இளையர் அறிவியல் களஞ்சியம்/சிறுமூளை

விக்கிமூலம் இலிருந்து

சிறுமூளை (Cerebellum) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறு மூளையைப் பின் மூளை (Behind brain) என்றும் கூறுவர். பெருமூளைக்குப் பின்புறமாக சிறுமூளை அமைந்திருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பெருமூளையைப் போன்றே சிறு மூளையும் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. பெருமூளையைப் போன்றே இதிலும் சாம்பல் நிற உயிரணுக்களும் வெண்மை நிற உயிரணுக்களும் உள்ளன. எனினும், அவை பெருமூளையில் காணப்படுவதைவிட அதிகமாகச் சிறுமூளையில் காணப்படுகின்றன.

சிறுமூளையில் உள்ள வெண்பொருளோடு இணைந்துள்ள நரம்பு நார்கள் தண்டுவடம் மூலம் உடலின் அனைத்துப் பகுதிகளோடும் சேர்க்கப்பட்டுள்ளன.

சிறுமூளை ஆற்றும் பணிகளுள் மிக முக்கியமானது நாம் நடக்கும் போதோ உட்காரும் போதோ சாய்ந்து விடாமல் சம நிலையில் (Balance) இருக்குமாறு பார்த்துக்கொள்வதாகும். அப்பணிக்கு மூலாதாரமாக இருப்பவை உட்காதிலுள்ள உறுப்புகளாகும். அவ்வுறுப்புகளிலிருந்து நரம்புகள் சிறுமூளைக்குள் வந்து

மூளை முன்தோற்றம்

சேர்கின்றன. சிறுமூளை தசைகளின் இயக்கத்தைச் செயல்படுத்தும் நரம்புகளையும் இணைக்கிறது. உதாரணமாக, பந்து விளையாடுமிடத்தில் பந்தையடிக்கும்போது, பந்தை அடிக்க தசைகளை இயக்கவும், பந்தை அடிக்க வேண்டும் என்ற உணர்வையும் ஒரு சேர உண்டாக்கி, பந்தை அடிக்கும் செயலை நிறைவேறச் செய்வது சிறுமூளையே ஆகும். மற்றும் தோல், தசை, மூட்டுக்கள் ஆகியவற்றிலிருந்து வரும் செய்திகளைப் பதிவு செய்து இயக்கமூட்டுவதும் சிறுமூளையேயாகும.

சிறுமூளையில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுமாயின் நம்மால் நிமிர்ந்து நடக்க வியலாது. எப்பணியையும் சிறப்புறச் செயல்படுத்தவும் இயலாது போய்விடும்.

மது குடிப்பவர்களுக்கு சிறுமூளை சரியாகச் செயல்படாது. அதனால்தான் மது உண்டவன் தள்ளாடி நடக்கிறான்.