இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆரியபட்டா ( செயற்கைக் கோள் )

விக்கிமூலம் இலிருந்து

ஆரியபட்டா ( செயற்கைக் கோள் ) : ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் இந்திய வானியல் கணித மேதையான ஆரிய பட்டாவின் நினைவாக அவர் பெயரிடப்பட்ட முதல் இந்தியச் செயற்கைக்கோள் இது ஆகும் இஃது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் சோவியத் நாட்டு விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்டது.

ரஷ்யா உட்பட எட்டு நாடுகளின் உறு துணையோடு இச்செயற்கைக்கோள் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கென சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவாகியது. இதனை உருவாக்க

ஆரியபட்டா செயற்கைக்கோள்

250 பொறியாளர்கள் 26 மாதங்கள் கடும் உழைப்பைச் செலவிட்டனர். இச்செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ.உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும். இதன் இயக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே.