இளையர் அறிவியல் களஞ்சியம்/அணு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அணு : உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தனித்தனி தனிமங்களால் ஆனவை. பொருட்கள் உருவாக இத்தனிமங்களே அடிப்படை அம்சமாய் அமைகின்றன.

ஒரு தனிமத்தைப் பல்வேறு கூறுகளாகப் பகுக்கலாம். இவ்வாறு பகுத்துக் கொண்டு செல்லும்போது பகுக்க முடியாத ஒரு துண் பகுதி மீந்து இருக்கும். இதுவே அணுவாகும். இஃது மேலும் பகுக்க முடியாதது போலவே கண்பார்வைக்கும் புலனாவதில்லை. மிக நுண்ணிய நுண்பெருக்காடி கொண்டும் கூட அணுவைக் காணமுடியாது. ஒரு குண்டூசி முனையில்

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
ஹீலிய அணு

பல்லாயிரம் கோடி அணுக்கள் இருக்கின்றனவென்றால் அதன் நுண்மைத்தன்மை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அணுவானது கண்ணுக்குப் புலனாகாவிட்டாலும் அணுவின் தன்மையை அதைச் சார்ந்த பொருளைக் கொண்டு கண்டறிய இயலும். இதை ஆய்வு செய்து கூறியவர் அணு விஞ்ஞானி டால்டன் ஆவார். அத்துடன் அணுவைப் பகுக்கவோ பிளக்கவோ இயலாது என்றும் அவர் கூறினார்.

ஆனால், இவரது கருத்து நிறைவுறவில்லை. இவருக்குப் பின்வந்த அணு ஆய்வாளர்களான தாம்சன், லூதர் ஃபோர்டு, நீல்ஸ் போக்கர் போன்றோர் அணுவைப் பிளக்கமுடியும் என்பதை ஆய்ந்து கண்டறிந்து கூறினர். ஒரு

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf

அணுவினுள் மேலும் பல நுண்பகுதிகள் இருப்பதையும் ஆய்ந்தறிந்து கூறினர். ஒவ்வொரு அணுவினுள்ளும் மூன்று முக்கியப் பகுதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அணுவின் நடுப்பகுதியில் உட்கரு அமைந்துள்ளது. அஃது நேர் மின்னோட்டமுடைய புரோட்டானாலும் நியூட்ரானாலும் ஆனது. அதைச் சுற்றி நேர் மின்னோட்டமுடைய எலெக்ட்ரான் உள்ளது. பூமி சூரியனைச் சுற்றி வருவது போல எலெக்ட்ரான் உட்கருவை எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

ஹைட்ரஜன் அணுவைத் தவிர்த்து மற்ற அணுக்கள் அனைத்திலும் நியூட்ரான் உண்டு. அனைத்துப் பொருட்களிலும் புரோட்டானும் எலெக்ட்ரானும் ஒரே மாதிரி அமைந்திருக்கவில்லை. அவை பொருளுக்குப் பொருள் மாறுபடுகின்றன.

அணுக்கரு ஒன்றில் காணப்படும் புரோட்டானின் எண்ணிக்கையே அணு எண் (Atomic Number) என அழைக்கப்படுகிறது. புரோட்டான், எலெக்ட்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்த எண்ணிக்கையே 'அணுநிறைவெண்’ (Mass Number) ஆகும்.