உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/அம்மீட்டர்

விக்கிமூலம் இலிருந்து

அம்மீட்டர் : இது மின்னாற்றல் அளவு மானியாகும். ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அழுத்தத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் சாதனமாகும்.

மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இது ஃபிரெஞ்சு

அம்மீட்டர்

அறிவியல் வல்லுநரின் பெயரால் அமைந்த அலகாகும்.ஆம்பியரை அளிக்கும் கருவியாகிய ஆம்பியர் மீட்டரே ‘அம்மீட்டர்’ என்று அழைக்கப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள பேரளவு அம்மீட்டர்கள் அதிக அளவிலான மின்னோட்ட அளவை அளக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய அளவிலான அம்மீட்டர்கள் உந்து வண்டி, சைக்கிள் முதலானவற்றின் சிறிதளவு மின்னோட்டங்களை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அம்மீட்டர் மின் அளவியைச் கொண்டு மின்னாக்கி (Electric generator). மின் செலுத்தத் தொடர் (Transmission line), மின்மாற்றி (Transformer) போன்ற அனைத்து வகை அமைப்புகளிலும் அவ்வப்போதுள்ள மின் அளவுகளை அளந்தறிய அம்மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மின்னோட்டம் அதிகபட்ச எல்லையைக் கடக்காமல் கண்காணிக்க முடிகிறது.

“கம்பிச்சுருள் வழியே மின்சாரம் ஓடினால் அது காந்தமாக மாறும்' என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே அம்மீட்டர் மின் அளவிகள் தயாரிக்கப்படுகின்றன. அம்மீட்டரில் பல வகைகள் உள்ளன. நகரும் சுருள் (Moving coil), நகரும் இரும்பு (Moving iron), அனல் (Thermal) என்பவை அவற்றுள் சிலவாகும்.

அம்மீட்டரைக் கொண்டு மின்னாற்றலை அளக்கும்போது மின்னோட்டம் தடைபடாமல் அளக்க வேண்டும். அதற்கு இசைந்தாற் போல் அம்மீட்டர் அமைப்பு உள்ளது. நகரும் சுருள் (Moving coil) அம்மீட்டர் மின் அளவிக் கருவியில் சிறிய இரும்புத் துண்டைச் சுற்றி ஒரு கம்பிச்சுருள் இருக்கும். இது லாட காந்த முனைகளுக்கிடையே தொங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிச்சுருள் வழியே மின்னோட்டம் செல்லும்போது, அம்மின்னோட்டத்தின் அளவுக்கேற்ப சுருளில் இணைக்கப்பட்டுள்ள முள் நகர்ந்து மின்னோட்ட அளவைக் குறிக்கும்.