்று வயதுப் பையன், அம்மாவின் முகத்தோடு முகத்தை உரசிக் கொண்டு "ரயில் ஏம்மா புறப்படல?" என்று அவள் காதுக்குள் ஊதுவதுபோல் பேசினான். மேலே, பெர்த்தில் கிடந்த சூட்கேஸ், பிளாஸ்டிக் கூடை, ஒரு கோணிப் பார்ஸல் முதலியவற்றை இறக்கமுடியாமல் இறக்கி, பிறகு அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கி இருக்கையில் வைத்த ஒரு இளம்பெண், மணிமேகலையின் தோளை செல்லமாகத் தட்டிக்கொண்டே “ஒங்களத்தான்... என் பேரு

 சு. சமுத்திரம் + 9


பாமா... எஞ்ஜினியர் ஜெயராஜோட சிஸ்டர்..." என்றாள். மணிமேகலை அவளைப் பார்க்காமலும், வெளியே விட்டிருந்த கண்களை எடுக்காமலும் "கொஞ்ச நேரம் சும்மா இரு" என்றபோது, வாயைச் சும்மா வைத்திருக்காத பாமா “ஊருக்கு வந்ததுல என்னை மறந்திட்டிங்களோன்னு ஞாபகப்படுத்துனேன்" என்று சொன்னாள். உடனே மணிமேகலை, தன் கண்களைக் கட்டாயப்படுத்தி, அவளைப் பார்க்க வைத்துக்கொண்டு 'அவனைக் காணுமே...' என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஜன்னலுக்கு வெளியே தலையை விட்டாள். பாமாவால் சும்மா இருக்க முடியவில்லை, ஜன்னலுக்குள் தலையை விட இடமும் இல்லை.

  "நான் வெளில போய் அவரைப் பார்க்கேன்.”
  "நீ அவனை முன்ன பின்ன பார்த்தது கிடையாதே?”
  "அதுக்கென்ன... உங்க ஊரு ஆட்கள்தான் தனியாத் தெரியுமே!"
  பாமா, ரயில் பெட்டியின் வாசலுக்கருகே வந்து, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வருவோர் போவோரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, ஒரளவு கறுப்பான கவர்ச்சியுடனும், கிருதா முடியுடனும் ஒவ்வொரு பெட்டியையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டுவந்த ஒரு வாலிபனைப் பார்த்து, "நீங்கதானே மிஸ்டர், சந்திரன்?" என்றாள். அவளை, 'எக்ஸ்ரே' கண்களுடன் பார்த்த அவன், பல பத்திரிகைகளைப் படிக்கும் அவன், அவள் பேச்சு நாகரிகமான மோசடிக்கு முதலீடாக இருக்கும் என்று நினைத்தவன்போல், தன் சட்டைப் பையைப் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டே “நீங்க யாரு" என்றான். அதட்டலுடனும், அதே சமயம் அந்த அதட்டல் அவளுக்கு தெரியக்கூடாது என்ற ஆதங்கத் துடனும், பாமா, அவனை மேற்கொண்டும் அடையாளப் 10 இல்லம்தோறும் இதயங்கள்

படுத்தும் வகையில் பேசாமல், அவனை அடையாளம் கண்டுகொண்டவள் போல், "ஒங்க அக்கா உள்ளே இருக்காங்க" என்று சொல்லி வாயை மூடும் முன்னாலே, சந்திரன், அவள் வழிவிடுவது வரைக்கும்கூட காத்திருக்காமல், மண் லாரிபோல ரயில் பெட்டிக்குள் ஏறினான். பாமா, பல்லவன் பஸ்ஸுக்கு வழிவிடும் ஆட்டோரிக்ஷா போல, அங்குமிங்குமாக ஆடி, தன்னை 'பேலன்ஸ்' செய்து கொண்டிருந்தபோது, சந்திரன் மணிமேகலைக்கருகே வந்து, மருமகப் பையனைத் துரக்கி வைத்துக்கொண்டு "பிரயாணம் எல்லாம் எப்படிக்கா? அந்தப் பொண்ணு யாருக்கா?" என்றான். கடைசி வார்த்தையைச் சொல்லும் போது, கொஞ்சம் படபடப்பையும் காட்டினான். மணிமேகலையும், படபடப்புடன் பதிலளித்தாள்.

