இளையர் அறிவியல் களஞ்சியம்/அணு அமைப்பு

விக்கிமூலம் இலிருந்து

அணு அமைப்பு : உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும பல்வேறு தனிமங்களால் ஆனவை என்பதை முன்பே அறிவோம். தனிமத்தைப் பகுத்துக்கொண்டே சென்றால் பகுக்க முடியாத மிக நுண்ணிய கூறு இறுதியாக மிஞ்சும். அத்தனிமத்தின் பண்புகள் அனைத்தையும் கொண்ட அந்நுண்ணிய கூறே அணுவாகும் என்பதையும் முன்பே கண்டோம். இந்த அணுவின் நடுப்பகுதியில் அமைந்த ஆற்றல்மிகு நுண் பகுதியே ‘அணுக் கரு’ என்பதையும் அறிவோம்.

அணு ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலப் பெரும் முயற்சிக்குப் பின்னர் அணுவின் அமைப்பையும் அணுக்கருவின் இயல்பையும் அதன் செயற்பாடுகளையும் கண்டறிந்தனர்.

அணுக்கருவானது நேர் மின்னோட்டமுடைய புரோட்டான்கள் மின்னூட்டம் இல்லாத நியூட்ரான்கள் எனும் அடிப்படைத் துகள்களால் ஆனதாகும். இவ்வணுக்கரு எலெக்ட்ரான் எனப்படும். எதிர் மின்னுரட்டமுடைய அடிப்படைத் துகள்கள் வலம்

பம்பாய்க்கருகில் டிராம்பேயில் உள்ள அணு ஆய்வு மையம்

வந்தபடி உள்ளன. ஒரு புரோட்டான் மின்னூட்டமும் ஒரு எலெக்ட்ரான் மின்னூட்டமும் அளவில் ஒத்தவைகளாகும். அணுக்கருவின் உட்பகுதி முழுமையும் நிறைந்திருப்பவை அணுக்கரு துகள்களேயாகும். அணுக்கரு ஏறக்குறைய கோலி வடிவையுடையதாகும். சிறிய அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் எண்ணிக்கைச் சமமாக இருக்கும்.


பெரிய அணுக்கருவில் இஃது வேறுபட்டும் இருக்கும்.

அணுவின் இயற்பியல் பண்பு அணுக்கருவைப் பொருத்து அமையும். தனிமத்தின் வேதியியல் பண்பு எலெக்ட்ரான்களைப் பொருத்ததாக அமையும்,

புரோட்டானும் நியூட்ரானும் ஏறத்தாழ ஒரே நிறையுடையனவாகும். இதோடு ஒப்பிடும்போது எலெக்ட்ரானை நிறையே இல்லாத துகள் என்று கூறிவிடலாம். எனவே, ஓர் அணுவின் நிறை என்பது அணுக்கருவின் நிறையே யாகும். அணுக்கருவின் நிறையை நிறை மாலை (Mass Spectrograph) என்னும் கருவி கொண்டு அளவிடுவர்.