இளையர் அறிவியல் களஞ்சியம்/ஈசல்

விக்கிமூலம் இலிருந்து

ஈசல் : கறையான் வகைகளில் இறக்கை முளைத்தவை ஈசல் என அழைக்கப்படுகிறது. ஈயைப் போன்ற செல், அல்லது இறக்கை முளைத்த செல் எனும் பொருளிலேயே 'ஈசல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கறையான்களில் நாற்பதுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

ஈசல்

ஈசல்கள் பெரும்பாலும் புற்றுக்களிலேயே வாழ்கின்றன. புற்றுக்கள் பூமிக்கு மேலாக இருப்பதைப் போன்றே ஈசல் புற்றுக்கள் பூமிக்கு அடியிலேயேயும் அமைந்திருக்கும். இறகு முளைத்த கறையான்கள் நன்கு வளர்ச்சியடைந்த ஆண்-பெண் ஈசல்களாகக் கருதப்படுகின்றன. இவை மழை தொடங்கு முன்னரோ ஈரக்காற்று பரவியுள்ளபோதோ புற்றினின்றும் ஆண்-பெண் இணைகளாகப் பெருமளவில் புற்றினின்றும் வெளிப்படும். இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தை நாடி கூட்டங்கூட்டமாக வெளிப்பட்டு விளக்கில் மோதி மடியும். விளக்கை நெருங்கும்போதே அவற்றின் மெல்லிய இறக்கைகள் உதிர்ந்துவிடும். இறக்கை இழந்த ஈசல்கள் விளக்கு அருகிலேயே விழுந்துவிடும். இவ்வாறு விழும் ஈசல்களைச் சேகரித்து வறுத்து உண்பர். ஈசல்களை சிலவகை உயிரினங்களும் விரும்பி உண்கின்றன. ஈசல்கள் கடிப்பதில்லை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்கின்றன.