 "அப்பாவுக்கு எப்படிடா இருக்கு?”
 "நல்லா இருக்காரு. அந்தப் பொண்ணு யாருக்கா?"
 "அந்தப் பொண்ணுன்னு சொல்லாதிங்க. இந்தப் பொண்ணுன்னு கேளுங்க. ஏன்னா, நான் இப்போ, அங்க இருந்து இங்க வந்துட்டேன்."
  சந்திரன், பாமாவை தர்மசங்கடமாகப் பார்த்தபோது, மணிமேகலை பொறிந்தாள்.'
  "ஏண்டா, அப்பாவுக்கு எப்படி இருக்குன்னு கேக்குறேன். நீ பொண்ணு விவகாரத்தை கேக்குற."
  "மோசமா இருந்தால் சொல்லியிருக்க மாட்டேனா?”
  "நல்லா சாப்புடுறாரா?”
  "நிறையா..."
   "அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்துதா?”
    "வரல." "ஒனக்கு மூளை இருக்காடா? 'அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் பழையபடியும் வந்திருக்கு... ஒன்னை பார்க்கிறதுக்கு தவியாய் தவிக்கிறார்... துடியாய் துடிக்கிறார்'னு எழுதிட்டு... இப்போ அலட்சியமாய் பதில் சொல்றியே. நியாயமாடா? இப்படியாடா பொய் சொல்லி எழுதறது?"

"லேசா நெஞ்சு வலிக்குன்னார். உடனே எழுதினேன். லட்டர் எழுதி முடிச்சதும், வலிக்கலன்னார். நான்தான், இருபது பைசாவுக்கு வாங்குன லட்டரை கிழிக்க மனசில்லாம அனுப்பிட்டேன்."

"அதுக்காக இப்படியாடா எழுதறது ? ஹார்ட் அட்டாக்... தவியாய் தவிக்கிறார்... துடியாய் துடிக்கிறார்... என்னடா இதுல்லாம்? இன்னும் ஒனக்கு விளையாட்டுப் புத்தி போகல. தப்புத் தப்பா லட்டர் எழுதறது தப்புடா."

"கொஞ்சந்தான் தப்புத்தப்பா எழுதினேன். ஆனால் அப்பா உன்னைப் பார்க்கணுமுன்னு தவியாய் தவிச்சது வாஸ்தவம். துடியாய் துடிக்கல. உன்னைப் பார்க்கணுமுன்னு துடியாய் துடிச்சது நான்தான். அப்படி லட்டர் எழுதாட்டால் நீ வருவியா என்ன? நீதான் என்னை மறந்துட்ட, எத்தனையோ விஷயங்களை சொல்லித் தந்த நீ, ஒன்னை மறக்கறதுக்கும் ஒண்ணு சொல்லிட்டுப் போ."

மணிமேகலை தம்பியையே பார்த்தாள். முக்கோணம் போல் மடித்து வைத்திருந்த அவன் கைக்குள் அடைக்கலமாய் இருந்த தன் குழந்தையும், தம்பியும் ஒரே அச்சாக இருப்பதைக் கவனித்தாள். தம்பியின் தலை முடியை கோதிவிட்டுக் கொண்டே "அக்காமேல அவ்வளவு பாசம்! அதனாலதான் லட்டர்மேல லட்டர் போட்டும் அரக் கோணத்துக்கு வந்துட்ட பாரு” என்றாள். பொறுமைக்குப் பெயர் போகாத பாமா. "சரி சரி! எல்லாத்தையும் இறக்கி வைக்கலாம். நீங்க பேசுறதைப் பார்த்தால், நாம ஷண்டிங் 12 * இல்லம்தோறும் இதயங்கள்


பிளேஸ்ல போய்தான் இறங்க வேண்டியதிருக்கும்" எனறாள்.

  சந்திரன் எல்லாப் பொருட்களையும் எடுத்து வாசலில் வைக்க, கீழே இறங்கிய பாமா, அவற்றை ஒவ்வொன்றாக வாங்கி, கீழே வைத்தாள். அவன் கை, அப்படி வாங்குகையில் தற்செயலாக தன்மீது பட்டபோது அவள் லேசாக ஒதுங்கிக்கொண்டே வாங்கினாள்-லேசாகத்தான்.
  போர்ட்டரிடம், கொண்டு வந்தவைகளை ஏற்றிவிட்டு, மணிமேகலை, மீண்டும் தம்பியைச் சாடினாள்.
  "என்னடா... இன்னைக்காவது, காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாதா? எவ்வளவு நேரமாடா தேடுறது?"
  "நீ பஸ்ட் கிளாஸ்ல வருவேன்னு ஒவ்வொரு முதல் வகுப்புப் பெட்டியையும் பார்த்தேன். முன்னால நாலு கோச், பின்னால நாலு கோச். இந்த ரயிலை, இரண்டு தடவை அளந்தாச்சு. நீ என்னடான்னா, தேர்ட் கிளாஸ்ல வார!”
  "நானும், நீ பஸ்ட் கிளாஸ்ல வருவேன்னு நினைச்சேன். கடைசில, தேர்ட் கிளாஸ்லகூட வரல."
  "என்னக்கா நீ? இப்பகூடவா பரிட்சையை ஞாபகப்படுத்தனும்? அதுவும்.”
  "கோபப்படாதடா... இவள் மூணாவது மனுவியல்ல! நான் ஒங்கிட்ட சொன்னேன் பாரு, பாமா, அது இவதான்! இவளும் ஒனக்கு இளைச்சவள் இல்ல. நீயாவது பரிட்சை எழுதி கோட்டடிச்சே. இவள் பரிட்சையே எழுதல. அவ்வளவு பயம்."
  "பொய் சொல்லாதிங்க அண்ணி. இந்தா பாருங்க, அண்ணி சொல்றத நம்பாதிங்க. எக்ஸாம் சமயத்துல 
                                          சு. சமுத்திரம் + 13

