உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/அலைகள்

விக்கிமூலம் இலிருந்து

அலைகள் : கடற்கரையில் நாம் இருக்கும் போது கடல் அலைகள் சிறிதும் பெரிதும் கடற்கரையில் மோதி மறைவதைப் பார்த்திருக்கலாம். கடலில் பேரலைகள் தோன்றுவதைப் போலவே ஏரிகளிலும், குளங்கள், கிணறுகளிலும் அலைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இவற்றில் காணும் அலைகள் வேகம் குறைந்த சிற்றலைகளாக இருப்பதோடு சக்தி குறைந்தவைகளாகவும் இருக்கும். நீரின் கொள்ளளவுக்குப் பரப்புக்குமேற்ப அலைகளின் வேகமும் சக்தியும் அமையும். பலத்த காற்றின் போதும் புயலின்போதும் அலைகள் மிக உயரமாக எழுந்து வீழும்.

அலைகள் உருவாகக் காற்றைவிட வேறு காரணங்களும் உள்ளன. வானில் உள்ள சூரியனும் சந்திரனும் பூமியைத் தம்பால் ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே அலைகள் உருவாகக் காரணமாகின்றது. பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடலில் பேரலைகள் ஏற்பட கடல் கொந்தளிப்பு உண்டாகும். இதற்குக் காரணம் அன்று சூரியனின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் ஒரே சமயத்தில் அமைவதால் அலைகளும் பெருமளவில் எழுகின்றன; இச்சமயங்களில் தென்னை மர உயரத்திற்குக் கடல் அலைகள் எழும்புவது உண்டு.

நில அதிர்ச்சி உண்டாகும்போதும் பூகம்பம் ஏற்படும்போதும் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடித்தாலும் கடல் கொந்தளிப்பு ஏற்படும். அப்போது கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பும் அதிகமாக இருக்கும்.

கடல் அலைகளைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் புதிய அறிவியல் நுட்பம் கண்டறியப் பட்டுள்ளது. புனல், அனல், அனு மின் உற்பத்திக்கு அடுத்தபடியாக கடல் அலைகள் மூலமே அதிக மின்சாரம் தயாரிக்க முயற்சிகள்

அலைகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாடுகள் அலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து பயன்பெற்று வருகின்றன. நம் நாட்டிலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன.