இளையர் அறிவியல் களஞ்சியம்/உறைதல்
உறைதல் : ஒரு திரவப்பொருளின் வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் கீழாகக் குறையும்போது அத்திரவப் பொருள் திடத் தன்மையைப் பெறுகிறது. இதுவே உறைதலாகும். சான்றாக நீர் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலைக்கும் கீழே செல்கின்ற போது அது உறைந்து பனிக்கட்டியாகி விடுகிறது. சுத்தமான தண்ணிர் உறையும் உறைநிலை 00 செ.கி. ஆகும்.
பல பொருட்கள் உறைநிலை அடையும்போது முன்பிருந்த பருமனைவிடச் சற்றுச் சுருங்கிக் குறையும். ஆனால் நீர் உறைந்து பனிக்கட்டியாகும்போது விரிவடைகிறது. குளிர் நாடுகளில் நீர் உறைநிலையைவிட வெப்பநிலை குறையும். அப்போது குழாய்களில் நீர் பனிக்கட்டியாகி விரிவடைவதால் குழாய்கள் வெடித்துவிடுகின்றன.
வெப்பத்தில் மெழுகு உருகும். உருகியோடும் மெழுகு வெப்பம் பின்னர் கடின நிலையடையும்.
எந்த வெப்ப நிலையில் ஒரு நீர்மம் உறைதலாகிறதோ, அந்த வெப்பநிலை உறைதல் வெப்பநிலை என அழைக்கப்படுகிறது. பொருள்களின் மாசுத்தன்மையினை அதனதன் உறைதல் வெப்பநிலையைக் கொண்டு அறியப்படுகின்றன.
மாசு கலந்த பொருட்களின் உறைநிலை குறைந்து காணப்படும். இதுவே உறைநிலைத் தாழ்வு என அழைக்கப்படுகிறது. உறை நிலைத் தாழ்வு கணக்கீடுகளின் மூலம் பொருளின் மூலக்கூறு எடை கண்டறியப்படுகிறது.