எனக்கு டய்பாய்டு வந்தது. அப்போதுகூட நான் பரிட்சை எழுதணுமுன்னேன். அண்ணிதான் 'உடம்புக்கு பரிட்சை வைக்கப்படாதும்மா... டய்பாய்டு திரும்பி வந்தால் தடபுடலா வருமுன்'னு சொல்லி தடுத்திட்டாங்க. இப்போ நினைச்சாக்கூட எனக்கு அழுகையா வருது."

  சந்திரன், அவளை அனுதாபத்துடன் பார்த்தபோது, மணிமேகலை "என்னடா அப்படிப் பார்க்கிற? நமக்கும் இப்படி ஒரு சாக்குக் கிடைக்கலியேன்னு பார்க்கிறியா?” எனறாள்.
  மூவரும், போர்ட்டர் முன்னால் நடக்க, பின்னால் நடந்தார்கள். திடீரென்று ரெயில் நிலையத்தின் நுழை வாயிலில் நின்ற மணிமேகலை, அந்த ரயிலையே கண் கொட்டாது பார்த்தாள். சந்திரன், அவள் மெளனத்தைக் கலைத்தான்.
  "என்னக்கா... கூட்ஸ் வண்டிமாதிரி நிற்கிற?"
  "டேய், இந்த ரயிலைப் பார்த்ததும் எனக்குப் பழைய ஞாபகம் வருதுடா. நாம் ரெண்டுபேரும் அப்புறம் காமாட்சி, வெங்கடேசன் எல்லாருமே சின்னப்பிள்ளையாய் இருக்கையில ரயில் விளையாட்டு விளையாடுவோம். ஒருநாளு ஒனக்கும் எனக்கும் யாரு ரயில் எஞ்ஜினாய் இருக்கதுன்னு சண்டை. நான்தான் எஞ்ஜினுன்னு, சொன்னேன். நீயோ, நான்தான்னு சொன்னே. உடனே நாம ரெண்டுபேரும் வெங்கடேசன்கிட்டே சொன்னோம். உடனே அவரு, 'நீங்க ரெண்டு பேருமே எஞ்சினா இருக்க முடியாது. எஞ்சின் கறுப்பாய் இருக்காது. அதனால, கறுப்பா இருக்கற நான்தான் எஞ்சினா இருப்பேன்'னு சொன்னாரு. ஞாபகம் இருக்காடா ? வெங்கடேசன் எப்படிடா இருக்காரு?"
  "ஏதோ இருக்கார்." 14  +  இல்லம்தோறும் இதயங்கள்
  "என்னை விசாரிப்பாராடா?” என்று கேட்கப்போன வார்த்தைகளை அவள் அடக்கிக் கொண்டாள். சந்திரன் அக்காவின் கவலையை உணரவில்லை. அவனுக்கும் ஒரு கவலை இருந்ததே காரணம். அதைப் பேச்சில் காட்டினான்.
  "எக்கா! இவங்க வாரதைப் பற்றி நீ லட்டர்ல எழுதலியே?”
  "இவள் கடைசி வரைக்கும் வரமாட்டேன்னு சொன்னாள். 'ஒங்க ஊரு பட்டிக்காடா இருக்கும். மாட்டேன்"ன்னாள். நான்தான், 'ஒனக்கும் ஊர்ல ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாமலா போயிடும்... வாம்மா வா'ன்னு வலுக்கட்டாயமாய் கூட்டி வந்திருக்கேன். எப்போ ஊருக்குப் போகனுமுன்னு என்னையும் இழுக்கப் போறாளோ தெரியல?”
  பாமா சிரித்துக்கொண்டே, சந்திரனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள். மணிமேகலை, ஒரு டாக்ஸியைக் கையைக் காட்டியபோது ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர், தன் வண்டி மாதிரியே அலறிக்கொண்டு சந்திரன் முன்னால் வந்து, முதுகை வளைத்தார்.
  "சாமீ... என்னை இருக்கச் சொல்லிட்டு, டாக்ஸில ஏறினால் நியாயமா? ஒங்க சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கிடைச்ச சவாரியையும் விட்டுட்டு நிக்கிறேன்."
  "நான் என்னப்பா செய்றது ? அக்கா மட்டும் வருவாங்கன்னு உன்னை நிற்கச் சொன்னேன். இப்போ இவங்களும் வந்திருக்காங்க. இந்தா ரெண்டு ரூபாய்."
  "ஒங்களால முப்பது ரூபாய் சவாரி போயிட்டு.”
  "என்னய்யா பஞ்சப்பாட்டு பாடுற? எத்தன நாளு உன் ஆட்டோவுல வந்திருக்கேன்?"                                        
                                              சு. சமுத்திரம்  * 15

  பேச்சு வார்த்தையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மணிமேகலை, தலையில் பளுவோடு இருந்த போர்ட்டரை, அந்த ஆட்டோ ரிக்ஷாவில் வைக்கும்படி சைகை செய்துவிட்டு "நீ செய்தது தப்புடா! பாவம் அவரு! நமக்காகக் காத்திருந்தவர விடுறது தப்புடா... எத்தனையோ நாளு அவரு ஆட்டோவுல போனதால, இன்னைக்கு அவர் பிழப்பு கெடணுமா என்ன ? எத்தனையோ நாளு சாப்பிட்டுவிட்டு இன்னைக்கு சாப்பிடாட்டால் வயிறு கேக்குமா? நீ பஸ்ல வந்துடு. நானும் பாமாவும் இதுல போறோம்" என்றாள்.
  மணிமேகலையும், பாமாவும் ஆட்டோவில் ஏறினார்கள். உடனே டிரைவர் "நீங்களும் ஏறிக்கிடுங்க... காட்டுப் பாதையில கான்ஸ்டபிள் நிக்க மாட்டான்" என்றார். சந்திரன் தயங்கியபோது, மணிமேகலை "சும்மா ஏறிக் கடா..” என்றாள். உடனே அவன், அவசரத்தில் எந்தப் பக்கம் உட்காருவது என்று தெரியாமல், பாமாவின் பக்கமாகப் போனபோது, "அதுக்கு நாளும் நட்சத்திரமும் பொருந்தி வரணும்டா, இப்போதைக்கு நீ என் பக்கத்துலேயே உட்காரு” என்றாள் மணிமேகலை சிரித்துக்கொண்டே.
  "சே! ஒரே இட நெருக்கடி நான் வேணுமுன்னால் இந்த ரயிலுலேயே ஏறி மெட்ராஸ் போயிடட்டுமா ?” என்று சொல்லி பாமா 'விட்' அடித்தபோது, அந்த ‘விட்டை சீரியஸாக எடுத்துக்கொண்டோ அல்லது நிஜமான நெருக்கடி தாளமுடியாமலோ, சந்திரன் இறங்கி, டிரைவர் இருக்கையில் காலியாக இருந்த அணுப் பிளேசுக்குள் ஒடுங்கிக் கொண்டான். 'சே... இந்த மனுஷனுக்கு சென்ஸ் ஆப் ஹல்மர் இல்லையே...' என்று பாமா, தனக்குள்ளேயே முனங்கினாள். அதேசமயம் அவன் திண்டாடிக் கொண்டே உட்காருவதைப் பார்க்க, அவளுக்குக் கொண்டாட்டமாகவும் இருந்தது. 

16 + இல்லம்தோறும் இதயங்கள்


  ஆட்டோரிக்ஷா, அவர்களை ஏற்ற வந்த டாக்ஸியைக் கடந்துகொண்டு சென்றது. பாமாவுக்கு ஒரே ஆச்சரியம். அண்ணிக்காரி நியாயத்தைக் கருதி ஆட்டோவில் அமர்ந்ததில் அவளுக்கு ஆச்சரியமில்லை. அவள், அப்படிச் செய்யவில்லையானால்தான் ஆச்சரியம். ஆனால் இந்த டாக்ஸி டிரைவர், தனக்குக் கிடைக்கவிருந்த 'கிராக்கி' பறிமுதல் செய்யப்பட்டாலும், ஆட்டோ டிரைவரை சிநேகித பாவத்துடன் பார்ப்பதைக் கண்டுதான் ஆச்சரியப்பட்டாள். ஒ... இவரு மெட்ராஸ் டிரைவர் இல்ல! இவரு ஏழைபாளைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட ஒரு தொழிலாளி.
  "சொல்லுடா... அண்ணி, அண்ணன், குழந்தைகள்ளாம் எப்படி இருக்காங்க?" என்றாள் மணிமேகலை.
  "கொஞ்ச நேரம் சும்மா இருக்கா. மனுஷனுக்கு இங்க உட்காரவே முடியல."
  "வேணுமுன்னா, குழந்தைய வச்சிக்கிடுறீங்களா ?” என்று சொல்லிவிட்டு பாமா சிரித்ததும், மணிமேகலையும் சிரித்தாள்.
  ஆட்டோ ரிக்ஷாவும் சிரிப்பதுபோல் தோன்றிய சாலையின் பள்ளங்களைத் தாண்டிக்கொண்டே பறந்தது.
தூத்துக்குடி நகரின் கிழக்கு முனையில், காவல் தெய்வம் போலிருந்த வரஸித்தி விநாயகர் கோவிலைத் தாண்டியதும், நாற்பது கிலோ மீட்டர் வேகம் அறுபது கிலோமீட்டராக, ஸ்பிக் உரக் கம்பெனியைத் தாண்டி, முள்ளிக்காடு, காயல் முதலிய சாலையோரக் கிராமங்களைக் கடந்து இன்னொரு பஞ்சாயத்து ரோடு வழியாக (அதாவது அவ்வளவு மோசமான ரோடு) பாய்ந்து, தென்னந்தோப்பும், மாந்தோப்பும், தனித்தனியாகவும், அதேசமயம் சேர்ந்தாற்போலவும் தோன்றிய-குட்டி 
                                             சு. சமுத்திரம் + 17

