இளையர் அறிவியல் களஞ்சியம்/எரிபொருட்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எரிபொருட்கள் : வெப்பத்தைப் பெறப் பயன்படுத்தும் பொருட்கள் எரிபொருட்களாகும். ரயில் எஞ்சின்கள், மோட்டார் வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள், தொழிற்கூடங்களில் உள்ள பல்வேறு வகையான எஞ்சின்கள் ஆகியவற்றை இயக்குவதற்கு எரிபொருட்கள் இன்றியமையாது தேவைப்படுகின்றன. இத்

குழாய்கள் மூலம் இயற்கை வாயு கொண்டு செல்லப்படுகிறது

தகைய எரிபொருட்களை திட வடிவிலோ, திரவ நிலையிலோ, வாயுவாகவோ பெற்றுப் பயன்படுத்துகிறோம்.

இயற்கையில் கிடைக்கும் மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, மரத்தைச் சுட்டுப் பெறும் மரக்கரி போன்றவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுபவைகளில் முக்கியமானவைகளாகும். இவற்றுள் நிலக்கரியும் பழுப்பு நிலக்கரியும் அதிக அளவில் நீண்ட நேரம் எரிந்து வெப்பம் தருபவைகளாகும். எனவே, இவை நீராவி எஞ்சின்களிலும் மின் நிலையங்களிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பழுப்பு நிலக்கரி அடுப்பெரிக்கவும் பயன்படும்.

எரிபொருட்களில் நெடுநேரம் நீடித்து எரிந்து சக்தி தருபவையே சிறந்த எரிபொருட்களாகக் கருதப்படும். பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் போன்றவை திரவ எரிபொருட்களாகும். சிலவகை திட எரிபொருட்களைச் சிதைத்து வாலை வடித்தும் ஹைட்ரஜனேற்றம் செய்தும் திரவ எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதும் உண்டு. நிலக்கரியிலிருந்து திரவ எரிபொருள் தயாரிக்கப்படுவதுமுண்டு.

மற்றொரு வகை, வாயு எரிபொருளாகும். பூமிக் குள்ளிலிருந்து இயற்கை எரிவாயுவை வெளிக்கொணர்ந்து சிலிண்டர்களில் அடைத்துப்பயன்படுத்தப்படுகிறது. இது விலை மலிவாக இருப்பதோடு அதிக அளவு வெப்பம் தருவதாகவும் உள்ளது. கரிவாயு, நீர்வாயு, ஊதுலை வாயு போன்றவை பிற வாயு எரிபொருட்களாகும். மீதேன் வாயு சிறந்த எரிபொருளாயினும் அதிக அளவில் கிடைப்பதில்லை. இயற்கை எரிவாயு, உலர்ந்த எரிவாயு, ஈரமான எரிவாயு, புளிப்பு வாயு, இனிப்பு வாயு என நான்கு வகைப்படும்.

இன்று மின்சாரமும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கொண்டு இரும்பையும் உருக்கலாம்; எளியமுறையில் சமயலும் செய்யலாம்.