உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/கொசு

விக்கிமூலம் இலிருந்து

கொசு : சின்னஞ்சிறு உயிரினமாக கொசு உலகெங்கும் பரவியுள்ளது. உலகில் சுமார் 2,000 கொசு வகைகள் உள்ளன. சிலவகைக் கொசுக்களால் மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல்கள் உண்டாகின்றன. சில வகைக் கொசுக்களால் யானைக்கால், மஞ்சள் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் உண்டாகின்றன.

கொசுக்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பெண் கொசு நானூறு முட்டைகள்வரை ஒரே சமயத்தில் இடுகின்றன. அம்முட்டைகளிலிருந்து சிறு புழுக்கள் வெளிப்படுகின்றன. அவையே கூட்டுப் புழுவாகி, பின்னர் முதிர்ந்து கொசு வடிவைப் பெறுகின்றன. கொசுவுக்கு நான்கு கால்களும் இரண்டு இறக்கைகளும் உள்ளன. கொசுக்கள் பதினைந்து நாட்கள் முதல் 25 நாட்கள் வரை வாழ்கின்றன.

சாதாரணமாக ஆண் கொசுக்கள் மரச் சாற்றைவும் பழச்சாற்றையுமே உண்கின்றன. பெண் கொசுக்கள் மட்டுமே கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. கொசுவின் தலைப்பகுதியில் அமைந்துள்ள ஊசிபோன்ற அமைப்பை நம் தோலினுள் செலுத்தி உமிழ் நீரைப்பாய்ச்சி நம் இரத்தத்தை உறிஞ்சி உண்கின்றன.

கொசு

நம்மைக் கடிக்கும்போது உமிழும் உமிழ் நீரில் உள்ள நோய்க்கு கிருமிகள் எளிதாக கடிவாய் வழியே உடலினுள் சென்று நோயைப் பரப்புகின்றன.

கொசுக்களை ஒழிக்க வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு வாழுமிடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். உறங்கும்போது கொசுவலை கட்டிக் கொள்ள வேண்டும்.