இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆஸ்டன், ஃபிரான்சிஸ் வில்லியம்

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்டன், ஃபிரான்சிஸ் வில்லியம் : இவர் இங்கிலாந்து நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியாவார். 1877ஆம் ஆண்டில் பெர்மிங்ஹாம் எனுமிடத்தில் பிறந்தவர். பொருள்களில் அடங்கியுள்ள அணுக்களின் எடையை அவற்றின் நிறைகளுக்கேற்பக் கணக்கிடப் பயன்படும் ‘நிறைநிரல் வரைவி' (Mass spectrograph) யை முதன்முதலாகக் கண்டு பிடித்தவர் இவரே. அத்துடன் 'ஐசோடோப்' என அழைக்கப்படும் ஓரகத் தனிமங்களையும் இவரே கண்டறிந்தார். இவை இரண்டையும் கண்டுபிடித்தமைக்காக 1922ஆம் ஆண்டில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

ஃபிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்

இவர் கண்டுபிடித்த நிறைநிரல் வரைவி வேதியியலில் மட்டுமல்லாது அணுக்கரு இயற்பியல், உயிரியல், நிலஇயல்போன்ற பல்வேறு துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள 287 இயற்கை ஓரகத் தனிமங்களில் 212-ஐக் கண்டு பிடித்து விளக்கியவர் ஆஸ்டன் ஆவார்.