இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒலிபெருக்கி

விக்கிமூலம் இலிருந்து

ஒலிபெருக்கி : நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சொலியை நம் அருகில் உள்ளவர்களால் மட்டுமே கேட்க முடியும். சற்று தூரத்தில் உள்ளவர்களால் கேட்க முடிவதில்லை. உரக்கக்

ஒலிபெருக்கியின் உட்புறம்

சுத்திப் பேசினால் சற்று தூரத்தில் உள்ளவர்களால் கேட்கமுடிகிறது. அதிக தூரத்தில் இருப்பவர்களின் செவியை நம் பேச்சொலி எட்டாததால் அவர்களால் நாம் பேசுவதைக் கேட்க இயலுவதில்லை. இதனால் நம் பேச்சொலியைப் பல மடங்குப் பெருக்கி தூரத்திலுள்ளவர்களும் கேட்கும்படி செய்யக் கருவி உள்ளது. அதுவே ஒலிபெருக்கி. நாம் எழுப்பும் ஒலியைப் பலமடங்குப் பெருக்கித் தருவதால் இக்கருவி இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

மேடையில் நாம் பேசினாலோ அல்லது பாடினாலோ அவ்வொலியை நம்முன் வைக்கப்பட்டிருக்கும் 'மைக்' எனும் மைக்ராபோன் கருவி ஈர்க்கிறது. அவ்வாறு கிரகிக்கும் ஒலிகளை மின் அலைகளாக மாற்றி மின்கம்பி வழியே ஒலி பெருக்கிக் கருவிக்குக் கொண்டு செல்கிறது. 'ஆம்ஃப்லிஃபயர்’ எனும் இக்கருவி மின் அலைகளாக ஒரு ஒலியைப் பலமடங்குப் பெருக்கி ஒலி அலைகளாக மீண்டும் ஒலிப்பான் மூலம் வெளிவிடுகின்றது. இதில் ஒலியைப் பெருக்கவோ குறைக்கவோ வசதிகள் உண்டு.