எஸ்டேட் பங்களாபோல் காட்சியளித்த அந்த வீட்டின் முன்னால், டிராக்டரின் மேல் மோதாமல், லாவகமாக நின்றது ஆட்டோ ரிக்ஷா.

  பெரிய சாய்வு நாற்காலியில், நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக்கிடந்த மிராசுதார் அருணாசலம், மகளைப் பார்த்ததும் எழுந்தார். மணிமேகலை, ஒரே தாவாகத் தாவி வந்து, அப்பாவின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டாள். மகளைப் பார்த்ததும் அந்த அறுபது வயது கம்பீரக் கிழவரின் மனதில் என்னவெல்லாமோ தோன்றியிருக்க வேண்டும். திருமணம் ஆவதற்கு முன்பு, அடிக்கடி வீங்கிப்போகும் தன் கால்களுக்கு வென்னீர் ஒத்தடம் கொடுத்து, வேளா வேளைக்கு மாத்திரைகளை விழுங்க வைத்து, திருட்டுத்தனமாக தோப்பில் தொங்கும் மாம்பழம் ஒன்றைப் பறித்துத் தின்னும்போது எங்கிருந்தோ வந்தவள்போல் தட்டிப் பறித்து, அவரைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டு, கைகளைப் பிடித்து, வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுபோய், பார்லி கஞ்சியைக் கொடுத்துவிட்டு, அவர் தூங்கும்வரை, தான் துங்காமலே கால்களைப் பிடித்துவிட்டு, தலையைக் கோதிவிட்டு, முதுகை அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் அந்த மகளின்-அந்தத் தாயின் தரிசனம் கிடைத்துவிட்ட நெகிழ்ச்சியில் இரண்டு சொட்டு உஷ்ண நீரை, கண்கள் விடுவிப்பதைப் பார்த்த மணிமேகலை திடுக்கிட்டாள். அவர், இப்படி கண்ணீர் விட்டதை எப்போதுமே பார்த்தறியாதவள். அறியாப் பருவத்திலேயே அவள் அம்மா இறந்தபோது கூட, மனைவி மீது உயிரையே வைத்திருந்த தன் தந்தை, துக்கத்தை வாயில் துண்டை வைத்து அடைத்தாரே தவிர, அழவில்லை என்பதை அறிந்திருந்த மணிமேகலைக்கு, என்னவோ போலிருந்தது. அப்பாவுக்கு எற்ற மகளான அவள், பொங்கி வந்த விம்மலை, தன் இயல்பான 

18 * இல்லம்தோறும் இதயங்கள்


கம்பீரத்தால் பொடிப் பொடியாக்கிவிட்டு "என்னப்பா... நீங்க... சின்னப் பிள்ளை மாதிரி" என்று சொல்லிக் கொண்டே, தன் முந்தானையை எடுத்து அவர் கண்களைத் துடைத்துவிட்டாள். இந்தச் சமயத்தில், குழந்தையை எடுத்துக்கொண்டு வந்த சந்திரன், நிலைமையின் நெகிழ்வைப் புரிந்து கொண்டவன்போல், குழந்தையை அவரிடம் நீட்டினான். அழப்போன கிழவர் இப்போது சிரிக்கப் போனார்.

  இதற்குள், உள்ளே இருந்து மணிமேகலையின் மூத்த அண்ணன் ராமலிங்கமும், அவர் மனைவி மக்களும், குழந்தை குட்டிகளோடு வந்தார்கள். பத்து வயது பத்மா, எட்டு வயது கனகராஜ், ஐந்து வயது செல்வி ஆகிய பிள்ளைகள், "அத்த... அத்த...” என்று சொல்லிக்கொண்டு, அவளின் கைகளையும், அந்த கை வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையில் உள்ள தின்பண்டங்களையும் பற்றியபோது, தனக்குப் பிள்ளை பெறும் தகுதி போய்விடவில்லை என்பதுபோல், ஒரு பிள்ளை இடுப்பில் இருந்துகொண்டே எட்டிப் பார்க்க, இன்னொரு பிள்ளை வயிற்றுக்குள் இருந்துகொண்டே கீச்சு கீச்சு காட்ட அண்ண்ரிக்காரி கனகம், "ஏமுல... இப்படிப் பறக்கிய? தின்பண்டத்த பார்த்ததும் இப்படிப் பறக்கணுமா? இங்க இல்லாத மாம்பழமா? இங்க இல்லாத பலாப்பழமா?" என்று அடுக்கிக்கொண்டே போனபோது, அங்கே இருந்த எல்லோருக்கும் என்னவோ போலிருந்தது. கனகத்திற்கு வாழ்க்கைப்பட்ட ராமலிங்கம், பேச்சை மாற்றினார். "மாப்பிள்ள செளக்கியமாம்மா? அவரயும் ஒரு நட வரச் சொல்லப்படாதா? இது யாரு? ஒன் நாத்துனாருதான?” என்று பேச்சைத் துவங்கியபோது "நண்டு மாதுரி இருந்தவா, விலாங்கு மாதுரி வளந்துட்டா பாரேன்... என்று கனகம், பாமாவைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிரித்தாள். பிறகு மணிமேகலையின் அருகே போய் நின்று "நாங்க 
                                            சு. சமுத்திரம் +  19


