இளையர் அறிவியல் களஞ்சியம்/அண்டவெளி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அண்டவெளி : நாம் காணும் சூரியன். ஆகாய கங்கை போன்ற நட்சத்திரக் கூட்டங்கள் சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் அனைத்தும் அடங்கிய விண்ணகப் பகுதியே, அண்டவெளி எனப்படுகிறது. இதைப் பிரபஞ்சம் (Universe) என்றும் கூறுவதுண்டு.

சுமார் 1,500 கோடி ஆண்டுகட்கு முன்பு பூமி உட்பட சூரிய மண்டலம், நட்சத்திரக் கூட்டங்கள் அனைத்தும் அடங்கிய ஒரே பேரமைப்பாக பேரண்டம் இருந்தது. அதில் திடீரென ஏற்பட்ட பெரு வெடிப்பின் (Big

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
அண்டவெளி

Bang) காரணமாக வெடித்துச் சிதறி சூரிய மண்டலமும் நட்சத்திரக் கூட்டங்களும் உருவாயின.

அண்ட வெளியில் பல நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரியதாக அமைந்திருப்பது ‘பால்வீதி மண்டலம்’ எனப்படும் ஆகாய கங்கையாகும்.

நாம் காணும் நட்சத்திரங்கள் அனைத்தும் பால்வீதி மண்டலத்தில் உள்ளவைகளாகும். இது சுமார் 20-லிருந்து 24 வரையிலான நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். பால்வீதி மண்டலத்தின் கோடியில் தான் சூரிய மண்டலம் அமைந்துள்ளது. சூரியனும் ஒரு நட்சத்திரமேயாகும்.

இதற்கு 'பால்வீதி மண்டலம்' என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது தெரியுமா? இதைக் கண்டறிந்த கிரேக்கர்கள் 'கேலக்சி’ (Galaxy) என்ற கிரேக்கச் சொல்லால் அழைத்தார்கள். அச்சொல்லுக்கு ‘பால்’ என்பது பொருளாகும். இம்மண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் பால் போல காணப்பட்டதால் இப்பெயர் பெற்றது. பின்னர் இச்சொல் ஆங்கிலத்தில் மில்கிவே (Milkyway) என்று மொழி மாற்றி அழைக்கப்பட்டது. அச்சொல் பின்னர் தமிழில் 'பqல்வீதி’ என பெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதே சொல் வடமொழியில் 'மந்தாகினி’ எனக் குறிக்கப்படுகிறது. கங்கை நதிக்கு 'மந்தாகினி’ என்ற பெயரும் உண்டு. எனவே, பால்வீதியை 'ஆகாய கங்கை' என்ற பெயரால் அழைப்பதும் உண்டு.

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
பால்வீதி எனும் ஆகாய கங்கை

பால்வீதியாகிய ஆகாய கங்கையின் வடிவம் ஒரு தட்டைச் சுற்றி பாம்பு படுத்திருப்பது போலக் காணப்படும். இதன் விட்டம் சுமார் 6 இலட்சம் ஒளியாண்டுகள் ஆகும். சூரியன் இதன் மையத்திலிருந்து சுமார் 30,000 ஒளியாண்டு தொலைவிலிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். பூமிக்கும் பால்வீதி மண்டலத்திற்குமிடையேயுள்ள தூரம் சுமார் 20 இலட்சம் ஒளியாண்டுகளாகும். இத்தூரத்தைக் கிலோ மீட்டரில் அளக்க இயலாது.

பெரு வெடிப்பின் விளைவாகப் பேரண்டத்திலிருந்து வெடித்துச் சிதறிய பிற நட்சத்திரங்களைப் போல உருவானதே சூரியன். இஃது எல்லா நட்சத்திரங்களையும்விட பூமிக்கச்சமீபமாக இருப்பதால் அதனைச் சூரியன் என்று அழைக்கிறோம். சூரியனில் காணப்படுவது போன்ற வெப்பமும் ஒளியும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் உண்டு. இவை எண்ணற்ற கி.மீ. உயரத்தில் மிக நீண்ட தொலைவுக்கப்பால் இருப்பதால் சிறியவைகளாகக் காட்சியளிக்கின்றன.

சூரியனைச் சுற்றிலும் புதன் (மெர்க்குரி), சுக்கிரன் (வீனஸ்), பூமி, செவ்வாய் (மார்ஸ்), குரு (ஜூபிடர்), சனி (சாட்டர்ன்) யுரெனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றுள் யுரெனஸ் நெப்டியூன், புளுட்டோ ஆகிய மூன்று கிரகங்களும் மிகச் சிறியவையாகும்,

இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf
புதன் வெள்ளி பூமி செல்வாய் துணைகோள்கள் வியாழன் யுரேனஸ் நெப்டியூன் புளுட்டோ

சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களுக்கும் சுய ஒளித்தன்மை உண்டு. ஆனால், கிரகங்களுக்கு அத்தன்மை அறவே இல்லை. அவை சூரிய ஒளியைப் பெற்று அதைப் பிரதி பலிக்கின்றன.

சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரன் பூமியின் ஒரு துணைக் கோளாகும். இஃது பூமியிலிருந்து பிரிந்து சென்று தனிக் கிரகமாக உருவெடுத்தமையால் இது பூமியைச் சுற்றி வரும் இயல்புடையதாயமைந்துள்ளது. சந்திரன் பூமியைச் சுற்றியபடியே பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.

இந்த உண்மைகளை முதன் முதலாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கண்டுபிடித்து உலகத்துக்குக் கூறியவர் போலந்து நாட்டு விஞ்ஞானியான கோப்பர்நிக்கஸ் என்பவராவார். இவர்தான் பூமி ஒரு கிரகம் என்றும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகிறது. என்றும் கூறி, அதுவரை உலகம் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளையெல்லாம் போக்கினார்.

பூமி தன்னைத்தானே ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றிக் கொண்டுள்ளது. ஆயினும், அது நமக்குத் தெரிவதில்லை. பூமி, தட்டையாக அமைந்திருப்பது போலவும் அதுவும் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போலவும் தோன்றுகிறது. அதே சமயத்தில் சந்திரன் முதலான மற்ற கிரகங்கள் நம்மைச் சுற்றி வருவது போலவும் தோன்றுகிறது. இதை ஒரு உதாரண நிகழ்ச்சி மூலம் நன்கு உணரலாம்.

நாம் ரயிலில் பயணம் செய்யும்போது ரெயிலின் வேகத்திற்கேற்ப நம் முன் காட்சியளிக்கும் மரங்கள், மலைக்குன்றுகள், வயல்கள் அனைத்தும் நமக்கு எதிர்த் திசையில் விரைந்து ஓடுவதைப் போல் காட்சி தரும். இதே முறையில் தான் கிரகங்களும் நம்மைச் சுற்றி வருவது போல் தோற்றமளிக்கின்றன.

அண்ட வெளியிலுள்ள நட்சத்திரங்கள், சூரிய மண்டலத்திலுள்ள சந்திரன் முதலான கிரகங்கள் அனைத்தையும் காண மாபெரும் தொலைநோக்காடிகள் இன்று பயன்பட்டு வருகின்றன. எதிர் காலத்தில் நிலவில் இத்தகைய பிரம்மாண்டமான தொலை நோக்காடிகளை நிறுவி அங்கிருந்து அண்டவெளி அதிசயங்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியுமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

முன் எப்போதையும்விட அண்டவெளி ஆய்வு தற்போது மிக விரைவாக முன்னேறி வருகிறது. புதிய புதிய அண்ட வெளிச் செய்திகள் இப்போது தெரிய வருகின்றன.