போட்ட மூணு வடம் சங்கிலியைக் காணல?" என்றாள் அந்தத் திறனாய்வுக்காரி.

  இதற்குள், மணிமேகலை வந்துவிட்ட செய்தி கேட்டு, உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களும் அங்கே குழுமினார்கள். பஞ்சாயத்துத் தலைவரான பெருமாளும், அவரை முறியடிக்க நினைக்கும் கர்ணமும், இந்த இரண்டு பேருக்கு இடையே சண்டையை மூட்டிவிடும் முன்ஸீப்பும் வந்து விட்டார்கள். இன்னும் யார் பக்கமும் சேராமல் இருக்கும், மிராசுதார் அருணாசலத்தை ஆழம் பார்ப்பதற்காக அங்கே வந்த இந்த பிரமுகர்கள், "என்ன மணிமேகல... ஒங்க ஊரு எப்படி இருக்கு" என்று சொல்லிவிட்டு, அவள் பதிலை எதிர்பாராமலே, "அருணாசலம் மச்சான், நம்ம பெருமாள பஞ்சாயத்துக்கு நிக்காதடா... யூனியன் தலைவருக்கு நில்லுடாங்கறேன்; கேக்கமாட்டக்கான். நீராவது புத்தி சொல்லும்" என்று மிராசுதாருக்கு புத்தி சொல்வது போல, கர்ணம், பெருமாளுக்கு 'தேர்தல் குழியை' வெட்டிக் கொண்டிருந்தார். "விரலுக்குத் தக்கபடி வீக்கம்வே... நீரு நின்னா அதுல அர்த்தம் இருக்கு" என்று ப. தலைவர், பதிலுக்கு, தனக்கு வெட்டப்படும் குழியில், கர்ணத்தை தள்ளப் பார்த்தார். முன்ஸீப்போ, "ஆயிரம் சொல்லுங்க... இந்தத் தடவ அருணாசலம் மச்சான்தான் நிக்கணும்" என்று இரு தரப்புச் சண்டையை முத்தரப்பாக்கப் பார்த்தார்.
  மிராசுதார் அருணாசலமும் நின்றார். தான் உட்கார்ந்தால் அவர்களும் எங்கே உட்கார்ந்துவிடுவார்களோ என்று பயந்து நின்றார். வாய்வலிக்குப் பயப்படாத அவர்கள், கால்வலிக்குப் பயந்தாவது போவார்கள் என்று நின்ற படியே, அந்தப் பகலில் அவர் கனவு கண்டுகொண்டிருந்தார். ஆசையோட மகளைப் பார்த்துக்கிட்டே இருக்கணுமுன்னு நினைச்சா, இந்த முடிச்சிமாறிப் பயலுவ எலெக்ஷனப் பத்தி பேசுறாங்க பாரு! 

20 + இல்லம்தோறும் இதயங்கள்



  அவர்கள் மத்தியில், மரியாதைக்காகப் பேசிக் கொண்டிருந்த மணிமேகலை, சற்றுத் தொலைவில் நின்ற கூட்டத்தினருக்கருகே சென்றாள். குழந்தைகளுக்குக் 'கணை' வந்தால் (அதாவது மினி பிட்ஸ்) அவர்கள் வயிற்றில் சாம்பலை வைத்துக் குணப்படுத்தும் தங்கம்மா பாட்டி, அந்தக் காலத்து போஸ்ட்மேன் சண்முகம், குத்தகை நிலத்தைப் பயிரிடும் கந்தசாமியின் மனைவி காத்தாயி, பெட்டிகள் பின்னி விற்கும் ஏழை ஹரிஜனப் பெண் ராமக்கா, பவளக்கொடியாகவும், அல்லியாகவும் திரெளபதியாகவும் வேடம் போட்டு கூத்து நடத்தும் கோவிந்தன் முதலியோர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் யாரிடம் முதலில் பேசுவது என்று புரியாமல், எல்லோரும் ஒரே சமயத்தில் பேச, அவள் சிரித்துக்கொண்டாள்.
  "எம்மாடி... ஏ பூ... நீ போனதுல இருந்து கண்ணுக்குள்ளேயே நிக்கம்மா..."
  "கண்ணுக்குள்ள பூ விழப்படாது பாட்டி.."
  "கூத்தாடிப் பய மவன... ஒன் வேலய பாத்துக்கிட்டு போயமில..."
  "நான் குடுத்த பெட்டிய பத்திரமா வச்சிருக்கியளா அம்மா ?”
  "ஆமா... நீ குடுத்த பெட்டி... பவளக்கொடிக்கு அர்ச்சுன ராசதுரை நக நட்டு வச்சுக் கொடுத்த ரத்னப் பெட்டி பத்ரமா இருக்கும்."
  "ஒம்ம புத்திக்குத்தான் இப்டி கூத்து கீத்துன்னு உருப்படாம போறீரு... ஒம்ம வேலய பாத்துக்கிட்டு போவும்."
  "ஏழா ராமக்கா, இவனோட வேலயே எடக்குப் பேசறதுதான! நீயாவது சும்மா இரு. நாய் வால நிமிர்த்த முடியுமா?” 
                                                சு. சமுத்திரம் + 21

  "நாய் வால நிமுத்துனாலும் நிமுத்தலாம். ஆனால், ஒன் கூன நிமுத்த முடியாது. இது கூனியோட கூனவிட மோசமான கூனு. ஆயிரம் ராம பாணங்களாலயும் அசைக்க முடியாத கூனு."
  மணிமேகலை சிரித்துக்கொண்டே சீரியஸாகப்  

பேசினாள்."ஏதேது, நான் நின்னால் ஒங்களுக்குள்ள சண்டை நிக்காது போலுக்கே?"

   'கூத்து' கோவிந்தன் கெஞ்சினான்:
  "நீங்க நில்லுங்க அம்மா. எங்களுக்குள்ள இது சகஜம்.  பாசத்த கிண்டலா காட்டுவோம். பணக்காரங்க மாதுரி கிண்டல பாசமா காட்ட மாட்டோம்.”
  இதற்குள் மனைவியின் தூண்டுதலாலோ அல்லது தற்செயலாகவோ ஏழை எளியவர்களிடம் பேசி, அந்தஸ்தைக்  கெடுப்பது போலவும், அதைத் தடுப்பதற்கென்று வந்தது  போலவும், மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு வந்த  மணிமேகலையின் அண்ணன், "மேகலா, வீட்டுக்குள்ள போ,  அண்ணி கூப்புடுறாள். ஏண்டா கோவிந்தா, எதுக்குடா கூத்து கீத்துன்னு போடுற? பேசாம மெட்ரஸுக்குப் போ. ஒன்  அழகுக்கு நீ மட்டும் சினிமாவுல சேர்ந்தால், ஸ்ரீதேவிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் மார்க்கெட் போயிடும். பொய் சொல்லலடா... நிசமாத்தான் சொல்லுதேன்” என்றான்.  கோவிந்தன், மணிமேகலையை கண்ணைச்  சிமிட்டிக்கொண்டே பார்த்தான். "பாத்தியா... பணக்காரங்க,  கிண்டல பாசமா காட்டுவாங்கன்னு நான் சொன்னது  புரியுதா” என்று அவன் கேட்பது போலிருந்தது. அவனது  அனுமானத்தை ஊர்ஜிதப் படுத்துவதுபோல், ராமக்கா  யோவ்! நீரு பாட்டுக்கு கேப்பார் பேச்சைக் கேட்டுட்டு,  மெட்ராஸ் கிட்ராஸுன்னு போயிடாதயும். அங்க போனால், நாயி படாத பாடு படணும். இங்க 

22 + இல்லம்தோறும் இதயங்கள்


கிடக்கிற கஞ்சையோ... கூழயோ குடிச்சிக்கிட்டு சும்மா கிடயும். எங்க ஊட்டுக்காரர் ஒமக்கு ஆறுமுவ நேரியில கூத்துக்கு ஏற்பாடு பண்ணுறதா சொல்லியிருக்காரு” எனறாள்.

  கூட்டம் கலைந்தது. 
  இரவுச் சாப்பாட்டை, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து முடித்தார்கள். பாமாவுக்கு பெயர முடியாத அளவுக்கு அந்த வீடு பிடித்துவிட்டது. காஞ்சீபுரத்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலையும், வரதராஜ பெருமாள் கோவிலையும் பார்த்து "இப்படிப்பட்ட கோவில்களை இப்போது எந்த மாடர்ன் ஆர்க்கிடெக்டாலும் கட்டமுடியுமா?" என்று வியப்படைகிற அவள், அந்த வீட்டைப் பார்த்ததும் வெளியே சாதாரணமாகவும், உள்ளே கடைந்தெடுத்த தேக்குத் தூண்களையும், அவற்றின் சிற்ப வேலைப்பாடுகளையும், மேலே முத்துப்பல்லக்குபோல், இரண்டு கட்டிடங்கள், சன்னமான கம்பி வலைகளால் இணைந்திருக்க, போதுமான அளவு சூரிய வெளிச்சம் படும்படி கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை, மாடர்ன் ஆர்க்கிடெக்ட் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
  மணிமேகலை, ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொருவரிடமும் நீட்டினாள்.
  அண்ணனுக்கு எட்டு முழ வேட்டி, பாப்ளேன் சட்டை. தம்பிக்கு டெர்லின் துணிகள், அண்ணிக்கு ஒரு உல்லி உல்லி. குழந்தைகளுக்கு 'பிராக்குகள்’. பிறகு சூட்கேஸைத் திறந்து ஒரு சின்ன மிக்ஸி யந்திரத்தை எடுத்தபோது அண்ணிக்காரி கனகம் கன்னத்தில் கை வைத்தாள். "அண்ணி! அப்பாவுக்கு தினமும் இதுல ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொடுங்க..." என்றபோது, கனகத்தின் முகம் கறுத்தது. அதைப் புரிந்துகொண்டவள் 
                                                சு. சமுத்திரம் + 23


போல் மணிமேகலை. "குழந்தைகளை... மாம்பழத்த தோலோட சாப்பிட விடாதீங்க. இதுல ஜூஸ் எடுத்துக் கொடுக்கலாம்” என்றபோது கனகம் வாயால் மட்டுமல்ல கண்களாலும் சிரித்தாள்.

எல்லோரும் தூங்கிவிட்டார்கள். துரங்கக்கூடாத சந்திரனும், பாமாவும்கூட தூங்கிவிட்டார்கள். மணிமேகலை நாலைந்து ஆரஞ்சுப் பழங்களை எடுத்து, தோலுரித்து ஜூஸ் எடுத்து வெளியே கட்டிலில் படுத்திருந்த தந்தையிடம் கொண்டுவந்தாள். அவர் அதை வாங்கிக்கொண்டு காலடியில் உட்கார்ந்த மகளின் தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டே "என் ராசாத்தி, நீ வந்ததுல ஏற்பட்ட சந்தோஷத்த அனுபவிக்க முடியாம நீ போகப் போவும்போது ஏற்படப்போற துக்கத்த நினைச்சிப் பார்க்காம இருக்க முடியலம்மா!" என்றபோது இதுவரை தன்னைக் கட்டுப்படுத்தியிருந்த மணிமேகலை இப்போது விம்மினாள்.</p> 

 "அப்பா. அப்பா ! எதுக்குமே கலங்காத நீங்க என்னைப் பார்த்ததும் கண் கலங்கி கண்ணிர் விட்டியளே, எதுக்குப்பா? எதுக்குப்பா? அண்ணி ஒங்களுக்கு வேளா வேளைக்கு மருந்து தராமலும், பிள்ளைங்களை திட்டுறது மாதுரி ஜாடையாயும் திட்டுறதா தம்பி சொன்னான். நிசமாவா அப்பா, நிசமாவா?” 

 அருணாசலம் எதுவும் பேசவில்லை. மகளின் கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டார். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பிறகு அந்தக் கைகளை வருடிக்கொண்டே பேசினார். </p> 

"நான் அரக்கன். எனக்கு. இப்போ படுறது பத்தாது. ஒன்னப் பொறுத்த அளவுல பெரிய தப்புப் பண்ணிட்டேன். ஒன் மனசு தெரிஞ்சும், கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டு இப்போ கண்கலங்குகிறேன். நீயாவது ஒரு </p> 
வார்த்த சொல்லியிருக்கலாம்.... அம்மாவுக்கு அம்மாவா இருந்த எங்கிட்ட நீ சொல்லப்படாதாம்மா ? சொல்லப்படாதா?”

மணிமேகலை, தந்தையின் பேச்சைப் புரிந்து கொண்டாள். புரியப் புரிய, வெங்கடேசன் அவள் முன்னால் வந்து நின்றான்.

அவள் சுதாரித்துக் கொண்டாள்.

அப்பாவின் கால்களைப் பிடித்து விட்டாள். வாடைக் காற்றுப் படாமல் இருப்பதற்காக, அவருக்காக வாங்கி வைத்த சால்வையை எடுத்து அவர் மீது போர்த்தினாள். தூளியிலே போட்டு, தோளிலே எடுத்து, கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த அந்த பெற்ற மனம், அண்ணிக்காரியாலும், தன் பிரிவாலும் படும் வேதனையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டவள் போல்-

அவரது கால் பாதங்களை தலையணையாக்கியவள் போல், அவற்றில் தலை வைத்துத் தூங்கினாள். தூக்கம் கலைந்த அருணாசலம். மகளின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாதவர் போல், மடக்க நினைத்த கால்களை அப்படியே வைத்துக் கொண்டு-அந்த லேசான வேதனையில் ஒரு பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.